நீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா..??? நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..?? இது வரை யாரும் ஒரே போன் காலில் சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்க முடியாது...!!!
எப்போது போன் செய்தாலும், நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபபோயகதில் உள்ளது பதில் வரும்...!!!
இந்த சமையல் எரிவாயு பதிவு செய்யும் வேலையை எங்க அம்மா என்னிடம் தான் கொடுப்பாங்க, எரிவாயு பதிவு செய்ய எப்படியும் ரெண்டு நாள் ஆகிவிடும். ஆனால் இப்பொழுது எரிவாயு பதிவு செய்ய ஒரு புதிய முறை வந்துள்ளது...!!!! அதை பற்றி பார்ப்போம்…
சமையல் எரிவாயு உருளையை பதிவு செய்ய 24 மணி நேர செல்பேசி தானியங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் "இண்டேன்' சிலிண்டர்களைப் பெற இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 8124024365 என்ற செல்பேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்பேசி எண்ணை அழைத்து சிலிண்டரை பதிவு செய்து கொள்ளலாம். தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்யலாம்.
ஒரு வாடிக்கையாளர் சமையல் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்றால் செல் பேசி இருக்க வேண்டும்..!!! லேன்ட் லைன் பதிவு செய்ய முடியாது..!!! நேரில் போனாலும் செல் போனில் பதிவு செய்யுங்கள் என கூறிவிடுகிறார்கள்..!!
ஒரு வாடிக்கையாளர் ஒரே செல்பேசியில் மட்டுமே எரிவாயு பதிவு செய்ய வேண்டும் வேவ்வேறு செல் போனில் பதிவு செய்ய முடியாது..!!!
குறைகள்
* இந்த தானியங்கி முறையில் கட்டணம் வசூலிக்கப் படுகிறது இலவச சேவையாக இந்த என்னை வைத்து இருக்கலாம்
* முன்பெல்லாம் சமையல் எரிவாயு பதிவு செய்தால் பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து பதிவு செய்து கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது.
* முதலில் தொலைப்பேசியில் பதிவு செய்தால் சமையல் எரிவாயு எப்பொழுது வருமென்று கூறுவார்கள். இப்பொழுது அது தெரியாது.
* இந்த தானியங்கி முறை பற்றி இன்னும் யாருக்கும் விழிப்புணர்வு செய்யாமல் இருப்பது... ஒரு பத்து முறை முயற்சி செய்த பிறகு எனக்கு தெரிந்தது... ஒரு சமையல் எரிவாயு பதிவு செய்ய மூன்று நிமிடம் ஆகிறது..!!!
* செல் பேசியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் பேசி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...???
* ஒரே நம்பரில் இருந்து தான் எரிவாயு பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள், செல் போன் தொலைந்து விட்டால் வேறு நம்பரில் இருந்து எவ்வாறு எரிவாயு பதிவு செய்வது..???
* இந்த முறை இண்டேன், HP, இரண்டிற்கு மட்டும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள், இந்த முறையால் இண்டேன் நிறுவனத்திற்கு தான் லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனி தனியாக எரிவாயு பதிவு செய்தால் போன் மூலம் தனி வருமானம் வரும்.
சமையல் எரிவாயு பதிவு செய்யும் முறை
1. 8124024365 இண்டேன் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த எண்ணில் தான் தொடர்பு கொள்ள வேண்டும்
2. தமிழ் மொழிக்கு 1 அழுத்த வேண்டும்
3. உங்கள் எரிவாயு ஏஜென்ஸி தொலைப்பேசி என்னை STD CODE வுடன் பதிவு செய்ய வேண்டும்
4. ஏஜென்சி எண்ணை உறுதி செய்ய 1 அழுத்தவும் வேண்டும்
5. உங்கள் கஸ்டமர் எண்ணை அழுத்தவும் வேண்டும்
6. கஸ்டமர் எண்ணை உறுதி செய்ய 1 அழுத்த வேண்டும்
7. எரிவாயு புக்கிங் செய்ய 1 அழுத்த வேண்டும்
8. பதிவு செய்த பின்பு செல் போனிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்... குறுஞ்செய்தி வந்தால் மட்டுமே நம் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தானியங்கியில் பதிவு செய்வது சிறந்த முறை தான் ஆனால் இதில் பல குழப்பங்கள் இருக்கிறது...கடினமானதாக இருக்கிறது, சாமானிய மக்களால் இந்த முறையில் சமையல் எரிவாயுவை பதிவு செய்ய முடியாது, முன்பு இருந்த முறைய சிறந்ததாக இருந்தது. இந்த தானியங்கி முறையில் குழப்பங்களே இருகின்றன, மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் புரியும், என்ன இருந்தாலும் இயந்திரைதை நம்ப முடியாது.... மனிதர்களிடம் பதிவு செய்த பொழுதே எரிவாயு வீடு வந்து சேராது. இனி இந்த இயந்திரத்தை நம்பிகொண்டு இருக்க வேண்டுமா..??? மீண்டும் பழைய முறையை கொண்டு வந்தால் நல்லது.
கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு, இந்த முறையில் பதிவு செய்ய முடியாது.
Tweet | |||||
13 comments:
பயனுள்ள நல்ல பதிவு
நாங்களும் ஒவ்வொரு முறையும்
நாலைந்துமுறை போன் செய்தால்தான்
லைன் கிடைக்கும்
அதிகம் அவதிப்பட்டிருக்கிறோம்
தகவலுக்கு நன்றி
சூப்பர் பகிர்வு நன்றி...!
இந்த தானியங்கி முறை பற்றி இப்போது தான் தெரிய வருகிறது.
விரிவான, தெளிவான பகிர்வு. மிக தேவையான ஒன்றும்...!!
நன்றிகள்.
இந்த லட்சணத்தில் விலை மேலும் ஏற போகிறதாம்.
இதுக்கு மொத்தல்ல உங்க தொலைபேசி எண்ணை பதிவு செய்யனுமா? # டவுட்டு
தில்லியில் இதற்கு முன்பே இந்த வசதி இருக்கிறது. லேண்ட்லைனின் மூலமும் செய்ய வசதி இருக்கிறது. 1260 என்ற எண் மூலம் பதிவு செய்யலாம்.
அலைபேசி மூலம் பதிவு செய்வது கடந்த 6-7 மாதங்களாகவே செயல்பட்டு வருகிறது. முதலில் உங்கள் அலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
பயனுள்ள நல்ல பதிவு.
பாராட்டுகள்.
அருண் பிரசாத் சொன்னது…
இதுக்கு மொத்தல்ல உங்க தொலைபேசி எண்ணை பதிவு செய்யனுமா? # டவுட்டு///
@அருண் பிரசாத்
எரிவாயு பதிவு செய்து விட்டு பின்பு தொலைபேசி எண்ணை பதிவு செய்யலாம்...!!!!
Nalla pathivu nanbaaaa
கலைஞர் அரசு வழங்கிய சமையல் எரிவாயுவுக்கு, இந்த முறையில் பதிவு செய்ய முடியாது.
ithu than twist lol.............
hifriends.in
பொதுமக்களுக்கு உபயோகமான தகவல் ........
சௌந்தர் சார்., நாட்டுக்கும் வீட்டுக்கும் உபயோகமான தகவல்களை தருவதற்கு நன்றி சார்!
( இந்த விஷயத்தை எப்படி சி.பி.செந்தில்குமார் விட்டு வச்சார்??)
நீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !
சமையல் எரிவாயு பதிய இப்படி ஒரு வசதி உள்ளதா! நீங்கள் சொல்வதுபோல் சாமானியர்கள் பதிவது கஷ்டம்தான்.
Post a Comment