Friday, November 19

கலாச்சார மாற்றம் ............. இது தேவையா...?



இப்பொழுது பதிவுலகில் எது கலாச்சாரம் என்ற பதிவுகள் தான் ஓடி கொண்டு இருக்கிறது அனைவரும் அவர் அவர்களுக்கு தெரிந்த (பிடித்த) கலாச்சாரம் பற்றி எழுதுறாங்க நானும் கலாச்சாரம் என்றால் என்ன..? சொல்றேன் 

முன்னோர்கள் காலத்தில் கணவன் இறந்து விட்டால், மனைவியை கணவர் உடன் எரித்து விடுவார்கள்...இது ஒரு கலாச்சாரம் .....இது நல்ல கலாச்சாரமா....? இல்லை அதனால் இதை எல்லாம் எதிர்த்தார்கள் அதனால் அந்த கலாச்சாரம் இப்போது இல்லை. கலாச்சாரம் என்பது மாநிலத்திற்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறு படும்.மதத்திற்கு மதம் வேறு படும்,

எங்க தாத்தாவுக்கு அம்மா எல்லாம் (பாட்டி) சட்டையே போட்டு இருக்க மாட்டாங்க ஆனா அப்போ அதான் கலாச்சாரம் அப்பறம் சட்டை போட்டாங்க வெறும் புடவை தான். பிறகு பாவாடை சட்டை போட்டாங்க, சுடிதார், இப்போ பேன்ட் ஷார்ட்ஸ் போடுறாங்க ஆடைகள் விஷயத்தில் கலாச்சாரம் மாறினால் பரவாயில்லை ஆனால் எந்த இடத்திற்கு போகிறோமோ அதற்க்கு ஏற்றார் போல் ஆடை அணிய வேண்டும்..

எப்போதும் நமக்கு வெளிநாட்டு கலாச்சாரம் மேல் தான் மோகம் வெள்ளைக்காரன் எது செய்தாலும் அதை நாம் உடனே செய்து விடுகிறோம் வெள்ளைக்காரன். சூரியகுளியல் குளிக்கிறான் என்றால் அவன் நாட்டில் சூரியன் ஒளி சில மாதங்கள் மட்டும் தான் வரும் அதனால் சூரியசக்தி வேண்டும் என்று அப்படி செய்கிறார்கள். அதே மாதிரி நாமும் செய்ய முடியுமா...? வெளிநாட்டுக்காரன் செய்யும் நல்லது எல்லாம் நம்ம மக்கள் கண்களில் படாது எது நமக்கு கெடுதலோ அதை தான் தேர்ந்தெடுப்போம். வெளிநாட்டு காரர்கள் ஏன் நமது கலாச்சாரம் பிடிக்கிறது ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பதால் தான் 


திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்வது அதான் LIVING TOGETHER (அப்படிதானே...? எங்க பாக்குறீங்க உங்களை தான் கேட்கிறேன்???) 

ஏன் இப்படி LIVING TOGETHER முறை இவர்கள் தேர்ந்துஎடுக்கிறார்கள் என்றால் "பார்த்து பார்த்து" திருமணம் செய்து அதில் பிரச்னை வந்து விவாகரத்து செய்து கொள்வதை விட சிறிதுநாட்கள் பழகி விட்டு பிடித்து இருந்தால் கல்யாணம் செய்துகொள்வார்கள் இல்லை என்றால் பிரிந்து விடுவார்கள் அதுதான் LIVING TOGETHER,யார் இதை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை....   


கொஞ்சம் டவுட்:)))))
*  LIVING TOGETHER வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றால் இவர்கள் பிரியும் போது அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விகுறி..?  

*  திருமணம் ஆகி இருந்தால் தன் மகன் வீடு மகள் வீடு என்று உரிமையுடன் போக முடியும் ஆனால் LIVING TOGETHER முறையில் வாழ்ந்தால் அவர்கள் வீட்டுக்கு போக முடியுமா, போனாலும் உரிமையுடம் இருக்க முடியுமா..? இல்லையென்றால் அவர்களே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட வேண்டியதுதான்...! ஆமாம் தனித்தனியே வாழும் மனுசங்களுக்கு யாரு இருப்பா வயசான காலத்துல பாத்துக்க....????

*  வெளி நாட்டில் LIVING TOGETHER முறையில் பிறந்த குழந்தைகள் அவர்கள் பிரிந்தவுடன் சர்ச் அல்லது காப்பகத்தில் வளர்க்கப்படுகிறார்கள் அந்த குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறார்கள் 

*  இது ஆண்களுக்கு சாதகமான விசயம் LIVING TOGETHERமுறையில் வாழ்தால் ஜீவனாம்சம் கிடைக்காது.

டவுட் இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...


அனைத்திற்கும் ஒரு விதி இருக்கிறது சூரியனை பூமி சுற்றுவது ஒரு விதி, அதை மாற்றி சுற்ற வைக்கிறேன் என்று சொன்னால் என்ன நடக்கும் உலகம் அழியும் அதே போல் நமக்கு என்று கட்டுபாடு இருக்கிறது அதை மாற்றி செய்தால் நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவர்கள். சந்ததியினர் எல்லாம் தெளிவான இரு வாழ்க்கை வாழ வேண்டுமா...இல்லை எனக்கு பிடிச்சத நான் செய்வேன் என்ற யாருடனும் ஒத்துப் போகாத அகங்கார படுகுழியில் விழ வேண்டுமா? ஆமா.. நான் கேக்குறேன்....நான் நான்னு வாழ்ற ஒரு வாழ்க்கை வாழ்க்கையாங்க...?   நினைச்சு பாக்கவே கேவலமா இருக்கு...... 

"அட அட என்ன என்னமோ பேசிட்டு போறேனே நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போறேன்" எங்கநாட்டு கலாச்சாரதிற்கு இந்த வாழ்க்கை முறை ஒத்து வராது எங்களுக்கு காதல் திருமணம் இருக்கு, பெரியோர்களால் நிச்சயக்கப் பட்ட திருமணம் இருக்கிறது. உங்களுக்கு LIVING TOGETHER வாழ்கை முறை பிடித்து இருந்தால் அந்த வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுங்கள் உங்கள குழந்தைக்கு அந்த வாழ்கைமுறையை பின்பற்ற சொல்லுங்கள், 


ஏழைகள் இப்படி LIVING TOGETHER என்ற முறையை தேர்ந்துஎடுப்பது இல்லை பணம் கொளுத்து போய் இருப்பவர்களும் வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்





84 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuu

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா இந்த பதிவு எதாவது உள் குத்து இருக்கா............?

எல் கே said...

நல்லா தெளிவா எழுதி இருக்கீங்க தம்பி. அதற்கு என் வாழ்த்துக்கள் .

// LIVING TOGETHER வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது என்றால் இவர்கள் பிரியும் போது அந்த குழந்தையின் எதிர்காலம் கேள்விகுறி..?
///

அட அதப்பத்தி அவங்களுக்கு என்ன கவலை ? அவங்களுக்கு அவங்க உரிமைதான் முக்கியம். அடுத்தவன் எப்படி போனா அவங்களுக்கு என்ன ?

//உங்கள குழந்தைக்கு அந்த வாழ்கைமுறையை பின்பற்ற சொல்லுங்கள்,
//

ஊருக்குதான் உபதேசம்.

நம்ம வடிவேலு பாணில சொன்னா "அடுத்தவன் தலையில வழிஞ்ச தக்காளி சட்னி. தன் தலையிலே வந்தா ரத்தம்

Anonymous said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//மக்கா இந்த பதிவு எதாவது உள் குத்து இருக்கா.......... //

மச்சி உள்குத்தெல்லாம் இல்ல நேரடியா வெளிக்குத்துதான்.. என்ன சௌந்தர் கரெக்ட்டு தான? ;)

சௌந்தர் said...

Balaji saravana கூறியது...
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//மக்கா இந்த பதிவு ஏதாவது உள் குத்து இருக்கா.......... //

மச்சி உள்குத்தெல்லாம் இல்ல நேரடியா வெளிக்குத்துதான்.. என்ன சௌந்தர் கரெக்ட்டு தான? ;)

கரெக்ட்டு தான்....

இம்சைஅரசன் பாபு.. said...

//வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்//

மக்கா எனக்கு ரெண்டு பேர் தெரியும் வெளிநாட்டில் .......நம்ம பதிவர் தான் ஒன்னு தேவா,இன்னொன்று என் பாசத்திற்குரிய அருமை நண்பன் டெர்ரர் ........இவர்கள் எதாவது சைடுல லிவிங் டுகதர் ....வச்சிருபான்களோ ..........?

தமிழ் அமுதன் said...

good post..!

எல் கே said...

//இவர்கள் எதாவது சைடுல லிவிங் டுகதர் ....வச்சிருபான்க/


hahaha

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்//

மக்கா எனக்கு ரெண்டு பேர் தெரியும் வெளிநாட்டில் .......நம்ம பதிவர் தான் ஒன்னு தேவா,இன்னொன்று என் பாசத்திற்குரிய அருமை நண்பன் டெர்ரர் ........இவர்கள் எதாவது சைடுல லிவிங் டுகதர் ....வச்சிருபான்களோ ..........?////


டெரர் நல்ல பையன் தான் தேவா எப்படி எனக்கு தெரியாது....!

ஸாதிகா said...

நல்ல பதிவு.

எல் கே said...

//என் பாசத்திற்குரிய அருமை நண்பன் டெர்ரர் /./

நம்ம அருண் பிரசாத்

இம்சைஅரசன் பாபு.. said...

//எங்கநாட்டு கலாச்சாரதிற்கு இந்த வாழ்க்கை முறை ஒத்து வராது எங்களுக்கு காதல் திருமணம் இருக்கு,//

பய புள்ள இப்பவே ஏதோ ரெடி பண்ணிட்டான்னு நினைக்கிறன் .........அதான் இப்படி போட்டிருக்கான்......வேண்டாம் மக்கா ..........அது சரி படாது ....வேனும்ன நீ ஒரு தடவ ட்ரை பண்ணி பாரேன் ...இந்த லிவிங் டுகதர் அ.....(அதுக்கு தான் பாம்பே ல ரெட் லைட் ஏரியா இருக்கு .....அல்லது கொல்கத்தால சோனகச் இருக்குனு யாராவது சொன்ன பிச்சி புடுவேன் பிச்சி )

இம்சைஅரசன் பாபு.. said...

//நம்ம அருண் பிரசாத்//
ஹி ...........ஹி ..மறுத்துட்டேன் ......

அருண் பிரசாத் said...

அய்யா சாமிகளா... நான் உண்டு என் பிளாக் உண்டுனு இருக்கேன்... குடும்பத்துல குழப்பத்தை உண்டு ப்ண்ணிடாதீங்க.... வூட்டுகாரம்மா இங்கதான் கூட இருக்கு... பிச்சுபுடும் பிச்சி....


by the way for soundar post....

Me present sir.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////வெளிநாட்டில் இருக்கும் சிலரும் இந்த முறை புனிதமானது என்று சொல்கிறார்கள்//

மக்கா எனக்கு ரெண்டு பேர் தெரியும் வெளிநாட்டில் .......நம்ம பதிவர் தான் ஒன்னு தேவா,இன்னொன்று என் பாசத்திற்குரிய அருமை நண்பன் டெர்ரர் ........இவர்கள் எதாவது சைடுல லிவிங் டுகதர் ....வச்சிருபான்களோ ..........?//

அடப்பாவி தேவா அண்ணன் மீதும் என் நண்பன் டெரர் மீதும் சந்தேகப் படுகிறாயா? அய்யோ என் ரத்தம் கொதிக்கிறதே. நீ எப்படி சந்தேகப் படலாம். அவர்களிடம் மன்னிப்புக் கேள்.நீ சந்தேகப் படக்கூடாது. உறுதியாக கூறு. ஏனென்றால் அதுதான் உண்மை. சந்தேகம் ஒரு கொடிய நோய். அவர்கள் இருவரும் சைடுல லிவிங் டுகதர் வைத்திருப்பது உண்மைதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதை தொடர்பதிவாக சூரியனின் வலை வாசல் அருண் பிரசாத் தொடருவார்.

சௌந்தர் said...

இதை தொடர்பதிவாக சூரியனின் வலை வாசல் அருண் பிரசாத் தொடருவார்.///

அருண் புனிதம் என்று தான் சொல்கிறார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சௌந்தர் சூப்பர் போஸ்ட். நல்ல விஷயம் . உறைக்குதான்னு பாப்போம்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
சௌந்தர் சூப்பர் போஸ்ட். நல்ல விஷயம் . உறைக்குதான்னு பாப்போம்///

உறைக்க்கவில்லை என்றால் சொல்லுங்கள் கையில் மிளகாய்பொடி வைத்து இருக்கேன் தரேன்..

அருண் பிரசாத் said...

பாவிகளா... சட போட ஆரம்பிச்சுடீங்களே... பொட்டு வெச்சி பூ வெக்காம விட மாட்டீங்க போல....

வேணாம்.. வலிக்குது... சரண்டர்

kavisiva said...

நல்ல பதிவு. லிவிங் டுகெதருக்கு நம் நாட்டில் சின்னவீடுகளுக்கு கிடைக்கும் மரியாதைதான். சத்தியமா தமிழ்நாட்டு மன்னரைப் பற்றி நான் எதுவுமே சொல்லலை.

எல் கே said...

//வேணாம்.. வலிக்குது... சரண்ட//

அதெப்படி

dheva said...

இத.. நான் சும்மா விடமாட்டேன்.....யோவ் மாப்ள டெரரு....எங்க இருக்கா வா.....சீக்கிரம்....

இங்க ஒரு தனி மனித தாக்குதல் நடந்து இருக்கு.....அச்சோ என்ன பண்றதுன்னு தெரியலையே.....இருங்க.... நான் போய்....ஃப்ர்ஸ்.....ஒரு ஜோடா குடிச்சுட்டு வர்றேன்....!!!!!!

எல் கே said...

//இங்க ஒரு தனி மனித தாக்குதல் நடந்து இருக்கு..//

onnu illa rendu

dheva said...

சுப்ரமணிக்கு டீ பிடிக்கும்..ராமசாமிக்கு காபி பிடிக்கும்.....அவன் காபிதான் குடிப்பான் இவன் டீ தான் குடிப்பான்....!!!!!!!!!!!!

டீ குடிக்கிற சுப்பிரமணிக்கு டீல உப்பு போட்டு பிடிச்சா பிடிக்கும்....காபி குடிக்கிர ராமசாமிக்கு எதுவுமே போடாம இருப்பதுதான் பிடிக்கும். சுப்ரமணி இரமசாம் காபில ஏன் உப்பு போட்டு குடிக்கல....அது தான் நல்லா இருக்குன்னு சொல்றான். ராமசாமி என்ன சொல்றான் நான் குடிக்கிறது முதல்ல டீ இல்ல காபி...அதுவும் எதுவும் போடாம குடிச்சுகிறேன்....அதுதான் என் உடம்புக்கு ஒத்துக்கும்னு எங்க ஊரு டாக்டர் சொல்லி இருக்கார்னு.....

அதுக்கு சுப்ரமணி நான் டீ ல உப்பு போட்டு குடிக்கிறேன்.....அது நல்லாதான் இருக்கு.. யாரோ ஒரு டாக்டர் எப்படி உன்னை கண்ட்ரோல் பண்ணலாம்...உன் காபி நீ எது வேணா போட்டு குடிக்கலாம்...ஏன் விசத்த கூட போட்டுக் குடிக்கலாம்..! எவன் கேக்குறது...உனக்கும் உன்னை சுத்தி இருக்கவங்களுக்கும் எது முக்கியம்னு பாக்குற...இந்தா விசம்னு சுப்பிரமணி சொல்லிட்டு இருக்கான்.....


இராமசாமி காலம் காலமா காபி குடிச்சவன்.....அப்பப்ப டாக்டர்கிட்ட அட்வைஸ் கேட்டு அது படி நடக்குறவன்.....இப்போ அவன் காபிய குடிக்காம வச்சிகிட்டு இருக்கான்....

1) காபிய கொட்டிட்டு போய்ட்டே இருக்கலாம்

2) டீ ல உப்பு போட்டு குடிக்கலாம்

3) டாக்டர போய் அடிக்கலாம்

4) காபில உப்பு போட்டு குடிக்கலாம்

5) டீய புடுங்கு ஊத்திட்டு சுப்ரமணிக்கும் காபி கொடுக்கலாம்.....


எது மக்கா உங்க சாய்ஸ்???????? கொஞ்சம் சொல்லுங்களேன்.........!!!!!!

செல்வா said...

//சூரியசக்தி வேண்டும் என்று அப்படி செய்கிறார்கள். அதே மாதிரி நாமும் செய்ய முடியுமா...?/

ஏன் முடியாது .? ஏன் முடியாது .? ஏன் முடியாது.?

செல்வா said...

@ தேவா
எங்கயோ போயிட்டீங்க .. :-)

சௌந்தர் said...

LK சொன்னது…
//இங்க ஒரு தனி மனித தாக்குதல் நடந்து இருக்கு..//

onnu illa rendu////

lk dheva நீங்க ரெண்டு பெரும் சொன்னது தப்பு 1 அருண் 2 தேவா 3 டெரர்

எல் கே said...

@தேவா
தெளிவா குழப்பறீங்க

செல்வா said...

நம்ம பங்குக்கு living together பற்றி சில வரிகள் :
Living Together என்பது ஒரு செடியாகும் .அது இங்கிலாந்து , ஆஸ்திரேலிய போன்ற குளிர்ப்பிரதேசங்களில் மட்டுமே நன்றாக கொழித்து வளரக்கூடியது .. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளில் வளர்வது சற்றே கடினமாக உள்ளது என்பது வருந்தத்தக்கதே .. ஹி ஹி ஹி ..

Madhavan Srinivasagopalan said...

"Living Together ___ ____" is the best of all.

___ = for
____ = ever

புரியுதா ?

இம்சைஅரசன் பாபு.. said...

//எது மக்கா உங்க சாய்ஸ்???????? கொஞ்சம் சொல்லுங்களேன்.........!!!!!!//

எனக்கு ஒண்ணுமே புரியல அண்ணா .........மொத்ததுல யாரும் ஆணியே புடுங்க வேண்டாம்

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது…
//சூரியசக்தி வேண்டும் என்று அப்படி செய்கிறார்கள். அதே மாதிரி நாமும் செய்ய முடியுமா...?/

ஏன் முடியாது .? ஏன் முடியாது .? ஏன் முடியாது.?////

@@@ப.செல்வக்குமார்
செல்வா நான் முடியாது சொல்ல வில்லை முடியுமா கேட்டேன் நீ 120 டிகிரி வெயில் போய் சூரியகுளியல் குளி யார் வேண்டாம் சொன்னா...

எல் கே said...

@சௌந்தர்
அட போங்கப்பா, கல்யாணமே நம்ம கலாச்சாரம் இல்லைன்னு சொல்றாங்க.... நீ வேற

எல் கே said...

//Living Together ___ ____" is the best of all.

___ = for
____ = ever
//

neenga osnnathu = marriage

செல்வா said...

//அட போங்கப்பா, கல்யாணமே நம்ம கலாச்சாரம் இல்லைன்னு சொல்றாங்க.... நீ வேற
//
ஹி ஹி ஹி

dheva said...

எல்.கே...@@@@@ என்னது.....................???????????? கல்யாணம் தமிழ் கலச்சாரம் இல்லையா ???? ஆமாம் அது தமிழ் கலாச்சாரம் இல்லை .............திராவிட கலாச்சாரம்.....பாஸ்!

சௌந்தர் said...

LK சொன்னது…
@சௌந்தர்
அட போங்கப்பா, கல்யாணமே நம்ம கலாச்சாரம் இல்லைன்னு சொல்றாங்க.... நீ வேற////

@@@LK
யார் அந்த கல்யாணம் அவர் எந்த கலாச்சாரம் நமக்கு எப்படி தெரியும் ஒரு வேலை குண்டுகல்யாணமா இருப்பாரோ..?

எல் கே said...

//திராவிட கலாச்சாரம்.....பாஸ்!///

:)))

இம்சைஅரசன் பாபு.. said...

//இருவரும் சைடுல லிவிங் டுகதர் வைத்திருப்பது உண்மைதான்.//

இந்த பயல ரமேஷு பத்தி எனக்கு தான் தெரியும் ..........பார்த்தீங்களா பதிவுல நண்பர்களே .....இந்த பயல் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல ன்னு எல்லோருக்கும் இப்ப புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறன் .பய சைடுல ஒரு லிவிங்டு கதர் வச்சிருக்கான் ....அது எனக்கு மட்டும் தெரிந்த உண்மை ......(அருண் கல்யாண வீடு சாப்பாடு ஆசை பட்டீல இந்த பய செய்த அநியாயத்தை பாரு வந்து கேள் ....)

எல் கே said...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=26929

மக்களே , உங்களுக்கு நேரம் இருந்த இதை படிங்க. பழங்காலத்திலும் திருமண முறைதான் பின்பற்றி இருக்காங்க. காதல் மணம் இருந்தாலும் பெரும்பாலும் திருமணம் தான் ஏற்க்கப் பட்டுள்ளது

NaSo said...

LIVING TOGETHER, கலாசாரம், கல்யாணம், சின்னவீடு, தமிழ்நாட்டு மன்னர், அருண், தேவா, டெர்ரர், திராவிடம், சுப்பிரமணி, ராமசாமி


ஐயோ சாமி முடியல எனக்கு எதுவுமே புரியல!!

இம்சைஅரசன் பாபு.. said...

//.செல்வக்குமார் சொன்னது…
@ தேவா
எங்கயோ போயிட்டீங்க .. :-//

லிவிங் டு கதர் ல இருக்கும் போது ...டிஸ்டர்ப் பண்ண கூடாது ......ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க வேண்டாம் இந்த நேரத்தில் பொய் இடைஞ்சல் பண்ண கூடாது தம்பி

சௌந்தர் said...

நாகராஜசோழன் MA சொன்னது…
LIVING TOGETHER, கலாசாரம், கல்யாணம், சின்னவீடு, தமிழ்நாட்டு மன்னர், அருண், தேவா, டெர்ரர், திராவிடம், சுப்பிரமணி, ராமசாமி


ஐயோ சாமி முடியல எனக்கு எதுவுமே புரியல!!/////

நாகராஜசோழன் MA
நல்லா பாருங்க இது தேவா ப்ளாக் இல்லை என் ப்ளாக்...!

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்க புரிதலில் எழுதியிருக்கீங்க..

ஆனால் நிஜத்தில் லிவிங்-டுகெதர் நல்லெண்ணத்தில் ஏற்பட்டதே..

நான் இதை பற்றி விரிவாக எழுத ஆரம்பித்துள்ளேன். விலாவாரியாக சொல்வேன்.

அப்போது உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..

மற்றபடி உங்களின் அச்சங்கள் நியாயமானவை..

சௌந்தர் said...

பயணமும் எண்ணங்களும் சொன்னது…
உங்க புரிதலில் எழுதியிருக்கீங்க../////

ரொம்ப நன்றி

ஆனால் நிஜத்தில் லிவிங்-டுகெதர் நல்லெண்ணத்தில் ஏற்பட்டதே..

நான் இதை பற்றி விரிவாக எழுத ஆரம்பித்துள்ளேன். விலாவாரியாக சொல்வேன்.

அப்போது உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..////

நானும் எதிர்பார்கிறேன் கருத்திற்கு நன்றி

மற்றபடி உங்களின் அச்சங்கள் நியாயமானவை./////

அசச்ங்களே இந்த வாழ்க்கை முறையை தவிர்க்க சொல்கிறது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

sir.. ulle varalaamaa..

செல்வா said...

// வெறும்பய கூறியது...
sir.. ulle varalaamaa..///



வாங்கோ பாஸ் , நீங்க இல்லாமையா ..?

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது…
sir.. ulle varalaamaa..////

வாங்க... வாங்க...sir வாங்க உங்களை போல இளையதலைமுறையினர் கருத்து தேவை

இம்சைஅரசன் பாபு.. said...

50

செல்வா said...

//லிவிங் டு கதர் ல இருக்கும் போது ...டிஸ்டர்ப் பண்ண கூடாது ......ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க வேண்டாம் இந்த நேரத்தில் பொய் இடைஞ்சல் பண்ண கூடாது தம்பி///

இந்த வெளாட்டுக்கு நான் வரல ..

செல்வா said...

missed the vadai..!! so sad.. :-((((

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் கூறியது...

வெறும்பய சொன்னது…
sir.. ulle varalaamaa..////

வாங்க... வாங்க...sir வாங்க உங்களை போல இளையதலைமுறையினர் கருத்து தேவை

//

நான் ரொம்ப சின்ன பையன் சார்.. நம்ம கருத்தெல்லாம் இங்கே எடுபடுமா..?

செல்வா said...

//நான் ரொம்ப சின்ன பையன் சார்.. நம்ம கருத்தெல்லாம் இங்கே எடுபடுமா..?
//

எடுபடலைனா வாங்க நாம ரண்டுபேரும் போய் கம்மறு கட்டு வாங்கித் திங்கலாம்., நானும் அப்படி ஓரமா நின்னுதான் பார்த்துட்டு இருக்கேன் ..

இம்சைஅரசன் பாபு.. said...

//நான் ரொம்ப சின்ன பையன் சார்.. நம்ம கருத்தெல்லாம் இங்கே எடுபடுமா..?//

இந்த லக்கி plazza ல ஒரு பொம்பள ரெண்டு புள்ளைகள வெறும்பய மாதிரியே வச்சிக்கிட்டு நிக்குறத .......என்கிட்டே ரமேஷ் சொன்னான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
இந்த லக்கி plazza ல ஒரு பொம்பள ரெண்டு புள்ளைகள வெறும்பய மாதிரியே வச்சிக்கிட்டு நிக்குறத .......என்கிட்டே ரமேஷ் சொன்னான்

//

அந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்ல.. எல்லாம் பொறாம சார்.. ஒரு சீனச்சி நம்பர் கேட்டு குடுக்க முடியாதுன்னு சொன்னது தான் இப்படி புரளி கிளப்பிட்டு நடக்கிறாரு..

NaSo said...

// சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…
LIVING TOGETHER, கலாசாரம், கல்யாணம், சின்னவீடு, தமிழ்நாட்டு மன்னர், அருண், தேவா, டெர்ரர், திராவிடம், சுப்பிரமணி, ராமசாமி


ஐயோ சாமி முடியல எனக்கு எதுவுமே புரியல!!/////

நாகராஜசோழன் MA
நல்லா பாருங்க இது தேவா ப்ளாக் இல்லை என் ப்ளாக்...!//

அப்படி சொல்லல சௌந்தர். அவையெல்லாம் என்னான்னு தெரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு இன்னும் வயசாகல.

எஸ்.கே said...

எனக்கு அந்த உறவினால் உருவாகும் குழந்தைகளின் நிலையை எண்ணினால்தான் கஷ்டமாக உள்ளது!

Kousalya Raj said...

சௌந்தர் பதிவின் கடைசியில் அந்த அடி அடிச்சி கொல்றியே, அது யாருப்பா....ஒரு வேளை அந்த மனுஷன் பேர்தான் கலாச்சாரமா ??

சௌந்தர் said...

Kousalya சொன்னது…
சௌந்தர் பதிவின் கடைசியில் அந்த அடி அடிச்சி கொல்றியே, அது யாருப்பா....ஒரு வேளை அந்த மனுஷன் பேர்தான் கலாச்சாரமா ?///

அது நான் இல்லை யாரோ ரெண்டு பேர்

Gayathri said...

enna kalacharamo ippo irukkura pudhu pudhu kalacharangalai parri kelvi padumbhozhuthu...

pesama poi jollya ethana namma velaya papom naadu thirundhaathu...ivangalum urupadamaattaanga..

உங்களில் ஒருவன் said...

சார் நானும் இது பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன். பாருங்கள். http://worldandcountry.blogspot.com/2010/04/living-together-culture.html
நன்றி.

ஜெயந்தி said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்தவங்க உரிமையில தலையிடாம எந்தக் கருமத்தப் பண்ணாலும் சரி....!

Anonymous said...

//இது ஆண்களுக்கு சாதகமான விசயம்//

இது முற்றிலும் உண்மை. கொச்சையான, கட்டுப்பாடில்லாத வாழ்க்கை முறையை, நாகரிகமாக லிவிங் டுகெதர் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

சுசி said...

எல்லாம் சுயநலத்துல வந்ததுங்க..

நல்ல பதிவு.

NONO said...

//* வெளி நாட்டில் LIVING TOGETHER முறையில் பிறந்த குழந்தைகள் அவர்கள் பிரிந்தவுடன் சர்ச் அல்லது காப்பகத்தில் வளர்க்கப்படுகிறார்கள் அந்த குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறார்கள்


* இது ஆண்களுக்கு சாதகமான விசயம் LIVING TOGETHERமுறையில் வாழ்தால் ஜீவனாம்சம் கிடைக்காது.//

இது தவறான தகவல், ஐரோப்பிய நாடுகளிள் LIVING TOGETHERமுறையில் வாழும் தம்பதிகளுக்கு என்று புறிம்பான சட்டங்கள் உண்டு. சில நாட்டுகளுக்கு நாடு சில மாற்றங்கள் இருக்கலாம் ஆனால், கிட்டத்தட்ட திருமணம் செய்தவர்களுக்கு ஈடானது.

Prasanna said...

நல்ல கேள்விகள்.. பாப்போம் நாம எல்லாம் பெருசான பெறகு என்ன நடக்குதுன்னு (இப்போ யூத் யூத்)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///டவுட் இன்னும் இருக்கு இப்போதைக்கு இது போதும்...///

எனக்கும் கூட டவுட் இருக்கு... :-)))

நீங்க சொல்றது சரி தான், கலாச்சாரம் இன்னும் கெடாமல் இருக்க நம்மால முடிந்த வரை முயற்சி செய்யணும்..
நல்ல பகிர்வு.. நன்றி.. :-))

vinthaimanithan said...

நடத்துங்கய்யா யோவ்!

Jeyamaran said...

singame advice ellam balama irukke asathitinga ponga................

Unknown said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..

அன்பரசன் said...

//எங்க தாத்தாவுக்கு அம்மா எல்லாம் (பாட்டி) சட்டையே போட்டு இருக்க மாட்டாங்க ஆனா அப்போ அதான் கலாச்சாரம் அப்பறம் சட்டை போட்டாங்க வெறும் புடவை தான். பிறகு பாவாடை சட்டை போட்டாங்க, சுடிதார், இப்போ பேன்ட் ஷார்ட்ஸ் போடுறாங்க ஆடைகள் விஷயத்தில் கலாச்சாரம் மாறினால் பரவாயில்லை ஆனால் எந்த இடத்திற்கு போகிறோமோ அதற்க்கு ஏற்றார் போல் ஆடை அணிய வேண்டும்..//

உங்களது இந்த கருத்தில் நானும் உடன்படுகிறேன்.

Sriakila said...

எச்ச்சூசூச்மி....என்ன நடக்குது இங்க...

Sriakila said...

//இது ஆண்களுக்கு சாதகமான விசயம் LIVING TOGETHERமுறையில் வாழ்தால் ஜீவனாம்சம் கிடைக்காது//

பொழைக்கத் தெரியாத பயபுள்ளைங்க...

Unknown said...

me the 76...


டெரர் நல்ல பையன் தான்///--இதை வழிமொழிகிறேன்

நல்ல இருக்கு அண்ணா உங்கள் பதிவு

Anonymous said...

உலகத்தை திருத்தாம விட மாட்டீங்க போலிருக்கு

Anonymous said...

நல்ல கருத்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லா இருக்கு!!!

சி.பி.செந்தில்குமார் said...

ஆள் பாக்க சின்ன பையனா இருக்கீங்க,சரக்கு நிறையா இருக்கும் போல இருக்கே>?

சி.பி.செந்தில்குமார் said...

லவ்விங்க் டுகெதெர் தெரியும் ,அதென்ன லிவ்விங்க் டுகெதெர்?

THOPPITHOPPI said...

கலாச்சாரம் பற்றி நாம் இனி கவலைப்பட தேவை இல்லை மானாட மயிலாட பார்த்துக்கொள்ளும்

Chitra said...

வெளி நாட்டில் LIVING TOGETHER முறையில் பிறந்த குழந்தைகள் அவர்கள் பிரிந்தவுடன் சர்ச் அல்லது காப்பகத்தில் வளர்க்கப்படுகிறார்கள் அந்த குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று சொல்கிறார்கள்


.... Usually, அம்மாவின் பொறுப்பில் தான் இருக்கும். அவளால் முடியாத நிலையில், உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். பின், Foster care அல்லது தத்து எடுக்கும் முயற்சி நடை பெறும். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகள் மிகவும் குறைவு தான்.

.......///மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்///
.... It is because of various reasons. :-(

சாமக்கோடங்கி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 64

அடுத்தவங்க உரிமையில தலையிடாம எந்தக் கருமத்தப் பண்ணாலும் சரி....!
//

சூப்பர் பன்னி....

நானும் இதை ஒத்துக்கறேன்.. முடிஞ்சா அடுத்தவங்களுக்கு உதவி வாழணும்,.. இதையும் சேத்துக்குங்க...

நன்றி..

 
;