Sunday, July 11

வாரம் ஓரு பதிவர். கே.ஆர்.பி. செந்தில்







                                                                         
கே.ஆர்.பி. செந்தில் இவர் புதிய பதிவர்களுக்கு, பின்னூடம் வழியாக ஊக்கம் தருவார். 

நாங்கள் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அது ஓரு நல்ல அனுபவம். மிகவும் எளிமையானவர். தன் எழுத்து மூலம் விழிப்புணர்வு செய்து கொண்டு இருக்கிறார் , சில நேரம் புரட்சி பற்றி பேசுவார். உங்களுக்கு தொழில் ஆலோசனை வேண்டும் என்றால், நல்ல ஆலோசனை தருவார்.


1 உங்களை பற்றி சொல்லுங்கள்?
நான் ஒரு பக்கா கிராமத்தான், கடவுள் பற்றியும் வியாபாரம் பற்றியும் தீவிரமாக ஆராய்பவன், இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன், என் எல்லாக் குறைகளுடனும் என்னை பொறுத்துக் கொள்ளும் மனைவி.. ஒரு பெருவணிகன் ஆகும் முயற்சியில் உள்ளேன்..





2 எங்கே செல்லும் இந்த பாதை  இந்த பெயர் வைக்க என்ன காரணம்?
நிறைய திருப்பங்களைக் கொண்ட வாழ்க்கை என்னுடையது.. இன்றுவரை அது தொடர்கிறது.. சின்ன வயதில் தனிமை, பின் அராஜகம், ஆன்மிகம், தொழில் இப்போது மீண்டும் தனிமை என மாறிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை.. எனவே அறிவுமதியின் இந்தப் பாடல் வரி எனக்கு பொருத்தமானதாய் தோன்றியது.. 




3 பதிவுலகத்திற்கு வந்து பெற்றது என்ன? இழந்தது என்ன?
பெற்றது :நிறைய நல்ல நண்பர்கள் ,இழந்தது : நிறைய மணித்துளிகள்




4 பதிவு எழுதி விழிப்புணர்வு செய்ய முடியுமா?
நிச்சயம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்...


5 ஏன் வலைபதிவு குழுவில் இருந்து வெளியே வந்திர்கள் என்ன பிரச்சனை?
உபயோகமான தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள் என நினைத்தேன்.. பொழுது போக்கத்தான் எனத் தெரிந்தவுடன் வெளியில் வந்துவிட்டேன்..



6 மூட நம்பிக்கை எதிர்க்கிறேங்க சரி...கடவுள் இல்லேன்னு எப்படி அடிச்சு சொல்றீங்க?
நீங்கள் கடவுள் இருப்பதை நிரூபித்தால், ஏற்றுக்கொள்ள தயாராய் இருப்பவன் நான்.. 






7 பதிவுலகில் என்ன சாதிக்க நினைக்கிறீங்க?
வாழ்க்கை பற்றிய என் பார்வைகளை நான் பார்த்த விசயங்களில் இருந்து பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.. இதில் சாதிக்க ஏதும் இல்லை...







8 பதிவர்களுக்குள்ள...ஏன் ஈகோ வளருது?
அது வெறும் கருத்து மோதல்களைத் தாண்டி தனிமனித தாக்குதல் வரை நீள்வதால் ....










 9 பதிவர்களுக்கு என்ன சொல்லணும்னு ஆசைப்படுறீங்க?
நீங்க ஒருத்தரோட பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்தால் அதைப்பற்றி எழுதுங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஏன் என்று எழுதுங்கள்.. அதை விடுத்து தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயல்..




உங்களுக்கு அவரின் எல்லாப் பதிவுகளும் பிடிக்கவில்லை என்றால் அவரின் பதிவை படிக்காதீர்கள்.. சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் சில பதிவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை  நிராகரிக்கும்படி கேட்டிருந்தது..  எனக்கு சிரிப்புதான் வந்தது..


10 சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது?
எனக்கு மிகவும் பிடித்த ஊர்.. இந்தியாவில் சென்னையிலும், மும்பையிலும் ஒருவனால் வாழ முடியாவிட்டால் அவனால் உலகின் எந்தப் பாகத்திலும் வாழ முடியாது என்று என் சீன முதலாளி சொல்வார்.. நான் வாழ்ந்து பார்க்கிற உண்மை...









11பதிவில் அடிக்கடி கடவுளை கொண்டு வருபவர்களைப் பற்றி உங்கள் கருத்து?
விமர்சிக்கப்பட வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்..



12 பதிவுலகில் என்ன மாற்றம் வரவேண்டும்?
முடிந்து போன விசயங்களைக் கிண்டுவதும், சுய சொரிதல்கள் இல்லாமலும் இருந்தால் நன்றாக இருக்கும் ..  




52 comments:

எல் கே said...

arumayana petti. todartum ungal pani soundar. vaalthukkal

அன்புடன் மலிக்கா said...

3 பதிவுலகத்திற்கு வந்து பெற்றது என்ன? இழந்தது என்ன?


பெற்றது :நிறைய நல்ல நண்பர்கள் ,இழந்தது : நிறைய மணித்துளிகள்.//

எனக்கு பிடித்த பதில்.

தொடரட்டும் உங்கள் தொடரும் செளந்தர்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

3 பதிவுலகத்திற்கு வந்து பெற்றது என்ன? இழந்தது என்ன?

பெற்றது :நிறைய நல்ல நண்பர்கள் ,இழந்தது : நிறைய மணித்துளிகள்


////

உண்மை....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே...
மேலும் தொடர வாழ்த்துக்கள்...

dheva said...

மிகத்தெளிவான பதில்கள்....அற்புதமான கேள்விகள்....!

மிக்க நன்றி செளந்தர் தம்பி...! வாழ்த்துக்கள் செந்தில்!

Jey said...

//இந்தியாவில் சென்னையிலும், மும்பையிலும் ஒருவனால் வாழ முடியாவிட்டால் அவனால் உலகின் எந்தப் பாகத்திலும் வாழ முடியாது//

100% உண்மை :)

Unknown said...

நல்முயற்சி. தொடருங்கள் நண்பரே...

ராம்ஜி_யாஹூ said...

nice, thanks for sharing

ப்ரியமுடன் வசந்த் said...

சுவாரஸ்யமான பதில்கள் செந்தில் மாம்ஸ்...

பகிர்தலுக்கு நன்றி சௌந்தர்

கபிலன் said...

அருமையான கேள்விகள்....
ஆழ்ந்த பொருள் பொதிந்த பதில்கள்...
வாழ்த்துக்கள் சௌந்தர்....செந்தில் சார்...

அன்புடன் கபிலன்

Karthick Chidambaram said...

அருமையான நேர் காணல். தோழர் சௌந்தரின் முயற்சிக்கு நன்றிகள்.
செந்தில் அவர்களின் பதிவை தொடர்ந்து படிப்பவன் என்கிற முறையில் அவரது பதில்கள் எதிர்பார்த்த மாதிரியே நேர்மையான நேர்த்தியான பதில்கள்.

ஜெய்லானி said...

நல்ல பதிலகள்..!!

ஜீவன்பென்னி said...

தொடரட்டும் ரொம்ப நல்லாயிருக்கு.

அருண் பிரசாத் said...

அருமை தொடருங்கள் செளந்தர்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை......

பாராட்டுக்கள்

School of Energy Sciences, MKU said...

அருமை . . . வாழ்த்துக்கள்!!!

டிலீப் said...

அருமையான நேர் காணல்
அருமையான பதில்கள்
வாழ்த்துக்கள் செளந்தர்.....

ஜோதிஜி said...

செந்தில் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.

http://rkguru.blogspot.com/ said...

நான் நேரில் சந்தித்திருக்கிறேன் நல்ல மனிதர்....மற்றவருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல முயற்சி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள்

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் செந்தில். வாழ்க்கையில் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள் போலும், அற்புதமான, தத்துவம் நிரம்பிய பதில்கள். உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் சௌந்தர்.

sri said...

Good human being...I like his photo which is "Che" he also wonderful human.

Unknown said...

அன்புத்தம்பி சௌந்தருக்கும், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செந்தில் அண்ணனை பற்றி எழுதியதற்கு நன்றி...

மரா said...

நல்ல முயற்சி.தொடருங்க சௌந்தர்.சிங்கப்பூர் செந்திலுக்கும் வாழ்த்துக்கள்.

Admin said...

நல்ல கேள்விகளும் காத்திரமான பதில்களும்.

ஹேமா said...

செந்திலின் பதிவுகள் பிடிக்கும்.முதன் முதலாக அவர் தளம் வந்தபோது "சே"ன் படமே என்னனை செந்திலின் பக்கம் இழுத்தது.இன்னும் உண்மைகளை உடையுங்கள் செந்தில்.நன்றி சௌந்தர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு.. செந்திலை பற்றி அறிந்துகொள்ள இந்த பேட்டி ரொம்ப உதவியது. கேள்வியும் பதிலும் மிக அருமை. வாழ்த்துகள் சௌந்தர்.

ஜில்தண்ணி said...

செந்தில் அண்ணனின் தனித்தன்மையை காட்டுகிறது

நன்றி நண்பா :)

SShathiesh-சதீஷ். said...

//நீங்க ஒருத்தரோட பதிவை படித்தால் அது உங்களுக்கு பிடித்தால் அதைப்பற்றி எழுதுங்கள்.. பிடிக்கவில்லை என்றால் ஏன் என்று எழுதுங்கள்.. அதை விடுத்து தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயல்..
//

உண்மை தலிவா...கலக்குங்க

ஸாதிகா said...

தொடருங்கள்!

sweet said...

ivaru periya Obama? mayeru oru mannum theriyaadhu

ivanai poyee meet panni irukeengale boss

ivan kadavulai kumbitta vittal enna? setthaal enna?

indha maathiri arai vekkaadugalai appadiye vittu vidanum boss

ivanai patthi eludhi time waste pannatheenga

perai paarunga... VGP golden beach maathiri KRP senthil

naatheri paya boss avan

vidunga

madhumidha

madhumidha1@yahoo.com

sweet said...

delete pannatheenga boss ennoda comment-ai

thani manidha thaakudhal illai

visham konda mirugatthai kolla muyarchi avalvu thaan, illa vittal nammai kontru vidum :)

செல்வா said...

///நீங்கள் கடவுள் இருப்பதை நிரூபித்தால், ஏற்றுக்கொள்ள தயாராய் இருப்பவன் நான்..///
அருமையான பதில் ... சிந்திக்க வேண்டியது ...

கேள்விகளும் , அதற்கேற்ற பதில்களும் ..
சௌந்தர் சிறந்த பதிவர் என்பதை நிரூபித்திருக்கிறார் .. வாழ்த்துக்கள் .

செல்வா said...

//ivaru periya Obama? mayeru oru mannum தெரியாது//
ஏன் சின்ன ஒபாமா அப்படின்னு நினைச்சுக்கங்களேன் ..
//ivanai poyee meet panni irukeengale பாஸ்//
போனாதானே மீட் பண்ண முடியும் .. லூசாப்பா நீ ...?
//ivan kadavulai kumbitta vittal enna? setthaal enna? //
இதவே ஒழுக்கமா எழுத தெரியல ...?
//indha maathiri arai vekkaadugalai appadiye vittu vidanum பாஸ்//
நீங்கதான் வேக வச்சீங்களோ ..
//ivanai patthi eludhi time waste பண்ணாதீங்க//
அவர பத்தி எழுதறக்கு அவரு என்னை தீப்பெட்டியா ..?
//perai paarunga... VGP golden beach maathiri KRP செந்தில்//
உங்கபேருக்கு அவரு பெரு பரவாயில்லை ..
//naatheri paya boss அவன்//
நீங்க ரொம்ப நல்லவரோ ..?
//vidunga//
பின்ன அவர நாங்க பிடிச்சா வச்சிருக்கோம் ..
//delete pannatheenga boss ennoda comment-ஐ//
இதுக்கெல்லாம் பயந்துடுவோம என்னை ..?
//thani manidha thaakudhal illai visham konda mirugatthai kolla muyarchi avalvu thaan, illa vittal nammai kontru vidum :)//
விஷம் konda மிருகம்னு எதாவது டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா ..? ஒருவேள நீங்க zoo நினைச்சு இங்க வந்துட்டீங்க போல ..

dheva said...

செளந்தர்... .....தம்பி.........


யார் இந்த ஸ்வீட்...................? யார் ? யார்? யார்?


ஏன் இப்படி அ நாகரீகமாக செந்திலைப்பற்றி வசை பாடி ஒரு கருத்தினை சொல்லவேண்டும் ....தனிப்பட்ட ஒரு மனிதனின் மீது ஏன் இந்த வக்ரம்... ! கடவுள் இருக்கிறது என்பது இல்லை என்று மறுப்பதும் தனி மனித சுதந்திரம்....இதைப்பற்றியும் செந்திலைப்பற்றியும் விமர்ச்சிக்கும் அதிகாரம் கொடுத்தது யார்?

முகமூடி அணிந்து போர் பரணி பாடும் கோழைகளா நாம்....! உம்மின் அடையாளம் சொல்லி கருத்துக்களை விவாதமாய் தொடும்...அதை விடுத்து எமது கருத்துரிமை என்ற போர்வையிட்டு உங்களின் அத்து மீறலான ஏதேச்சதிகாரமான... வார்த்தகளைப் கண்டு வெறுமனே கைகட்டி வாய்பொத்தி செல்லும் ஜட மனிதர் என்று எம்மை நினைத்தீரோ....

உமது ஆன்மீகமும் கடவுளும் இதைத்தான் கற்பித்தது என்றால்....இக்கணமே பறையறிவித்து செவிகளில் உரக்க கேட்கும் படி இந்த அகிலம் நடுங்கும் படி எச்சரித்து சொல்கிறேன்.... நீர் சொல்லும் நீர் வணங்கும்


கடவுள் இல்லை....! இல்லை .....இல்லவே இல்லை....

புரட்சி சிந்தனையுடன் தேடலுடன் வாழ்க்கைப் போர்க்களத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் எமது தோழர் கே.ஆர்.பி. செந்தில்....

நாகரீகம் கற்று.... நாகரீகம் கற்றுக் கொடுப்பவன் தமிழன்......... அதை அழிக்க நினைக்காதீர்....!

செளந்தர்..... கமெண்ட் மாடரேசன் போடு...இது போன்ற தனிமனித தாக்குதல்களை நிறுத்தவும்..எழுத்தின் மூலம் எமக்கு தெரிந்த விசயங்களை எம்மக்களிடம் பகிரவே நாம் எழுத வந்தோம்....

யோசிக்காமல் தூக்கிவிடு....அது சமுதாயத்தையும் நல்ல உள்ளங்களையும் காக்கும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ sweet

உங்களுக்கு பிடிக்கலன்னா எதுக்கு செந்திலோட ப்ளாக் படிக்கிறீங்க. அவர் கடவுள் இல்லைன்னு சொல்றார். இருந்தா காட்டுங்க ஒத்துகிறேன்னு சொல்றார். கடவுளை காட்டுங்க. அதுக்கு அப்புறமும் அவர் கடவுள் இல்லைன்னு சொல்றார்னா அப்புறம் நாங்க அவர் சட்டைய பிடிச்சு கேக்குறோம். அத விட்டுட்டு இந்த மாதி கமென்ட் போட்டு அவரை டார்ச்சர் பண்ணாதீங்க. உங்களுக்கு தைரியம் இருந்தா அவருக்கு போன் பண்ணி திட்டுங்க. அத விட்டுட்டு இப்படி ஏன் தேவை இல்லாம?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ ப.செல்வக்குமார் super & thanks

@ Deva thanks

ஜெயந்தி said...

//நாகரீகம் கற்று.... நாகரீகம் கற்றுக் கொடுப்பவன் தமிழன்......... அதை அழிக்க நினைக்காதீர்....!//
கேள்வி பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

Unknown said...

\\madhumidha1@yahoo.com\\

டேய் பொறம்போக்கு, நீ யாரு உன் அட்ரெஸ் என்ன என அத்தனை டேட்டாவும் என் கையில இருக்கு.. தேவையில்லாம நீ என்னைபத்தி பேசுனத வச்சு உன் மேல் வழக்கு பதிவு செய்யலாம்..

அப்புறம் சென்னை கோர்டுக்கு நாய் பேயா அலையணும்.. என் ஊர் பரவாக்கோட்டை.. இப்ப எங்க குணம் உனக்கு தெரிஞ்சிருக்கும்..

இத்துடன் என்னை பேசுவது பற்றி நீ நிறுத்தவில்லை எனில் உன்னை நீதிமன்றத்தில் சந்திப்பேன்..

தர்க்க ரீதியான கருத்துகள் உன்னிடம் இருக்குமானால் ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் எழுது ..ஒளிந்து கொண்டு கல்லெறியாதே...

உன்னை நேரில் சந்திக்க பிரியப்படும்..
K.V.K.R.P.( எனக்கு ஒரு வரலாறு உண்டு). செந்தில்குமார்.

ஜீவன்பென்னி said...

இவிங்கள கண்டுக்காதீங்க. அப்புடியே விட்டுடுங்க. ஆ... தம்பி சவுந்தரு இந்த மாத்ரி கமெண்ட் அனுமதிக்காத. இது என் கருத்து மட்டுமே.

சௌந்தர் said...

கருத்து சொல்லும் போது நாகரீகமா கருத்து சொல்லவேண்டும் கடவுள் இருக்கிறது இல்லை என்பது அவர் அவர் சொந்த கருத்து.

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் பல போராடங்களை சந்தித்து இருக்கிறார் இதற்க்கு எல்லாம் அவர் பயப்பட மாட்டார்

Unknown said...

இப்படி இன்னொருவரின் கருத்துக்களிலும் வார்த்தைகளிலும் ஏதேனும் தவறுகள் இருப்பின் நெஞ்சிற்கு நேர் நின்று கண்களுக்கு முன் நின்று சொல்வதற்கு நெஞ்சுரமிருந்தால் சொல்லலாம்! இல்லையெனில் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாமே! ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து நிற்க யாரோ ஒருவர் எதிர் திசையில் நிற்பதை , "வித்தியாசம்" என்றும் சொல்லலாம் " வெட்டிப் படம் " என்றும் சொல்லலாம் .! அண்ணன் கே. ஆர் . பி . செந்திலின் வார்த்தைகள் அருமை! மனிதர்களுக்குக் கண்டிப்பாக அவர் பேசும் பாஷைகளும் வார்த்தைகளும் புரியும்.! இத்தனை பூகம்பத்தை கிளப்பக் காரணமாக இருந்த "சௌந்தர் " அண்ணனின் கேள்விகள் எதார்த்தத்தின் உச்சம்! இருவருக்கும் வாழ்த்துக்கள்! இவண் உங்கள் ரசிகன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஸ்வீட்டாவது சால்ட்டாவது,,


இவன்.. ஒரு ரெண்டுங்கெட்டான் போல இருக்கு தலைவா ,,,,
அவனையெல்லாம் பத்தி பேசி டைம் வீணடிக்க வேண்டாமே...

Anonymous said...

மாறுப்பட்ட கருத்து இருந்தால், அதை நாகரிகமாக எடுத்து சொல்லுங்கள்.அதை விட்டு பதிவர்களால் விரும்ப படும் ஒரு பதிவரை கேவலமாக எழுதாதிர்கள்.பலமுறை தேவாவின் கமெண்ட் யை படியுங்கள்

Prasanna said...

கேள்வி பதில்கள் மிகவும் அருமை :)

Anonymous said...

அற்புதமான முயற்சி... வாழ்த்துக்கள் எப்போதும்!

vasan said...

எவ்வ‌ள‌வு தாண்டி, இங்கு வ‌ந்திருக்கிறீர்க‌ள்.
இத்த‌கு பொக்கு பின்னோட்ட‌ங்க‌ளால், புண்ப‌ட‌லாமா?
ஏமாற்றி விட்டீர்க‌ள், செந்தில். ப‌ண்ப‌ட்ட‌ நில‌ம்,
குப்பைக‌ளையும் உர‌மாக்கும் திற‌ம் கொள்ளுங்க‌ள்.

அ.முத்து பிரகாஷ் said...

"ivan kadavulai kumbitta vittal enna? setthaal enna?"
இனிப்பு இருக்க கசப்பு கவர்ந்தற்று ...
கசப்பும் ஒரு சுவை தான் தோழர் ...
அளவு மிஞ்சினால் ...
போகட்டும் ...
மனம் திறந்து பரஸ்பரம் தழுவிக் கொள்வோம் ...வாருங்கள் தோழர் ...
தோழர் செந்திலின் தளத்திற்கோ அல்லது ரசிகனின் இந்த தளத்திற்கோ ...
தயக்கங்கள் வேண்டாம் தோழர் ...
வந்து மனம் விட்டு விவாதியுங்கள் ...
அல்லது திட்டுங்கள் ...
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது போதும் தோழர் ...
வாருங்கள் மதுமிதா !!!
மனம் விட்டு பேசினால் எஞ்சுவது புன்னகைகள் மட்டுமே !
வாருங்கள் சண்டையிடுவோம் கட்டிப்புரள்வோம் புன்னகைப்போம் கைகுலுக்குவோம் மதுமிதா !!!Welcome my Sweety!!!

ரோஸ்விக் said...

அபாரம். செந்தில் மற்றும் சௌந்தருக்கு வாழ்த்துகள்.
செந்தில் தரப்பு விவாதத்தை நியாயப்படுத்த அன்பு உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொடுத்த மதுமிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ;-)

sudhanthira said...

உங்களின் அனுபவங்களை எல்லோரும் புரிந்து வகயில் உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

 
;