இந்த பதிவை ரொம்ப நாட்களாக எழுத வேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன், போலி விசா காரணமாக அமெரிக்காவில் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தி இருக்கிறார்கள் அது சில மாணவர்களுக்கு தான் சில மாணவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள், சில மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள், அதையெல்லாம் பார்க்கும் பொழுது ஏன் இந்தியாவில் படித்தால் போதாதா...? எதற்கு வெளிநாட்டில் போய் படிக்கின்றார்கள்.
இந்தியாவில் படித்துவிட்டு இந்தியாவிலே பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் அமெரிக்காவில் படித்தார்களா...? ஆஸ்திரேலியாவில் படித்தார்களா..? இப்பொழுது இருக்கும் இளைஞர்கள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது பேஷன் ஆகி விட்டது....இப்பொழுது அமெரிக்காவிற்கு படிக்க சென்ற 1500 மாணவர்களுக்கு ஒரு வருடம் வீண் பணம் வீண்....அந்த மாணவர்கள் இப்போது மீண்டும் இந்தியா வந்து, மீண்டும் விசா அனுமதி வாங்கி தான் அமெரிக்க செல்ல முடியும். அதற்குள் இரண்டு வருடம் ஆகிவிடும்....
நமது நாட்டில் அந்த படிப்பு இல்லையென்றால் பரவாயில்லை வெளி நாட்டில் போய் படிக்கலாம் இங்க அந்த சலுகைகள் இருக்கும் பொழுது, ஏன் வெளி நாட்டிற்கு செல்கின்றீர்கள், அங்கே படிக்க சென்று விட்டு இனவெறியுடன் நடந்துகொண்டார்கள் என்று புகார் வேறு. நம் ஊரிலே பக்கத்து தெருகாரன் நமது தெருவில் வந்து தண்ணீர் பிடிக்க வந்தால், சண்டை போடுவோம். தமிழ் நாட்டில் இருந்து ஆந்திரா போய் மீன் பிடித்தால் அவர்கள் படகை பிடித்து வைத்து கொண்டு பணம் கேட்பார்கள். நமதுஊரிலே இப்படியெல்லாம் நடக்கிறது. நீங்கள் அங்கு சென்று படித்து விட்டு அங்கே வேலை செய்யும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது, இதையெல்லாம் நான் சரி என்று சொல்லவில்லை தவறு தான், எதற்கு வெளிநாட்டிற்கு சென்று விட்டு எப்போதும் பயந்து பயந்து இருக்க வேண்டும் நிம்மதியாக நமது நாட்டிலே படித்து விட்டு இருக்கலாமே..
நமது நாட்டில் சிறுகுடும்பதில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு சிறிய வேலை செய்து கொண்டு தான் இருப்பார்கள், பக்கத்தில் யாராவது வெளிநாட்டில் வேலை செய்வார்கள் வந்திருப்பார்கள், அவன் என்ன சம்பளம் வாங்குகிறான் என்று கேட்டு விட்டு இவர்களும் அந்த வேலைக்கு போவது. அங்கே வேலை செய்பவன் எப்படி கஷ்டப்படுகிறான் என்று தெரியாது, ஆப்கானிஸ்தான் பக்கம் லாரி ஒட்டிகொண்டு போவார்கள், அவர்கள் மீது குண்டு போடுவார்கள், அவர்களை கடத்தி வைத்துகொண்டு பணம் கேட்பார்கள், வெளிநாட்டு வேலை என்றால் என்ன வேலை எங்கு வேலை என்ற கேள்வி எல்லாம் கிடையாது உடனே சரி என்று போய்விடுவது, அங்கே சென்றால் கல் உடைப்பது இன்னும் சில வேலைகளும் தான் கிடைக்கும்..கொத்தடிமை போல தான் அங்கே வேலை செய்து கொண்டுயிருக்கிறார்கள். அங்க நமக்கு ஏதாவது நடந்தால் நம் குடும்பம் என்ன ஆவது...?
பொறியியல் மற்றும் சில பெரிய வேலை செய்பவர்களுக்கு: இங்கு இருந்து போகும் போது கண்ணீருடன் போவார்கள்..திருமணம் ஆனவர்காளாக இருந்தால் சென்ற ஒரு வருடத்தில் மனைவியை அழைத்துகொள்வார்கள்.... அங்கேயே குழந்தை பிறக்கும், குழந்தைகளை அங்கயே படிக்க வைப்பார்கள்..குடும்பம் நன்றாக இருக்கும், ஆனால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா..? என்றால் கிடைக்காது...!
உதாரணத்திற்காக : வெளிநாட்டில் இருப்பவரின் தந்தை சொல்கிறார் "டேய் நீ எப்போ ஊருக்கு வருவே உன்னை பார்க்கணும்". மகன் "வருவேன், வருவேன்" என்று சொல்வார்கள் "என் பேரனையாவது பார்க்கணும், அவர்களை மட்டுமாவது அனுப்பி விடுடா அவனை மடியில் வைத்து கொஞ்சனும் எனக்கும் ஆசை இருக்காதா..?" என்பார்கள் அவன் படிக்கிறான் அப்பா முடிந்ததும் அனுப்புறேன் சொல்வார்கள் ...விடுமுறையில் வருவார்கள் 15 நாள் தங்கி விட்டு சென்றுவிடுவார்கள், இப்படி இருந்தால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா....? இனிப்பை கையில் கொடுத்து விட்டு அதை உடனே பிடிங்கி கொள்வதை போல தான் இருக்கும். இந்த மாதரி சின்ன சின்ன ஆசையை கூட நம்மளால் நம் அப்பாவிற்கு நிறைவேற்ற முடியாமல் போகும். இதை கூட நிறைவேறாமல் நீ சம்பாதித்து என்ன பயன்..?
வெளிநாட்டில் இருந்தால் போதும் உடனே பொண்ணு கொடுத்துவிடுகிறார்கள். அது எப்படிதான் தெரியவில்லை கேட்டால் அமெரிக்க மாப்பிள்ளை லண்டன் மாப்பிளை என்கிறார்கள்...வெளிநாட்டில் இருந்தால் போதும் எந்த கேள்வியும் இல்லை உடனே பொண்ணு கொடுத்து விடுகிறார்கள், ...அப்பறம் அவனுக்கு வெளிநாட்டில் ஏற்கனவே திருமணம் நடந்து இருக்கும், அங்கே போய் கொடுமைபடுத்தி காரில் இருந்து தள்ளி விடுவான், பொண்ணு கோமாக்கு போய்டுவா என்ன நடக்குது ஏது நடக்குது ஒன்னும் தெரியாது, நான் அனைவரையும் தவறாக சொல்லவில்லை. ஏமாற்றுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள் அவர்களை தான் சொல்கிறேன். தன்னாலே வெளிநாட்டு மாப்பிள்ளை வந்தால் பரவாயில்லை ஆனால் கட்டிகொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தான் தருவேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது.....?
சிறு குடும்பத்தில் இருப்பவர் வரை வெளிநாட்டு மோகம் இருக்க தான் செய்கிறது..!என்ன செய்வது எப்படியாவது தன் குடும்பம் முன்னேறி விடவேண்டும் என்று ஆசை தான், இந்தியாவில் படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லையென்றால் என்ன செய்வது வெளிநாட்டிற்கு போய் தான் ஆகவேண்டும் சிலவற்றை மட்டும் வெளிநாட்டில் வைத்துகொண்டால் நன்றாக இருக்குமே....இளைஞர்களாக இருக்கும் வரை தான் வெளிநாட்டு மோகம் எல்லாம் 40 வயதை தாண்டி விட்டால்...."இந்தியா இந்தியா" என்று தான் சொல்வார்கள்
Tweet | |||||
48 comments:
யாரையும் கைது செய்த மாதிரி தெரியவில்லை. எல்லோர் காலிலும் கண்காணிக்க சென்சார் மாட்டி இருக்காங்க. அதை கழட்டினால் கைது செய்யப்படலாம்
என்னத்த சொல்ல... எனக்கு வடை அவ்ளோ தான்
அட பாவமே அதுவும் இல்லையா
நீங்க சொல்வதெல்லாம் இருக்கட்டும் சௌந்தர் ..இன்னொன்றும் இருக்கு "அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை "எல்லாத்துக்கும் பணம் முக்கியம் அதே அப்பா பணம் இல்லாமல் வெட்டி பய ன்னு சொல்லும் வீடுகளும் இருக்கு இந்தியாவுல
//இளைஞர்களாக இருக்கும் வரை தான் வெளிநாட்டு மோகம் எல்லாம் 40 வயதை தாண்டி விட்டால்...."இந்தியா இந்தியா" என்று தான் சொல்வார்கள்//
இது சரி தான் .
இந்தியாவில் கிடைக்காத/சிறப்பாக கிடைக்காத கல்வி/வேலைக்காக வெளிநாடு செல்வதில் பெரும்பாலும் தவறில்லை. ஆனால் அது மோகமாக/வெறியாக மாறும்போதுதான் பிரச்சினையாகின்றது!
Good Post....
எல்.கே தெரியவில்லை கைது செய்து விடுவித்து இருப்பதாக செய்தியில் கேட்டேன் அதான் எழுதினேன்....
எல்லோர் காலிலும் கண்காணிக்க சென்சார் மாட்டி இருக்காங்க.////
இதுவும் ஒரு கைது போல தானே...!
மிக்க நன்றி வருகைக்கு
Arun Prasath சொன்னது… 2
என்னத்த சொல்ல... எனக்கு வடை அவ்ளோ தான்///
ஏதாவது சொல்லுங்க
அட பாவமே அதுவும் இல்லையா
ஆமா போச்சி....
இதுல ரெண்டு டைப் இருக்கு சவுந்தர் ........
முதல டைப் ......... கோட்டா பேசிஸ்ல மார்க் கம்மியா இருந்தாலும் நினைக்கிற சீட் கிடைக்கும், (Exe : நம்ம தமிழ் நாட்டுல இருக்க யுனிவர்சிட்டிகள் கண்டிப்பா கொஞ்ச சதவிகித சீட்டுகள வெளிமாநில மாணவர்களுக்கு குடுத்தே ஆகணும் ) அப்புறம் அங்கு கிடைக்கு ஸ்காலர்ஷிப் ... அப்புறம் பார்டைம் வேலை ......நிறைய மாணவர்கள் படித்துக்கொண்டே சம்பாரித்து வீட்டுக்கு பணம் அனுப்புகிறார்கள் .
ரெண்டாவது டைப் ........... பணத்திமிர்,....... காசு இருக்கிறவன் என் பையன் பாரின்ல படிக்கிறான் காட்டிக்கொள்வதர்க்காக பண்ணுவது ......
இம்சைஅரசன் பாபு....அப்பா என்றால் திட்ட தான் செய்வார் அதுக்கு...! என்ன செய்வது நீங்க எல்லாம் நமது ஊரிலே தொழில் செய்து வாழவில்லையா..?
வருகைக்கு மிக்க நன்றி
//வெளிநாட்டில் இருந்தால் போதும் உடனே பொண்ணு கொடுத்துவிடுகிறார்கள். அது எப்படிதான் தெரியவில்லை கேட்டால் அமெரிக்க மாப்பிள்ளை லண்டன் மாப்பிளை என்கிறார்கள்...வெளிநாட்டில் இருந்தால் போதும் எந்த கேள்வியும் இல்லை உடனே பொண்ணு கொடுத்து விடுகிறார்கள், .//
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை .இப்போ நம்ம ரமேஷ் கூட கொஞ்சம் நாள் சிங்கபூர் ல இருந்தான் ....ஆனா ஒரு பயலும் பொண்ணு கொடுக்கலை ..அது ஏன் ?...........என் நண்பன் எவ்வளவு நல்ல பையன்னு எனக்கு தெரியும் ......
@@@@எஸ்.கே ஆமாம் எஸ்.கே..சிலர் வெறியாக இருக்கிறார்கள்
மிக்க நன்றி எஸ்.கே....
@@@நன்றி சங்கவி....
நம் நாட்டில் இல்லாத கல்வியே இல்லை. இதெல்லாம் ஒரு பந்தாதான். வெளிநாட்டில் இருப்பவர்களை கேட்டால்தான் சொல்வார்கள் அங்கே எவ்வளவு பிரச்சனை, தாய்நாட்டை பிரிந்து எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.
நல்ல பதிவு.
ஆமாம் மங்குனி நீங்கள் சொல்வதும் சரி தான்...
மிக்க நன்றி மங்குனி...
ஒரு குவளையில், பாதி குவளை அளவு தண்ணீர் உள்ளது. காலியான பகுதியை மட்டும் பார்த்து விட்டு, பாதி கிளாஸ் காலியாக இருக்கிறதே என்று சொல்லலாம். இல்லை, தண்ணீர் பகுதியை மட்டும் பார்த்து விட்டு, பாதி கிளாஸ் தண்ணீர் இருக்கிறதே என்று சொல்லலாம். அவரவர் பார்வையை பொறுத்தது.
உண்மைதான் பாலா...வெளிநாட்டில் நிறைய பிரச்னை உள்ளது என்று இங்கு உள்ளவர்களுக்கு தெரிவதில்லை....ஒருத்தரை பார்த்து மற்றவரும் போக ஆசை படுகிறார்கள்...
இதில் சின்ன சின்ன வேலைகளுக்கு போகிறவர்களின் நிலை தான் கவலைக்குரியது....!
நன்றி பாலா....
ஒரு நல்ல பகிர்வு!!
[co="red"]நல்ல அலசல்.. [/co] பாராட்டுக்கள், சவுந்தர்.
chitra நீங்கள் சொல்வது சரி தான் வெளிநாட்டில் நன்மைகளுக்கு இருக்கிறது...
வருகைக்கு மிக்க நன்றி
நல்ல பதிவு மச்சி :)
நல்ல பதிவு..
வெளிநாட்டு மோகம் மட்டுமே இதற்கு காரணமாகி விடாது.
இங்கு தகுதிக்கேற்ப வேலை கிடைப்பதில்லை.. அல்லது கிடைத்த வேலையை செய்ய மனது வருவதில்லை.
வேலைப் பஞ்சம் இருக்கிறது என்பதை விட.. சிபாரிசு மூலமாக நிரப்பப்படும் வேலைப்பணியிடங்கள் தான் இவர்கள் மத்தியில் பெரும் விரக்தியை உண்டாக்குகிறது.
இது சரிசெய்யப்பட்டாலே அயல்நாட்டு மோகம் குறையலாம்.
இது பணம் சம்பந்தப்பட்ட மேட்டர் அல்ல மனம் சம்ப்ந்தப்பட்டது. சிலருக்கு அப்பா,அம்மா,மனைவி,குடும்பம் இதைத்தாண்டி பணம் பெரிதாகப்படாது. சிலருக்கோ பணம் தான் பெரிது அதற்க்காக எதுவும் செய்வார்கள். பணம் எல்லாருக்கும் தேவைதான். பணத்தை நாம் ஆளவேண்டும் அதுவரை தான் நிம்மதி. பணம் நம்மை ஆளக்கூடாது.
இந்த மோகம் இனியும் கொஞ்ச நாள்தான் பாஸ்......
எப்பிடி இப்போ வளைகுடா நாட்டில் வேலை செய்பவனுக்கு பொண்ணு தர மறுக்கிறார்களோ அவ்வண்ணமே அமெரிக்காவில் இருப்பவனுக்கும் சம்பவிக்கும் நாள் தூரத்தில் இல்லை...
மேலோட்டமான அலசல் சௌந்தர்.
சித்ராக்கா மனநிலையே எனதும். :)
@ வெறும்பய, மாணவன் நீங்கெல்லாம் நாண்டுகிட்டு...... அப்டின்னு சௌந்தர் சொல்றான் நாராயணா நாராயணா
// பக்கத்தில் யாராவது வெளிநாட்டில் வேலை செய்வார்கள் வந்திருப்பார்கள், அவன் என்ன சம்பளம் வாங்குகிறான் என்று கேட்டு விட்டு இவர்களும் அந்த வேலைக்கு போவது. அங்கே வேலை செய்பவன் எப்படி கஷ்டப்படுகிறான் என்று தெரியாது, /
இதுதான் மச்சி இப்ப நிறைய பேர் வெளியூருக்குப் போறதுக்கே காரணம் அப்படின்னு நினைக்கிறேன் .. அதுவும் இல்லாம வெளியூர்ல இருந்தா ஒரு என்ன சொல்லுறது ஒரு பெரிய ஆளு அதாவது இவர் அமெரிக்காவுல இருக்காரு அப்படின்னு ஊரே பெருமையா பேசும் அப்படிங்கிற எண்ணம் .. அவுங்களையும் நாம குற்றம் சொல்ல ம்டுயாது . நம்ம ஆளுக அப்படி ஒரு நிலைய உருவாக்கிருக்காங்க. எங்க ஊர்ல இருந்து ஒருத்தர் அமெரிக்க போயிட்டு வந்தார் , அவருக்கு மத்தளம் அடிச்சு வரவேற்ப்பு கொடுத்தாங்க . அதப் பாக்குற பசங்க நாமளும் அமெரிக்க போகணும் அப்படின்னு தான் நினைப்பாங்க . வெளிநாட்டுல நல்ல விசயங்கள் இருக்கு .. ஆனா சொந்த ஊர் மாதிரி இருக்குமா அப்படிங்கிறது வெளியூர் இருக்கறவங்களுக்குத்தான் தெரியும் ..
//நடக்குது ஒன்னும் தெரியாது, நான் அனைவரையும் தவறாக சொல்லவில்லை. ஏமாற்றுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள் அவர்களை தான் சொல்கிறேன்/
ஹி ஹி ,, யார சொல்லுற மச்சி ?
இந்த பதிவுக்கு என்ன கமெண்ட் போடுறதுனு தெரியல.... வெளிநாட்டுகு போறவங்க எல்லாம் நாட்டுக்கு துரோகம் செயதவங்களோ....அப்பா அம்மாவை கஷ்ட்டப்படுத்தறவங்களோ இல்லை...அவர்களை பிரிந்து இருக்கற கஷ்டம்...எங்களுக்கும் இருக்குது....
:(
மாறிவரும் உலகமயமாகும் சூழலில், படிப்பிற்கும், வேலைக்கும் வெளிநாடு செல்வது வெகு சாதாரணமாகி விட்டது. இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா பொன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாடுகளில் வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்கள் அதிகம், அதே நேரம், பல வெளிநாடுகளில், வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனவே இது போன்ற வெளிநாட்டு குடியேற்றங்கள் நடப்பது இயல்பே. யாருக்கு எங்கே விருப்பமோ, முடிகிறதோ அங்கே வேலை செய்ய வேண்டியதுதான். இதையெல்லாம் கட்டுப்படுத்துவது தவறானது.
ஆனால் வெளிநாட்டு வேலை என்று ஏமாற்றுவபர்கள் இன்னும் இருக்கிறார்கள். இது பெரும்பாலும் நம்மூர் ஆட்களாலேயே செய்யப் படுகிறது. இதற்கு நமது அரசுதான் கடுமை காட்ட வேண்டும். உள்ளூரில, வாய்ப்புகளும், சம்பளமும் அதிகரிக்க அதிகரிக்க இது தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்!
அப்புறம் அமெரிக்காவிற்கு சென்று மாட்டிக்கொண்ட மாணவர்கள் அனைவரும் படிப்பதற்காக சென்றவர்கள் என்று நீங்கள் பரிதாபப்பட்டால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் ஏகப்பட்டவை இருக்கின்றன என்று எண்ணுகிறேன்.
அந்த மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு குறுக்கு வழியாகவே இதைப் பயன்படுத்தி உள்ளனர். ஸ்டூடண்ட் விசாவில் நுழைந்து பின்பு எளீதாக வேலை விசாவில் மாறிக்கொள்ளலாம். காலில் ஜிபிஎஸ் பேண்ட் கட்டப்பட்டிருப்பது, அவர்கள் அமெரிக்காவில் ஓடி ஒளிந்துவிடாமல் இருக்கவே (மாணவர்கள் அங்கு சென்ரதன் நோக்கமே அதுதானே?). ஆந்திராவில் இதுபோன்ற விஷயங்கள் வெகுசாதாரணம். இன்று அமெரிக்காவில் இருக்கும் இந்திய மாணவர்களில் பெரும்பகுதி ஆந்திராவைச் சேர்ந்தவர்களே.
அமெரிக்காவில் போலியாக ஒரு கம்பெனியை பதிவு செய்து, அதன் மூலம் வேலை விசா அப்ளை செய்து (H1B) செனறவர்கள் சிலரை எனக்குத் தெரியும். அது ஒரு தொழிலாகவே இருந்தது. சில லட்சங்கள் செலவு செய்தால் போதும். இப்போது அதற்கும் கெடிபிடி அதிகமாகவே, மாணவர் விசாவை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
இதில் நீங்கள் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உண்மையாகவே அமெரிக்காவில் வேலைக்கும், படிப்பிற்கும் முயலும் மாணவர்கள் இதனால் இனி படப்போகும் கஷ்டங்களே!
//////பொறியியல் மற்றும் சில பெரிய வேலை செய்பவர்களுக்கு: இங்கு இருந்து போகும் போது கண்ணீருடன் போவார்கள்..திருமணம் ஆனவர்காளாக இருந்தால் சென்ற ஒரு வருடத்தில் மனைவியை அழைத்துகொள்வார்கள்.... அங்கேயே குழந்தை பிறக்கும், குழந்தைகளை அங்கயே படிக்க வைப்பார்கள்..குடும்பம் நன்றாக இருக்கும், ஆனால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா..? என்றால் கிடைக்காது...! ///////
அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது. இந்தியாவில் கூட எல்லோரும் சென்னை போன்ற பெரிய
நகரங்களூக்கே வேலைக்கு செல்கிறோம் (அங்குதான் வேலைகளும் கிடைக்கின்றன). அதில் பெரும்பான்மையோர் கிராமங்கள், சிறுநகரங்களில் இருந்து வந்தவர்களே, அவர்களுக்கு என்றாவது ஊருக்கே சென்று விட வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்து கொண்டு தான் இருக்கும். இதெல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்களே, அது போன்ற விடயம். சந்தோசம் நம்மிடம் தான் உள்ளது.
/////////உதாரணத்திற்காக : வெளிநாட்டில் இருப்பவரின் தந்தை சொல்கிறார் "டேய் நீ எப்போ ஊருக்கு வருவே உன்னை பார்க்கணும்". மகன் "வருவேன், வருவேன்" என்று சொல்வார்கள் "என் பேரனையாவது பார்க்கணும், அவர்களை மட்டுமாவது அனுப்பி விடுடா அவனை மடியில் வைத்து கொஞ்சனும் எனக்கும் ஆசை இருக்காதா..?" என்பார்கள் அவன் படிக்கிறான் அப்பா முடிந்ததும் அனுப்புறேன் சொல்வார்கள் ...விடுமுறையில் வருவார்கள் 15 நாள் தங்கி விட்டு சென்றுவிடுவார்கள், இப்படி இருந்தால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா....? இனிப்பை கையில் கொடுத்து விட்டு அதை உடனே பிடிங்கி கொள்வதை போல தான் இருக்கும். இந்த மாதரி சின்ன சின்ன ஆசையை கூட நம்மளால் நம் அப்பாவிற்கு நிறைவேற்ற முடியாமல் போகும். இதை கூட நிறைவேறாமல் நீ சம்பாதித்து என்ன பயன்..?///////////
இந்த வாதமும் பொருத்தமற்றது. இந்தியாவிலேயே, குறீப்பாக தமிழகத்தில் இன்று எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாய் பெற்றோருடன் இருக்கிறார்கள்? (பெரும்பாலான பெற்றோர், தங்கள் சொந்த ஊரிலும் வாரிசுகள் வேளை நிமித்தம் நகரங்களிலுமே இருக்கிறோம்), இவர்கள் வருடம் ஒரு முறை குடும்பத்தோடு சொந்த ஊர் சென்று வருவார்கள். இதற்கும் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை (அவசரத்திற்கு உடனடியா செல்ல முடியாது என்பதைத் தவிர!)
அங்கேயே குழந்தை பிறக்கும், குழந்தைகளை அங்கயே படிக்க வைப்பார்கள்..குடும்பம் நன்றாக இருக்கும், ஆனால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா..? என்றால் கிடைக்காது...! /////////
இது அவரவர் மனநிலையை பொறுத்தது! அப்ப இந்தியாவில் குடும்பத்தோடு இருப்பவர்கள் எல்லோரும் முழுமையான சந்தோசத்தோடு இருக்கின்றார்களா? என்று கேட்டால் எத்தனை பேர் இதற்க்கு ஆமாம் என்று மனநிறைவோடு கூறுவார்கள்? வெளிநாட்டில் இந்தியருக்கு நடக்கும் தவறுகள் என்பது வெள்ளைத்தாளில் கரும்புள்ளி போன்றது.......அந்த பேப்பரை யாரிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டால்......யாரும் வெள்ளைத்தாள் என்று சொல்வதில்லை......கரும்புள்ளி என்றே கூறுவார்...அதுபோலத்தான் சுற்றி இருக்கும் சந்தோஷங்களை மறந்துவிட்டு கரும்புள்ளியே பார்க்கிறோம்! நான் உட்பட.....
இனி வெளிநாடு சென்றால் மதிப்பில்லாத் போகும் சம்பளத்தை குறைச்சுகிட்டே வர்றாங்களாம்
//இங்க அந்த சலுகைகள் இருக்கும் பொழுது, ஏன் வெளி நாட்டிற்கு செல்கின்றீர்கள், //
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்???
நல்லா சொன்னீங்க சௌந்தர்.. எங்க நம்ம கடைப் பக்கமே காணோம் உங்கள???
படிச்ச உடனே சில விசங்கள் தோணுது...
//குடும்பம் நன்றாக இருக்கும், ஆனால் முழுமையான சந்தோசம் கிடைக்குமா..? என்றால் கிடைக்காது...!
//
1) இந்தியாவுல இருக்குற அத்தனை பேரும் நிம்மதியா இருக்காங்களா?
//வெளிநாட்டில் இருந்தால் போதும் உடனே பொண்ணு கொடுத்துவிடுகிறார்கள். அது எப்படிதான் தெரியவில்லை கேட்டால் அமெரிக்க மாப்பிள்ளை லண்டன் மாப்பிளை என்கிறார்கள்...வெளிநாட்டில் இருந்தால் போதும் எந்த கேள்வியும் இல்லை உடனே பொண்ணு கொடுத்து விடுகிறார்கள்//
மத்த நாடு பற்றி தெரியலை.......துபாய்ல எனக்கு தெரிஞ்சு என்னோட ப்ரண்டோட தம்பி ஒருத்தர் அப்புறம் இன்னொருத்தர், இன்னும் நிறைய பேருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பொண்ணு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க....! இப்போ எல்லாம் வெளில பொண்ண கொடுக்க அவ்வளவு ஆர்வம் இல்லை. இருந்திருக்கலாம்.. ஒரு காலத்தில்....
//..இளைஞர்களாக இருக்கும் வரை தான் வெளிநாட்டு மோகம்//
இப்போது வெளிநாட்டு மோகம் இருப்பதாகத் தெரிவதில்லை. 2005 வரை ஒரு நிலை இருந்தது அப்போது இந்தியாவில் வேலை கிடைப்பது அரிது. வாழ்வதற்கான சூழலும் வெளிநாட்டு கம்பெனிகளின் வரத்தும் குறைவு...........தப்பிப் பிழைத்து குடும்பம் காப்பாற்ற வந்தவர்கள்தான் இப்போ வெளிநாட்டில் இருக்காங்க.....! மோகத்திற்கும் ஆடம்பரத்திற்கும் செல்பவர்களும் இல்லாமல் இல்லை ஆனால் மைனாரிட்டி அளவுதான்.....!
கட்டுரையின் சில பகுதிகளில் உடன் பட்டு சில பகுதிகளுக்கு பதில் எழுத முற்படும் போது இது இன்னொரு பதிவாய் மாறிவிடும் அபாயம் இருப்பதால் இப்போதைக்கு முடிக்கிறேன்...!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ வெறும்பய, மாணவன் நீங்கெல்லாம் நாண்டுகிட்டு...... அப்டின்னு சௌந்தர் சொல்றான் நாராயணா நாராயணா///
அடப்பாவி... :)))
போலி விசா காரணமாக அமெரிக்காவில் மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி பொருத்தி இருக்கிறார்கள்" It is not true, all of these students having valid student visa, they can not step in to US with fraudulent Visa, but the problem is none of them attended classes and the university never conducted any class. All of them were working some on the or some under the table. It is illegal for misusing the VISA which is given them for study. some of them got work permit legally but it is very evident that they used the loopholes. This university is just set up to get visa to enter US that is the only thing they were doing in this university and another thing is the student adviser in this Univ. is Anji Reddy a Telugu, and more than 1500 students almost 95% of them enrolled in this university are from Andhra. So we can not say all of these students innocents except one or two. and if you look into this with larger perspective it is more of societal problem. Andhra people are more crazier for going abroad. My Telugu friends says their marriage bargains are all based on visa they if the have US green card their rate is different then H1B with work permit, then Canadian and Australian PR rate goes down.
வெளி நாட்டில் வீணாப் போன யூனிவர்சிட்டியில் M.B.A படித்து வந்தால் இந்தியா போன்ற நாட்டில் அதிக சம்பளம் கிடைப்பது உங்களுக்கு தெரியாதா நண்பரே..
http://www.youtube.com/watch?v=lM1ge5LQniA&feature=player_embedded
உங்க அக்கறை புரியுது.. ஆனா.. என்ன என்ன நிலைமை-ல வெளிநாடு வராங்கன்னு நமக்கு என்ன தெரியும்?
அப்படி வந்து.. எத்தனை பேர், தன்னோட குடும்பத்துக்கு தேவையான அத்தனை கடமையும் செஞ்சி முடிக்கிறாங்க..
நம் நாட்டில் இப்போது, வேலை வாய்ப்புகள் அதிகமா இருக்கு.. அப்போ, அந்த மாதிரி வாய்ப்புகள் அதிகம் இல்லாதப்ப வந்தவங்க ஜாஸ்தி..
எல்லாருமே வெறும் மோகத்தினால் வருவதில்லை.. அப்படி சரிவர விசாரிக்காமல், நானும் வெளிநாடு போரேன்னு சொல்லி.. எவனயாச்சும், நம்பி பணத்த குடுத்து, ஏமாந்து போறது, அப்புறம்.. வேலை பற்றிய முழு விவரம் கேக்காம.. பிறகு, இங்கே வந்து, சம்பந்தம் இல்லாத வேலை செய்து கச்டபடுறது... இதெல்லாம் அவங்கவங்க கவனித்து செய்ய வேண்டிய விஷயம்..!!
அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்...
வெளிநாடு வந்ததாலயே நிம்மதி, சந்தோசம் இல்லாம இருக்கும்-ன்னு சொல்றது தவறு..
இங்கேயும், நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ்பவர்கள் உண்டு.
பகிர்வுக்கு நன்றி சௌந்தர்..
நல்ல பகிர்வுங்க.
உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html
உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html
Good post Soundar!
வெளிநாட்டு மோகம் என்பதைவிட எப்படியாவது சம்பாதித்தே தீர வேண்டும் என்ற உத்வேகம் அவர்களை அப்படி தள்ளிவிடுகிறது. ஆனால் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்பதுபோல் அவர்கள் அதில் சந்தோஷத்தை இழந்து விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இருப்பதை வைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து இருப்பது தான் நல்லது.
செமத்தியான பதிவு சௌந்தர்..
அசத்துங்க, அசத்துங்க.. எங்கமேல உள்ள கோவத்தை நேர்லயே சொல்லிருக்கலாம், இப்படி பதிவு போட்டு எங்க மானம் கெடணுமா??
Post a Comment