Friday, September 3

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part I




திமுக அரசு சாதனைகள் பல செய்தாலும் கொஞ்சம் வேதனைகளும் இருக்கிறது முதலில் சாதனைகள் பற்றி பார்போம். அடுத்து வரும் பதிவில் வேதனைகளை  பற்றி பார்ப்போம்.







முதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார். 

சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி  விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .


அரிசியை குறை சொல்லும் மக்கள் அரிசியில் பூச்சி, புழு எல்லாம் இருக்கிறது. இதை எப்படி சாப்பிடுவது..? என்று கேட்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு எங்கு அரிசி கிடைக்கிறது. நல்ல தரமான அரிசி. ஊர் பக்கம் எல்லாம் இந்த அரிசி தான் உபயோக படுத்துகிறார்கள், இங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

மக்கள் இந்த அரிசியை வாங்கி வெளியே விற்பனை செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கி அதை ஐந்து ரூபாய்க்கு விற்று விடுகிறார்கள். அரசு தரும் எந்த பொருளையும் விற்பனை செய்ய கூடாது. நமக்கு அந்த அரிசி பிடிக்க வில்லை என்றால் அரிசி  வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட வேண்டும்   

ரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம் வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....

திமுக. தேர்தல் அறிக்கையில் டிவி தருகிறோம் என்று சொன்னவுடன் எல்லோரும் கிண்டல் செய்தார்கள்.  ஆனால் அவர்கள் வந்து செய்து காட்டி விட்டார்கள்.  ஒரு சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து வெளியே விளையாடி கொண்டு இருந்தாள் அப்போது பக்கத்து ஒரு வீட்டின் ஜன்னலில் வழியாக டிவி பார்த்து கொண்டு இருந்தாள்...அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே டிவி அணைத்து  விட்டார்கள்....ஆனால் இப்போ அந்த சிறுமி தன் வீட்டிலே டிவி பார்க்கிறாள் என்றால் அரசு கொடுத்த டிவி தான் காரணம்.

அடி தட்டு மக்கள் ஒரு டிவி வாங்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.  ஒருவர் வீட்டுக்கு சென்று டிவி பார்க்கும் பொழுது அந்த வீட்டில் இருப்பவர்கள் டிவியை அணைத்து விட்டால் நமக்கு கன்னத்தில் அறைவது போல இருக்கும்..எந்த பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் டிவி வழங்கபடுகிறது 


டிவியை குறை சொல்லும் மக்கள் : டிவி வெடித்து விடும் அங்கே வெடித்து விட்டது இங்கே வெடித்து விட்டது என்று சொல்வார்கள் எங்கும் வெடிக்க வில்லை. எங்கள் வீட்டில் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அது ஒன்றும் ஆகவில்லை நன்றாக தான் இருக்கிறது. எங்க சொந்தகாரங்க வீட்டிலும் அரசு வழங்கிய டிவி இருக்கிறது அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை.

இந்த டிவியை வெளியே வாங்குவதற்கு போட்டியே நடைபெறுகிறது எங்க வீட்டில் இருக்கும் டிவியை எத்தனையோ பேர் விலைக்கு கேட்டார்கள் நாங்கள் அதை விற்பனை செய்யமாட்டோம் என்று சொல்லி விட்டோம் வெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்

விவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்.



கலைஞர் காப்பீட்டு  திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் எத்தனையோ குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார்கள். வீட்டில் ஒருவருக்கு இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும் நாம் குடும்பத்தில் உள்ள அணைவரும் பயன் பெறலாம். எல்லோரும் இப்போ கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் அடையாள அட்டை தேவை என்று காத்து இருக்கின்றனர்.  

இன்னும் கேஸ் அடுப்பு, குழந்தை பிறந்தால் 5000 ரூபாய் பணம், முதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது மற்ற ஆட்சியில் எல்லாம் வெறும் வேதனைகள் மட்டும் தான் இருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் சாதனைகளும் இருக்கிறது 
    
வேதனைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்...




47 comments:

என்னது நானு யாரா? said...

சாதனைகள் பட்டியல் அருமை சௌந்தர். வேதனை பட்டியலையும் எதிர்பார்க்கின்றோம்.

------------------------------------------------

நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்டு விழா, தினமும் ஒரு படம் பார்க்க முதல்வரே போவது இதெல்லாம்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா எல்லாம் சரி..

படிக்கும் பொது சில இடங்களில் நான் வாய் விட்டு சிரிக்க வேண்டியதா போச்சு... அதுதாம்பா. டி வி விலைக்கு கேட்டதா சொன்னியே அத நினச்சு தான் நான் இன்னும் சிரிச்சு கிட்டு இருக்கேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

முதியோர் பணம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்த பட்டது

//

பிள்ளைகளின் ஆதரவு இல்லாமை தனிமையில் வாடும் பெற்ற தெய்வங்களுக்கு வெறும் 400 ரூபாய் போதுமானதா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாராட்டு விழா, தினமும் ஒரு படம் பார்க்க முதல்வரே போவது

//

இந்த ஆட்சியில் மக்கள் முதல்வரை அதிகமாக பார்த்தது பாராட்டுவிழாக்களில் தான் இருக்கும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இங்கு நகரத்து பக்கமும இந்த அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.

//

இத பயன்படுத்துற நரகம் எதுன்னு சொன்ன நல்லாயிருக்கும்..

Chitra said...

புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ...!!!!!!!!!!!!!!!!

சௌந்தர் said...

வெளியே ஒரு பொருள் அனைவராலும் விரும்ப படுகிறது என்றால் அது நல்ல தரமான பொருள் என்று தான் அர்த்தம்.இதுக்கு தான் சொன்னேன் நண்பா

@@@வெறும் பையன் அது மட்டும் இல்லாமல் அரசு தரும் எந்த ஒரு பொருளையும் வெளியே விற்பனை செய்ய கூடாது

Jey said...

//முதல் அமைச்சராக பதவி ஏற்ற மேடையிலே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குவதாக ஆணையிட்டார். இரண்டு ரூபாய்க்கு வழங்கிய அரிசியை ஒரு ரூபாய் என்று குறைத்தார்.//

இதுல உண்மையில பலனடையுரவங்க இருக்கதான் செய்ராங்க...ஆனா...இத கட்சிக்காரங்க அதிக அளவுல கடத்தி ...நம்ம வரிப்பணத்த கொள்ளையடிக்கிறாங்க...., இதனல பல சோம்பேறிகளாயிருக்காங்கன்றதும் உண்மை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra சொன்னது…

புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ...

//

புதிய தகவல்களா..!!! இதுக்கு தான் அடிக்கடி ஊருக்கு வந்திட்டு போகணும்...

அருண் பிரசாத் said...

ஒன்று சொல்வதற்கு இல்லை.

@ chitra

//புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ..//
ஆமாம், ஆமாம்....

Jey said...

//சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .//

இது DMK வட்டச் செயளாலர் பேசுர மேடை பேச்சு மாதிரி இருக்கு செளந்தர்.... பாத்து செய்ங்க...:)

Jey said...

டிவி மேட்டர் கொஞ்சம் காமெடியா இருக்குரா மாதிரி இருக்குப்பா... எனக்கு சிரிப்பு வந்துச்சி அதான் இந்த கமெண்ட்..., மறுபடியும் வரிகட்டுர மக்கள் கேனா.பானா.

செல்வா said...

நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விசயங்கள் தான்.
நமது மக்களைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் செய்வது எல்லாமே கெட்டவைகள் என்ற எண்ணம் பரவிக்கிடக்கிறது. அதனாலேயே அவர்கள் எது செய்தாலும் கெட்டதாகவே படுகிறது. அவர்களை கிண்டல் செய்வதில் மட்டுமே நமது கவனம் இருக்கிறது. நிச்சயமாக பாராட்ட வேண்டிய விசயங்களை பாராட்டினால் மட்டுமே மீண்டும் அவர்களுக்கு நலல விசயங்களை செய்திடத் தோன்றும். அதைவிடுத்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தவறு கண்டுபிடிப்போமேயானால் நிச்சயம் தவறுகள் தான் பெருகும் . அவர்களுக்கும் நல்லது செய்திட வேண்டும் என்ற எண்ணம் வரவே வராது. ஆகவே பாராட்ட வேண்டிய விசங்களை பாராட்டுங்கள்.

Jey said...

//ரேஷனில் துவரம் பருப்பு, முதல் அணைத்து பருப்பு வகைகள், தானியங்கள் எல்லாம் வெளி சந்தையில் விற்பனை செய்வதை விட பத்து ரூபாய் குறைந்த விலையில் கிடைகிறது....//

பதுக்கல் காரங்ககிட்ட பேரம் பேசி பணம் பக்காம...,
ஒருங்கா நடவடிக்கை எடுத்திருந்தா..., விவசாயத்த ஒரு பொருட்டா நினைச்சிருந்தா... இந்த சாதனையே தேவையில்லாம போயிருக்கும்...இப்ப இது ஒரு சாதனையானது...காலத்தின் கொடுமை...

அருண் பிரசாத் said...

@ வெறும் பய
//புதிய தகவல்களா..!!! இதுக்கு தான் அடிக்கடி ஊருக்கு வந்திட்டு போகணும்.//

அது இல்லை நண்பா! செளந்தர் ஏதோ திமுக சாதனைகள்னு பெருமையா புது தகவல்கள் சொல்லி இருக்கார் அதை சொல்லுறாங்க

Jey said...

//விவசாய கடன் 3000 கோடிக்கு மேல் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது கிராமத்தில் எல்லாம் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடிய வில்லை என்றால் அது மானப் பிரச்னை ஆகிவிடும், கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிலர் தற்கொலை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.விவசாயி கடன் தள்ளுபடி என்று தேர்தல் அறிக்கையில் சொன்னது போல செய்தார்கள் பாராட்ட பட வேண்டிய விசயம்//

இந்த உதவி நல்ல விசயம்தான் குறை இல்லை..., ஆனா.. எல்லா வருசமும்...விவசாயிக நஷ்டப் பட்டு... திரும்ப திரும்ப கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை எதுக்கு வருதுன்னு...ஆட்சிக்கு வர்ர ..ஒரு வெங்காயமும்...சிந்திச்சதா தெரியல....

Jey said...

//கலைஞர் காப்பீட்டு திட்டத்தில்///
நான் கிராமத்துக்கு போயிருக்கும் போது நெறயப் பேர் பயனடைஞ்சததான் சொல்ராங்க..., ஆந்திராவக் காப்பியடிச்சாலும்...நல்லதா காப்பி அடிச்ச திட்டம்..
அதுலயும்...இன்சூரன்ஸ் கம்பனிக்கி...அதிகமா குடுத்து...சைடுல பணம் பாக்குராங்க பன்னாடைங்க...

அருண் பிரசாத் said...

யப்பா... செளந்தர், டீவி எதுக்கு கொடுத்தாங்க? அவங்க குடும்ப சேனல், குடும்ப கேபிள் நல்ல வளரதுக்கு கொடுத்தாங்க. மக்கள் மூளை வளர கூடாது அதுதான் முக்கியம்

ஏன், வாகனத்துக்கு ஒரு HelMet கொடுத்து இருக்கலாமே?

அருண் பிரசாத் said...

ஆமா ஜெய்,

நான் ஆந்திரால இருந்தப்ப 108 சேவை அறிமுகம் ஆச்சு, தலைவர் அதை காப்பி அடிச்சு உலகத்திலேயே தான் தான் முதன்முதலா இதை செய்ததா பீத்திக்கிறார்

dheva said...

அரசியல் ஒரு விவாதப் பொருள்.

அரசியல்வாதிகள் விவாதிக்கப்பட வேண்டிஎயவர்கள் ஆனால் விதி விலக்கானவர்கள். விமர்சனத்துக்குள் வர விரும்பாதவர்கள். கலைஞர் காப்பீட்டுக் திட்டத்தின் பயன்பாடுகளை வரவேற்கிறேன்.

தி.மு.க என்ற வட்டம் தாண்டி அரசின் சாதனைகளா மக்களின் பயன்பாடு எப்படி என்று தேர்தல் தெரிவிக்கும். குடும்ப அரசியல் இல்லையென்றால்...கலைஞர் இன்னும் மிளிர்வார்.

தமிழ் நாட்டு அரசில் கடந்த 50 வருடங்களில் கலைஞரை ஆதரித்தும் எதிர்த்துதான் நடந்திருக்கிறது.....

வேதனைகள் என்ன......? காத்திருக்கிறேன்...தொடர்ச்சிக்காக...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் சொன்னது…

அது இல்லை நண்பா! செளந்தர் ஏதோ திமுக சாதனைகள்னு பெருமையா புது தகவல்கள் சொல்லி இருக்கார் அதை சொல்லுறாங்க

//

சரி தான் நண்பரே பலருக்கு(ஒருவருக்கும்) தெரியாத விசயங்களை சொனால் அது புதிய தகவல்கள் தான்...

செல்வா said...

///நான் ஆந்திரால இருந்தப்ப 108 சேவை அறிமுகம் ஆச்சு, தலைவர் அதை காப்பி அடிச்சு உலகத்திலேயே தான் தான் முதன்முதலா இதை செய்ததா பீத்திக்கிறார்///

காப்பியோ கீப்பியோ நல்ல திட்டம் தானே.. பாராட்டலாம்ல. நான்தான் இத கண்டுபிடிச்சேன் அப்படின்னு பீத்துவது அரசியல்வாதிகளோட தலையெழுத்து ..

அருண் பிரசாத் said...

@ செல்வா
நான் பாராட்டவில்லை என்று சொல்லலைப்பா... நல்ல திட்டம்தான்... அதற்காக தானே கண்டு பிடித்ததாக கூறுவதைதான் ஏற்க முடியாது. மக்களை முட்டாள்களாக பார்க்கும் அவர்களின் நினைப்பு மாற வேண்டும்

Jey said...

விட்டுப் போன சாதனைகள் :

1. குடும்ப பதவிக்காக, வீல் சேர்லயே டெல்லிக்கு போனது...
2. மூனு மணிநேர உண்ணா விரதம்...( படுத்து கிட்டே நாலு பக்கமும் ஏர்கூலர் உதவியுடன்..)
3. இந்தக் காலத்திலும் கடிதம் எழுதுரது...
4. ஈழப் பிரச்சினைல போர் நிருத்தம் செஞ்சது...
5. லட்சத்து சொச்ச ஈழ பங்காளிகல போட்டுத் தள்ளுனதுக்கு ஒரு வகைல துனையா இருந்தது..
6. 40,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல..., மாறன் குடும்பத்து கூட சமாதான்ம் ஆனதும்... சரியாச்சினு சொல்லி நம்ம காதுல வாழைபூ சொருகுனது..
7. தினகரன் எரிப்புல மூனு பேர எரிச்சவங்கலுக்கு ஆசீர் வாதம் பன்னது... சந்தேகம்னா பன்னிகுட்டி ராமசாமி பிளாக் பாத்துக்குங்க...

தொடரும்...

Jey said...

//கலைஞர் காப்பீடு திட்டம் - சில சந்தேகங்கள்...
Posted by தமிழன் on செவ்வாய், 12 ஜனவரி, 2010

http://sethiyathope.blogspot.com/2010/01/blog-post_12.html //

கலைஞர் காப்பீடு திட்டம் பற்றிய ஒரு பதிவர் 8 மாசத்துக்கு முன்னாடி விளக்கமா எழுதிருக்காரு...
அதப் பத்தி கிங்க கமென்ஸ் போடுற நண்பர்கள் அதயும் படிக்கவும்...

Jey said...

8. குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாட்டை கூறு போட்டு குத்தகைக்கு குடுத்தது...
9. பாராட்டுவிழாக்கள் சாதனை...கின்னஸ்ல போட்டா அடுத்த 14 தலைமுறக்கு இத யாரும் முறியடிக்க முடியாது...
10. மக்கள் பணத்துல கட்சி மாநாடு(செம்மொழி மாநாடு) நடத்தி ஜார்லாக்கள விட்டு புகழ் பாடச் சொன்னது...

யெப்பா கை வலிக்குது...

போதும் நிறுத்திக்கிரேன்..இல்லினா காப்பீடு திட்டத்துலதான்...போய் வைத்தியம் பாக்கனும்

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
Jey said...

அடுத்த வேதனைகள் லிஸ்ட் ஆவலுடன் எதிர் பாக்குறோம் செளந்தர்

Thomas Ruban said...

//மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் //

பக்கத்து மாநிலங்களில் ரேஷனில் அரிசி விலையும் அதிகம் மற்ற எல்லா பொருட்களின் விலையும் அதிகம் விலைவாசி அதிகரித்த பிரச்சினை இந்தியா முழுவதும் உள்ளது.

ஒரு ரூபாய் அரிசி தமிழ்நாட்டு மக்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டது என்பது உண்மை.

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் LIC போன்ற சிறந்த அரசு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.

காத்திருக்கிறேன்...அடுத்த பதிவுக்கு...

Unknown said...

///இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள்.///

அதுதாங்க உண்மை.. மற்ற பொருட்களை வாங்கமுடியாமல் எவ்வளவு பேர் திணறிப் போறாங்க.. இதுகுறை சொல்றதுக்கு இல்லங்க.. மக்களால சாமளிக்க முடியல விலைவாசிய!!.. இது நல்ல விசயமா ஏத்துக்க முடியாதுங்க..

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் பாராட்ட வேண்டிய விசயம்தான்..

Unknown said...

ஆனா இந்தக் காப்பீட்டு திட்டத்துக்கு செலவு பண்றப் பணத்துக்கு அரசாங்க மருத்துவமனைகளை நவீன படுத்தினா.. அரசாங்கத்திற்கு இப்ப ஆகற செலவை விட கம்மியான செலவுதான் ஆகும்.. ஏன் அதைச் செய்யல? அதனால இந்தத் திட்டத்தையும் ஏத்துக்க முடியாது..

கருடன் said...

@சௌந்தர்
இங்க போய்பாரு மக்கா உனக்கு எதிரா ஒரு புது புள்ளா பதிவு போட்டு இருக்கு

http://imsaiarasan-babu.blogspot.com/2010/09/blog-post.html

கருடன் said...

@சௌந்தர்
சென்னை போய் ஒழுங்க படி சௌந்தர்!! ஊர்சுத்தி ரமேசு மாதிரி வீணாபோகத!! அப்புறம் ஜய் மாதிரி எருமை மேய்க்கனும்.....

(நீ ஜில்லு பதிவு போய் பாரு ராசா...)

மதுரைவீரன் said...

விவசாய கடன் தள்ளுபடி செய்ததில் யிருக்கு லாபம்? எங்க மாமாவக்கு விவசாய கடன் தள்ளுபடி செஞ்சாங்க, அவருக்கு லாபம் தான். என்ன அவரோட சொத்து மதிப்பு தான் கூடிபோச்சு. அவருக்கு அல்ரெடி கோடி கன்ன்க்குள்ள சொத்து இருக்கு, இப்போ தள்ளுபடி பணம் வேறு. இந்த பணத்த வேலை வாய்ப்பு உருவக்குரதுல செலவப்ன்னிருந்த நெறைய பேர் பயன் அடஞ்சிருப்பங்க!

Jay said...

//கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் LIC போன்ற சிறந்த அரசு நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.//

LIC யில் இதை போல திட்டம் இல்லை. மற்ற அரசு காப்பீட்டு நிறுவனங்களும் இதை போல திட்டம் வைத்திருக்கவில்லை.

Jey said...

//மதுரைவீரன் சொன்னது…
விவசாய கடன் தள்ளுபடி செய்ததில் யிருக்கு லாபம்? எங்க மாமாவக்கு விவசாய கடன் தள்ளுபடி செஞ்சாங்க, அவருக்கு லாபம் தான். என்ன அவரோட சொத்து மதிப்பு தான் கூடிபோச்சு. அவருக்கு அல்ரெடி கோடி கன்ன்க்குள்ள சொத்து இருக்கு, இப்போ தள்ளுபடி பணம் வேறு. இந்த பணத்த வேலை வாய்ப்பு உருவக்குரதுல செலவப்ன்னிருந்த நெறைய பேர் பயன் அடஞ்சிருப்பங்க!//

அஞ்சு விரல்ல மோதிரம் போட்டுகிட்டு வெவசாயம் பாக்க்குர பண்ணையார்கல் 10% கூட தேராதுங்க...மீதி பேருக்கு லோன் தள்ளுபடி பன்னினாலும்....கஞ்சிக்கி கஷ்டப்படுராங்க அவ்ங்கல பத்திதான்...பேச்சு..அஞ்சு விரல் மோதிரக் கேசுங்க கொஞ்சம் பேருதானுங்கோ...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அரிசி, டிவி. மேட்டர் தெரியும்...
அது தவிர இம்புட்டு விஷயம் நடந்திருக்கா??
ஹ்ம்ம்... பகிர்வுக்கு நன்றி சௌந்தர்..

அடுத்த பதிவில் சந்திப்போம் :-)

ஜில்தண்ணி said...

தேர்தலுக்கு இது போதும்

எவ்ளோ அமௌண்ட் வாங்கியிருக்கீங்க :) எத்தன பொட்டி எறங்கியிருக்கு

அஹோரி said...

//
சென்ற ஆட்சியில் மக்கள் இப்படி பேசி கொண்டு இருந்தார்கள். ' விலைவாசி தான் ஏறிப்போச்சி. இந்த அரசாங்கம் ரேஷனில் போடும் அரிசி விலையை மட்டும் குறைத்து போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் ' என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்..ஆனால் இப்போ மக்கள் பேசிகொள்வது அரிசி விலையை மட்டும் குறைத்து விட்டு மற்ற எல்லா பொருட்களின் விலையையும் ஏற்றி விட்டார்கள் . நமக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் நாம் குறை சொல்லி கொண்டு தான் இருப்போம்...அது தான் மனித இயல்பு .//

ரெண்டு ரூவா கொடுத்த கூட வாங்க வக்கு இல்லன்னு ஒரு ரூவா க்கு குறைசாரா ?

அந்த பாரா வுக்கு மேல படிக்கல. உங்க பொது அறிவு அபாரம்.

மதுரைவீரன் said...

//அஞ்சு விரல்ல மோதிரம் போட்டுகிட்டு வெவசாயம் பாக்க்குர பண்ணையார்கல் 10% கூட தேராதுங்க...மீதி பேருக்கு லோன் தள்ளுபடி பன்னினாலும்....கஞ்சிக்கி கஷ்டப்படுராங்க அவ்ங்கல பத்திதான்...பேச்சு..அஞ்சு விரல் மோதிரக் கேசுங்க கொஞ்சம் பேருதானுங்கோ... //

அப்போ கலைஞர்(பண்ணையார்) குடும்பத்துக்கு ஒரு அமௌன்ட் வந்துருக்குஇன்னு சொலுங்க!!!

கடன் கூட வாங்க முடியாத விவசாயி கதி என்ன? (இதையும் யோசிகன்னுமில்லைய!). 10 % விட இது ஜாஸ்தி இருக்குமின்னு நினைக்கிறன்.

பரவாய்லங்க, நெறைய பேருக்கு இது நடந்தது கூட தெரியல்ல. உங்க மூலமா தெரிஞ்சுகிட்டங்க.

பகிர்வுக்கு நன்றி :-)

Jeyamaran said...

சாதனை பட்டியல் அருமை வேதனைக்காக waiting............

ஜெயந்தி said...

திமுக ஆட்சியில மக்களுக்கு நிறைய விஷயங்கள் செய்வார்கள் உண்மைதான். சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.

விஜய் said...

மிகவும் அவசியமான பதிவு சௌந்தர்....அருமை.சாதனைகள் நல்லா தான் இருக்கு ...வேதனைகளுக்காக காத்திருக்கிறேன் .."சீக்கிரம் போடுங்க அதுல பெருச்சாளி கிடக்கானு " பார்ப்போம் ... ஆஹா ஹ எ ... ஹ ஆஹா ..

mkr said...

இந்த சாதனைகளில் வேதனையும் இருக்கிறது.நிங்கள் சொல்லும் வேதனையையும் பார்ப்போம்

பாரதசாரி said...
This comment has been removed by the author.
GoodJob said...

சத்தியமா சொல்லறேன் அந்த 1 ரூபா அரிசிய 5 ரூபாக்கு வாங்கி நான் என் வீட்ல வளர்க்கற கோழிக்கு போடறேன்...அரசாங்கம் 1 ரூபாக்கு அரிசி கொடுக்கலன்னா நான் கிலோ ரூ20 குடுத்து தீவனம் வாங்கி போடுவேன்...நான் ரூ5க்கு வாங்கி போடற அரிசி உற்பத்தி விலை ரூ23...ரூ20க்கு வாங்கி போடற தீவனதின் உற்பத்தி விலை ரூ13 மனித உழைப்பு அரசாங்கதால வீணடிக்க படுது...அப்புறம் எப்படி 2020 ல வல்லரசு...2220 ஆனாலும் இந்தியா எப்பயும் போல விளம்பர அரசுதான்

 
;