வலைப்பூவிற்கு இது பதிய முயற்சி என்று நினைக்கிறன். வார வாரம் ஒரு பதிவரை பேட்டி எடுத்து போடலாம் என்று இருக்கிறேன். உங்கள் வரவேற்பை பெற்றால் மட்டுமே இது தொடரும்.
அண்ணன் தேவா Warrior என்ற பெயரில் பதிவு எழுதி வருகிறார். இந்த வாரம் தேவா அவர்களிடம் பேட்டியை தொடங்குவோம். தேவா பதிவு போட்டால் அது தமிழ்ஷ் முன்னணிக்கு வராமல் இருக்காது.
1 உங்கள் முதல் பதிவு என்ன? எத்தனை பார்வையாளர்கள் வந்தார்கள்?
தெரியவில்லை செளந்தர் தம்பி. பதிவு எழுதியவுடன்... அதை அச்சில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தேன். எத்தனை பேர் வந்தார்கள் என்று கணக்கிடவில்லை. என்னுடைய முதல் பதிவு மெளனத்தின் மெளனம்! ....சந்தோசத்தில் சிரிப்பது போன்று..தானாய் நிகழ்ந்த ஒன்று...!
2 இந்த பதிவுலகம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு முன்பே தெரியுமா. அல்லது பதிவு எழுதவந்து தெரிந்து கொண்டிர்களா?
இன்று வரை பதிவுலகம் எப்படி இருக்கிறது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை . எழுத வரும் முன்னும் அனுமானிக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்.......இது நல்ல உறவுகளைக் கொடுக்கிறது..மேலும் நமது உள்ளத்தில் உள்ள வேட்கைகளுக்கு வடிகாலாய் இருக்கிறது.
3 பதிவுலக அரசியல் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன?
பதிவுலகம் = பதிவர்களின் உலகம். எதைப்பதிவது? நல்ல விசயங்களை, நம்முடைய அனுபவங்களை அதுவும் சொந்த சோகக் கதையில்லாமல் ஒரு வித பொதுவான படிப்பினை கொடுப்பவைகளை, அனைவரும் ஜனரஞ்சகமாக சிரித்து மகிழும் அனுபவங்களை...அறிவியல் விழிப்புணர்வினை, ஆன்மீக விழிப்புணர்வினை, அரசியல் விழிப்புணர்வினை, கல்வி சார் விழிப்புணர்வினை எந்தப் பக்கமும் சாராமல் ஒரு நடு நிலை உணர்வோடு அவை மரியாதையோடு, நாகரீகமாய்.......
பகிர்ந்து கொள்ள பதிவுகள் இன்றியமையாத ஒன்றாகிப் போனது காலத்தின் கட்டாயம். இது அறிவியல் வளர்ச்சியின் உன்னதமான ஒரு மைல்கள். இங்கே....அரசியல் ? இல்லாமல் இல்லை...இருக்கிறது. எனக்குத் தெரியாது என்று ஒதுங்கிக் கொண்டு பொய் சொல்ல விருப்பமில்லை. பதிவுலகில் அரசியல் பலமாகவே இருக்கிறது.....ஒத்த கருத்து உள்ளவர்கள் ஓரணியில் சேர்வதும், மாற்று கருத்து உள்ளவர் வேறு அணியில் இருப்பதும் தவிர்க்க இயலாத ஒன்று.....
கருத்துக்களை மோதவிட்டு....அதனால் கிடைக்கும் ஒரு தெளிவைக் கைக்கொண்டு ஒப்பற்ற சமுதாயத்தை சமைக்க ஊர் கூடி இங்கு தேர் இழுக்க வேண்டும்...! நான்... நான்....எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் அல்லது எனக்கு தெரிந்தது மட்டுமே இறுதி முடிவு என்ற நம்மை சுற்றியிருக்கும் கதவுகளை மூடிக்கொண்டு எதிராளியின் கருத்துக்களை உள்வாங்க மறுத்து...ஆழ அதில் திளைத்து உண்மையிருக்கும் பட்சத்தில் ஆமாம்...பாஸ்! நீங்கள் சொல்வது சரி என்று ஒத்துக் கொண்டு மேற்கொண்டு செல்லவேண்டும்.....மாறக...
அவரின் கருத்தில் மாற்றுக் கருது இருப்பின் நமது பதில்களை அவரிடம் கேள்வியாக வைத்து பதில் பெற முயற்சிக்கலாம்....! தனிமனித தாக்குதல் ஒரு கேவலமான செயல்..அதை விடுத்து ஆரோக்கியமான கருத்து மோதல்களும் புதிய தெளிவுகளும் நம்மை செம்மைப்படுத்தும்....
சக மனிதர்களை மதிக்கும், கருத்துக்களை மதிக்கும் ஆரோக்கியமான விவாதங்கலை ஆதரிக்கும்.....அனைவரும் பதிவுலக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.....! நானும்தான்.!
4 ஏழாவது அறிவு வலைப்பதிவை இப்போது எழுதுவது இல்லையே ஏன்?
நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்கள், புரிதல் இல்லாமல் மனிதர்களிடம் ஏற்படும் பிரச்சினைகள் இதைப் பேசிக் கொண்டே இருப்பது சரியான ஒரு விசயமாக எனக்குப்படவில்லை. அப்போது பெயரில்லாமல் கழுகு என்ற பெயரில் அரசியல்சார் கட்டுரைகளை, அவ்வப்போது நிகழும் கொடுமைகளை, குறிப்பாக ஈழத்தில் நடந்த மனித நேய மற்ற செயகல்களை எல்லாம் இடுகைகளாக்கி ஏழாவது அறிவு என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டு வந்தேன்....
மருதுபாண்டி என்ற தலைப்பில் ஏற்கெனவே 2006 என்று நினைக்கிறேன்...சும்மா விளையாட்டாக ஒரு வலைப்பூ தொடங்கி செயல்படுத்தாமல் இருந்தேன்...! அரசியல் செய்திகளை எழுத மட்டும் ஏழாவது அறிவினை பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். பிறகு ஒரு வலைப்பூ போதும் அதுவும் நம்முடைய பெயரிலேயே எழுதலாம் என்று தீர்மானித்ததன் விளைவு...மருதுபாண்டி....
மருதுபாண்டிக்கு கூட....போராளி என்ற தமிழ்த் தலைப்பை வைக்கத்தான் எண்ணினேன் ஆனால் நிறைய நண்பர்கள் அந்த தலைப்பினை ஏற்கெனவே வைத்து இருந்தனர். மேலும் போராளி என்றாலே அதற்கு தீவிரவாதி என்ற ஒரு பொதுப்புத்தியும் மனிதர்களிடம் இருப்பதைக் கண்டு....ஆங்கிலத்தில் வாரியர் என்று வைத்து விட்டேன்....வாரியர் என்றாலும் போராளிதான்....போர்க்கலத்தில் நின்று வாளினை வீசிக்கொண்டிருப்பவந்தான் போராளி....வாள் வீச்சு நின்றால்...தலை போய்விடும்.....மருதுபாண்டியர் கள் கூட போராளிகள்தான்...வெள்ளையனை எதிர்த்து....
"வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும்" என்று முழக்கமிட்டு விரத்தோடு மரணத்தை முத்தமிட்ட தமிழ் மறவர்கள்....அதனால் மருதுபாண்டியே தொடர்கிறது. ஓரிடத்திலேயே கருத்துக்களை சொல்லலாமே..என்ற எண்ணமே......ஏழாவது அறிவினை... நிறுத்தக் காரணமானது.
5 வேலை பளு இருக்கும் போது பதிவு எழுத நேரம் கிடைக்கிறதா? எப்படி எழுதுவீர்கள் எங்கு எழுதுவீர்கள்?
ஹா...ஹா....ஹா...! இயந்திர வாழ்க்கைதானப்பா இங்கே...அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நேரமில்லை எனக்கு பதிவெழுத என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு நிறைய நேரம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்.
என்னுடைய பதிவுகள் எல்லாம்...மனதிலெ ஒரு முடிச்சாய் விழும்....காலை அலுவலகம் வரும்போது தனியே வண்டி ஓட்டிக் கொண்டு வரும் தருணங்கள் எனது பொக்கிஷமான நேரம் என்பேன். அப்போதுதான் விழுந்த முடிச்சை விவரித்துப்பார்க்கும் என் மனது. அசை போட்டு அசை போட்டு...அது கரு என்று முடிவு செய்யும் தருணத்தில் வெற்று மனிதனாய் எழுத்துக்கள் இல்லாமல் இருப்பேன். எனது எல்லா பதிவுகளுமே....அலுவலகத்தில் எழுதியதுதான்....உணவு இடைவேளையில் தட்டி முடித்து விடுவேன். ஏதோ ஒன்று எழுதவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் எழுதுவதில்லை. தோணும்போது எல்லாம் எழுதுவேன்....என்ன ஒன்று அடிக்கடி இப்போது தோணுகிறது....
ஒரு நாள் எதுவும் தோணாமலேயே போகும்...அதாவாது தோணும் இடைவெளிகள் அதிகரித்து,. அதிகரித்து....தோணாமலேயே போகும்.....அப்போது நான் ஏன் எதுவும் எழுதவில்லை என்ற கேள்வி நிறைய வரும்....ஆனால்...அதை அப்படியே தொடர்ந்து கொண்டுதான் பயணிப்பேன். என்னைப் பொறுத்த அளவில் நான் ஒரு எழுத்தாளன் அல்ல....அதற்கான அருகதைகள் எனக்கு இல்லை...
இது ஒரு காலம்...இது ஒரு ட்ரென்ட் அல்லது இது ஒரு தேவை தற்போது......மற்றபடி...வீட்டி ல் எதுவும் எழுதியது இல்லை....வீட்டில் நான் படிக்க ஒரு அற்புதமான ஒரு புத்தகத்தை இறைவன் கொடுத்திருக்கிறான்....அது என் மகள்!
6 கணினிக்கு அடிமையாவது பற்றி உங்கள் கருத்து என்ன?
என்னுடைய கருத்தின் படி இது மாற்றப்பட வேண்டிய விசயம். இது பற்றி அதிகம் கூற இயலாது...ஏனெனில் நான் முதலில் மாறவேண்டும்.....
"16வது மாடியில் இருந்து ஒரு கணிணி கீழே விழுந்தது என்று எல்லோரும் நம்ம அபர்மெண்டில் பேசிக் கொண்டு இருப்பார்கள்....அப்போது நீங்கள் ஒன்றும் குழம்பாதீர்கள் யார் போட்டிருப்பா என்று.... அது உங்கள் மடிக்கணிணியாய் இருக்கும்...." என்று என் வீட்டு தங்கமணி ஒரு மிரட்டல் வேறு வைத்துள்ளார்...ஹா..ஹா..ஹா...
அதனால் நான் மாறிக்கொள்கிறேன்...முதலில் தம்பி....! நேரம் வரையறுத்து முறையாக பயன்படுத்த ஒரு திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறேன்....ஹா..ஹா..ஹா..!
7 நீங்கள் எந்த பதிவு எழுதினாலும் அதில் கடவுள் வருகிறார் ஏன்?
கடவுள் = இதற்கான அர்த்தம் எல்லோர் மூளையிலும் வேறு விதமாக நூற்றாண்டுகளாய் புகுத்தப்பட்டு அதற்கான அர்த்தத்தை ஏற்கெனவே சொல்லப்பட்ட்ட அல்லது சம்பந்தப்படுத்தப்பட்ட எல்லா விசயங்களோடு தொடர் படுத்தி வேறு விதமாய் புரிந்து கொள்ளப்பட்டிறுக்கிறது.
எனக்கும் வேறு வார்த்தைகள் இல்லை.....கடவுள் என்று நான் ஒவ்வொரு முறை சொல் பிரயோகம் செய்யும் போதும்....என் எண்ணத்தில் இருந்து நான் நினைத்து எழுதுவது வேறு....ஆனால் அந்த சொல்லை படிக்கும் அன்பர்களுக்கு அவர்களின் அனுபவங்களில் சித்தரித்து வைத்திருக்கும் காட்சியும் எண்ணமும் வேறு...அதனால் ஆராய்ந்து அறிவோடு தெளிவை அணுகும் போது கடவுள் என்று சமுதாயம் கொடுத்கிருக்கும் கற்பிதம் முரண்பட்டுப் போகிறது.
அறிவியல்...எப்போதுமே...எப்படி இயங்குகிறது என்று அதன் டெக்னிகாலிட்டியை மட்டுமே விளக்கி வந்திருக்கிறது....
உதாரணமாக...பூமி சூரியனைச் சுற்றி வருகிறது....இன்ன பிறகோள்களும் சுற்றி வருகின்றன....காரணம் சூரியனிடம் இருக்கும் ஈர்ப்பு விசை என்று அறிவியல் விளக்குகிறது....ஆனால் ஏன் ஈர்க்கிறது...? என்ற கேள்விக்கு அறிவியல் பதில் சொல்லுமா?
மனித உடலின் கூறுகளையும், அதன் விஞ்ஞானத்தையும் அறிவியல் விளக்கும்? ஆனால் ஏன் மனிதன் பிறக்க வேண்டும்... இந்த கேள்விக்கு விஞ்ஞானம் பதில் கொடுக்குமா...? ஆனால் கேள்வி எழும்பியது நிஜம் தானே....?
குடும்பத்தோடு ஒருவர்...காரில் பிரயாணம் செய்கிறார்....மகிழ்ச்சியாய் தொடங்கிய அந்த பயணம் விபத்தில் போய் முடிகிறது. பயணம் செய்த அனைவரும் அந்த இடத்திலேயே இறக்கின்றனர்...சரி.....
அவர்களின் தனிப்பட்ட கனவுகள், கற்பனைகள், அவர்களை இயக்கிய ஒன்று ...எல்லாவற்றுக்கும் என்னவாகி இருக்கும் என்று கேள்வி என்னைத் தொடருகிறது. ஒன்றும் இல்லை...அவ்வளவுதான்..என்று சொல்லி...அப்படியே முடித்துக் கொள்வதை என் மனம் ஏற்கவில்லை...அப்படி ஏற்றால்...அது பொய் என்று என் மனமே சொல்கிறது. அதனால் அந்தக் கேள்வியை பல முறை கேட்டுக் கொண்டு தேடலாய் நகர்கிறேன்....
கடவுள் என்ற வார்த்தையை தயவு செய்து பொதுப்புத்தி ஏற்படுத்தி இருக்கும் ஒரு அர்த்ததோடு சம்பந்தப்படுத்தாமால்... நம்மை சுற்றி இருப்பது எல்லாம் ஏன் இருக்கிறது? அல்லது ஏன் இருக்க வேண்டும்...? எதை நோக்கி நகர்கிறோம்...ஒரு பிளைட்டில் பயணம் செய்வதற்கு முன்....எந்த பிளைட் எத்தனை மணிக்குப் போய்சேரும்... நன் ஸ்டாப் பிளைட்டா...சர்வீஸ் எப்படி இருக்கும்....? உணவு என்ன கொடுப்பார்கள்? எப்படி இந்த விமானம் பறக்கிறது? விமானி எப்படி ஓட்டுவார்? டிக்கெட் விலை எவ்வளவு...என்பது போன்று ஆயிரம் கேள்விகள்...இன்னும் அற்ப காரியங்களுக்கு எல்லாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கும்... நாம்...
வாழ்க்கையை பற்றி கேள்விகள் கேட்கக்கூடாது..கேள்விகள் கேட்கும் பட்சத்தில்...படைப்பினத்தின் பயணம் பற்றி சிந்திக்கும் தருணங்களில்...எழுதும் தருணங்களில், வாசிக்கும் தருணங்களில்....குறைந்த பட்சம் மறுப்பதற்காக வேண்டினும்....உங்களுகுள் கடவுள் பிரசன்னமாவது...தவிர்க்கமுடியாத நிகழ்வு....
கடவுள் = வாழ்க்கை = மனிதர்கள் + இன்ன பிற அசையும் அசையா உயிர்கள் = இயற்கை!
இப்பொது நீயே சொல் தம்பி...எப்படி நான் கடவுளைத் தவிர்ப்பது?
8 நீங்கள் உங்கள் பதிவை சிறுகதை போட்டிக்குஅனுப்பலாமே உதரணமாக அந்த விபத்து பதிவு?
எனக்குத் தெரியலைப்பா...! விபத்தில் அடிப்பட்டு காயம்பட்ட தம்பிகளைப் பற்றி.....விஜய் டி.வியில் கதையல்ல நிஜத்தில் பார்த்தேன். யு.ஏ,இ யில் தலைக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றால் கடுமையான தண்டனை உண்டு.
மறுக்கும், அல்லது மிக எளிதாக எடுத்துக் கொள்ளும் மனித மனதுக்கு புறத்தில் இருந்து சட்டம் பாய வேண்டும் அதுவும் கடுமையாக...அப்போது பின்பற்றுதல் ஒரு பயத்திலாவது நடைபெறும். அதுவும் போக தலைக்கவசம் அணியாவிட்டால் என்னவெல்லாம் கொடுமை நிகழும் என்று எண்ணிப்பார்த்தேன்... அந்த கதையில் விபத்தில் அடிப்பட்டு இருக்கும் மனிதனாக என்னையும்....அதற்கு பிறகு நிகழும் நிகழ்வினை சந்திப்பவராக எனது மனைவி மற்றும் குழந்தையையும் உருவகப்படுத்தி பார்த்த பின் எனது உக்கிரம் அதிகமானது....
ஆமாம் தம்பி...அடுத்தவரின் பிர்ச்சனையோடு நம்மை தொடர்புபடுத்திப் பார்க்கும் போது..வீரியம் அதிகமாகிறது..! மிகைப்பட நேரங்களில் தனக்கு நிகழாதவரை அபத்தஙக்ள் பிடிபடுவதில்லை....அல்லது அடுத்தவர் பிரச்சினையோடு நம்மை சம்பந்தப்படுத்திப்பார்ப்பது இல்லை. இதனால்தான் குழப்பங்கள்...!
சிறுகதைப் போட்டி....ம்ம்ம்ம்ம்..தெரியவி ல்லை தம்பி... நீங்கள் சொல்லுங்கல் எங்காவது அனுப்பலாமென்றால் அனுப்பலாம்..! என்னிடம் திட்டமில்லை....! விழிப்புணர்வு அனைவருக்கும் கிட்டினால் அது கோடி சிறுகதை போட்டிகளில் வென்றதற்கு சமம் தம்பி!
9 பதிவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதிவர்கள் - ம்ம்ம்ம்ம்ம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதாமான சிந்தனையுடையவர்கள் தம்பி! கருத்து சொல்ல ஏதும் இல்லை!
10 நீங்கள் பதிவு எழுதுவதை உங்கள் வீட்டில் என்ன சொல்வார்கள்?
எங்க வீட்டில்...அம்மா, அப்பா, தம்பிகள், எல்லாம் இந்தியாவிலும் சகோதரி சிங்கப்பூரிலிம் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதிவு எழுதுவதே தெரியாது. என் மனைவி நான் எழுதுவதற்கு எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. அவ்வப்போது சில பதிவுகளை வாசித்துக் காட்டியைருக்கிறேன்...! பெரிதாக ஒன்றும் சொல்வது இல்லை....அல்லது அவர்களின் ஆர்வம் குறைவு என்றுதான் சொல்வேன். நானும் என்னுடைய கருத்துக்களை திணிக்காதவனாயிருக்கிறேன்...ஹா. ..ஹா...ஹா!
Tweet | |||||
47 comments:
நல்ல முயற்சி நண்பரே..
எங்களின் ஆதரவு எப்போதும் கிடைக்கும் இம்முயற்சி தொடர வாழ்த்துக்கள்...
நல்லதொரு முயற்சி வரவேற்கின்றேன்.பதிவர்களின் அனுபவங்களை பகிர்வதற்கான நல்லதொரு களம்.
http://tamilitpark.blogspot.com
தலைவா! கலக்குறீங்க போங்க. இது உங்களுக்கு முதல் மேடை. இன்னும் பல மேடைகளில் பேசி பேட்டி கொடுக்க வேண்டி இருக்கும். உங்கள் கூட எப்போதும் இந்த அன்புத்தம்பிகள் இருப்பார்கள்..வாழ்த்துக்கள்.
சண்டையில் முடியாமல் சமாதானமாக போனால் சரிதான்!
புதிய முயற்சி தொடர வாழ்த்துக்கள்..
நல்ல முயற்சி, தொடருங்கள்
அண்ணே நர்சிம் பேட்டி எப்பண்ணே?
பேட்டி அருமை. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
சௌந்தர் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
தேவா அண்ணே நீங்க எங்கயோ போய்ட்டிருக்கீங்க.
இதுல வஞ்சப்புகழ்ச்சி அணியில்லண்ணே.
காலேஜ்ல படிக்கிறப்ப...முன்னாடி பெஞ்ச்ல போய் அடிச்சு பிடிச்சு உக்காருவோம்...ஏன்ன....முன்னாடி பெஞ்சுல உக்காந்த...படிச்சுட்டு வந்திருப்பான்னு நம்பிபிபிபி........விரிவுரையாளர் கேள்விகளை பின்னாடி பெஞ்சுல இருக்குற ஆளுககிட்ட கேட்டு நம்மள விட்டுடுவாரு...அது மாதிரியும் எடுத்துக்கலாம்...
இல்லேண்ணா...
ஒரு விசயம் தொடங்குற முன்னால ஒரு பலி கொடுத்துட்டு தொடங்கு வாங்க...அது மாதிரியும் எடுத்துக்கலாம்....
ஹா...ஹா...ஹா...
நிறைய பதிவர்களுடன் கலந்துரையாடி ஒரு அற்புதமான நிறைவாக பலவாரங்கள் நடக்கட்டும் தம்பி இந்த திருவிழா...>!
வாழ்த்துக்கள்!
அண்ணன் அஞ்சா நெஞ்சன் தேவா வாழ்க!! வாழ்க!!.
வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.
தரமான முதல் பேட்டி.
சௌந்தர் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
தரமான முதல் பேட்டி.
நல்ல பேட்டி
வாழ்த்துகள் தேவா
நன்றி சௌந்தர்
புதிய அழகான முயற்சிக்கு பாராட்டு சௌந்தர், நீங்க இந்த அளவுக்கு கேள்விகளை நுணுக்கமாக,தேவையானவற்றை கேட்டு இருக்கிறீர்கள்.ஆச்சர்யமாக இருக்கு, எனது பாராட்டுகள் ..
அடுத்தது ,முதல் பதிவிலேயே தேவா அண்ணாவ பேட்டி எடுத்து அசத்திடீங்க...அதுக்கப்புறம் தேவா அண்ணாவுக்கு, அண்ணா எதை கொடுத்தாலும் அசத்துற திறமை ஒரு சிலருக்கு தான் இருக்கும்,அந்த ஒரு சிலரில் நீங்க...என் விரல் பிடித்து, இது தான் வலைப்பூ, இங்கே திறமை இருக்குறவன் நிற்கலாம், உனக்கும் திறமை இருக்கு, நான் உன் அருகே நின்று உற்சாகம் அளிப்பேன்,இந்த கத்துக்குட்டி மேல் நம்பிக்கை வைச்ச குரு நீங்க,
நீங்க ஜாக்கி ஜான், நான் jedhan
arumai... kalakunga
நல்ல கேள்விகள். மிக நல்ல பதில்கள்.
முதல் பேட்டியே சுவாரஸ்யமாக இருந்தது. கலக்குறீங்கள் நண்பர்களே! தேவாவின் பதில்களுள் பதிவுலக அரசியல் பற்றிய பதில் நழுவலாக இருக்கிறது.. ச்ச்...சும்மா சொன்னேன் பாஸ்!
தொடரட்டும் உங்கள் பணி!
சௌந்தர் தேவாவைப் பின்னிப் பிடலெடுத்து விட்டார். பதில்களும் அருமை, கேள்விகளும் அருமை!
//அண்ணன் அஞ்சா நெஞ்சன் தேவா வாழ்க!! வாழ்க!!. //
ஆ..ரிப்பிட்டடே... அ ஆ ரிப்பீட்டே...
மாம்சு... ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிவையே பதிலா எழுதுன உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... ஏய் டண்டணக்கா...
நல்ல பேட்டி
வாழ்த்துகள்!
நல்ல முயற்ச்சி..
நல்ல முயற்சி
அடுத்தது கூகில பேட்டி எடுங்க எதுக்குயா 6 மாதத்திற்கு முன் ஆட்ஸ் தரமடிங்கிரிங்கனு!!!!!!!!
ஹாஹாஹா
நல்ல முயற்சி சகோதரரே...
சக பதிவரை மதிக்கத் தெரிந்தவர் தாங்கள்.
வாழ்த்துக்கள்...
உங்களின் கேள்விகளும், தேவா அவர்களின் பதில்களும் அருமை... நல்ல முயற்சி தொடருங்கள்...
தம்பி தேவாவுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுக்கள்..
மிக நல்ல முயற்சி தொடருங்கள்
நல்ல ரசனை வாழ்த்துக்கள்
//உதாரணமாக...பூமி சூரியனைச் சுற்றி வருகிறது....இன்ன பிறகோள்களும் சுற்றி வருகின்றன....காரணம் சூரியனிடம் இருக்கும் ஈர்ப்பு விசை என்று அறிவியல் விளக்குகிறது....ஆனால் ஏன் ஈர்க்கிறது...? என்ற கேள்விக்கு அறிவியல் பதில் சொல்லுமா?//
ஆரம்பப் புள்ளியை தொட்டிருக்கிரீகள். வாழ்த்துக்கள்.
////கருத்துக்களை மோதவிட்டு....அதனால் கிடைக்கும் ஒரு தெளிவைக் கைக்கொண்டு ஒப்பற்ற சமுதாயத்தை சமைக்க ஊர் கூடி இங்கு தேர் இழுக்க வேண்டும்...!///
உண்மைதான் . நல்ல முயற்சி நண்பரே தொடரட்டும் உங்களின் பயணம் . வாழ்த்துக்கள்
/////dheva சொன்னது…
காலேஜ்ல படிக்கிறப்ப...முன்னாடி பெஞ்ச்ல போய் அடிச்சு பிடிச்சு உக்காருவோம்...ஏன்ன....முன்னாடி பெஞ்சுல உக்காந்த...படிச்சுட்டு வந்திருப்பான்னு நம்பிபிபிபி........விரிவுரையாளர் கேள்விகளை பின்னாடி பெஞ்சுல இருக்குற ஆளுககிட்ட கேட்டு நம்மள விட்டுடுவாரு...அது மாதிரியும் எடுத்துக்கலாம்...
இல்லேண்ணா...
ஒரு விசயம் தொடங்குற முன்னால ஒரு பலி கொடுத்துட்டு தொடங்கு வாங்க...அது மாதிரியும் எடுத்துக்கலாம்....
ஹா...ஹா...ஹா...
நிறைய பதிவர்களுடன் கலந்துரையாடி ஒரு அற்புதமான நிறைவாக பலவாரங்கள் நடக்கட்டும் தம்பி இந்த திருவிழா...>!
வாழ்த்துக்கள்!
/////////////////////
என்ன தேவா ஒரு விசயம் தொடங்குற முன்னால ஒரு பலி கொடுத்துட்டு தொடங்கு வாங்க...என்று எழுதி பயமுறுத்துறிங்க தொடக்கத்திலே !?
ஒவ்வொரு பதிலும் தெளிவாக - விளக்கமாக - நேரிடையாக தந்து இருக்கும் தேவாவுக்கு பாராட்டுக்கள்!
இந்த பேட்டியை கொண்டு வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!
பாராட்டுகள் சௌந்தர் ...தேவாவின் பதிவுலகம் பற்றிய பார்வை அருமை என்னை மிகவும் கவர்ந்தது...வாழ்த்துகள்...அருமை
சௌந்தர் நல்ல முயற்சி.பதிவர்களின்
திறமை இன்னும் வெளிப்பட இன்னொரு கதவுபோல.தேவாவின் பாணியில் பதில்கள் இயல்பாய் ஆனல் திடமான பதிகள்.
இருவருக்குமே பாராட்டுக்கள்.
Good one... innovative start
Nice
புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இப்படியெல்லாம் எப்படி உட்கார்ந்து யோசிக்கிறீர்களோ?
சகாதேவன்
நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள் இன்னும் வீரநடைபோட.
//இன்று வரை பதிவுலகம் எப்படி இருக்கிறது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை . எழுத வரும் முன்னும் அனுமானிக்கவில்லை. ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன்.......இது நல்ல உறவுகளைக் கொடுக்கிறது..மேலும் நமது உள்ளத்தில் உள்ள வேட்கைகளுக்கு வடிகாலாய் இருக்கிறது..//
எனக்கு பிடித்த பதில். பாராட்டுக்கள் தேவா அவர்களுக்கு..
பாராட்டுக்கள் நண்பர்களே. உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு எப்போதும்.
நிறைய பதிவர்களை அடையாளம் காட்டுங்கள் சௌந்தர்.
நன்றாக உள்ளது நமபரே.
nice.
good wishes.
பேட்டி அருமை. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
கண்டிப்பா வரவேற்க வேண்டிய முயற்சிங்க ..
மேலும் நிறைய பதிவர்களை பேட்டி எடுக்க வாழ்த்துகிறேன்..!!
கேள்விகளும் அருமை , பதில்களும் அருமை ..!!
நல்ல முயற்சி கண்டிப்பாய் என் ஆதரவும் உண்டு. எல்லோரிடமும் ஒரே கேள்வியை கேட்காமால் அவரவர் பற்றி அறிந்து கொண்டு கேட்பது நல்லம் அதே போல அவர்களை பற்றி இரண்டு பந்தியிலாவது உங்கள் அறிமுகத்தை வழங்கினால் நன்றாக இருக்கும். மற்றும்படி கலக்குங்க பாஸ்.
///பதிவுலகம் = பதிவர்களின் உலகம். எதைப்பதிவது? நல்ல விசயங்களை, நம்முடைய அனுபவங்களை அதுவும் சொந்த சோகக் கதையில்லாமல் ஒரு வித பொதுவான படிப்பினை கொடுப்பவைகளை, அனைவரும் ஜனரஞ்சகமாக சிரித்து மகிழும் அனுபவங்களை...அறிவியல் விழிப்புணர்வினை, ஆன்மீக விழிப்புணர்வினை, அரசியல் விழிப்புணர்வினை, கல்வி சார் விழிப்புணர்வினை எந்தப் பக்கமும் சாராமல் ஒரு நடு நிலை உணர்வோடு அவை மரியாதையோடு, நாகரீகமாய்......."////
very nice.
nalla muyarchi.thodarungal. devavin petti nalla pakkuvappaddavarin karuthu pol irunthathu. rasikanukku vazhthugal.-meerapriyan
Post a Comment