சென்ற பதிவில் உங்களை கேள்வி கேட்க சொல்லியிருந்தேன் நிறைய கேள்விகள் வந்திருந்தது சில கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்கு பதில் கூறியிருக்கிறேன்.. பதில் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது எனக்கு தெரிந்த பதிலை தெரிவித்து இருக்கிறேன் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்.
மாணவன்
பதிவுலகம் மூலம் கற்றுகொண்டது என்ன?
சுமாராக எழுத, நிறைய படிக்க, நிறைய (வீண் )அரட்டை அடிக்க கற்று கொண்டேன்.இங்கு இன்னும் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.
பதிவுலகம் மூலம் அடைந்த நன்மைகள்?
நல்ல நண்பர்கள், அதிகம் படிப்பது பலவகையான மனிதர்களின் எழுத்துக்களை தெரிந்து கொண்டது, நானும் ஏதோ நன்றாக எழுதுவதற்கு உதவுகிறது
பதிவுலக நண்பர்களைபற்றி?
இங்கு கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால் அது நண்பர்கள் தான். அவர்கள் என் மீது அன்பு வைப்பதும், நான் அவர்கள் மீது அன்பு வைப்பதும் , எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது போன் செய்து பாராட்டுவதும், நண்பர்கள் தான். என் பிறந்தநாள் அன்று சித்ரா அக்கா எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார், என் பிறந்தநாள் என்று எப்படி தெரியும்...? அவரை நான் கேட்டேன், நான் பேஸ்புக்கில் பார்க்கும் போதே குறித்து வைத்து கொண்டேன் என்றார், ஒரு நண்பரின் பிறந்தநாளை கூடதெரிந்து வைத்திருக்க வில்லையென்றால் எப்படி என்றார் அப்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. நல்ல நட்பு கிடைத்து இருக்கிறது என்று பிறகு தேவாஅண்ணன் அவங்க மனைவி (அண்ணி) அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் காலையில் வந்தவுடன் பாபு அண்ணன் போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார், ரமேஷ் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார் , கார்த்திக் எனக்காக பதிவு எழுதி வாழ்த்து சொன்னார், பலர் எனக்கு மின்னஞ்சல் செய்து வாழ்த்து கூறினார்கள். இவர்கள் எல்லாம் என்னை பார்த்ததும் கிடையாது நானும் அவர்களை பார்த்தது இல்லை, இந்த பதிவுலகம் தான் எங்களை சேர்த்து வைத்திருக்கிறது, இந்த விஷயத்தை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது மனதார பாராட்டும் பொழுது...அது தனி ஒரு சந்தோசமாகவும் ஊக்கமும் அளிக்கிறது. எனக்கு தமிழ்மணம் விருது கிடைத்தது, என்றால் அதற்கும் காரணம் நண்பர்கள், இங்கு எனக்கு என்னவெல்லாம் நன்மை கிடைக்கிறதோ அவை எல்லாம் என் நண்பர்களுக்கு சொந்தமானது....நான் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரே நண்பர் எஸ்.கே தான் அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்று வருகிறேன், எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இவரிடம் தான் கேட்பேன். எனக்கு மட்டும் இவர் உதவவில்லை அனைவருக்கும் உதவி செய்கிறார், நண்பர்கள் பற்றி எழுதினால் எழுதி கொண்டே போகலாம்.
வளர்ந்துவரும் பதிவுலகம் பற்றி உங்கள் பார்வையில்??
நாளுக்கு நாள் பதிவர்கள் தான், அதிகரித்து வருகிறார்கள். புதிய பதிவர்கள் நன்றாக விழிப்புணர்வுடன் எழுத வேண்டும் என ஆர்வமாக இருக்கிறார்கள், பதிவுலகில் அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம், பல பதிவர்கள் புத்தகம் வெளியிடுகிறார்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது, நன்மைகள் பல இருந்தாலும் போட்டி பொறாமை இருப்பது வேதனைக்குரியது.
பிரபல பதிவர் - விளக்குக??
உங்களை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்...!!!
மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது?
எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது.
வேடந்தாங்கல் - கருன்
பிரபல பதிவர்கள் என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு ஏன் கருத்துரை இடுவதில்லை??
நீங்கள் பிரபலம் என்று யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. பிரபல பதிவர்களும் பின்னூட்டம் போடுகிறார்கள், சித்ரா பின்னூட்டம் போடுகிறார், கே,ஆர்,பி செந்தில் பின்னூட்டம் போடுகிறாரே, நான் பதிவு எழுத வந்த புதியதில் இவர்கள் வந்து பின்னூட்டம் போட்டு ஊக்கம் அளித்தார்கள். உண்மை தமிழன் பின்னூட்டம் போடுகிறார். அவர் அவருக்கு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பின்னூட்டம் போடுகிறார்கள், சிலருக்கு நேரம் கிடைக்காமல் இருப்பதால் பின்னூட்டம் போடமால் இருப்பார்கள். சிலர் தாங்கள் பிரபல பதிவர் என்று நினைத்து கொண்டு பின்னூட்டம் போடாமல் இருக்கிறார்கள், ஒரு சிலர் பின்னூட்டம் போடாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அவர்களுக்கும் வந்த புதியதில் அனைவருக்கும் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், அப்போது விவாதம், சர்ச்சை என்று வந்ததால் சிலர் பின்னூட்டம் போடுவதையே நிறுத்தி விடுகிறார்கள். என்னை பொறுத்த வரை நான் யார் பின்னூட்டதையும் எதிர்பார்த்து பதிவு எழுதுவதில்லை, எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் மற்றவர்களுக்கு சொல்கிறேன், பின்னூட்டம் போடாதவர்களை பற்றி நான் என்றுமே சிந்திப்பதில்லை. எனது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன். நமது பதிவை யாரும் படிக்கவில்லையென்றால் வருத்தப்படலாம் ஆனால் நமது பதிவை அனைவரும் படிக்கிறார்கள் நீங்கள் சொல்லும் பிரபல பதிவர்களுக்கும்...அது போதுமே நமக்கு.
Chitra
பதிவுகள் எழுதுவதால், இப்பொழுது இந்த அளவுக்கு maturity - அறிவு முதிர்ச்சி வந்ததா? இல்லை, அந்த முதிர்ச்சி வந்தததால், பதிவு எழுத வந்தீர்களா?
விளையாட்டாக தான் எழுத தொடங்கினேன் உங்களை போன்ற பதிவரின் எழுத்துக்களை படித்து தான் முதிர்ச்சி வந்தது. பதிவு எழுத எழுத அந்த முதிர்ச்சி மெருகேறியது .
எஸ்.கே
ரசிகன் என்ற பெயரை வலைப்பூவுக்கு வைக்க காரணம்?
வலையுலகம் பற்றி எனக்கு முன்பே தெரியாது, அதனால் இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்க வில்லை. நான் அஜித் ரசிகன் என்பதால், ரசிகன் வைத்தேன். ஆனால் இப்பொழுது உங்கள் அனைவரின் ரசிகன்.
வலைப்பூவுக்கு முன் பின் உங்கள் வாழ்க்கை பற்றி???
வலைப்பூவுக்கு முன் தனிமை, பேப்பர் படிப்பது ..வலைப்பூவுக்கு பின் நிறைய படிப்பது நிறைய நண்பர்கள்
Sriakila
பதிவுலகம் மூலம் நீ அடைந்த நன்மைகள் என்ன? இதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்ன?
நன்மை என்றால் நண்பர்கள் ஒரே குடும்பம் போல் இருப்பது, பல விஷயங்கள் பற்றி படிப்பது. சங்கடம் என்றால், நான் மற்றும் எனது இரு நண்பர்கள், அந்த இரண்டு நண்பர்களுக்குள் சண்டை வந்தால் நடுவில் நான் தான் மாட்டிகொள்வேன் இந்த நண்பரிடம் பேசினால் அந்த நண்பர் கோபித்து கொள்வார்,அவரிடம் பேசினால் இவர் கோபித்து கொள்வார். இது போல் சங்கடங்கள் தான் வரும்
karthikkumar
பதிவுலகம் வந்த பிறகு இணையத்திற்கு அடிமை ஆகிவிட்டேன் என்று உணர்ந்தது உண்டா?.
நான் இன்னும் இணையத்திற்கு அடிமையாகவில்லை எப்போது அடிமையாகமாட்டேன். இணையம் இல்லையென்றால் இரண்டு நாட்களுக்கு சிரமமாக இருக்கும் பின்பு சரியாகிவிடும்
ஆனந்தி
அந்த பட்டாம்பூச்சி ,ரோஜாபூ னு கவிதையா ஊடு கட்டினியே...சொல்லு...யாருப்பா தம்பி அந்த பொண்ணு..??
நான் இப்படி கவிதை எழுதுவதற்கு காரணம் நண்பர்கள் சிலர் என்னை கவிதை எழுத தெரியாதா..?என்றார்கள் நான் முயற்சி செய்ததில்லை என்றேன்.முயற்சிசெய்யென்றார்கள் அதனால் தான் எழுதுகிறேன். பெண் என்று யாருமில்லை....நான் எழுதும் கவிதை எல்லாம் கற்பனை தான். (எப்படி கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டேனே)
பன்னிக்குட்டி ராம்சாமி
இதுவரை யாருக்குமே தெரியாமல் நீங்கள் காத்து வரும் ஒர் ரகசியம், (எங்களிடம் வெளியிட முடிந்தால்).. என்னவென்று சொல்ல முடியுமா...?
ராம சாமி உங்களை பற்றி ஒரு ரகசியம் இருக்கிறது அதை சொல்லவா..?எனக்கு அப்போது 13 வயது எங்கள் வீட்டு பக்கத்தில் நிறைய கல்யாணமண்டபம் இருக்கும் ஒரு நாள் யாரோ ஒருவர் கல்யாண வீட்டிற்கு சென்று...அங்கே நன்றாக சாப்பிட்டு விட்டு அங்கே வைத்த ஐஸ்கிரீம்மை எங்க அம்மாவிற்கு எடுத்து வந்து கொடுத்தேன் ஏது இந்த ஐஸ்கிரீம் என்றார், கடையில் வாங்கி வந்தேன் என்றேன் இது தான் என் ரகசியம்.
உங்கள் பதிவில் பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத பதிவுகள், &காரணம்?
என் பிடிக்காத விஷயம் எழுத்து பிழை தான். நான் முன்பு எழுதிய பதிவில் இன்னும் எழுத்து பிழைகள் இருக்கும், இப்பொழுதும் எனக்கு எழுத்து பிழைகள் நிறைய வருகிறது, பிடிக்காத பதிவுகள் என்றால் நான் தொடக்கத்தில் பதிவு செய்த ஐந்து பதிவுகள் பிடிக்காது காரணம் அது காபி பேஸ்ட் செய்தது....
எனக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அறிவுரை என்ன?
முதலில் உங்கள் பெயரை மாற்ற சொல்வேன், ஏனென்றால் உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் செய்யும் வேலை...முதல் ஆனால் நீங்கள் இப்படி பெயர் வைத்திருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது, நீங்கள் கழுகிற்காக ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அதே போல உங்கள் பதிவில் ராமர்பிள்ளை பற்றி எழுதியது. இதை போல நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளை நீங்கள் பதிவிட வேண்டும்
ப்ரியமுடன் வசந்த்
ஒரு இளம்பெண் உங்களை பார்த்த முதல் நாளிலே காதல் கொண்டு உங்களிடம் காதலை சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? இல்லையென்றால் அதற்கு விளக்கம் ஆமாம் என்றால் அதற்கும் விளக்கம் தேவை...??
(ஒரு முடிவோட தான் இருக்கீங்க.) நிச்சயமாக மாட்டேன் கடைசிவரை கூட வருபவர் என்பதால் நன்கு அவரை பற்றி தெரியவேண்டும், ஒருவரை பற்றி தெரியாமல் எப்படி காதலை ஏற்றுகொள்வது...அவரிடம் நன்கு பழகி அவர் குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்ட பிறகு தான் முடிவு எடுப்பேன்.
உங்களை ஏண்டா கேள்வி கேட்க சொன்னோம் என்று இந்த கேள்விகளை பார்த்தவுடன் முழித்து கொண்டிருந்தேன், ஏன் என்றால் கேள்விகள் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..கேள்விகள் அனைத்து நன்றாக இருந்தது சிலர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது அதனால் மன்னித்து கொள்ளவும்....கேள்வி கேட்ட அனைத்து நண்பர்களும் நன்றி
Tweet | |||||
42 comments:
வணக்கம் மச்சி :)
மாணவன் கூறியது...
வணக்கம் மச்சி :)///
வணக்கம் வாங்க வாங்க
நல்லாத்தானே பதில் சொல்லியிருக்க..அப்புறம் ஏன் முழிக்கணும்? மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் செளந்தர்.
எல்லா பதிலும் நல்லா இருக்கு..
என்ன இருந்தாலும் அம்மாவை ஏமாத்தி ஐஸ் கிரீம் கொடுத்தது சரி இல்லை...
இருங்க சொல்லிகுடுக்கரேன்..!! :)
நட்புகள் என்றென்றும் தொடரட்டும்!
எல்லா பதில்களும் சூப்பர்!
இது சீசன் போல! :)
//எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது. //
இது ரொம்ப அருமை!
மச்சி நல்ல தெளிவாதான் பதில் சொல்லியிருக்க சூப்பர்....
இன்னும் கொஞ்சம் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கலாம்...அதுதான் கொஞ்சம் ஏமாற்றம்... மற்றபடி பதிவிட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் மெச்சூர்டாவே இருக்கு மச்சி வாழ்த்துக்கள்...
தொடர்ந்து மென்மேலும் சிறக்க வேண்டும் :))
//மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது?
எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது.//
இந்த கேள்விக்குதான் ரொம்ப எதிர்பார்த்தேன் கலக்கிட்ட மச்சி :))
சூப்பர்...
//பிரபல பதிவர் - விளக்குக??
உங்களை பற்றி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்...!!!//
நான் பிரபல பதிவரா?? சொல்லவே இல்ல....
ரொம்ப நன்றி மச்சி :))
நல்ல கேள்வி பதில்... இதை தொடருங்க...
//இங்கு கிடைக்கும் ஒரே நன்மை என்னவென்றால் அது நண்பர்கள் தான். அவர்கள் என் மீது அன்பு வைப்பதும், நான் அவர்கள் மீது அன்பு வைப்பதும் , எனக்கு ஒரு நிகழ்வு வரும் பொழுது போன் செய்து பாராட்டுவதும், நண்பர்கள் தான்//
இதேபோன்று இனியமையான நட்புகளுடன் தொடர்ந்து உங்கள் வாழ்வில பல இனிமையான நிகழ்வுகள் அமைய பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் மச்சி :))
நட்பு:
வளர்பிறையாய் வளரும் வானிருக்கும் வரை...
உயிருடன் வாழும் உலகிருக்கும் வரை....
தொடரட்டும் உங்கள் பொன்னான வலைப்பணி... :))
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியதற்கு நன்றிகள். உங்களுக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு கேள்வியே கேட்க தெரியவில்லை. எல்லா கேள்விகளையும் பிறர் கேட்டு விட்டதால், விடைகளுக்கு காத்திருந்தேன்.
//என்னை பொறுத்த வரை நான் யார் பின்னூட்டதையும் எதிர்பார்த்து பதிவு எழுதுவதில்லை //
அஹா.. இது தெரியாம, நா மூணு மாசமா உங்களுக்கு பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேனே..!!
னது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன்.//
எலேய் அப்புறம் எதுக்கு போன் பண்ணி இல்லைன்னா சாட்டுல ஓட்டு போடு கமெண்ட் போடுன்னு கேட்குற?
ரமேஷ் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார் ,//
ஓசி சாப்பாடு கிடைக்கும்னு நினச்சு போன் பண்ணினேன். நீ கூப்பிடவே இல்லை
வலையுலகம் பற்றி எனக்கு முன்பே தெரியாது, அதனால் இந்த பெயர் தான் வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானிக்க வில்லை. நான் அஜித் ரசிகன் என்பதால், ரசிகன் வைத்தேன். ஆனால் இப்பொழுது உங்கள் அனைவரின் ரசிகன்.//
ரசிகன் விஜய் தான?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
னது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன்.//
எலேய் அப்புறம் எதுக்கு போன் பண்ணி இல்லைன்னா சாட்டுல ஓட்டு போடு கமெண்ட் போடுன்னு கேட்குற?////
இவர் ரொம்ப நல்லவர்...மக்களே நான் இவர் போன் நம்பர் தரேன் நீங்க எல்லாம் இவருக்கு போன் பண்ணி கேளுங்க...ஏன் கமெண்ட் போடலைன்னு....(இவர் போடுற மொக்க கமெண்ட்க்கு போன் பண்ணி வேற கேகுறாங்கலாம்..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரசிகன் விஜய் தான?///
அவர் ரசிகனா இருக்கலாம் ஆனா நாங்க அவருக்கு ரசிகனா இருக்கணும்...
//(எப்படி கேட்டாலும் உண்மையை சொல்ல மாட்டேனே) //
ok ok..cool..:)))))))))))))))
சௌந்தர் கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
னது வேலை நல்ல கருத்தை சொல்வது அவ்வளவு தான், யாரும் பின்னூட்டம் போடவில்லையென்றாலும், நான் பதிவு எழுதி கொண்டு தான் இருப்பேன்.//
எலேய் அப்புறம் எதுக்கு போன் பண்ணி இல்லைன்னா சாட்டுல ஓட்டு போடு கமெண்ட் போடுன்னு கேட்குற?////
இவர் ரொம்ப நல்லவர்...மக்களே நான் இவர் போன் நம்பர் தரேன் நீங்க எல்லாம் இவருக்கு போன் பண்ணி கேளுங்க...ஏன் கமெண்ட் போடலைன்னு....(இவர் போடுற மொக்க கமெண்ட்க்கு போன் பண்ணி வேற கேகுறாங்கலாம்.///
மச்சி மொதல்ல உனக்கு வாழ்த்துக்கள்..... நம்ம ரமேஷ் எங்க கமென்ட் போடறாரு.... இருக்குற கமேண்ட காபி பேஸ்ட் பண்ணிட்டுதான் இருக்கார்... ஹி ஹி அவார சொந்தமா கமென்ட் போடறாரா பாரு....:))
karthikkumar கூறியது...
மச்சி மொதல்ல உனக்கு வாழ்த்துக்கள்..... நம்ம ரமேஷ் எங்க கமென்ட் போடறாரு.... இருக்குற கமேண்ட காபி பேஸ்ட் பண்ணிட்டுதான் இருக்கார்... ஹி ஹி அவார சொந்தமா கமென்ட் போடறாரா பாரு....:))///
ஆமாம் மச்சி சொந்த கமெண்ட் கூட போட தெரியாது...கமெண்ட் காபி பேஸ்ட் பண்ணவர் இப்போ பதிவையும் காபி பேஸ்ட் பண்ண ஆரம்பிச்சிட்டார்..
சௌந்தர், உங்கள் பதிவுகளை ரொம்ப நாளாக வாசித்து வருகிறேன். இன்று மெருகேறி, நீங்கள் ஒரு தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்!
உங்கள் ஒவ்வொரு பதிலிலும், உங்களின் பக்குவப்பட்ட மனம் தெரிகிறது. அருமையான பதில்கள். பாராட்டுக்கள், நண்பா!
Chitra சொன்னது…
சௌந்தர், உங்கள் பதிவுகளை ரொம்ப நாளாக வாசித்து வருகிறேன். இன்று மெருகேறி, நீங்கள் ஒரு தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்!
உங்கள் ஒவ்வொரு பதிலிலும், உங்களின் பக்குவப்பட்ட மனம் தெரிகிறது. அருமையான பதில்கள். பாராட்டுக்கள், நண்பா!//
தமாசுக்குத்தான சொன்னீங்க? ஹிஹி
மச்சி பன்னிகுட்டி annan peru enakkup pidichirukku . atha maaththanumnumaa ? athu nallaaththaan irukku.
கேள்விகளும் பதிகளும் அருமை.. நான் போன பதிவு படிக்காம போயிட்டேன்... நானும் கேள்வி அனுப்பிருப்பேன் :(
nalla pathikal sounder
கேளவி பதில் அருமை..
வாழ்த்துக்கள்..
நடத்தும்லேய் மக்கா...
ஒய் நீரு ஐஸ் கிரீம் களவானியா...
நைஸ் பாஸ்.. நட்சத்திர வாழ்த்துக்கள்...!!
பதிலகள் அனைத்தும் அருமை சௌந்தர். நல்ல முதிர்ச்சி, பக்குவம் தெரிகிறது, வாழ்த்துக்கள்!
//////மச்சி உனக்கு பதில் தெரியாத கேள்வி எது?
எனக்கு மட்டும் அல்ல அனைவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால் அது மரணம் , எப்போது மரணம் என்று யாராலும் சொல்லமுடியாது./////////
நல்ல பதில் சௌந்தர்...
அந்த ஐஸ் க்ரீம் பழக்கம் இன்னும் இருக்கா? இல்ல டெவலப் ஆகி சாப்பாடே சாப்பிடுற அளவுக்குப் போயிடுச்சா?
////எனக்கு ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அறிவுரை என்ன?
முதலில் உங்கள் பெயரை மாற்ற சொல்வேன், ஏனென்றால் உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் செய்யும் வேலை...முதல் ஆனால் நீங்கள் இப்படி பெயர் வைத்திருப்பது ஆச்சரியாமாக இருக்கிறது, நீங்கள் கழுகிற்காக ஸ்பெக்ட்ரம் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தீர்கள். அதே போல உங்கள் பதிவில் ராமர்பிள்ளை பற்றி எழுதியது. இதை போல நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளை நீங்கள் பதிவிட வேண்டும்//////////
ஹஹஹா.... நம்ம எழுதற எழுத்துக்கு இந்தப் பேருதான் சரி, உண்மையிலேயே ரொம்ப விரும்பித்தான் இந்தப் பேரு வெச்சிருக்கேன்...... !
விழிப்புணர்வுக் கட்டுரைகள் நிச்சயம் எழுதுவேன், ஆனால் அதற்கு நிறைய மெனக்கெட வேண்டி இருக்கு, எல்லா நேரமும் அது முடிவதில்லை. எளிதாக ஒரு காமெடி பதிவைப் போட்டு மன அழுத்ததைக் குறைத்துக்கொள்ளவே மனம் நாடுகிறது.
என் கேள்விக்கு பதில் சொல்லாத சௌந்தர் ஒழிக
ஆஹா...இப்போதான் தெரியுது எதுக்கு கேள்வி கேட்க்க சொன்னிங்கன்னு...ரைட்டு..
சராமரியான கேள்விகளுக்கு முதிர்ச்சியான பதில்கள் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
அருமையான ஒரு தீமை செலக்ட் பண்ணியிருப்பதும் செம்மை தம்பி...!
It is not easy to answer... especially kostins from friends (Nanbendaa...:)
Super answers though...:)
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
என் கேள்விக்கு பதில் சொல்லாத சௌந்தர் ஒழிக///
புத்திசாலித்தனமான கேள்விக்கு பதில் சொல்வதிலையோ?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரமேஷ் எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார் ,//
ஓசி சாப்பாடு கிடைக்கும்னு நினச்சு போன் பண்ணினேன். நீ கூப்பிடவே இல்லை////
இந்த பொழப்புக்கு....
கேள்விகளின் தேர்வு நல்லாயிருக்கு..... பதில்கள் நேர்மையா இருக்கு.
Post a Comment