Thursday, March 24

எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை...!!!






நேற்று தான் தன் சொந்த தொகுதியான திருவாரூரில் கலைஞர் பிரச்சாரத்தை தொடங்கினார்..வடிவேல் முதல் முறையாக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். அவர் எப்போது பேசுவார் என்று காத்திருந்தேன் அவர் பேச தொடங்கியதும் சிரிக்க தொடங்கியது தான் கடைசிவரை சிரித்துகொண்டே இருந்தோம்...விஜயகாந்த்தை போட்டு தாக்கு தாக்கு என தாக்கினார்...ரொம்ப கோவமா இருக்கார் போல 



இந்த பூமிக்குள் வரும்போது இந்த மண்ணை எடுத்து என் நெற்றியில் பூசிவிட்டுதான் வந்தேன். அப்படி ஒரு மண். இந்த மண். நான் திரையில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் ஒரு மனிதனுக்கு எது தேவைப்படுகிறது. 

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. நான் மக்களில் ஒருவனாக பேசுகிறேன். கலைஞர் போட்ட திட்டங்களை கேட்டபோது, கண்ண கட்டுது. எதிர் அணி மிரண்டு கிடக்கிறது. எல்லா பக்கமும் அணைகட்டி வைத்துவிட்டார் கலைஞர்.

கர்ப்பிணி பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கருவில் உள்ள குழந்தையும் பயன் அடைகிறது. நான் 25 வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் கருவில் உள்ள குழந்தை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறது. 

நேற்று ஒருவர் கட்சியை ஆரம்பித்துவிட்டு, நாளைக்கு முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். என்னவென்றால் அவர் கல்யாண மண்டபத்தின் இடையில் இரண்டு தூண் வந்துவிட்டதாம். அதற்கு ஒரு கட்சியை ஆரம்பித்து, நான் அடுத்த முதல் அமைச்சர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. அந்த பதவி என்ன சாதாரண பதவியா. 

கல்யாண மண்டபத்தில் இரண்டு தூண் வந்ததற்கு, உடனே கட்சியை ஆரம்பித்து முதல் அமைச்சர் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் முதல் அமைச்சர் என்றால், நான் பிரதமர். நீங்கள் பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி, நீங்கள் ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. . 


ஒருத்தர் என்னிடம் கேட்டார். ஏங்க அவர (விஜயகாந்த்) எதிர்த்து நிற்க போறேன் என்று சொன்னீர்களே, நிற்க போறீங்களா என்றார். அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட் வாங்க போனீர்களே. அங்க என்ன முதல் அமைச்சர் பதவி கொடுப்பார்களா. மிகப்பெரிய வீராப்பா பேசினீங்க.


அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு. நான் சோனியாகாந்தியிடம் சென்று நான் கருப்பு நேரு சீட் கொடுங்கனா அந்த அம்மா என்ன அடிக்க வராது?.....இந்த அம்மா சீட் கொடுத்து இருக்கு.


வடிவேல் பேசியதில் சிறப்புக்குரியது 

நிருபர் :என்னங்க பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா 

தொண்டர்கள் : முதல் ரவுண்ட் போயிட்டு இருக்கு

நிருபர் : என்னங்க எந்த எந்த தொகுதி முடிவு ஆகிடுச்சா...

தொண்டர்கள் : மூனாவது ரவுண்ட் போயிட்டு இருக்கு 
இப்படியே ஒன்பது ரவுண்ட் பத்து ரவுண்ட் போச்சு தொண்டர் வெளிய வந்தார் 

நிருபர் :என்னங்க இப்போ எத்தனையாவது ரவுண்ட்  

தொண்டர்கள் : என்னாது எத்தனையாவது ரவுண்ட்டா ஏழு எட்டு ஃபுல் ஓட்டிட்டு இருக்கு 
இப்போ வந்து ரவுண்ட் சொல்லிட்டு 

இப்படி பேசும் போது ஸ்டாலின்உள் பட அனைவரும் சிரித்தனர்... 

தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர் தான் கேப்டன்


எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை
 


அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. நாக்கு மூக்காவா, மூக்கு முக்காவா, தேக்கு மூக்கா ஏதோ சொல்றாங்க.
 நான் கேட்கிறேன் முதல் அமைச்சர் பதவி என்ன மியூசிக்கல் சேரா. 

அவரை எதிர்த்து நின்றால் எனக்குத்தான் கேவலம். மொத்த டீமையும் காலி செய்வதுதான் என் வேலை. 



23 comments:

goma said...

என்னதான் சிரிச்சாலும் வடிவேலு இப்படி ஒர்ர்ர்ரே அடியாகப் போட்டுத்தாக்க வேண்டாம்....
என்ன சொல்ல !!!???இதுதான் அரசியல்..
கலைஞரும் ,விஜயகாந்த்தை கும்மி துவச்சு காயப்போட சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

dheva said...

வடிவேலு பேசியது செம காமெடியாத்தான் இருந்துச்சு..........பழிக்குப் பழி.! .ஹா.. ஹா..ஹா!

Unknown said...

காமெடியனக் கூப்பிட்டு தி.மு.க வ காப்பத்த சொல்றதுதான் காமெடியே...

Anonymous said...

100% Correct!!!
Today by Vadivelu!!
yesterday by Jayalalitha!

If you need an Evidence for this.,
Pl check or see the January DMDK Maanaadu- Vijayakanth Speech!!!

He insulted the @ 2-3 Lakhs crowd by his speech after consuming FULL LIQOUR-
வடிவேல் பேசியதில் 100% True சிறப்புக்குரியது

நிருபர் :என்னங்க பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா

தொண்டர்கள் : முதல் ரவுண்ட் போயிட்டு இருக்கு

நிருபர் : என்னங்க எந்த எந்த தொகுதி முடிவு ஆகிடுச்சா...

தொண்டர்கள் : மூனாவது ரவுண்ட் போயிட்டு இருக்கு

இப்படியே ஒன்பது ரவுண்ட் பத்து ரவுண்ட் போச்சு தொண்டர் வெளிய வந்தார்


நிருபர் :என்னங்க இப்போ எத்தனையாவது ரவுண்ட்


தொண்டர்கள் : என்னாது எத்தனையாவது ரவுண்ட்டா ஏழு எட்டு ஃபுல் ஓட்டிட்டு இருக்கு!!!!


இப்போ வந்து ரவுண்ட் சொல்லிட்டு


இப்படி பேசும் போது ஸ்டாலின் உள் பட அனைவரும் சிரித்தனர்...


தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர் தான் கேப்டன்!!!

எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை!!!
Neenga solrathu 100% Correct!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த வீடியோவ நானும் பார்த்தேன் சார்! வடிவேலு நல்ல காமெடியா பேசினாரு! இடையிடையே ' ஐயா மன்னிச்சுக்கோங்க ' னு விஜய் ஸ்டைல வேற சொல்லிக்கிட்டு இருந்தாரு!!

எஸ்.கே said...

நான் அந்த வீடியோ பார்க்கலை! ஆனா இதப் படிச்சாலே புரியுது!:-)

செல்வா said...

என்ன தகிரியம் இருந்தா எங்க தலைவர கிண்டல் பண்ணிருப்ப ?
இவன் வருத்தமில்லா வாலிபர் சங்க உறுப்பினர் ..

karthikkumar said...

காமெடியனக் கூப்பிட்டு தி.மு.க வ காப்பத்த சொல்றதுதான் காமெடியே../// இது செம..:) பார்ப்போம் may 13....:))

Madhavan Srinivasagopalan said...

வடிவேலு இப்படிப் பேசி கீழ.. போக வேண்டாம்..

எல்லாருமே சுய லாபத்துக்குத்தான் அரசியலுக்கு வாரங்க.. வடிவேலு விதிவிலக்கல்ல..

Madhavan Srinivasagopalan said...

வடிவேலு பேசி டி.எம்.கே க்கு ஒரு ஓட்டாவது விழும்னு நெனைக்கிறது.
--- வடிவேலு காமேடியவிட செமையா இருக்கு..

Gayathri said...

nanum parthen..pracharathula comedy venaama athan pola irukku...yellarum arasiyalukku vandhutanga...naan yarukkum vote pottathe illa podrathaavum illa...eppadio potum

ராஜேஷ், திருச்சி said...

அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..

gnanasuriyan said...

aiyo aiyo vadivelukku ramadass(PMK) dmk pathi pesiyathum Thiruma (VCK) cong pathi pesiyathum theriyathu pola irukku aiyi! aiyo!

சுசி said...

:))))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. இந்த டீலிங் நல்லா இருக்கே..!!!

செம செம.. தலைவர் பின்றாறு போங்க.. :-))))

...நல்ல வேளை, "கொக்கா மக்கா"ன்னு கட்சி பேர் வைக்கலை.. :D :D :D

ELANGOVAN said...

@கே.ஆர்.பி.செந்தில் -
காமெடியனக் கூப்பிட்டு தி.மு.க வ காப்பத்த சொல்றதுதான் காமெடியே...//

comediyanna avalo kevalma senthil! the hardest part in cinema is comedy and songs. that is the best part to as it makes people happy. whereas heroes just fight and use dupes. but people like you believe that is true.
if you need to be a comedian, you need to be brainy! there are so many comedians changed politics in history. charlie chaplin, nsk, mr radha etc.

Anonymous said...

DMK oru nalla katchi but vadivelu pola naathaarigalai kooti vanthu kummiyadikkirathu pidikkala.

DMK na oru kethu irukku athu pola irunga please intha vadivelu maathiri sinna pasangala koottitu vanthu time waste pannatheenga

Anonymous said...

வடிவேலு சொன்னதில் என்னத் தப்பு .. அவரு உண்மையத் தான் சொல்லி இருக்கிறாரு ....ஆனால் காசு வாங்கி விட்டு இப்படி சொல்வது தான் செமக் கடுப்பைக் கிளப்புது.. என்னப் பண்ண சந்தானம் வந்தப் பிறகு வடிவேலுக்கு பிழைப்பு நாறிடுச்சு இப்படி தேர்தல் வந்தாத் தானே நாலுக் காசுப் பார்க்க முடியும்... ஆகே மொத்ததில் சினிமாக் காரன் எவனையும் அரசியிலில் இருந்து ஒரங்கட்டினாத் தான். தமிழகம் விருத்தியாகும்.. இல்லாட்டி மலடாப் போய்விடும்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா..ஹா....ஹா...ஒரே காமடி தான் போங்க!


எனது வலைபூவில் இன்று: மதியோட்டை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

பூங்குழலி said...

சொத்து பிரச்சனையில் சிக்கியவர்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக பேச வேண்டியது தான் .வாங்கிய காசுக்கு நன்றாக பேசியிருக்கிறார் .

Sriakila said...

அரசியல் வாடை ரொம்ப இருக்கு..நான் போறேன்.

தீபிகா said...

இவரு மட்டும் ரொம்ப யோக்கியமா.??? வடிவேலுவும் ஒரு கேவலமானவர் தான்..

இராமசமி சேகர் said...

அன்பரே,
தங்கள் பதிவில் (மற்ற செய்திகளில் இடம் பெற்ற) இரண்டு முக்கிய செய்திகளை (ஏனோ)தவற விட்டு விட்டீர்கள்.அவை,
1.வடிவேலுவின் காமெடிக்குச் சிரித்தவர்கள்- முக அழ்கிரி,நீங்கள்
2.சிரிக்காமல் (முக)இறுக்கமானவர்கள்-ராமதாஸ்,திருமா,க்லைஞர்
இந்த மாதிரி நையாண்டிப்பேச்சுக்கள் கூட்ட்ம் கூட்டுமே தவிர, விழும் ஓட்டுக்களையும் விரட்டி விடும் என்பது சிரிக்காதவர்களின் அனுபவம்.
திமுகவின் நல்ல காலம் வடிவேலுக்களையும் குஷ்புக்களையும் ஓரம் கட்டிவிடுவதில்தான் இருக்கிறது.
செய்வீர்களா?

 
;