ஸ்ரீஅகிலா அக்கா பெயர் மீது காதல் என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத சொல்லி அழைத்திருந்தார்கள். பெயர் மீது காதல் நீ வேற எதையாவது எழுதி மானத்தை வாங்கிடாதே என்றார்கள்...
என் முழு பெயர் சௌந்தரபாண்டியன்....நாங்கள் பாண்டி சாமி கும்பிடுவோம், அதனால் குடும்பத்தில் ஒருவருக்கு பாண்டி என வருவது போல பெயர் வைக்க வேண்டுமாம் அதனால் எனக்கு சௌந்தரபாண்டியன் வைத்தார்கள். எங்க பாட்டி தான் இந்த பெயரை தேர்வு செய்ததாக எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அனைவரும் என்னை சௌந்தர் என அழைப்பார்கள்.
இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை .நான் எங்கு சென்றாலும் என் பெயரில் ஒருவர் இருப்பார். நான் படிக்கும் போதும் அப்படி தான் என் வகுப்பில் இரண்டு பேர் இருந்தார்கள், ஒருவன் சௌந்தர்ராஜன், இன்னொருவன் சௌந்தரபாண்டியன் இப்பொழுது பதிவுலகிலும் ஒருவர் வந்து விட்டார்.
இப்படி பெயர் மாற்றம் இருப்பதால் பள்ளியில் பல குழப்பங்கள் வரும் அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்.....பள்ளியில் யாரவது சௌந்தரபாண்டியன் தேடி வந்தால் போதும் நாங்கள் இருவரும் எழுந்து நிற்போம், யாராவது எங்கள் பெயரை சொல்லி தேடி வந்தால் இருவரும் வெளியே சென்று சுத்தி விட்டு வருவோம்....டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!
என்பெயரை அனைவரும் மாற்றி மாற்றி கூப்பிடுவார்கள் மாற்றி மாற்றி எழுதுவார்கள் சுந்தர்,சவுந்தர், சவுந்தர்ராஜா..கூப்பிடுவாங்க அட டா என்பெயரை சரியா சொல்லுங்க என்பேன் மீண்டும் அப்படி தான் கூப்பிடுவாங்க..என்னிடம் நன்கு பழகியவர்கள் என்னை சௌந்தர் என்றே அழைப்பார்கள் புதியதாக பார்ப்பவர்கள் சௌந்தரபாண்டியன் என்று அழைப்பார்கள்...எனக்கும் சௌந்தர் என்று அழைப்பது தான் பிடிக்கும்...சௌந்தரபாண்டியன் என்றால் அர்த்தம் என்ன பார்த்தேன் அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...
என்பெயருக்கு என்ன பலன் என்று பார்த்தேன் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
சௌந்தரபாண்டியன்
பெயர் விளக்கம்: பழமையான அழகு
பெயர் விளக்கம்: பழமையான அழகு
விளக்கம்: இப்பெயரை உடையவர்கள் கலகலப்பாக பழகுபவர்களாகவும் நன்கு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் பிடிக்கும். இவர்கள் கற்பனைத்திறன் உடையவர்களாகவும் பல விசயங்களை செய்து பார்க்க முயற்சிப்பார்கள். எதையும் ஆர்வத்துடனும் அறிவுபூர்வமாகவும் அணுகுவார்கள். இவர்கள் நேர்மறையான மனோபாவத்துடனும் பலவித விசயங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். எதையும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்ய முயற்சிப்பார்கள். சுதந்திரத்துடனும் புது இடங்களில் தயக்கமில்லாமலும் பழகுவார்கள். வேலையில் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருக்கும். அதே சமயம் இவர்களுக்கு அடக்கியாள்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் வீண் செலவு செய்பவர்களாகவும் நடிப்பவர்களாகவும் நடந்து கொள்ளலாம். சில சமயங்களில் பொறுமையில்லாதவர்களாகவும் மற்றவர்களை டாமினேட் செய்யலாம். சில சமயங்களில் முரட்டுத்தனமாக கூட நடந்துகொள்ளலாம்.....
இந்த பலனில் வருவது 75 சதவிகிதம் உண்மை...என் பெயரை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லிவிட்டேன்.....தொடர் பதிவு யாராவது கூப்பிட வேண்டும் என அகிலா சொன்னாங்க அதனால் நான் நாலுபேரை மாட்டிவிடுகிறேன். நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!
பெயர் விளக்கம் மற்றும் பலன் தேடிதந்த எஸ்.கே அவர்களுக்கு நன்றி...
இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு)
அருண்பிரசாத் (என்னை எத்தனை தொடர் பதிவுக்கு மாட்டி விட்டிங்க)
அன்புடன் ஆனந்தி (சீக்கிரம் எழுதிடுவாங்க ரொம்ப சுறு சுறுப்பு)
கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)
Tweet | |||||
42 comments:
vadai
கற்பனைத்திற உடையவர்களாகவும்//
ho hohohoh
அடக்கியாள்வது மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் வீண் செலவு செய்பவர்களாகவும் நடிப்பவர்களாகவும் நடந்து கொள்ளலாம்//
sari illaiye
பொறுமையில்லாதவர்களாகவும் மற்றவர்களை டாமினேட் செய்யலாம். சில சமயங்களில் முரட்டுத்தனமாக கூட நடந்துகொள்ளலாம்.....//
ada enna ithu chinna pula thanama
கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)//
ada pavi manatha vangitiye
ithukave yezhuthuren da .........
அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...///
மச்சி அதை நாங்க சொல்லணும்....:))
karthikkumar சொன்னது…
அதில் சௌந்தர் என்றால் அழகு பாண்டியன் என்றால் பண்டைய என அர்த்தம் வருகிறது....எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்...///
மச்சி அதை நாங்க சொல்லணும்....:))////
நீங்க எங்க சொல்றீங்க அதான் நானே சொல்லிட்டேன்
அழகான பெயர்!
அழகான பதிவு!:-)
// ..டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க! //
ஒத்துக்கறோம்.. நீங்க ரொம்ப உஷாருதான்...
நல்ல பெயர் விளக்கம் செளந்தர்..
-பதிவுலகில் பாபு
http://abdulkadher.blogspot.com/2011/03/exam.html
அடப்பாவி....எத்தனை நாள் பகை...காத்திருந்து போட்டுட்டியே......
சரி, கொஞ்சம் டைம் கொடு எழுதிடறேன் (ஏம்பா, இப்படித்தானே பந்தா விடனும்)
சரி நீ soundarஆ இல்ல saylandharஆ (செ+ள+ந்+த+ர்)
//சௌந்தர் சொன்னது…
நீங்க எங்க சொல்றீங்க அதான் நானே சொல்லிட்டேன்//
அதே அதே! நமக்கு நாமே திட்டம் இது தான்! :))
அருண் பிரசாத் சொன்னது…
அடப்பாவி....எத்தனை நாள் பகை...காத்திருந்து போட்டுட்டியே......
சரி, கொஞ்சம் டைம் கொடு எழுதிடறேன் (ஏம்பா, இப்படித்தானே பந்தா விடனும்)////
ஆமா ஆமா கண்டிப்பா
தொன்மையன அழகுக்குரியவன் - செளந்தர பாண்டியன். பாண்டியன் தமிழ் செளந்தரம் வடமொழி.
பாண்டின்னே கூப்பிடலாம் இனிமே.........!
எனக்கு எல்.கே முகவரி கண்டிப்பா வேணும் சொல்லிபுட்டேன்...ஆமாம்...
சீமான்கனி சொன்னது…
எனக்கு எல்.கே முகவரி கண்டிப்பா வேணும் சொல்லிபுட்டேன்...ஆமாம்...////
என்ன முகவரி சொல்லவேயில்லையே நான்பாட்டுக்கு வேற ஏதாவது முகவரி கொடுத்துட்டா என்ன செய்றது....ஆமா எதுக்கு
dheva சொன்னது…
தொன்மையன அழகுக்குரியவன் - செளந்தர பாண்டியன். பாண்டியன் தமிழ் செளந்தரம் வடமொழி.
பாண்டின்னே கூப்பிடலாம் இனிமே.........!////
எப்படி வேணும்னா கூப்பிடுங்க...அண்ணா
//இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை//
இதப்பத்தி எல்லாம் நினைக்காத..ஆனா
'அவள் பார்த்தேன்..சிரித்தேன்...மெழுகுவர்த்தியா உருகினேன்...வார்த்தையில்லை..'ன்னு பினாத்துறதுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கு.
//இவர்கள் கற்பனைத்திற உடையவர்களாகவும் பல விசயங்களை செய்து பார்க்க முயற்சிப்பார்கள். //
என்னல்லாம் செஞ்சு பார்த்தன்னு முதல்ல சொல்லு...
//நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!//
அப்படியா? ரைட்டு..........
Sriakila கூறியது...
//இந்த ஏன் வைத்தார்கள் மாற்றி வைத்திருக்கலாமே என தோன்றியதில்லை, எனக்கு வேறு என்ன பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்து பார்த்ததும் இல்லை//
இதப்பத்தி எல்லாம் நினைக்காத..ஆனா////
இப்போ நினைக்குறேன் என் இந்த போஸ்ட் ஏன் எழுதினேன் ....
எனக்கு இது தேவையா...!!!
இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு) //
இவனெல்லாம் ஒரு ஆளு...
அருண்பிரசாத் (என்னை எத்தனை தொடர் பதிவுக்கு மாட்டி விட்டிங்க) ///
யோவ் அருண் மாபு வசந்த் கிட்ட வாங்கின பரிசை கும்மி குரூப்புக்கு பிரிச்சு கொடுக்கவும்..
நான் இவ்வளவு நாளும் உன்னை பாண்டி என்று தானே கூப்பிடுகிறேன் ...அது தான் நல்லா இருக்கு ..இனிமேலும் பாண்டி தான் ...தக்காளி உன்னை பாண்டிமடம் அனுப்பாம விடமாட்டேன் ...
//இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு) //
இவனெல்லாம் ஒரு ஆளு..//
ஏண்டா ஏன் பேருக்கு என்ன குறைச்சல்.இந்த பேருநால தான் எனக்கு சீக்கிரம் கல்யனாம் முடிஞ்சு ஒரு பொண்ணுக்கு தகப்பன் ,..
யாரும் ரமேஷ் ன்னு பேரு வச்ச கல்யானாம் முடியாதான்னு கேக்காதீங்க ..என் நண்பன் மனம் புண்படும்
//இம்சை அரசன் பாபு (இதெல்லாம் ஒரு பேரு)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
//கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)//
இந்த அழுகாச்சி காவியம் என்னல்லாம் எழுதி என்னை அழ வைக்க போகுதோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பெயர் பதிவு அருமையா இருக்கு பாண்டி....
//இப்படி பெயர் மாற்றம் இருப்பதால் பள்ளியில் பல குழப்பங்கள் வரும் அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்.....// வேற ஒருத்தரிடமா.. நியாயமா... அவனுக்குதானே போகனும்..!!! சௌந்தர் இதுல ஏதோ சதி நடந்திருக்கு.
//எனக்கும் சௌந்தர் என்று அழைப்பது தான் பிடிக்கும்...// ”சௌந்தர்”...... அழைச்சாச்சு. பிடிச்சதா தல.
// பெயர் விளக்கம் மற்றும் பலன் தேடிதந்த எஸ்.கே அவர்களுக்கு நன்றி...// எஸ்.கே ஒரு சகலகலா வல்லவர் போலிருக்கே..!!! ஹி.ஹி..
//கல்பனா ( பதிவே எழுதுறது இல்லை இதுல தொடர் பதிவு வேற)// கேட்டா காலேஜ் ல ஆணியாம். (கால்ல இல்லீங்ககோ.. ஹி...ஹி...ஹி..)
சௌந்தர் பெயர்விளக்கம் பற்றிய விவரங்களை சுயபுராணத்துடன் கூறியிருப்பது அருமை.. நண்பா!!!
பெயர் காரணம் + பெயர் விளக்கம் வித்தியாசமா இருக்கிறது சௌந்தர்...வாழ்த்துக்கள்.
//அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!//
....ஆமா.. நீங்க தான் உஷார் பாண்டி ஆச்சே :-))
//இப்போ நினைக்குறேன் என் இந்த போஸ்ட் ஏன் எழுதினேன் ....
எனக்கு இது தேவையா...!!!
//
.....ஹி ஹி ஹி.. அத நாங்க சொல்லணும்...:-)))
//.தொடர் பதிவு யாராவது கூப்பிட வேண்டும் என அகிலா சொன்னாங்க அதனால் நான் நாலுபேரை மாட்டிவிடுகிறேன். நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை..!!!//
...நல்லாத் தானே சொல்லிட்டு வந்தீங்க.. திடீர்னு ஏன் ஏன்.. இந்த கேட்ட எண்ணம்?? அவ்வ்வ்வ்வ்வ்
...................
அப்புறம் சௌந்தர், ஒரு சின்ன டவுட்ட்டு...
இந்த பெயர் விளக்கம், உண்மையிலே எஸ். கே. சொன்னாங்களா.... இல்ல...........??? சரி சரி விடுங்க.. நா வாரேன்...... :-))
டீச்சர் அடிக்கும் பொழுது பெயர் சொல்லி கூப்பிடுவாங்க அப்பொழுது நாங்கள் உஷாராகி யார் டீச்சர் என கேட்டு உறுதி செய்து கொள்வோம் அவ்வளவு உஷார் நாங்க!
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...... பள்ளி நினைவுகள், சூப்பர் ஆக இருக்குது சௌந்தர்.
பெயர் விளக்கத்திற்காக ஒரு தொடர் பதிவா ? இருந்தாலும் படிக்க சுவாரிசியமாக இருந்தது. வாழ்த்துக்கள்..!
http://erodethangadurai.blogspot.com/
இப்பெயரை உடையவர்கள் கலகலப்பாக பழகுபவர்களாகவும் நன்கு பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.
வேலையில் ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு தலைமைப் பண்புகள் இருக்கும்.//
சரியாத்தான் வெச்சிருக்காங்க.. செளந்தர் அழகுதான்..
super machi :)
//அவனுடைய விடைத்தாளை என்னிடம் கொடுத்து விடுவார்கள் என் விடைத்தாள் வேற ஒருவரிடம் போய்விடும்//
நீங்க படிக்காமையே பாஸான ரகசியத்த இப்படி ஓடைச்சுட்டீங்களே பிரதர்...:))
//எனக்கு ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறார்கள்//
நோ கமெண்ட்ஸ்...:)))
பெயர் கதை சூப்பர்..:)
பெயர் விளக்கப்பதிவு அருமை நண்பா
பெயர் கதை சூப்பர். அதோடு பள்ளி நினைவுகள் அருமை..
அழைப்பிற்கு நன்றி :-))
http://anbudanananthi.blogspot.com/2011/03/blog-post_25.html
ஒரு வழியா எழுதியாச்சு... நேரம் இருக்கும் போது.. பாருங்கோ.. :-))
Post a Comment