உன்னை காணவே சிறகடிக்கிறேன்
என்னை காண துடிப்பதை அறியாமல்...
தேடி தேடி களைத்து
கிளையில் அமர்கையில்...
எங்கிருந்தோ வந்து
உன் அலகால் அழகுசேர்த்து
களைப்பாற்றுகிறாய்...!
விழுந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு துளியாய்..
உன் பூமி நெஞ்சை கிழித்து செல்கிறேன்
உன் பூமி நெஞ்சை கிழித்து செல்கிறேன்
ஒவ்வொரு துளியாய்.
காணமல் கரைந்தே போகிறேன்
ஒவ்வொரு துளியாய்
உன் நெஞ்சில் ஈரம் கொள்ள
மீண்டும் பிறக்கிறேன் ஒவ்வொரு துளியாய்...!
காதல் உன் நெஞ்சில் துடிக்க
என் இதயத்தை தருகிறேன்
துடிக்காத உன் இதயத்தை கொடு
துடிக்கவைகிறேன்..!
என் இதயத்தை தருகிறேன்
துடிக்காத உன் இதயத்தை கொடு
துடிக்கவைகிறேன்..!
வெறிச்சோடிய பாதைகள்
சப்தமில்ல அலைகள்..
சப்தமில்ல காற்று..
சப்தமிடும் சப்தமில்ல அலைபேசி
சாலையோர பூக்களின் மழை..
யாவும் தெரிவதில்லை
உன் வருகையை
எதிர்நோக்கும் பொழுது...!!
சரித்திரத்தில் இடம் பெற
சாதனை படைக்க வேண்டுமாம்
அல்லது காதலிக்க வேண்டுமாம்
வா நாம் காதலித்து சாதனை
படைப்போம்...!
| Tweet | |||||








- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact