Friday, November 12

என்கவுண்டரில் சந்தேகங்கள்....


கோவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கடத்தல்காரர்கள் இதற்கு முன் இவர்கள் என்ன என்ன குற்றங்கள் செய்து இருக்கிறார்கள்..?
ஆனால் இதில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றது இந்த கடத்தலில் சந்தேகம் இருக்கிறது


*  பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...?

*  கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..? 

*  எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல்  காரர்கள் ..?


இவர் எப்போதும் வரும் டிரைவர் இல்லை என்று கூறுகிறார்கள்... குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பும் பொழுது ஏன் வாசல் வரை வந்து கூட வழி அனுப்ப முடியவில்லை வேறு டிரைவர் வந்தால் எப்போதும் வரும் டிரைவர் ஏன் வரவில்லை கேட்கவேண்டும் அல்லது நாமே சென்று பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு வரவேண்டும்


அதிகாலை ஐந்தரை மணியளவில் போத்தனூர் அருகே வேன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துப்பாக்கி முனையில் போலீஸாரை மிரட்டத் தொடங்கியுள்ளான் மோகன கிருஷ்ணன்.

கேரளாவுக்குப் போகுமாறு அவன் கூறியுள்ளான். மேலும் துப்பாக்கி முனையில் போலீஸ் அதிகாரிகளையும் கடத்த முயன்றான். மேலும் துப்பாக்கியாலும் சுட்டுள்ளான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் காயமடைந்தனர் இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை சுட்டதில் 3 குண்டுகள் பாய்ந்து அவன் உயிரிழந்தான்,” என்றார் சைலேந்திர பாபு.



*  ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..?

*  கைதிக்கு கைவிலங்கு போடலையா...?எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...    

கொலைக்கு கடத்தல் மட்டும் தான் காரணமாக இருக்குமா...? தொழில் போட்டி சொத்து தகராறு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் ஏன் என்றால் கடத்தல்காரன் எந்த வித டிமான்ட் வைக்கவில்லை என்பதே பெரிய சந்தேகம் வருகிறது.



*  என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்

*  இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்

*  இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...

*  இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்

என்ன தான் போலீஸ்கார்கள் "இவன் தப்பிக்க நினைத்தான் அதனால் தான் நாங்கள் சுட்டோம்" என்றால் தமிழ் நாட்டில் ஒருத்தன் கூட அதை நம்பமாட்டான் எல்லாருக்கும் தெரியும் இது திட்டமிட்ட கொலை தான் என்று இந்த என்கவுண்டரை பார்த்து கடதல்கார்கள் பயந்தால் சரி தான் ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..?



இந்த கடத்தலால் அவதி படபோவது மோகனின் குடும்பம் தான். மோகனுக்கு தண்டனை கிடைத்தது சரிதான், எந்த தவறும் செய்யாத அவர்கள் குடும்பம் என்ன தவறு செய்தது...? இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்...! கடத்தல்காரன்

மோகன் மனைவி கூறியது, "என் கணவர் மிகப்பெரிய குற்றம் செய்து விட்டார், அவர் மன்னிக்க முடியாத குற்றவாளி, கொலை செய்யப்பட்ட குழந்தைகள் என் கண் முன்னே நிற்கின்றன. அந்த பிஞ்சு குழந்தைகளும், ஒரு பாவமும் அறியாதவர்கள். என் கணவருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எனக்கு தெரியும். அவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படாவிட்டால் கோர்ட்டு மூலம் தண்டனை கிடைத்து இருக்கும். இப்போது நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று கூறினார்....  


அந்த குடும்பத்தை நாம் மன்னிப்போம்....



35 comments:

dheva said...

குற்றத்தின் பின்ணனியை விட....இது போன்ற என்கவுண்டர் கொலைகளின் பின்ணனிகள்.... மிககக் கொடுமையானது...! தவறுகள் எப்போதும் நிகழ்வது அதற்கான தீர்வுகள் சில நேரம் கொடுமையாக அமைந்து விடுகிறது.

பல வித சந்தேகங்களை எழுப்பும் இது போன்ற என்கவுண்டர்கள் ஆராயப்படவேண்டியவை.....இது போன்ற நிகழ்வுகளில் அரசு மெத்தனம் காட்டாமல் விசாரித்து நேர்மையான அறிக்கைகளை மக்களுக்கு சமர்பித்து எண்கவுண்டரில் இருக்கும் நியாங்களை மக்களுக்கு சொல்லவேண்டும்

இல்லையென்றால் காவல்துறைக்கும் வலுவுள்ள அரசில சக்திகளும் தங்களின் எதோச்சதிகாரத்தை பிடிக்காதவர்கள் மீது ஏவி விட சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

கடத்தலும் கொலையும் எவ்வளவு குற்றமோ அதற்கு சரிக்கு சமமான குற்றம்தான் வஞ்சம் தீர்க்கவும் காழ்புணர்ச்சியை காட்டவும் நிகழ்த்தப்படும் என்கவுண்டர் கொலைகள்....

வெளிச்சத்திற்கு வருமா மர்மங்கள்......???????

எஸ்.கே said...

கடத்தலுக்கு பின்னாலும் என்கவுண்டருக்கு பின்னாலும் பல விசயங்கள் ஒளிந்திருக்கலாம்!
பல சமயங்களில் இதுபோன்ற விசயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன ஏதோ சில காரணங்களால்!

அருண் பிரசாத் said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலை...


செளந்தர், அட்டெண்டன்ஸ் போட்டுக்கோ...

present sir

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த என் கவுன்ட்டர், அரசே ஏற்பாடு செய்ததுதான். அதனால் எத்தனை கமிசங்கள் விசாரித்தாலும் ஒரு போதும் மர்மங்கள் வெளிவரப்போவதில்லை!

Anonymous said...

சில விடையில்லா கேள்விகள் நம்மிடம் நிறைய இருக்கு நண்பா :(

Kousalya Raj said...

//இப்போது நானும் என் குழந்தையும் அனாதையாக தவிக்கிறோம். என்னையும் என் குழந்தையையும் இந்த சமுதாயம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று கூறினார்.//

இது தாங்க இந்த விசயத்தில் இருக்கிற மிக கொடுமையான ஒன்று. செல்லும் இடமெல்லாம் அந்த குழந்தைகள் இனி பெற போவது வசை மொழிகளைத்தான்...?! :(

இந்த என்கவுண்டர் எதனால் நடந்தது என்பதை விட இவ்வளவு சீக்கிரமாக நடந்தது தான் பலரின் சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கெல்லாம் பதில் இல்லை...

செல்வா said...

உண்மைலேயே அருமையான ஒரு பதிவு.,
நான் இதுவரைக்கும் இந்த நிகழ்வுபற்றி நிறைய பதிவுகள் படித்துவிட்டேன் .
ஆனா ஒரு பதிவுல கூட இந்த மாதிரி கேள்விகள் கேட்கப்படலை .. ஆனா நிச்சயம் இந்தக் கேள்விகளுக்கான உண்மையான பதில்களைக் கண்டுபிடிப்பதே காவல்த்துறையின் அடுத்த வெற்றி ..!! கலக்கிடடா..!

NaSo said...

ஆமாங்க சௌந்தர், தமிழ் நாட்டில் இந்த என்கவுண்டரை யாரும் நம்பவில்லை. இதற்கு பின்னால் இருக்கும் சக்திகளை வெளிச்சம் போட்டு காட்டுவார்களா என்பது சந்தேகமே!

ஜீவன்பென்னி said...

தவறு செஞ்சா தண்டை கிடைக்கும் எங்கின்ற பயம் இருந்தால் தான் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்த விசயத்த பொறுத்த வரையிலும் எந்த உண்மையும் யாருக்கும் தெரியப்போவப்போறதில்ல.

தமிழ்மலர் said...

நீதிபதி கோபிநாத் ஆய்வாளர் கனகசபாபதியிடம், ‘‘நீதிமன்ற காவலில் இருந்து புலன் விசாரணைக்காக போலீசு காவலில் எடுத்து சென்ற 1 வது எதிரியிடம் விசாரணை நடத்த ஆய்வாளர் அண்ணாதுரை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தாரா?’’ என்று கேட்டார்.

இதற்கு ‘‘அனுமதி பெறவில்லை’’ என ஆய்வாள் கனகசபாபதி பதில் அளித்தார்.

நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலேயே அண்ணாதுரை மோகனகிருசுணனை விசாரணைக்கு அழைத்து சென்றதும் சுட்டு கொன்றதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்த என்கவுன்டர் குறித்து சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Unknown said...

இந்த மேட்டருக்குப் பின்னாடி ஏதோ பெரிய விசயம் இருக்கு..

Anonymous said...

மக்கள் அவன் மீது கொந்தளிப்பாக இருந்ததால் என்கவுண்டர் பாராட்டு பெற்று விட்டது..இதன் மர்மங்கள் வரவில்லை...அதிகரிக்கும் குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர இது போன்ற என்கவுண்டர்கள் அவசியம் தேவை....

ஹேமா said...

எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை !

Anonymous said...

அரசியல் பரபரப்புகளை திசை திருப்பும் முயற்சியாக கூட இது பல சமயம் பயன்படும்..ராசா விவகாரம் அமுங்க வில்லையெனில் இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் ஒரு பரபரப்பு உண்டாகும் பாருங்கள்

Anonymous said...

எப்படியும் இப்படியான கொடூரமான மனிதர்கள் உலகிற்குத் தேவையில்லை//
வாஸ்தவம் தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சில கேள்விகளுக்கெல்லாம் எப்போதும் நமக்கு பதில்கள் கிடைப்பதில்லை...

Anonymous said...

சில பதில்கள்களுக்கெல்லாம் எப்போதும் நமக்கு கேள்வி கிடைப்பதில்லை...

என்கவுன்டர் ஏகாம்பரம் said...

* பணத்திற்காக குழந்தையை கடத்தினார் என்றால் ஏன் கொலை செய்ய வேண்டும்...?

குழந்தைகள் காட்டிக்கொடுக்கக்கூடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஏதேனும் சித்ரவதையில் குழந்தைக்கு மயக்கம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கலாம். பயம்.

* கடத்திய மூன்று மணி நேரத்தில் ஏன் கொலை செய்யவேண்டும்..?

பயம். விஷயம் தீவிரமடைவது கண்டு போலீஸில் அகப்படுவோம் என்ற பயம். போலீஸின் தேடுதல். பழக்கமில்லாமை.

* எந்த வித டிமான்ட் எவ்வளவு பணம் தேவை என்று ஏன் எதுவும் கேட்கவில்லை கடத்தல் காரர்கள் ..?

சொன்னால் மட்டும் நம்பிவிடுவோமா என்ன?

* ஏன் கைதியை அதிகாலை தான் கூப்பிட்டு செல்ல வேண்டுமா..?

கூட்டிச் செல்லக்கூடாது என்று விதி ஏதும் இல்லை. பகலில் கூட்ட நெரிசலில் என்றால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கலாம். சரியான நேரத்திற்கு அழைத்துச் செல்லப்படவேண்டிய அவசியம். மற்ற குற்றவாளிகளையும் அழைத்துச்செல்ல வேண்டிய கால அவகாசங்கள்.

* கைதிக்கு கைவிலங்கு போடலையா...?எப்பொதும் இந்த மாதிரி கைதிக்கு காலிலும் விலங்கு மாட்டி இருப்பார்கள்...

சில குற்றத்தின் தன்மை பொறுத்து ஆம்.

* என்கவுண்டர் நடக்க சில காரணகள் இப்படி இருக்கலாம்

* இப்படி செய்தால் தான் இனி கடத்தல்கார்களுக்கு ஒரு பயம் வரும்

கண்டிப்பாக.

* இந்த கடத்தலுக்கு பின் யாராவது பெரும்புள்ளி இருக்கலாம் அவர் மாட்டி கொள்ள கூடாது என்பதற்காக இப்படி செய்து இருக்கலாம்...

இருக்கலாம். அவருக்கு இனி நிம்மதி இருக்காது. தீனி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது
வேறு வழியில் முடிவு வரும்.

* இந்த குழந்தையின் தந்தையே பணம் கொடுத்து இப்படி என்கவுண்டர்செய்ய சொல்லி இருக்கலாம்

இருக்கலாம். அனுமானங்கள்தானே. போலீஸே கூட வெறுத்துப்போய் செய்திருக்கலாம். அந்தக் கைதியே கூட தவறு செய்ததின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். போலீஸ் தடுக்க முடியாமல் பெயரைத் தட்டிச்சென்றிருக்கலாம்.

//ஆனால் போலீஸ்காரர்கள் இதையே என்கவுண்டரை காரணம் காட்டி அனைவரயும் மிரட்டினால் என்ன செய்வது..?
//

மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவது போல இருக்கிறது :))))

தவறு செய்பவர்கள் பரப்பும் கருத்து அது. நாமும் மாட்டுவோம். நமக்கும் இந்தக் கதிதான் என்ற பயத்தின் கூக்குரல் அது. ராணுவத்திற்கு முதலிடம் கொடுத்து பட்ஜெட் நிறைவேற்றுவதால் ஜனனாயகம் அழிந்து நாமும் பாகிஸ்தான் போல ஆகிவிடுவோம் என்று நீங்கள் நம்பினால் இதையும் நம்பலாம்!!!

Unknown said...

என்கவுண்டர் என்பதே தப்பான விசயம்.. நீதித்துறையின் மூலம் மட்டுமே தண்டனைகள் விசாரிக்கப்பட வேண்டும். மோகன்குமார் விசயத்தில் கண்டிப்பாக மர்மம் இருக்கிறது. குற்றவாளியை பற்றி போலிஸ் சொல்வதை மட்டுமே நாம் நம்புகிறோம்,நீதி மன்றம் விசாரிக்காமல் அவன் குற்றவாளி என்பதை ஏற்றுகொள்ளவே முடியாது. இதன் பின்னணியின் ஏதோ இருக்கிறது.

போலிசே சட்டத்தை கையில் எடுப்பது தவறு.

ஜில்தண்ணி said...

இதுக்கெல்லாம் பதில் கிடைக்கவே கிடைக்காது

எல் கே said...

present

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

என்கௌண்டர் என்ற பெயரில் முழு சுதந்திரமும் கையில் எடுக்காம இருக்கணும்..

நீங்க சொன்ன மாதிரி, அந்த குடும்பத்தின் நிலை தான்...... இனி சமுதாயத்தில் அவங்க சராசரி வாழ்க்கை வாழ்வதுவே போராட்டம் தான்...

நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்..!

கவிதை பூக்கள் பாலா said...

ஐயா மனித நேயம் பேசறவங்களே ! மறுபடியும் கொடிய தூக்கிடாதீங்க !
ரத்தத்திற்கு ரத்தம் என்பதல்ல என் வாதம்
மேலும் படிக்க
http://redhillsonline.blogspot.com/2010/11/blog-post_09.html

Unknown said...

good post

அன்பரசன் said...

நல்ல பகிர்வு...

Prasanna said...

சிறப்பாக எழுதப்பட்டு உள்ளது.. நன்றி..

இம்சைஅரசன் பாபு.. said...

சௌந்தர் உனக்கு சந்தேகம் தீரனும் ன ஒரே வழி தான் இருக்கு நான் சொன்ன நீங்க கேப்பீங்க என்னக்கு தெரியும் .............என்ன செய்றீங்கன்ன .
மேல ஒரு துப்பாக்கி ஸ்டில் இருக்குதுல அத மாதிரி நிஜ துப்பாக்கி ஒன்னு வாங்கி உங்க நெத்தி பொட்டில் வச்சு சுடுங்க .உடனே சந்தேகம் தீர்ந்திடும் ......எப்படி என்ன ஐடியா ..........
கடைசில மக்களாகிய நாம் இதை செய்வதை தவிர வேறு வழி இல்லை .யாரும் என்ன நடந்ததுன்னு உண்மைய சொல்லவே மாட்டன்..............

மங்குனி அமைச்சர் said...

இனி அந்த குடும்பம் கொலைக்காரன் குடும்பம் கொலைகாரன் மகன்,மகள் ,என்று தான் அழைக்கபடுவார்கள்..///

இல்லை அப்படி நடந்தால் மிகப்பெரிய தவறு .............நிச்சயம் நடக்காதுஎன்று நம்புவோம்.......

ஜெயந்தி said...

உங்கள் சந்தேகங்கள் சரியானதே.

jothi said...

உண்மையை மிக அவசரமாக மறைத்துவிட்டனர் என்றே தோணுகின்றது .........!!!!

சட்டம் மட்டுமே யாரையும் தண்டிக்க முடியும் என்ற நிலை மாறுவதைத்தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன ....... நல்லபகிர்வு ... நல்ல சந்தேகங்கள் ......

வாழ்த்துக்கள் சௌந்தர் .

Unknown said...

உண்மையான பகிர்வு

ஆனந்தி.. said...

good post brother..

vimalanperali said...

அந்தக் குடும்பத்தை மன்னித்து ஏற்றுக்கொள்கிற மனது நம் சமுதாயத்திற்கு வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பும் தரவேண்டும்.

kavisiva said...

நியாயமான கேள்விகள்தான். ஆனால் அந்த பாவியைக் கொன்றது தவறாகத் தோன்றவில்லை. காரணம் நமது நீதிமன்றங்கள். தேவையற்ற இழுத்தடிப்புகள் காலம் கடந்த நீதி இதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப் படும் அநீதி. மேலும் குற்றம் செய்பவனுக்கும் பயம் என்ற ஒன்று இல்லாமலேயே போய் விடும்.

கொல்லப்பட்டது அம்பாக இருந்தாலும் அம்பும் குற்றவாளிதான். எய்தவனையும் தண்டித்தால் இன்னும் நல்லா இருக்கும்.

 
;