Thursday, September 9

திமுக சாதனைகளும் வேதனைகளும் - part II



தேவையில்லாத ஒரு கருத்து கணிப்பை நடத்தி, இவர்கள் குடும்பத்தில் யார் பலம் மிக்கவர்கள் என்பதை காட்டுவதற்கு அப்பாவி மூன்று பேர் பலியாக காரணமாக இருந்தார்கள்.  

 தமிழ் நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டார்கள், படுகிறார்கள். கிராமத்து பக்கம் 6 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தார்கள், இந்த திமுக ஆட்சி தொடங்கியது முதல் இன்று வரை இந்த மின்சார தட்டுபாடு தீர்ந்த பாடு இல்லை, மின்சாரம் இல்லாததை பற்றி (திமுக) அவர்கள் கவலைபட வில்லை.  

திமுகவை கேட்டால் சென்ற ஆட்சி தான் காரணம் என்று சொல்கிறார்கள்..அடுத்து வரும் ஆட்சியிலும் மின்சாரம் தட்டுபாடு தீரும் என்று தோன்றவில்லை, இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்வார்கள், மின் பற்றா குறை இப்போது தீரும் அப்போது தீரும் என்று நமது அமைச்சர் AC அறையில் உட்கார்ந்து கொண்டு பேட்டி அளித்தார் ஆனால் இவர்கள் பாராட்டுவிழா, மாநாடு, கட்சி மீடிங், என்று செலவு செய்த மின்சாரத்தை சேமித்து இருந்தாலே பாதி தட்டுபாடு தீர்ந்து இருக்கும். 

அரிசி ஒரு ரூபாய்க்கு தருகிறார்கள் நல்ல விசயம் தான் ஆனால் அதை கடத்தி விற்பனை செய்பவர்களை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது, எப்படி கண்டு கொள்வார்கள் திமுக கவுன்சிலர் முதல் அனைவரும் சேர்ந்து தான் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி கொண்டு போய் பக்கத்து மாநிலத்தில் 18 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது, இப்போது கடத்தலில் அதிகம் லாபம் பார்க்கும் கடத்தல் தொழில் இது தான் முதலிடம்.  இன்று ஒரு ரூபாய்க்கு ரேஷனில் அரசி தருகிறார்கள். சோற்றுக்கு செலவு ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் குழம்பு வைக்க சராசரியாக 50 ரூபாய்க்கு மேல் செலவாகிறது 


விலை வாசி உயர்வு சாமானிய மக்களால் சமாளிக்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது இந்த விலைவாசி உயர்வை கட்டுபடுத்த இந்த அரசு தவறி விட்டது, ஒரு நூல் அளவுக்கு கூட நடவடிக்கை எடுக்க வில்லை. விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல், டிசல் விலை உயர்வும் ஒரு காரணம், நான்கு, ஐந்து, முறை பெட்ரோல், டீசல், விலை உயர்த்தப் பட்டது திமுக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை இவர்கள் பதவி மட்டுமே முக்கியமாக இருந்தது, மக்கள் எப்படி கஷ்டப் பட்டாலும் இவர்கள் கவலை படவில்லை. 


ஈழ தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டில் கலைஞர் ஒருவரால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பி கொண்டு இருந்த தமிழ் நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றுமே செய்யாதது பெரும் ஏமாற்றத்தை தந்தது .அப்போதே மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டு இருந்தால், பல லட்சம் மக்கள் உயிர் இழந்ததை தடுத்து இருக்கலாம் இவர்கள் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுகவை தடுத்து விட்டது. கண்துடைப்புக்கா மட்டுமே போராட்டம் நடத்தி வந்தார், மற்றும் புறாவுக்கு வேலை கொடுத்து கொண்டு இருந்தார்.    

     
பாராட்டு விழா: எத்தனை பாராட்டு விழா, எதற்கு இந்த பாராட்டு விழா. ஒரு அரசு அதன் கடமையை செய்கிறது அதற்க்கு எதற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். பாராட்டு ஒரு மனிதனை ஊக்கப் படுத்தும் என்பது சரி தான் ஆனால் பாராட்டு விழாவுக்கே, ஒரு பாராட்டு விழா எடுத்தால் என்ன செய்வது, பாராட்டு விழாவில் ஒரு சலுகை வழங்குவார் அதற்க்கு ஒரு பாராட்டு விழா,


தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதே அவர்கள் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று தெரிந்து விட்டது.. பணம் கொடுக்க வில்லை என்றால் அவர்களுக்கு ஓட்டு வரது என்று தெரிந்து கொண்டார்கள், அதனால் தான், சத்தியம் வாங்கி கொண்டு ஓட்டு போட சொன்னார்கள், அரசியல் வாதி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால் கட்டாயம் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய மாட்டார்கள் என்று  மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்






















35 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

first vettu......................

ஜெயந்த் கிருஷ்ணா said...

iam here

Unknown said...

PAATHU VEETUKKU AUTO VANTHUDA POGUTHU. NAALA THAMYA IRUKKU VETHANAI PATTIYAL.

Anniyan said...

திமுக விற்கு ஓட்டுப் போடலாமா? வேண்டாம? ரசிகனின் கருத்து என்ன?

சௌந்தர் said...

@@@Anniyan ஓட்டு போடுவது மக்கள் விருப்பம் அதில் கருத்து சொல்ல முடியாது

இம்சைஅரசன் பாபு.. said...

சௌந்தர் எதிர் பார்ட்டி கிட்ட இருந்து எவ்வளவு தேருது என்னக்கும் கொஞ்சம் பிரித்து கொடுங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் சொன்னது…

@@@Anniyan ஓட்டு போடுவது மக்கள் விருப்பம் அதில் கருத்து சொல்ல முடியாது

//

நண்பா எப்படி கேட்டாலும் கடைசி வரைக்கும் உண்மைய சொல்லிடாதே..

என்னது நானு யாரா? said...

பலபேருடைய மனசில ஓடுகிற எண்ண ஒட்டத்தை படம் பிடிப்பதாக இருக்கிறது உங்களின் பதிவு!

சௌந்தர்! நன்றி + வாழ்த்துக்கள்!!!

செல்வா said...

///பாராட்டு விழாவுக்கே, ஒரு பாராட்டு விழா எடுத்தால் என்ன செய்வது, பாராட்டு விழாவில் ஒரு சலுகை வழங்குவார் அதற்க்கு ஒரு பாராட்டு விழா,
///
ஹா ஹா .. சரியா சொன்னீங்க ... போன முறை இந்த ஆட்சியின் சாதனைகள் பற்றி எழுதினதுக்கு ஒரு பாராட்டு விழ வைக்கலாம்னு இருந்தாங்க .. அத இப்படி எழுதி கெடுத்துட்ட ..

செல்வா said...

///திமுக விற்கு ஓட்டுப் போடலாமா? வேண்டாம? ரசிகனின் கருத்து என்ன?///
ஹி ஹி .. அப்புறமா சொல்லுறேன் .. ஆனா எனக்கு நீங்க பணம் தரனும் ..!!

செல்வா said...

/// சௌந்தர் எதிர் பார்ட்டி கிட்ட இருந்து எவ்வளவு தேருது என்னக்கும் கொஞ்சம் பிரித்து கொடுங்கள் ///
அட ச்சே .. எப்ப பாரு அவுங்கள பத்தி எழுதினா இவுங்க கிட்ட எவ்ளோ வாங்கின அப்படிங்கறது , இவுன்களப் பத்தி எழுதினா அவுங்க கிட்ட எவ்ளோ வாங்கின அப்படிங்கிறது . இதே வேலையா போச்சு உங்களுக்கு ..

இம்சைஅரசன் பாபு.. said...

//அட ச்சே .. எப்ப பாரு அவுங்கள பத்தி எழுதினா இவுங்க கிட்ட எவ்ளோ வாங்கின அப்படிங்கறது , இவுன்களப் பத்தி எழுதினா அவுங்க கிட்ட எவ்ளோ வாங்கின அப்படிங்கிறது . இதே வேலையா போச்சு உங்களுக்கு ..//
அதுதானே இப்ப நடக்குது செல்வா உங்க மனச தொட்டு சொல்லுங்க
நீங்க போன election ல எவ்வளவு துட்டு வாங்கினீங்க

pinkyrose said...

நீங்க சொல்றது சரிதான்
ஆன எவ்ளொ காலம் இப்டி சொல்லிட்டே இருக்குறது

must spark a change

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை பாராட்டி நம்ம சௌந்தர் க்கு ஒரு பாராட்டு விழா அண்ணன் தேவா தலைமையில்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை பாராட்டி நம்ம சௌந்தர் க்கு ஒரு பாராட்டு விழா அண்ணன் தேவா தலைமையில்...

dheva said...

பாரட்டு விழா ஓ.கே தம்பி..எங்க வச்சுக்கலாம்...வெறும் பய தொடர் பதிவு எல்லாம் முடிச்சுட்டான்..

அங்க ஒரு போஸ்ட் போட சொல்றேன்...விழாவ அங்க வச்சுக்குவோம்....! இப்போதைக்கு
எட்டாவது வட்டம் சார்பா தம்பி செளந்தருக்கு ஒரு பொன்னாடை போர்த்துவோம்...

sakthi said...

கண்துடைப்புக்கா மட்டுமே போராட்டம் நடத்தி வந்தார், மற்றும் புறாவுக்கு வேலை கொடுத்து கொண்டு இருந்தார்.


என் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிட்டீங்க!!!

அஹோரி said...

தி மு க வுக்கு ஓட்டு போட்டவனெல்லாம் கண்ணாடி பாத்து காரி துப்பிகிட்டு திரியறதா கேள்வி. தி மு க காரனுக்கு உங்க முகம் பாக்குற கண்ணாடிய குடுக்காதீங்க.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///இன்று ஒரு ரூபாய்க்கு ரேஷனில் அரசி தருகிறார்கள். சோற்றுக்கு செலவு ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் ஒரு நாள் குழம்பு வைக்க சராசரியாக 50 ரூபாய்க்கு மேல் செலவாகிறது ///

அடடா... இது நியாமான கணிப்பு.. :)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///அரசியல் வாதி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினால் கட்டாயம் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய மாட்டார்கள் என்று மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்///

ரொம்ப அழகா சொல்லியிருக்கிங்க.. சிந்திக்க வேண்டிய செய்தி.. :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///இப்போதைக்கு
எட்டாவது வட்டம் சார்பா தம்பி செளந்தருக்கு ஒரு பொன்னாடை போர்த்துவோம்... //

அப்படியே ஒரு பூங்கொத்தும் சேர்த்துக்கோங்க.. :)

Anonymous said...

இப்படிலாம் நீங்க சொல்லீட்டீங்கன்னா நாங்க பயந்துடுவோமா.. இன்னும் எங்க வீட்டுல நிறைய பேரனுங்க இருக்காங்க.. நாங்க அவங்க நலனை யோசிப்போமா.. இல்ல கேக்குறேன்..இந்த ஏழை நாய்ங்க.. எதுக்கு இன்னும் உயிர் வாழ்ந்து எங்கள படுத்துதுங்க.. குழம்பு வைக்க 50 ஆச்சுன்னா.. சூப்பு வச்சி சாப்பிடு.. போ போய் வேளய பாருங்க. .. இப்படிக்கு கருணாநிதி மற்றும் குடும்ப உறுப்பினர்கள்.

அருண் பிரசாத் said...

ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லை

KK said...

GOOD

Chitra said...

பாராட்டு விழா: எத்தனை பாராட்டு விழா, எதற்கு இந்த பாராட்டு விழா. ஒரு அரசு அதன் கடமையை செய்கிறது அதற்க்கு எதற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். பாராட்டு ஒரு மனிதனை ஊக்கப் படுத்தும் என்பது சரி தான் ஆனால் பாராட்டு விழாவுக்கே, ஒரு பாராட்டு விழா எடுத்தால் என்ன செய்வது, பாராட்டு விழாவில் ஒரு சலுகை வழங்குவார் அதற்க்கு ஒரு பாராட்டு விழா,

.......பாராட்டு விழா இல்லை என்றால் எப்பூடி?

dheva said...

ஆனந்தி..@பூங்கொத்து யாருக்கு பொன்னாடை போத்துறவங்களுக்கா?

dheva said...

சித்ரா...@ சத்தியமா என்ன சொல்றீங்கனு புரியலையே...பாராட்டு விழா நடத்தீடலாங்க....கண்டிப்பா...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேவா...

/// ஆனந்தி..@பூங்கொத்து யாருக்கு பொன்னாடை போத்துறவங்களுக்கா?//

சரி ஓகே..
ரெண்டு பூங்கொத்து..! :-))

School of Energy Sciences, MKU said...

திமுக கட்சி என்னும் அந்தஸ்தையும் தாண்டி மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகி விட்டது. அதன் தலைவருக்குப் பிறகு ஒரு பங்காளி சண்டை வரும் பாருங்க.....? ஹ்ம்ம்ம் பார்க்கத் தானே போறோம்

அ.சந்தர் சிங். said...

இந்த ஆட்சியின் சாதனை என்பதே வேதனைதான் சாதனை.

இவர்கள் தங்களின் குடும்பம்,குட்டி,கூத்தியாள் போன்றவர்களுக்க்காகதனே

உழைக்கிறார்கள்.மக்களுக்காக இல்லையே?

நமது மக்களும் சொரணை கெட்டவர்கள்.மான ரோசம் இல்லாதவர்கள்.

காசு வாங்கிக் கொண்டு வோட்டு போடுகிறார்கள் .விட்டால் காசு வாங்கிகொண்டு தன் மனைவிமார்களையேவிட்டு

கொடுப்பார்களோ?தெரியவில்லை.நமது இளையர்களும் சினிமாவில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டுள்ளார்கள்.

வீட்டில் குடும்பத்தோடு மானாட மயிலாட பார்க்கிறார்கள்.ஆண்கள் டாஸ்மாக்கில் குடியோடு குடி கொண்டுள்ளார்கள்.

குழந்தைகள் சுட்டி டிவி யும்,சித்திரம் டிவி யும் பார்த்து கொண்டே படிக்கிறார்கள்.

எப்படி இந்த நாடு உருப்படும்?

""நல்ல நாடு

நல்ல மக்கள்..

வாழ்க ஜன நாயகம்.

ஜெய் ஹிந்த்.

a.chandar singh

jothi said...

சௌந்தர் நல்ல சிந்தனை
நடக்கும் ஆட்சியையும் , நடந்த ஆட்சியையும் விமர்சிப்பது மிக எளிது . மக்களிடம் விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது ? அதற்க்கான வழிமுறைகளையும் சற்று சிந்தித்து எழுதுங்கள் .

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice thought provoking post... hope this will change some day... especially electricity is a pain... Nice post

aavee said...

நல்ல சமூக சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது பதிவு!!

புதியஜீவன் said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

vinu said...

neenga sollurathu nijamthaan aana enna pannurathu kazaga udanpirappugal ithai padichaanganna unga veettukku auto varumaeeeeeeeeeeeeeeeeeeeee


ippa enna paanuveenga ippa ennaa pannuveenga

 
;