Friday, September 17

நண்பேண்டா....நண்பேண்டா...




நீண்ட நாட்களுக்கு பிறகு முழுநீள நகைச்சுவை திரைபடம் வில்லன் இல்லை ஓப்பனிங் சண்டை இல்லை, அட படத்தில் சண்டேயே இல்லை, ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சிரிப்புதான்.

ஆர்யா ஏழு வருடங்களாக அரியர் எழுதிக்கொண்டு வெட்டியா ஊர் சுற்றி கொண்டு இருக்கிறார், சந்தானம் முடி திருத்தும் நிலையத்தை நடத்தி வருகிறார் ஆரியாவுக்கும் சேர்த்து சந்தானம் செலவு செய்கிறார், ஆரியா "நண்பேண்டா” என்று சொல்லியே காரியம் சாதித்து விடுகிறார்.
   

ஆர்யாவின் அண்ணன் சரவணனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துப் போக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது, ஆர்யாவின் அண்ணியின் தங்கை தான் இந்த நயன்தாரா. அண்ணியிடம் தான் காதலிக்கும் நயன்தாராவை பெண் கேட்க்கிறார் அவரோ உன்னை போன்ற உதவாக்கரைக்கு எதை நம்பி என் தங்கையை கொடுப்பது, உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் அவளுக்கு உன்னை போன்ற ஒரு உதவாகரைக்கு, திருமணம் செய்து வைப்பீர்களா என்று ஆர்யாவின் அண்ணி மறுத்துவிடுகிறார். இதனால் கோபப் பட்டு நானே சொந்த காலில் நின்று என் தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டு, பிறகு உங்க தங்கையை பெண் கேட்கிறேன் என்று "சபதம்" போட்டு , வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஆரியா. தன் சபதத்தில் வெற்றி பெற்று நயன்தாராவை கரம் பிடித்தாரா? என்பதே மீதி கதை 

இந்த படத்தில் கதை என்று ஒன்றும் கிடையாது, திரைக்கதை மட்டுமே இருக்கிறது நகைச்சுவையை நம்பியே எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு காட்சியிலும் சந்தானம் காமடி செய்து இருக்கிறார். படத்தில் சந்தானம் "ஹீரோவா" அல்லது ஆரியா "ஹீரோவா" என்று கேட்க வைக்கிற அளவுக்கு பட்டயை கிளப்புகிறார் சந்தானம்.

முதல் காட்சியில் ஆரியா அருவாளை எடுத்து கொண்டு யாரையோ வெட்டுவதற்கு ஓடுகிறார், அது யார் அப்படியே பிளாஷ் பேக் ....யாரை வெட்ட போகிறார் என்று பார்த்தால் பல்பு வாங்குவோம், 

ஆரியா பிட் அடிக்கும் காட்சியில் இவரை எல்லோறோம் ஓட்டுறாங்க, அவர் தங்கை எப்படியாவது இந்த தடவை பெயில் ஆகிடு அடுத்த வருஷம் நம்ம ஒண்ணா பரிட்சை எழுதுவோம் சொல்றாங்க.


ஆர்யாவின் அம்மா எப்படியாவது பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடு என்னால் வெளியே தலை காட்ட முடியலை என்று சொல்றாங்க இப்படி அம்மா யாருக்கு கிடைப்பாங்க, 

அரியர் எழுதும் இடத்தில் சாமி நாதன் நண்பர் இவர் குடும்பத்துடன் வந்து அரியர் எழுதுகிறார் கேட்டால் குடும்பத்தில் பிக்னிக் போகணும் சொன்னங்க அதான் இங்க கூப்பிட்டு வந்தேன் சொல்வார் சாமிநாதன், ஆரியா பிட்டு வைத்து இருப்பதை பார்த்து என்ன பாஸ் பிட்டு எல்லாம் வைத்து இருக்கீங்க பாஸ் ஆகிட போறிங்க என்று சொல்லும் போது சிரிப்பலை   

பிட் அடிப்பதை பற்றி நயன்தாரா விடமே .  சொல்லிவிட்டு பரிட்சை அறையில் நயன்தாராவை பார்த்து விட்டு பேச்சே வராமல் நிற்கிறார் ஆரியா, இதில் சாமிநாதன் வேற சேர்ந்து கொள்கிறார் கை தட்டலில் தியேட்டரே அதிர்கிறது பிட்டுக்கே பிட்டு வைத்த பெருமை ஆரியாவையே சேரும் 

நயன்தாரா பார்டன் ..பார்டன்... (pardon) சொல்வாங்க அதற்கு அர்த்தம் புரியாமல் ஆரியா தவிப்பார், சந்தானம் உன்னை பாட்டு பாட சொல்றா, அதை கேட்டு போய் ஆரியா பாட்டு பாடி காட்டுவார் பார்டன் என்றால் நீங்க சொல்றது புரியலை மறுபடி சொல் என்று அர்த்தமாம் இவங்க சொன்ன பிறகு நமக்கே புரியுது,

"நான் கடவுள்" வில்லன் ராஜேந்திரனும் சில காட்சிகளில் வருகிறார் இவர் தான் வில்லன் என்று நினைத்தால் இவரும் காமடி செய்கிறார் 

சந்தானம் கடையை வைத்து கடன் வாங்குகிறார் கடனை அடைக்க வில்லை என்றால் மாடு மேய்க்கணும் என்று ராஜேந்திரன் மிரட்டுகிறார்... டுட்டோரியலில் ஏதாவது செய்து ஆட்கள் சேர்க்க வேண்டும் என்று இவர்கள் செய்வது நல்ல சிரிப்பவை வர வைக்கிறது கண்தெரியாத பெண்ணை இறுதியில் நேர்த்தியாக உபயோகப்படுத்தியிருப்பதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது...கண் தெரியாத நானே MSC படித்து இருக்கும் போது நீங்க பத்தாவது பாஸ் பண்றது ஒன்னும் பெரிய விசயம் இல்லை, என்று ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் இயக்குநர் இந்த காட்சியை சொல்லிய விதம் அருமை.
டுட்டோரியலில் பாஸ் ஆகவில்லை என்றால் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்றாங்க சகிலாவை அழைத்து வந்து பாடம் நடத்த சொல்லி நயன்தாராவிடம் நல்லா திட்டு வாங்குகிறார்கள.

நயன்தாரா பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஏதோ ஒரு சில காட்சியில் வருகிறார் மிகவும் மெலிந்து இருக்கிறார் 

நடிகர் ஜீவா ஒரு சின்ன வேடத்தில் நடித்து இருக்கிறார் அவர் வரும் காட்சியில் கலகலப்பு நயன்தாராவின் அப்பாவை பார்த்து "மாமா ஒரு குவாட்டர்" சொல்லு என்ற கட்சியில் இன்னும் தியேட்டேர் அதிர்கிறது.. 

சிவா மனசுல சக்தி படத்தின் பாதிப்பிலிருந்து டைரக்டர் மீண்டு வரவில்லை என்பது சில இடங்களில் தெரிகிறது 

யுவன்சங்கர்ராஜா தன் வேலையை நன்றாகவே செய்து இருக்கிறார். யார் இந்த பெண்தான் என்ற பாடலும் ..பாஸ்...பாஸ் என்ற பாடல்களும் அருமை.   ரொம்ப நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் ராஜேஷ். காமெடியும் இதில் தூக்கலாகவே இருக்கிறது. இதனால் ராஜேஷின் இரண்டாவது வெற்றி உறுதி செய்யபட்டுஉள்ளது மொத்தத்தில் "பாஸ் மாஸ்" 






53 comments:

dheva said...

சரி.. படத்தை தியேட்டரில் பார்க்க ஒரு உந்து சக்தி இந்த விமர்சனம்....! இந்த விமர்சனமும் அப்படியே.... தம்பி....

உனக்கு விமர்சனம் எழுத நன்றாக வருகிறதுப்பா.. லவ்லி...! விகடன் மாதிரி மார்க் போடுப்பா..இட் வில் ஹிட்....!

Chitra said...

படத்தை நல்லா சிரிச்சு பார்த்து இருக்கீங்க என்று தெரியுது! :-)

என்னது நானு யாரா? said...

விமர்சனம் அருமையா செய்றீங்க பாஸ்! Keep it up!

Kousalya Raj said...

விமர்சனம் நல்லா இருக்கு சௌந்தர்.

//உனக்கு விமர்சனம் எழுத நன்றாக வருகிறதுப்பா.. லவ்லி...! விகடன் மாதிரி மார்க் போடுப்பா..இட் வில் ஹிட்....!//

அண்ணன் காட்டிய வழி...!

dheva said...

//அண்ணன் காட்டிய வழி...! //

கெளசல்யா...... @ நண்பேன்டா....!

Anonymous said...

ரொம்ப நல்லா விமர்சனம் எழுதி இருக்கீங்க..எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்...

செல்வா said...

நானும் இந்தப் படம் பார்க்கணும் அப்படின்னு நினைச்சுட்டிருந்தேன் .. உன்னோட இந்த விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை டாப் கீர்ல தூக்கி விட்டுருக்கு ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//உனக்கு விமர்சனம் எழுத நன்றாக வருகிறதுப்பா.. லவ்லி...! விகடன் மாதிரி மார்க் போடுப்பா..இட் வில் ஹிட்....! //

தேவா அண்ணன் சொன்னது மாதிரி நீங்க மார்க் போடுங்க. பதிவு உலகத்தில் சௌந்தர் நல்ல மார்க் போட்டா படம் ஓடும்ன்னு சொல்லி சன் T .V கரன் வந்து உங்களுக்கு பணம் கொடுப்பான் .
ஹாய் ஜாலி சௌந்தர் என்னையும் கொஞ்சம் கவனிக்கணும்

செல்வா said...

அந்த படத்தோட ட்ரைலர் பட்டைய கிளப்புது.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மறுபடியும் பார்க்கணும் அப்படிங்கற மாதிரி இருக்கு. இதுக்காகவே நான் சீரியல் பாக்குறேன் . அதே மாதிரி வம்சம் படத்தோட ட்ரைலரும் கலக்கலா இருக்கு..!!

செல்வா said...

//சன் T .V கரன் வந்து உங்களுக்கு பணம் கொடுப்பான் .
ஹாய் ஜாலி சௌந்தர் என்னையும் கொஞ்சம் கவனிக்கணும்

//

ஹி ஹி ஹி ..!! உங்களுக்கும் பங்கு தர சொல்லுங்க ..!! நீங்க நல்ல கமெண்ட் போட்டாதான் ஓடும் அப்படின்னு ஒரு புரளிய கிளப்புங்க ..!!

Unknown said...

விமர்சனம் நல்லாயிருக்கு..

செல்வா said...

//ஆர்யாவின் அம்மா எப்படியாவது பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடு என்னால் வெளியே தலை காட்ட முடியலை என்று சொல்றாங்க இப்படி அம்மா யாருக்கு கிடைப்பாங்க,//

இந்த சீன் ட்ரைலர்ல வரும்போதே செம காமெடி . அதே மாதிரி கடன் வங்க இவ்ளோ அலை அலையுறோம் அப்படின்னு சந்தானம் சொல்லும் சீனும் கலக்கலா இருக்கும் .. நான் இன்னும் படம் பார்க்கல அதான் ட்ரைலர் பத்தியே பேசிட்டிருக்கேன் ..!!

Anonymous said...

நல்ல விமர்சனம் நண்பா!

இம்சைஅரசன் பாபு.. said...

//இன்னும் படம் பார்க்கல அதான் ட்ரைலர் பத்தியே பேசிட்டிருக்கேன் ..!! //

செல்வா நீங்க படம் பார்க்க போக வேண்டாம் என்று தான் நம்ம சௌந்தர் அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹி ஹி ஹி ..!! உங்களுக்கும் பங்கு தர சொல்லுங்க ..!! நீங்க நல்ல கமெண்ட் போட்டாதான் ஓடும் அப்படின்னு ஒரு புரளிய கிளப்புங்க //

பய புள்ளைக்கு ஆசைய பாரு
செல்வா உன் மொக்கை பார்த்து வந்த சன் T .V காரணம் ஓடி போய்ட்டான்.அயோ தாங்க முடியல சாமி

கருடன் said...

நல்ல விமர்சனம். :)

School of Energy Sciences, MKU said...

சூப்பர் தம்பி. இன்னிக்கு படம் பார்க்கலாம் என்று இருந்தேன் இப்போ ஆவலை அதிகப்படுத்தி விட்டாய். விமர்சனம் சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காந்தி செத்துட்டாரா? யோவ் அரதப் பழைய படத்துக்கா விமர்சனம் எழுதுவ?

இம்சைஅரசன் பாபு.. said...

//காந்தி செத்துட்டாரா? யோவ் அரதப் பழைய படத்துக்கா விமர்சனம் எழுதுவ? //

லேய் ரமேஷு போன வெள்ளி கிழமை தானே படம் வந்தது .
ஓஹோ .........காந்தி போன வெள்ளி கிழமை தான் செத்தாரா ........புண்ணாக்கு

ஆனந்தி.. said...

உன் விமர்சனத்திலேயே பயாஸ்கோப் வச்சு பார்த்த மாதிரி இருந்தது படம்..ஏற்கனவே படம் பார்க்கணும் யோசனை..உன் பதிவை பார்த்து தியேட்டர் இல் போயி பார்க்கணும் முடிவு பண்ணியாச்சு..நயன்தாரா பத்தி பெருசா எதுவும் சொல்லலை??..சிம்ப்ளா முடிச்ச மாதிரி இருக்கே..??(சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருங்கிரியா??..ஓகே..ஓகே):-))

இம்சைஅரசன் பாபு.. said...

@TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
நல்ல விமர்சனம். :)//

இவரை எல்லாம் ஆட்டத்துல சேர்க்காதீங்கப்ப

Thenammai Lakshmanan said...

விமர்சனம் அருமை சௌந்தர்..:))

ஹேமா said...

அப்போ...படத்தை தைரியமாப் பாக்கலாம்ன்னு சொல்றீங்க.சந்தோஷம் சௌந்தர்.

இளங்கோ said...

நானும் பார்த்துட்டேன்.. ரொம்ப நாள் கழித்து சிரித்து மகிழ்ந்த படம்.

Anonymous said...

நான் தெரியாமத்தான் கேக்குறேன். ஜோக்குன்னா என்னான்னு தெரியுமா? உங்களுக்கெல்லாம். படம் சரியான குப்பை. டிவி சீரியல் மாதிரி படம் நகரவே மாட்டேங்குது. கும்பகோணத்தை விட்டு படம் திடீருன்னு பாரின் போகுது பாட்டுக்கு. தயவு செய்து சரியானபடி விமர்சனம் செய்யவும்.

அருண் பிரசாத் said...

நல்லா எழுதி இருக்கறீங்க செளந்தர். படம் எப்படியோ எனக்கு தெரியாது, ஆனா உங்க விமர்சனம் நல்லா இருந்தது.

மொத்தத்தில் "பாஸ் மாஸ்" - இதை தனியா bold பண்ணி போடுங்க.

இன்னைக்கு நைட் டவுன்லோட் பண்ணி பார்குறேன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///ஆர்யாவின் அம்மா எப்படியாவது பிட் அடிச்சாவது பாஸ் ஆகிடு என்னால் வெளியே தலை காட்ட முடியலை என்று சொல்றாங்க இப்படி அம்மா யாருக்கு கிடைப்பாங்க, ///

ரொம்ப பீல் பண்ற மாதிரி தெரிது.... :-)))

///அரியர் எழுதும் இடத்தில் சாமி நாதன் நண்பர் இவர் குடும்பத்துடன் வந்து அரியர் எழுதுகிறார் கேட்டால் குடும்பத்தில் பிக்னிக் போகணும் சொன்னங்க அதான் இங்க கூப்பிட்டு வந்தேன் சொல்வார் சாமிநாதன்///

ஹா ஹா ஹா.. செம காமெடி-ஆ இருக்கே...
நைஸ்.. படம் பார்க்க தூண்டும் வண்ணம் உங்க விவரிப்பு சூப்பர்.. :-)))

///பிட்டுக்கே பிட்டு வைத்த பெருமை ஆரியாவையே சேரும் //

ஹா ஹா... நல்ல இருக்குங்க.. விமர்சனம் கலக்கல்ஸ்.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///உனக்கு விமர்சனம் எழுத நன்றாக வருகிறதுப்பா.. லவ்லி...! விகடன் மாதிரி மார்க் போடுப்பா..இட் வில் ஹிட்....! /////

லா லா லா ல ல லா லா...ஆஹ்ஹ...
அண்ணன் காட்டிய வழியம்மா...... :-))))
(தேவா... இது நா இல்ல.....ஜூட்....)

கணேஷ் said...

என்ன அழகா கதை சொல்லி இருக்கீங்க)))))
டைரக்டர் எல்லாம் உங்ககிட்டே நிக்க முடியாது)))))

விமர்சனம் நல்ல இருக்கு அண்ணா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… //காந்தி செத்துட்டாரா? யோவ் அரதப் பழைய படத்துக்கா விமர்சனம் எழுதுவ? //

லேய் ரமேஷு போன வெள்ளி கிழமை தானே படம் வந்தது .
ஓஹோ .........காந்தி போன வெள்ளி கிழமை தான் செத்தாரா//

நாங்க ஒரு படம் பாத்துட்டா அது எங்களுக்கு பழைய படம்தான்..

சகாதேவன் said...

எனக்கு படங்களை தியேட்டரில் பார்க்கத்தான் பிடிக்கும். ஆனால் இப்போ திரைக்கு வந்து சில மாதங்களில் டிவியில் வருகிறதே என்று இருந்து விடுகிறேன்.

சகாதேவன்

Jeyamaran said...

பாஸ் மாஸ்
really super movie full & full comedy entertainment.............

பனித்துளி சங்கர் said...

நானும் இந்த படத்தைப் பற்றி கேள்விப் பட்டேன் . உங்களின் விமர்சனம் அதை இன்னும் உறுதி செய்தது . அருமை . விரைவில் படம் பார்த்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி தோழரே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல விமர்சனம்... படம் பாக்கல இன்னும்... நீங்க சொல்றதை பாத்தா நல்ல படமா இருக்கும் போல தோணுது... தேங்க்ஸ்

Suni said...

ரொம்ப நல்லா இருக்குது. தொடர்ந்து எழுதுங்கள்

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

baln said...

kalavani ya vida perusaa illa but gud

சுசி said...

நானும் பாக்கணும் :)

சிவராம்குமார் said...

விமர்சனம் சூப்பரப்பு!

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

பாஸ் உங்க விமர்சனம் மாஸ்..!

எனது பக்கங்கள் உங்கள் பார்வைக்கு காத்திருக்கின்றன‌...!
http://vetripages.blogspot.com/

dheva said...

//லா லா லா ல ல லா லா...ஆஹ்ஹ...
அண்ணன் காட்டிய வழியம்மா...... :-))))
(தேவா... இது நா இல்ல.....ஜூட்....) //

ஆனந்தி..@ பேசாம மியூசிக் டைரக்டர ஆகிடலாம் நீங்க.... என்ன ட்யூனு....!

Anonymous said...

விமர்சனம் நல்லா இருக்கு சௌந்தர் ..நான் படம் பார்க்க போகலே ஏன் ன்னா நீங்க தான் கதை சொல்லிடிங்களை எப்புடி ஹி ஹி

ஜெயந்தி said...

நான் படம் பார்க்காம விமர்சனங்கள படிக்க மாட்டேன். பார்த்துட்டு வந்து படிக்கிறேன்.

vinthaimanithan said...

ம்ம்ம்ம்...

சாமக்கோடங்கி said...

நல்ல விமர்சனம்....

Anonymous said...

நான் படம் பார்க்கல இன்னும் ..ஆனால் உங்க விமர்சனம்
படித்தே பார்த்தது போல இருக்கு .

Unknown said...

நானும் பார்த்துட்டேன்..விமர்சனம் நல்லா இருக்கு..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.... படம் பார்க்கணும்...

வெங்கட்.

சௌந்தர் said...

என் விமர்சனம் படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

elamthenral said...

நல்ல படம் தம்பி.... நல்லா விமர்சனம் செய்றீங்க தம்பி... தொடருங்கள்...

thiyaa said...

விமர்சனம் நல்லாயிருக்கு..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//என் விமர்சனம் படித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி //

ஹலோ... என்னது இது..??
வெறும் நன்றி தானா.. ஒரு காப்பி...டீ கூட இல்லியா??

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@@தேவா
///ஆனந்தி..@ பேசாம மியூசிக் டைரக்டர ஆகிடலாம் நீங்க.... என்ன ட்யூனு....! ///

ஆமாமா.... அதான் அடுத்த பிளான்... ரெம்ப நன்றி...
ஒரு ஹீரோ தான் கிடைக்கணும்... படம் முடிஞ்சிரும்.... :-))

நிலாமதி said...

நன்றி. விமர்சனம் நல்லாயிருக்கு.

 
;