Tuesday, July 20

வாடகை வீடு....


                                                                                
நாங்கள் இப்போ இருக்கும் வீட்டுக்கு குடி வந்து 20 மாதம் ஆகிவிட்டது. நாங்கள் வீட்டுக்கு குடிவந்த மறு நாள் மின்குழல் விளக்கு (ட்யூப்லைட் -எப்புடி?) மாட்ட ஆணி அடித்தோம் உடனே வீட்டு முதலாளி வந்து ஆணி அடிக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள் நான் அடித்து தருகிறேன் நீங்கள் ஆணி அடிக்க கூடாது என்று சொன்னார் இதுவரை நாங்கள் சாமீ படம் வைக்க கூட ஆணி அடிக்க வில்லை..








ஓரு நாள் எங்கள் வீட்டில் ஓரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம் அன்று வேண்டும் என்றே தண்ணீர் தொட்டி கழுவ வேண்டும் என்று சொல்லி தண்ணீர் விட வில்லை.

வீட்டிற்கு சொந்தகாரர்கள் யாரும் வர கூடாது என்று சொல்கிறார்கள். அப்படியே யாரவது வந்தால் கிழே வரும் போதே யார் வீட்டுக்கு போறிங்கள் என்று கேட்பார்கள், எங்கள் அம்மா வந்தவர்களை வழி அனுப்ப போவார்கள் அபோது வந்து என்ன உங்கள் வீட்டுக்கு அடி கடி யாரவது வந்து வந்து போகிறார்கள், இது கூட பரவாயில்லை.


எங்க அண்ணன் குழந்தை பிறந்து 11 மாதம் தான் ஆகிறது அந்த குழந்தை வந்தாலும் அவர்களுக்கு பிடிக்க வில்லை, எங்கள் அண்ணன் வந்தாலும் இவர்கள் இங்கதான் இருக்கிறர்களா எப்போ அவர்கள் போவார்கள் என்று கேட்பார்கள்,

நாங்கள் கேட்டோம் யாரவது சொந்தகாரர்கள் வந்தால் நாங்கள் தான் அவர்களுக்கு சாப்பாடு போடபோறோம் அவர்களுக்கு தனி வீடு இருக்கிறது வந்து கொஞ்சநேரம் இருந்து பேசிவிட்டு போய்விடுவார்கள் இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை.

நாங்கள் ஏற்கனவே வீடு பார்த்து கொண்டு தான் இருந்தோம். சரியான வீடு கிடைத்த உடன் இந்த வீட்டை காலி செய்து விடலாம் என்று புது வீடு பார்க்க சென்றோம்....அவர்கள் போட்ட கண்டிசன்

வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம் என்று கூறினார்கள். இது என்ன கூத்து என்று கேட்டால், ஆட்டுக்கறி மட்டும் தான் முதலாளி அம்மாவுக்கு பிடிக்குமாம். குளியல் அறையில் பித்தளை பாத்திரம் உபயோக படுத்து கூடாது என்று சொன்னர்கள் அங்கும் சொந்தகாரர்கள் வர கூடாது என்று சொல்ல சரி என்று வேறு வீட்டை பாத்தோம்.

இங்கு 4000 வாடகை என்றால் 40000 முன் தொகை தரவேண்டும், ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள். 

எபோதோ 20 வருடத்திற்கு முன்பு ஏதோ சில ஆயிரம் கொடுத்து நிலம் வாங்கி விட்டு இப்போது அது கோடி கணக்கில் மதிப்பு இருக்கிறது, உங்கள் வீடுதான் நாங்கள் ஒன்றும் எங்களை எதுவும் கேட்ட கூடாது, என்று சொல்லவில்லை வாடகை சரியாக தரவில்லையா கேளுங்கள், உங்களுக்கு எதாவது தொல்லை தருகிறோம கேளுங்கள், உங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார்கள் என்பதால் அவர்களை அடிமை போல் பார்க்க கூடாது.  


யாரும் எடுத்த எடுப்பிலே சொந்த வீடு வைத்து இருக்க வில்லை அவர்களும் வாடகை வீட்டில் இருந்து தான் சொந்த வீடு வாங்கி இருப்பார்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள் இவர்களுக்கு அடிமையா என்ன.. இருப்பவனுக்கு ஓரு வீடு என்றால் இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு.....






33 comments:

செல்வா said...

//உடனே வீட்டு முதலாளி வந்து ஆணி அடிக்க வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள் நான் அடித்து தருகிறேன் நீங்கள் ஆணி அடிக்க கூடாது என்று சொன்னார் இதுவரை நாங்கள் சாமீ படம் வைக்க கூட ஆணி அடிக்க வில்லை..
///
அவருக்கு வேற வேலை இல்லையா ..?
//இருப்பவனுக்கு ஓரு வீடு என்றால் இல்லாதவனுக்கு ஆயிரம் வீடு.....//
அருமையான பதிவு சௌந்தர் ..
நல்லவேளை நான் கிராமத்தில இருக்கறதால தப்பித்தேன்.. இந்த வீட்டு ஓனர்கலெல்லாம் பிறக்கும் போதே வீட்டோடவா பிறந்திருப்பாணுக ..

Anonymous said...

avargal vadagai kuda parava illa. avanga podum condition romba kodumai soundar. pannam kuduthum indamadri avanga solaradu romba over.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paduichittu varen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது பராவ இல்லை. நாங்க ஊர்ல இருக்கும்போது பதினைந்து வீடு கொண்ட compound. வீட்டுக்காரன் திடீர்ன்னு வீட்டுக்குள்ள நம்மள கேக்காமலே வருவான். ஏன் தரைல அப்படியே உக்காந்து சாபுடுறீங்க, தரை நாஸ்தி ஆயிடும். கீழ சாக்கு விரிச்சு சாப்புடுங்க அப்டிம்பான். திடீர்ன்னு ஒருநாள் எல்லா வீட்டுகுள்ளையும் போயிட்டு யார் வீடு சுத்தமா இருக்கு அவங்களுக்கு ஒரு சோப்பு தப்பா பரிசா கொடுப்பான்..

காலேஜ் படிக்கும்போது எங்க வீட்ல கம்ப்யூட்டர் வச்சிருந்ததால பசங்களும் பொண்ணுங்களும் வீட்டுக்கு வருவாங்க(அப்ப கம்ப்யூட்டர் எல்லோர் வீட்டுலயும் கிடையாது). யாரும் வீட்டுக்கு வரகூடாது அப்டிம்பான். ஏன்னு கேட்டா தரை தேய்ஞ்சிடும் அப்டிம்பான்.

ஜில்தண்ணி said...

இந்த ஓனர்களே இப்படித்தான்,வேண்டுமென்றே எதையாவது குறை சொல்வது

எப்பாதான் திருந்துவார்களே :(

அருண் பிரசாத் said...

ஆட்டு கறிக்கு பங்கு கேக்கலையா?

ஜீவன்பென்னி said...

same blood.ஒரு 14 வருசத்துக்கு முன்னாடி.

SShathiesh-சதீஷ். said...

//வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம் என்று கூறினார்கள்//

வரிக்கு வரி ரசித்தேன்....

Unknown said...

இதற்குதான் தெரிந்த நண்பர்கள் வழியே மட்டும் வாடகைக்கு செல்கிறேன்..

அதனால் இன்றுவரை பிரச்சினை இல்லை..

அமைதி அப்பா said...

நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால், நான் தற்பொழுது குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் மிகவும் நல்லவர். அவரைப் பற்றி, நான் வேறு வீடு சென்ற பிறகு, ஒரு பதிவாகப் போடவுள்ளேன். (இடப் பற்றாக்குறையால் வேறு வீடு பார்க்க உள்ளோம்) வீட்டு உரிமையாளர்களை நினைத்தாலே அடி வயிற்றில் ஒரு பயம் கவ்வுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தயவு செய்து இதைப் படிக்கும் வீட்டு உரிமையாளர்களே, எங்கள் வீட்டு உரிமையாளர் போல் மாறுங்கள் அல்லது அவரில் பாதியாக இருக்கவாவது முயற்சி செய்யுங்கள்.

ஸ்ரீராம். said...

நொந்த அனுபவங்கள்...!

School of Energy Sciences, MKU said...

இரக்கமில்லா ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கின்றன. விருந்தினர் வந்தால் "எப்போ கிளம்புவீங்க" என்று அபசகுனமாகக் கேட்பது, எத்தணை நாள் தங்குகிறார்கள் என்று கணக்குப் போட்டு "தண்ணீர் வரி" விதிப்பது. மிகக் கொடுமையானவர்கள் . . .

Prasanna said...

ரொம்பவும் நொந்து இருக்கும் நேரத்தில், அப்படியே என் மனதில் இருப்பதை எழுதி விட்டீர்கள் :) மிக நன்று..

ஜெய்லானி said...

//யாரும் எடுத்த எடுப்பிலே சொந்த வீடு வைத்து இருக்க வில்லை அவர்களும் வாடகை வீட்டில் இருந்து தான் சொந்த வீடு வாங்கி இருப்பார்கள் வாடகை வீட்டில் இருப்பவர்கள் இவர்களுக்கு அடிமையா என்ன//


நேற்றைய மருமகள் இன்றைய மாமியார்...!!!

Priya said...

என்ன கொடுமைங்க இது!!!

பாண்டிச்சேரியில் இருக்கும் என் தாய்வீடு மூன்று அடுக்கு மாடிகளை கொண்டது. கீழே எங்கள் குடும்பமும் மேலே இரண்டு மாடிவீடுகளும் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட வாடகை இருப்பவர்களிடம் என் பெற்றோர் இப்படி எல்லாம் நடந்துக்கொள்வதில்லை.ஆனால் நீங்கள் சொல்வதுப்போல் ஒரு சிலர் இருக்கிறார்கள்தான். அவர்களுக்கு என்ன சொல்லி புரியவைப்பது?

Jeyamaran said...

*/வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம் என்று கூறினார்கள். இது என்ன கூத்து என்று கேட்டால், ஆட்டுக்கறி மட்டும் தான் முதலாளி அம்மாவுக்கு பிடிக்குமாம்/*

என்ன கொடுமை சார் இது

Jey said...

இப்படியும் பலபேர் இருக்கிறார்கள், என்ன செய்வது.. நல்லவர்கள் சிலபேர் இருக்கிறார்கள் அவர்களைத்தேடி நாம் செல்வோம்.

எல் கே said...

enakkum intha maathiri nontha anubavam undu

Kousalya Raj said...

அட கஷ்டமே.... துன்பத்தை கூட சுவையா எப்படி ......?!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை......

நிலாமதி said...

ஒருவேளை என் வீடு ..............என்ற தலைகனமாய் இருக்கலாமோ?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வாடகை வீட்டில் இருப்பது, பல நேரங்களில் கொடுமை தான்..

மேல் மாடியில் குடியிருந்தால் சத்தமாக நடக்க கூடாது....
சத்தமாக பாட்டு கேட்க கூடாது...ன்னு எல்லாம் சொல்வாங்க..
உங்க பீலிங்க்ஸ் புரிது சௌந்தர்...

பிரச்சின இல்லாத வீடா கிடைக்க வாழ்த்துக்கள்..!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம்///

என்ன கொடும சௌந்தர் இது...

நமக்கு புடிச்சத சமைச்சு சாப்பிட எவன் அனுமதியும் வேண்டாமே..

நண்பா அந்த வீட்டு அட்ரெஸ் மட்டும் கொஞ்சம குடு.. அத சத்திரமா மாத்திருவோம்..

dheva said...

ரொம்பவே ஷாக்கா இருக்கு படிக்க....

ஆளுஙகளே வரக்கூடாதுன்னா ....என்னத்துக்கு வாடகைக்கு விடணும்....! பைத்தியகாரத்தனம்....இவர்களை எல்லாம் சைக்கிரியாஸ்ட் கிட்ட கொண்டு போய் கவுன்சிலிங் கொடுக்கணும்...(இது வரைக்கு சீரியஸ்)


ஆம...இறா செஞ்சா ஒண்ணும் சொல்றது இல்லையா தம்பி...ஹா..ஹா..ஹா..(இது காமெடி)!

Anonymous said...

நகரங்களில் தான் வீட்டு ஒனர்கள் அதிகம் பிரச்சனை செய்கிறார்கள்.காரணம் என்னவென்று அவர்களிடம் கேட்டால் தான் தெரியும் போலிருக்கு.

pinkyrose said...

எலி வளையானாலும் தனி வளைங்கறது அதுக்குத்தான் போல!

விஜய் said...

நீங்க சொல்வது போல தான் நடக்கிறது சௌந்தர்...

"உழைக்காம எதுவும் கிடைக்காது ,
அப்டி கிடைச்சதுன்னா அது நிலைக்காது "
இது தான் எல்லாத்துக்கும் அடித்தளம் சௌந்தர், அதனால்அத பத்தி கவலை படாதீங்க

நம்ம கிட்ட இருந்து தவறாக பறிக்க படுகிற கஷ்டப்பட்டு உழைச்ச காசு ,நம்ம கிட்ட வந்துடும் நண்பா...

இது தான் உண்மை..

ஆனாலும் சில வீடு முதலைகள் பண்றது கொஞ்சம் கொடுமை தான், சரி விடுங்க , நம்ம சமுத்தாயத்த மாற்றும்போது இதற்கும் ஒரு முடிவு கட்டிடலாம் ...

Prathap Kumar S. said...

புதுப்பணக்காரனுங்கதான் அதிகமா இப்படி பண்ணுவானுங்க....
சீக்கிரமே புதுவீடு வாங்கி குடிபுக வாழ்த்தக்கள்.

Anonymous said...

really a true one

அன்புடன் நான் said...

உண்மையான ஆதங்கம்... செளந்தர்.

இப்படியெல்லாம் அநீதியான விதிமுறை போடுறவங்களுக்கு கருடபுராணத்தில.... நெருப்புல குடியிருக்கிற தண்டனை கிடைக்குமாம்.

Anonymous said...

*/வீட்டில் கோழிகறி மீன் செய்ய கூடாது, ஆனால் ஆட்டுக்கறி செய்யலாம் என்று கூறினார்கள். இது என்ன கூத்து என்று கேட்டால், ஆட்டுக்கறி மட்டும் தான் முதலாளி அம்மாவுக்கு பிடிக்குமாம்/*

atleast athaavathu avangalukku pidichathey, paavam yaaru maatta porangannu theriyaley

Pandian R said...

உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் நீங்கள் படும் பாடு சாதாரணமானது. திருப்பூர் கோவைப் பக்கம் போய் வீடு எடுங்கள். வீட்டு வாசலை சாணி தேய்த்து (கவனமாகப் பார்க்கவும். சாணி தெளித்து அல்ல.. சாணி தேய்த்து) வைக்க வேண்டும். :) அதுவும் தரை போர்சன் என்றால் ஒட்டு மொத்த வீட்டுக்கே தாங்கள்தான் செக்கூரிட்டி, வந்தோருக்கு வழிகாட்டி, லைட் போடும் லைட் பாய், ஒட்டு மொத்த வீட்டுக்கும் தன் செலவில் லைட் போட்டு லட்சுமியை வரவைக்கும் வள்ளல்.. அனுபவிங்க பாஸ். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

தரகர்களிடம் பேசி வைத்து இவர்கள் அடிக்கும் கொட்டத்தை எழுத வேண்டும். அது ஒரு அத்தியாயமே எழுதலாம்

 
;