Thursday, January 6

மாறுவார்களா இவர்கள்...?




இந்த சீரியல் ரொம்ப பாடாய் படுத்துகிறது... காலை 10.30 தொடங்கி இரவு 10.30 வரைக்கும் இந்த சீரியல் பெயர்கள், பாருங்கள் காலை 10.30.மகள் ,11.00 மெட்டிஒலி, 11.30 கஸ்தூரி, 12.00 உறவுகள் 12.30 அனுபல்லவி,1.00 வசந்தம்,1.30 இளவரசி, 2.00 அத்திப்பூக்கள் ,2.30 ஒரு மொக்க படம் போடுவார்கள் அதை யாரும் பார்க்க  கூடாது என்பதற்காக ,மொக்க படம் போடுகிறார்கள்,  நல்ல படம் பார்த்தால்  மக்கள் தூங்க மாட்டார்கள் அதனால் தான் மொக்க படம் போட்டு தூங்க வைத்தால்  தான் மாலை 5.30 மணிக்கு சீரியல் பார்க்க முடியும் அதனால் தான் இப்படி மொக்க படம் போடுகிறாக்கள்.

ஒரு வழியா  படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொண்டாட்டி தேவை 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி,  7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம்,  8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே,  10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது...


இப்படி மக்கள் ஏன் சீரியல்  பைத்தியமாக இருக்கிறார்கள் தெரியவில்லை, ஒரு சிலர் காலை 10.30 டிவி முன் உட்கார்ந்தால் மதியம் 2.30  மணி வரை அவர்கள் டிவியை விட்டு அப்படி இப்படி என்று நகரமாட்டார்கள். எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு என்று ஆட்கள் இருக்காங்க, அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மாற்ற  கூடாது என்பார்கள். ஏன் என்றால் ஒரு நிமிடம் தவறாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக ...?!!

இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30  நிமிடங்களில் எத்தனை நிமிடங்கள்  நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அதற்கு  நம்ம பேரரசு படமே பரவாயில்லை அப்படி இருக்கும். நாடகம் முடிந்தாலும் மியூசிக் வந்து கொண்டு இருக்கும்...

நாடகத்தில் அனைத்து கிரிமினல் வேலையும் நடக்கும்.  கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது, 

நீங்கள் கேட்கலாம் இது எல்லாம் சினிமாவில் வரவில்லையா..? என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். சினிமா  என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் நாடகம் பார்த்து கொண்டு இருந்தார்கள். . நாடகம் பார்க்கிற சுவாரசியத்தில்  அடுப்பில் பால் இருப்பதை மறந்து விட்டார்கள். அவ்வளவுதான் பால் பொங்கி கேஸ் அடுப்பு அணைந்து கேஸ் லிக் ஆகிகொண்டு இருந்தது. அப்போது கூட அவருக்கு தெரியவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்து, " என்ன உங்க வீட்டில் கேஸ் வாடை  வருகிறது" ,என்று கேட்டதும் தான்  சென்று பார்த்தார்கள், பால் வைத்ததை மறந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது, அடடான்னு சொல்லிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வந்து மீண்டும் தொடர்ந்து சீரியல் பார்த்தார்கள்...?!!  ஒருவேளை விபரீதம் ஏதும் நடந்து இருந்தால் அந்த வீட்டில் இருந்தவர்களின் கதி...?? நினைக்கவே பயமாக இருக்கிறது. 

அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள்  என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள். எங்க மாமா ஒருவர் காலையில்  எங்காவது வெளியே செல்வார். அந்த வேலை முடியாமலே அவசரம் அவசரம் ஆக வீட்டுக்கு  நாடகம் பார்க்கவேண்டும் என்று வந்து விடுவார்.   8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார், யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவார், சாலை தாண்டும்  போது வண்டி வருவதையும்  பார்க்க மாட்டார். அப்படி கண்டிப்பாக நாடகம் பார்க்க வேண்டுமா என்ன..? 

பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது. அனைத்து சீரியல்களிலும் இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இருக்காது. கோலங்கள் சீரியல் விட்டா ஒரு ஜென்மம் போட்டு இருப்பாங்க அதையும் நம்ம மக்கள் பார்த்து இருப்பார்கள் கோலங்கள் சீரியலில் இந்த அபிசேக் நான்கு  கல்யாணம் செய்வார்.

இந்த அத்திப்பூக்கள் சீரியலில் வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தையை....வாடகை தாய் சொந்தம் கொண்டாடுவது போல காட்டுகிறார்கள்,  இப்படி தவறான தகவல்களை தருகிறார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம்  என்று இருப்பவர்கள் இதை பார்த்தால் அவர்களுக்கு தயக்கம் வரலாம். 

இந்த சீரியல்களில் ஒருஒருவர் மட்டும் தான் நல்லவர் மற்றவர்கள் எல்லாம் கெட்டவனுங்க .....திருமதி செல்வம் ஒரு சீரியல் இருக்கு அதல ஒருத்தர் நடிப்பார் பாருங்க அட அட என்னாமா நடிக்கிறார் அவர் ரொம்ப நல்லவர் வடிவேல் சொல்வாங்களே இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குறான். அதே மாதிரி  இவரை எவ்வளவு மோசம் செய்தாலும் இவர் அவங்களை கோவப்பட்டு ஒரு எழுத்து கூட எதிர்த்து பேச மாட்டார்...இவங்க எல்லாம் சீரியலில் தான் நல்லவங்க உண்மையில் பக்கா பிராடு பசங்க... எனக்கு தெரிந்து நாடக நடிகர்களே சீரியல் பார்ப்பது இல்லை .ஒரு நடிகை சொன்னார்கள் நான் சீரியல் டப்பிங்க செய்யும் போது பார்ப்பது தான் அதற்கு பிறகு பார்க்க மாட்டேன் சொன்னார் டப்பிங் செய்யும் போதே என்னால் பார்க்க முடியாது....என்று சொல்கிறார்கள் இருந்தாலும் நம் மக்கள் பார்கிறார்கள் என்றால் எவ்வளவு தைரிய சாலியாக இருப்பார்கள்..... ஒரு ஆணுக்கு  ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும்  என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள். 
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...


70 comments:

karthikkumar said...

vadai

Arun Prasath said...

எங்க இருந்து பங்காளி ஓடி வர

karthikkumar said...

இந்த சீரியல்களில் ஒருஒருவர் மட்டும் தான் நல்லவர் மற்றவர்கள் எல்லாம் கெட்டவனுங்க ....//
கரெக்ட்டா சொல்லிருக்க மச்சி.. நெறைய நாடகம் இதுக்காகவே பாத்திருக்க போல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பா இவ்வளவு விலாவாரியா டைம் உட்ப்பட நீ எழுதுறேன்னா நீயும் இந்த சீரியலுக்கு அடிமையா தான் இருக்கணும்.. என்ன கரக்டா....

karthikkumar said...

Arun Prasath கூறியது...
எங்க இருந்து பங்காளி ஓடி வர///

வடை வாங்கனும்ன போராடனும் மச்சி...

இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும். இவன் உலகம் தாண்டிய உயரம் என்பதில் நிலவும் நிலவும் தலை முட்டும்...

Arun Prasath said...

கண்டிப்பா நீயும் செரியல் பாக்கற ஆள் தான சௌந்தர்

சௌந்தர் said...

karthikkumar சொன்னது… 3
இந்த சீரியல்களில் ஒருஒருவர் மட்டும் தான் நல்லவர் மற்றவர்கள் எல்லாம் கெட்டவனுங்க ....//
கரெக்ட்டா சொல்லிருக்க மச்சி.. நெறைய நாடகம் இதுக்காகவே பாத்திருக்க போல...////

அட பாவி நான் பார்க்க மாட்டேன் எனக்கு பிடிக்காது

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாம் சரி... உனக்கெப்படி இந்த சீரியல்கள் பற்றி இவ்வளவு விஷயம் தெரியும்.... இப்படி புட்டு புட்டு வைக்கிறே...

சௌந்தர் said...

Arun Prasath சொன்னது… 2
எங்க இருந்து பங்காளி ஓடி வர///

அடுத்த வடைக்கு முயற்ச்சி பண்ணுங்க

Arun Prasath said...

சுஜாதா சார் சொல்லிருகாறு, ஒரு முறை மெட்ராஸ்ல பூகம்பம் வந்தப்ப அவர் டிரைவரின் அம்மா, சீரியல் பாக்கணும்ன்னு வெளிய வரமாட்டேன்னு சொல்லிடாங்கலாம்

சௌந்தர் said...

வெறும்பய கூறியது...
என்ன நண்பா இவ்வளவு விலாவாரியா டைம் உட்ப்பட நீ எழுதுறேன்னா நீயும் இந்த சீரியலுக்கு அடிமையா தான் இருக்கணும்.. என்ன கரக்டா...////

இல்லை நண்பா அடிமை எல்லாம் இல்லை டைம் தெரியும்

சௌந்தர் said...

Arun Prasath சொன்னது… 6
கண்டிப்பா நீயும் செரியல் பாக்கற ஆள் தான சௌந்தர்///

உங்களை மாதரி நான் இல்லை ....

எஸ்.கே said...

நான் சொல்லனும்னு நினைச்ச எல்லாத்தையுமே சொல்லிட்டீங்க சௌந்தர்.

எங்க வீட்லயும் இதான் நடக்குது சௌந்தர்! :-((

karthikkumar said...

Arun Prasath கூறியது...
சுஜாதா சார் சொல்லிருகாறு, ஒரு முறை மெட்ராஸ்ல பூகம்பம் வந்தப்ப அவர் டிரைவரின் அம்மா, சீரியல் பாக்கணும்ன்னு வெளிய வரமாட்டேன்னு சொல்லிடாங்கலாம்///

அடப்பாவிகளா...

karthikkumar said...

ஆனா நாடக நடிகைகள் எல்லாம் நல்ல முக அம்சம் உள்ள பெண்களாதான் இருக்காங்க.. குஸ்பு கௌதமி தவிர...

சௌந்தர் said...

எஸ்.கே கூறியது...
நான் சொல்லனும்னு நினைச்ச எல்லாத்தையுமே சொல்லிட்டீங்க சௌந்தர்.

எங்க வீட்லயும் இதான் நடக்குது சௌந்தர்! :-((///

எல்லார் வீட்டிலும் இதுதான் நடக்குது எஸ்கே

வார்த்தை said...

சௌந்தர், இப்படி பெண் சுதந்தரத்துக்கும், விடுதலைக்கும் எதிராக பதிவு போடலாமா ?

// கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது//

நீங்கள் சரியான பிற்போக்குவாதி என்பது இந்த ஒரு பத்தியிலேயே தெளிவாக தெரிகிறது...

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருக்கும் டீ.வீ சீரியலை எந்த ஈகாதிபத்யமும் ...ஓ...சாரி ஏகாதிபத்யத்தினாலும் ஓடுக்க முடியாது என்பதை இந்த சமுதாயம் அறியட்டும் , உணரட்டும், தெளியட்டும் , ...

சௌந்தர் said...

வார்த்தை சொன்னது… 17
சௌந்தர், இப்படி பெண் சுதந்தரத்துக்கும், விடுதலைக்கும் எதிராக பதிவு போடலாமா ?

// கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது//

நீங்கள் சரியான பிற்போக்குவாதி என்பது இந்த ஒரு பத்தியிலேயே தெளிவாக தெரிகிறது...

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருக்கும் டீ.வீ சீரியலை எந்த ஈகாதிபத்யமும் ...ஓ...சாரி ஏகாதிபத்யத்தினாலும் ஓடுக்க முடியாது என்பதை இந்த சமுதாயம் அறியட்டும் , உணரட்டும், தெளியட்டும் , ////

செம நக்கல்....

மாணவன் said...

//வெறும்பய சொன்னது… 8
எல்லாம் சரி... உனக்கெப்படி இந்த சீரியல்கள் பற்றி இவ்வளவு விஷயம் தெரியும்.... இப்படி புட்டு புட்டு வைக்கிறே...//

ஒருவேள அவங்க வீட்டுகாரம்மா அனுபமா இருக்கும் அதான் இவ்வளவு தெளிவா எழுதியிருக்காரு... நிறைய பாதிக்கப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்

ஹிஹிஹி

மாணவன் said...

//ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும் என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள்.
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...//

அவங்களா திருந்தினாதான் உண்டு

மாணவன் said...

இல்லன்னா உங்கள திருத்த முடியாதுடி திருத்தவே முடியாதுன்னு புலம்பிட்டு போவ வேண்டியதுதான் வேற என்ன பண்றது....

Unknown said...

இந்த டிவி க்களின் அபத்தத்தை தாங்க முடியலே சவுந்தர்...

தமிழில் வரும் டிஸ்க்கவரி சேனலும், ஆங்கில மூவி நவ் சேனலும் பிரமாதமாக இருக்கிறது...

Madhavan Srinivasagopalan said...

எங்க வீட்டில் பகலில் எந்த சீரியல் பார்ப்பார்கள் தெரியாது..
மாலையில் தற்போது நாதஸ்வரம் மட்டும் ஓடுகிறது..

அது சரி.. நீங்க சன் டி.வி தவிர வேற சானல் பாக்க மாட்டீங்களா ? மத்த சானல் சீரியல் உங்க லிஸ்டுல இல்லையே ?

சௌந்தர் said...

மாணவன் சொன்னது… 21
இல்லன்னா உங்கள திருத்த முடியாதுடி திருத்தவே முடியாதுன்னு புலம்பிட்டு போவ வேண்டியதுதான் வேற என்ன பண்றது....////

இதை தான் செய்யணும் வேற என்ன செய்றது

வார்த்தை said...

//அது சரி.. நீங்க சன் டி.வி தவிர வேற சானல் பாக்க மாட்டீங்களா ? மத்த சானல் சீரியல் உங்க லிஸ்டுல இல்லையே ?//

ஓ ... இருக்குற லிச்ட்டியே படிக்க முடியல ...

இதுல இது வேறயா....

அருண் பிரசாத் said...

அப்பாடி மொரீசியச்ல சீரியல் தொல்லை இல்லை...ஏன்னா...தமிழ் சேனலே கிடையாதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Madhavan Srinivasagopalan சொன்னது… 23

எங்க வீட்டில் பகலில் எந்த சீரியல் பார்ப்பார்கள் தெரியாது..
மாலையில் தற்போது நாதஸ்வரம் மட்டும் ஓடுகிறது..

அது சரி.. நீங்க சன் டி.வி தவிர வேற சானல் பாக்க மாட்டீங்களா ? மத்த சானல் சீரியல் உங்க லிஸ்டுல இல்லையே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 22

இந்த டிவி க்களின் அபத்தத்தை தாங்க முடியலே சவுந்தர்...

தமிழில் வரும் டிஸ்க்கவரி சேனலும், ஆங்கில மூவி நவ் சேனலும் பிரமாதமாக இருக்கிறது...

இம்சைஅரசன் பாபு.. said...

எனக்கு தொலைகாட்சி பார்க்கா நேரம் கிடைப்பது இல்லை ......மேலும் தொலை காட்சிபெட்டியை ....தொல்லை காட்சி பெட்டி என்றும் கூறாலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் சொன்னது… 21

இல்லன்னா உங்கள திருத்த முடியாதுடி திருத்தவே முடியாதுன்னு புலம்பிட்டு போவ வேண்டியதுதான் வேற என்ன பண்றது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் சொன்னது… 20

//ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும் என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள்.
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...//

அவங்களா திருந்தினாதான் உண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் சொன்னது… 19

//வெறும்பய சொன்னது… 8
எல்லாம் சரி... உனக்கெப்படி இந்த சீரியல்கள் பற்றி இவ்வளவு விஷயம் தெரியும்.... இப்படி புட்டு புட்டு வைக்கிறே...//

ஒருவேள அவங்க வீட்டுகாரம்மா அனுபமா இருக்கும் அதான் இவ்வளவு தெளிவா எழுதியிருக்காரு... நிறைய பாதிக்கப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வார்த்தை சொன்னது… 17

சௌந்தர், இப்படி பெண் சுதந்தரத்துக்கும், விடுதலைக்கும் எதிராக பதிவு போடலாமா ?

// கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது, பிறந்த குழந்தையை கடத்துவது, மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது//

நீங்கள் சரியான பிற்போக்குவாதி என்பது இந்த ஒரு பத்தியிலேயே தெளிவாக தெரிகிறது...

சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருக்கும் டீ.வீ சீரியலை எந்த ஈகாதிபத்யமும் ...ஓ...சாரி ஏகாதிபத்யத்தினாலும் ஓடுக்க முடியாது என்பதை இந்த சமுதாயம் அறியட்டும் , உணரட்டும், தெளியட்டும் , ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது மீள் கமெண்டு ஹிஹி

வார்த்தை said...

இது மீள் கமெண்டு ஹி
police just esacapuuu....

Madhavan Srinivasagopalan said...

// ஓ ... இருக்குற லிச்ட்டியே படிக்க முடியல ...

இதுல இது வேறயா....//

தெளிவா எல்லா சானலையும் திட்டலாமே அதுக்குத்தான்

ஆனந்தி.. said...

//என்ன நண்பா இவ்வளவு விலாவாரியா டைம் உட்ப்பட நீ எழுதுறேன்னா நீயும் இந்த சீரியலுக்கு அடிமையா தான் இருக்கணும்.. என்ன கரக்டா...////

இல்லை நண்பா அடிமை எல்லாம் இல்லை டைம் தெரியும்//

அப்டிங்களா...ஓகே ங்க நம்பிட்டேன்...:))))

சி.பி.செந்தில்குமார் said...

ha ha soundhar.. how u know all the serial name? ramesh tell? ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

>>>அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள் என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள்.

rare

சி.பி.செந்தில்குமார் said...

>>>சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

super quote

sathishsangkavi.blogspot.com said...

மாறுவது ரொம்ப கஷ்டம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>இவர்களை யார் தான் திருத்துவார்களோ...

we have to change them. if we avoid serials... automatically they change..

வார்த்தை said...

//தெளிவா எல்லா சானலையும் திட்டலாமே அதுக்குத்தான்//

இதையெல்லாம் தட்டி கேக்க ஒருத்தன் வராமலாஆஆஆஅ போயிருவாஆஆஆஅன்....
வரூஊஊஊவாவான்ன்ன்...

[ma][im]http://www.indiasummary.com/wp-content/uploads/2010/04/captain-tv-vijayakanth.jpg[/im][/ma]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் கூறியது...

ha ha soundhar.. how u know all the serial name? ramesh tell? ha ha ha//

Adappaavi...

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 44
சி.பி.செந்தில்குமார் கூறியது...

ha ha soundhar.. how u know all the serial name? ramesh tell? ha ha ha//

Adappaavi...////

இது வேறையா ம்ம்ம்ம்

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 40
>>>சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

super quote///

மிக்க நன்றி

சௌந்தர் said...

ஆனந்தி.. சொன்னது… 37
//என்ன நண்பா இவ்வளவு விலாவாரியா டைம் உட்ப்பட நீ எழுதுறேன்னா நீயும் இந்த சீரியலுக்கு அடிமையா தான் இருக்கணும்.. என்ன கரக்டா...////

இல்லை நண்பா அடிமை எல்லாம் இல்லை டைம் தெரியும்//

அப்டிங்களா...ஓகே ங்க நம்பிட்டேன்...:))))///

இதோ அக்கா நம்பிட்டாங்க ஹலோ எங்க போறீங்க சீரியல் பார்க்கவா...?

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 22
இந்த டிவி க்களின் அபத்தத்தை தாங்க முடியலே சவுந்தர்...

தமிழில் வரும் டிஸ்க்கவரி சேனலும், ஆங்கில மூவி நவ் சேனலும் பிரமாதமாக இருக்கிறது...////

ஆமா அண்ணா டிவி சீரியல் தான் அப்படினா இந்த ராஜ் டிவி ல ஒன்னு போடுறாங்க அது தொல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

வினோ said...

சௌந்தர் இங்க வந்தும் விடல.. ஆன்லைன் ல பார்க்கிறாங்க :(

கவி அழகன் said...

nice keep it up

Sriakila said...

இந்தக் கொடுமை எல்லார் வீட்டிலயும் தான் நடக்குது. ஆனா அதையெல்லாம் விலாவாரியா நீ எழுதியிருக்கிறதப்பார்த்தா நீயும் அப்படித்தான் உட்கார்ந்து பார்ப்பியோன்னு சந்தேகமா இருக்கு.

சீரியல் பாக்கிறவங்க எல்லாம் மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் அந்தந்த சீரியல பார்த்தாப் போதும். அந்த ஒரு நாள்லயே அந்தக் கதை எவ்வளவு நகர்ந்திருக்கும்னு புரியும். இதெல்லாம் யாருக்குப் புரியப்போகுது.

'சன் டிவி'ங்கிறப் பேரை சீரியல் டிவின்னு மாத்தினாப் பொருத்தமா இருக்கும்.

அன்புடன் நான் said...

மிக தரமான பகிர்வுங்க.....மிக்க நன்றியும் பாராட்டுகளும்

THOPPITHOPPI said...

சீரியல் புதுசு புதுசா வந்ததாலத்தான் இப்ப அந்தவேளைக்கும் படிப்ப விட்டுட்டு சுத்துதுங்க

வைகை said...

இன்னொரு கொடுமையும் நடக்குது சௌந்தர்! இங்கு ஒரு வாரம் லேட்டா டெலிகாஸ்ட் பண்றாங்க, ஆனா மக்கள் ஆர்வம் தாங்காம ஊருக்கு போன் பண்ணி அடுத்து என்னன்னு கேட்டுட்டு அதையும் பாக்குறாங்க! என்னத்த சொல்றது?!!

Chitra said...

நான் பார்க்காததை பற்றி கருத்து சொல்ல இயலவில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தால், பயங்கரமாகத்தான் இருக்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஒரு வழியா படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொண்டாட்டி தேவை 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி, 7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம், 8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே, 10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது///

எச்சூஸ்மி.... இம்புட்டு விலாவாரியா நேரத்தோட சொல்றீகளே.....
என்ன விஷயம்....??? நீங்களும் சீரியல் பார்ப்பீங்களோ??
சும்மா ஒரு டவுட்டு..... :-))))

Vijay said...

மக்களை சிந்திக்க விட கூடாது நண்பா, சிந்திக்க விட்டா ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி கேட்பாணுல, ஒரு ரூபாய் அரிசி போடறதுக்கு பதிலா நல்ல திட்டத்த நிறைவேற்ற காச செலவு பண்ணுங்க அப்டின்னு எல்லாம் நம்மாளு கேட்பாணுல .உட்கார்ந்து யோசிகிறாங்க எப்படி எல்லாம் மக்களை முட்டாலாவும் மந்தியாவும் மாத்துறதுன்னு...மக்களை தப்பு சொல்லாத நண்பா ..மக்கள் பார்ப்பதினால் தான் நாங்க போடுறோம்னு எந்த தொலைகாட்சியாவது சொன்ன தாரளாம செருப்ப கலட்டி அடிக்கலாம் அந்த தொலைகாட்சிய.என் மக்கள் பிறக்கும்போதேவா தொடர்களா பாத்துகிட்டு பிறந்தாங்க, என் மக்களை மாத்தினதே இந்த நாய்ங்க தான்,வறுமையையும், தவறுகளையும் படம் பிடித்து காட்ட தவறியவர்கள் அல்லாவா இவர்கள். இன்னும் நிறையா எழுதலாம் ஆனா நேரம் இல்ல ...அதனால இதோடு போறேன் ...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இப்போ எந்த சீரியல் நார்மல்-ஆ இருக்கு.. ஆனா... இதுல ஒரு நல்ல விஷயம் பாருங்க......

ஹீரோஇன்... வயசு பொண்ணா இருக்கும் போது... நாடகம் ஆரம்பிப்பாங்க....
அவங்க அதுல அதுல நடிச்சிட்டு இருக்கும் போதே...
அவங்களுக்கு கல்யாணம் ஆகி.... வளைக்காப்பு கொண்டாடி.... குழந்தையும் பிறந்திரும்...
எல்லாம் ஒரே குடும்பமா இருந்து பார்ப்பாங்க... :-))

ஹேமா said...

உண்மையா நான் பாக்கிறதேயில்ல எந்த ஒரு நாடகமும்.நீயா நானா,சுப்பர் சிங்கர்,நடந்தது என்ன விரும்பிப் பார்ப்பேன்.

Anonymous said...

அக்கறையான அதே சமயம் கருத்துள்ள பதிவு மச்சி! என்னோட கஸின் ஒருத்தன் நீ சொன்ன மாதிரி சீரியல் பைத்தியமா இருந்தான் கொஞ்ச நாள் முன்னாடி.. இப்போ அவன் வேலைக்கு போறதால கொஞ்சம் பரவாயில்ல.. ;)

மங்குனி அமைச்சர் said...

இதுல அவனுக டையலாக் பேசுறத பாக்கணுமே ????????? இன்கொய்யாலே எதையாவது எடுத்து டி.வி யா உடைக்கணும் போல இருக்கும் ...............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இருக்காது.
//

அதுதான் தமிழக அரசாங்கமே(?) சொல்லிடுச்சே, அதெல்லாம் செல்லும்னு.. ஹி..ஹி

Anonymous said...

எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் சுத்தமா கிடையாது.
எல்லா நாடகத்தோட லிஸ்டயும் சொல்றத பாத்தா நீங்க தான் டீவிய விட்டு நகர மாட்டீங்க போலயே..

Anonymous said...

நானும் பல சமயங்களில் நினைத்ததுண்டு. எப்படித்தான் தொடர்ச்சியா இந்த சீரியலெல்லாம் பாத்து ஒன்னோட ஒன்ன கொழப்பிக்காம இருக்காங்களோ???
மறுநாள் அலுவலகம் வந்தா இவங்க பாக்குற நாடகங்களோட கதைகள பகிர்ந்துக்குவாங்க பாருங்க.. நமக்கு கடுப்பா வரும்.

செல்வா said...

//இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30 நிமிடங்களில் எத்தனை நிமிடங்கள் நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அ//

எப்புடியெல்லாம் கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க!

செல்வா said...

//. சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.
//

பாருயா ..?

செல்வா said...

//
8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார், யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவார், சாலை தாண்டும் போது வண்டி வருவதையும் பார்க்க மாட்டார். அப்படி கண்டிப்பாக நாடகம் பார்க்க வேண்டுமா என்ன..? ///

நாடகத்த மிஸ் பன்னக்கூடாதுல .!!

செல்வா said...

//ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும் என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள்.
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...
//

விடு மச்சி , அதுக்கு ஒரு நாடகம் எடுத்து திருத்தலாம்

 
;