Tuesday, August 30

குட்டிக்கு ஒரு வாழ்த்து..





அன்பில் விளைந்த 
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...

எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள் 
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!

முத்தங்கள் ஆயிரம் கொடுக்க 
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு 
அன்பை சொல்லும்...!

மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க 
நேரத்திற்கே நேரம் 
போதவில்லையாம்!!!!

கத்திக் கொண்டே 
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!

முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!

என் இரண்டு வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
(சித்)அப்பா என்று நீ 
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும் 
பிறக்கிறேனடா.

வண்ணத்துப் பூச்சியின் 
சிறகடிப்பினை யாரேனும் 
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!






14 comments:

Chitra said...

Awesome photo and wishes from you!!!! Convey our birthday wishes to the little one!

Jeevi said...

choooooo cute..........

செல்ல குட்டிக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..........
கடவுள் துணை இருக்க, வாழ்க்கையின் வெற்றியின் பாதையில் இந்த சின்ன பாதங்கள் அடி எடுத்து வைத்து பயணத்தை தொடங்க வாழ்த்துக்கள்........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்கள் குட்டிக்கு எனது வாழ்த்துக்களையும் சேர்த்துவிடுங்கள்

dheva said...

செல்ல பரத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......!

கவிதைகளில் வாழ்த்து சொன்ன சித்தப்பனுக்கும் வாழ்த்துக்கள்..!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

யார் சொன்னது அன்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று...



முத்தங்கள் ஆயிரம் கொடுக்க
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு
அன்பை சொல்லும்...


உண்மைதான் அன்பைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை.

முனைவர்.இரா.குணசீலன் said...

யார் சொன்னது அன்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று...



முத்தங்கள் ஆயிரம் கொடுக்க
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு
அன்பை சொல்லும்...


உண்மைதான் அன்பைச் சொல்ல வார்த்தைகள் தேவையில்லை.

அம்பலத்தார் said...

செல்லக்குட்டிக்கு அன்பான பிறந்ததின வாழ்த்துக்கள். ஆயிரம் செல்வங்கள் வந்தாலும் மழலைச்செல்வத்திற்கு ஈடாகுமா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

Prabu Krishna (பலே பிரபு) said...

குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

அப்பாவி தங்கமணி said...

Superb wish from (chith)appa... :) Happy Birthday junior...:)

ஆனந்தி.. said...

Bharath kutti...Many More Happy Returns of the day...:-))))

TERROR-PANDIYAN(VAS) said...

பரத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......!

Jaleela Kamal said...

உங்கள் வீட்டு செல்ல க்குட்டிக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்

மிக அருமையான கவிதை

http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/blog-post.html (ஜிங்கா தயிர் பிரியாணி)

 
;