Monday, June 2

காசு பார்க்கும் கோச்சடையான்..!



ஒரு பொருள் அசைவில் இருந்து மற்றொரு எந்த ஒரு பொருளுக்கும், அல்லது உருவத்திற்கும், மாற்ற பயன்படுத்தப்படும் ஒரு தொழில் நுட்பம் மோசன் கேப்சர்.

மோசன்  கேப்சர் தொழில்நுட்பங்கள் கொண்ட  திரைப்படங்களில் கண் விழி, விரல் நகம், முடி, ரேகைகள், எல்லாம் உண்மை தோற்றம் போல் காட்சியளிக்கும். ஆனால் கொச்சடையான் படத்தில் அவ்வாறு காட்சிகள் இல்லை. ரஜினியின்  கண்களை பார்க்க முடியவில்லை.

ரஜினியின் அறிமுக காட்சியை பார்த்து மிகவும் வெறுப்படைந்தேன். சாதாரண ரசிகன் கூட ரஜினியை அழகாக வரைந்து விடுவார். ஆனால் இந்த சௌந்தரியா ஏன் இப்படி கடித்து குதறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏற்கனவே நாங்கள் படத்தை வரும் மனிதர்களை பார்த்து  போய் உள்ளோம். இதில் 3D காட்சியில்  ஓநாய் கூட்டம் வேறு அது ஓநாயா, அல்ல நரியா, என்பது சௌந்தரியாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

ரஜினியும் தீபிகா படுகோனும் சண்டையிடும் போது. கும்கி பட யானையின் கிளைமேக்ஸ்   சண்டை காட்சிகள் கண்முன் வருவதை தவிர்க்க முடியவில்லை.

கதை, திரைக்கதை.  என்று பார்த்தால் அதில் கே எஸ் ரவிகுமாரின் பங்களிப்பு நன்றாக தெரிகிறது. படத்தில் வசனத்தை தவிர வேற ஒன்றுமில்லை. ஆனால் இனியும் அவர் பின்னால் நாடு இருக்கிறதென்று வசனம்  வைப்பது படு காமெடியாக  உள்ளது.

 50 ரூபாய் தியேட்டர் கட்டணத்தை 120 ரூபாயென  அதிகரித்து வாங்குவது கொடுமையிலும் கொடுமை.  நான் கண்களை மூடி கொண்டு தான் படத்தை பார்த்தேன். அதனால் எனக்கு பாதி காசை திருப்பி கொடுங்கள், என சண்டையிட்டேன்.அவர் என்னை பார்த்து என்னப்பா படம் பார்த்து இப்படி ஆக்கிட்டே பார்த்து வீட்டுக்கு  போ என்றார்.

கோச்சடையான் என்னும் இந்த மோசன் கேப்சர்  சோதனை தோல்வியை சந்தித்துள்ளது. அந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட எலிகள் தான் நாம். அதுவும் பணம் கொடுத்து நான் சோதனைக்கு வருகிறேன், நான் சோதனைக்கு வருகிறேன், என்று அடித்துபிடித்து  சென்றோம்.  

இந்த (................) படத்தை வைத்து கொண்டு காசு பார்க்கும் ரஜினி கூட்டம். என்ன சொல்வது வேண்டாம்  அந்த கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சௌந்தரியா அவர்களே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் எங்க வேண்டுமானால்  வந்து பொய் சத்தியம் செய்கிறோம். ஆனால் இரண்டாம்பாகம் எடுத்துவிடாதீர்கள்.

2 comments:

chandrasekharan said...

Very well said.

pathman said...

your posting is very correct.tamil nadu viewers are fooled by rajni & co for making money out of our ignorance.

 
;