Tuesday, July 27

கோபத்தின் வலி..


                                                                      


பள்ளிப்படிப்பு என்பது இப்போது அத்தியாவசியமான ஒன்று. வீட்டருகில் பள்ளி என்றால் குழந்தைகள் சென்று வர வசதியாய் இருக்கும் தூரம் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படித்தான் தன் பிள்ளைகள் படும் பாட்டைக் கண்டு தம் தம்பிசெல்வம் இருக்கும் கொருக்குப்பேட்டைக்கே வீட்டை மாற்றிட முடிவு செய்தான் டி.வி. மெக்கானிக் கார்த்திக். ஆமாம்...கூப்பிடு தூரத்தில் பள்ளி மேலும் தம்பி வேறு பக்கத்தில்...என்று எண்ணியதின் விளைவு இதோ ....புது வீட்டைல் பால் காய்ச்சி குடித்து சந்தோசமக இருக்கிறார்கள் கார்திக் குடும்பத்தினர்.  அதே சந்தோசமான வீட்டில் மறைந்திருந்த அவர்களின் வாழ்க்கையின் திருப்புமுனையை அறியாமல்.....



மறுநாள் காலை கார்த்திக் அவன் பையனை பள்ளியில் விட்டு விட்டு அப்படியே வேலைக்கு  போய்விட்டான்..மாலை கார்த்திக் மனைவி, மகன் அகிலனை பள்ளியில் இருந்து கூப்பிட்டு கொண்டு வந்தாள்.. அகிலன் வீட்டு வாசலில் விளையாடி கொண்டு இருந்தான் அப்போது பக்கத்துக்கு வீட்டில் அகிலன் நுழைந்தான், அங்கு ஓரு பெண்மணி அகிலனை சிறுவன் என்றும் பார்க்காமல் அடித்து விட அகிலனின் கதறல் சப்தம் கேட்டு அவன் அம்மா வந்து ஏன் என் பையனை இப்படியா போட்டு அடிப்பது... என்று கேட்க்க... பக்கத்து வீட்டு பெண் அவள் வாய்க்கு வந்த படி பேச, இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது...அவர்கள் சண்டை போடும் சப்தம் வெளியே தெரு முனை வரை கேட்கிறது... அப்போது, செல்வம் வந்து கொண்டு இருந்தார், அவர் காதில் இந்த சப்தம் கேட்கிறது என்ன என்று வேகமாய் சென்று பார்க்கிறார் மனதிற்குள் இந்த பொம்பளைக்கு வேறவேலையே இல்லை என்று சொல்லி கொண்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்து, அவன் அண்ணியை கூப்பிட்டு சென்றான், செல்வம். 


செல்வம் அண்ணியிடம் அந்த பக்கத்து வீட்டு பெண் பற்றி சொல்லிகொண்டு இருந்தான், அந்த பெண் எப்போதும் யாரிடமாவது சண்டை போட்டு கொண்டே இருப்பார், எங்களிடமே அடி கடி சண்டை போடுவாள்...இதை பற்றி பேசி கொண்டு இருக்கும் போதே கார்த்திக் வீட்டுக்குள் நுழைந்தான்.. அவனிடம் நடந்ததை சொன்னாள், அதை அமைதியாக கேட்டுகொண்டே இருந்தான், சரி விடு இனிமேல் பையனை வெளியே அனுப்பாதே என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டார்கள்.

மறுநாள் காலை, கார்த்திக் வெளியே பல் துலக்கி கொண்டு இருந்தான், அப்போது அந்த பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர். கார்த்திக்கை முறைத்து பார்த்து கொண்டே சென்றார். கார்த்திக்கும் மனதில் சிரித்து கொண்டே அவரை பார்த்தான், கார்த்திக் எப்போதும் அமைதியாகவே இருப்பார்.

சில நாட்கள் அமைதியாகவே சென்றது... ஓரு நாள் ஞாயிற்று கிழமை மாலை பொழுது மகிழ்ச்சியாக அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர், பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர் குடித்து விட்டு தள்ளாடி கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்... அவர் மனைவி வெளியே சென்றதால் வீட்டில் பூட்டு தொங்கியது.

கார்த்திக் வீட்டு வாசலில் போதையில் விழுந்தார், அங்கேயே வாந்தி எடுத்து கொண்டும் படுத்து புரண்டு கொண்டும் இருந்தார். கார்த்திக் தம்பிக்கு கோபம் தலைக்கு ஏறியது, அவரிடம் சென்று யோவ் எந்திரிச்சு உங்க வீட்டுக்குள் போய் படு என்று செல்வம் சொல்ல, அவனுக்கு போதையில் என்ன பேசுவது என்று தெரியாமல் கெட்ட வார்த்தைகள் பேச பதிலுக்கு செல்வமும் பேச வார்தைகள் வளர்ந்து கொண்டே சென்றது, அந்த பக்கத்து வீட்டுக்காரன் அங்கு வேண்டும்மென்று சிறுநீர் கழிக்க அதை பார்த்த கார்த்திக் கோவத்தை அடக்க முடியாமல் அவனை தாக்க, செல்வம் பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியால் அவனை தாக்கினான், அவ்வளவு தான் பக்கத்து வீட்டுக்காரனின் உயிர் அந்த இடத்திலே போனது...

கார்த்திக்கிற்கு பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரிய வில்லை. தப்பு செய்து விட்டோமே என்று மனம் சொல்கிறது...சிறது நேரத்தில் அங்கு கூட்டம் கூடி விட்டது ஒரே சப்த்தம் அவன் காதை குடைகிறது.. போலீஸிடம் இருவரும் சரண் அடைந்தார்கள். மறு நாள் அவனை நீதி மன்றம் அழைத்து செல்கிறார்கள்..

நீதி மன்றம் செல்லும் போது அவனுடைய உள் மனம் பேசிக்கொண்டு செல்கிறது, எப்போதும் கோபம் படாத நான் ஓரு ஐந்து நிமிடம் கோபத்தால் என் குடும்பமும், என் தம்பி குடும்பமும் இப்போது நடு தெருவில் நிற்கிறது. இப்படி கோபத்தில் சில வார்தைகள் தொடங்கும் அந்த கோபம் முடியும் இடம் சிறை சாலையாக தான் இருக்கும். சிறைக்கு நுழைந்தார்கள் கார்த்திக்கும், செல்வமும் அவர்களக்கு தெரியும் இனி இங்கு தான் 20 வருடம் இருக்கே வேண்டும். குடும்ப கவலையுடன் உள்ளே சென்றார்கள். 

டிஸ்கி: இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள். 








25 comments:

Karthick Chidambaram said...

//டிஸ்கி: இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள்.//
reality bites .. :( :(

ஜில்தண்ணி said...

கோபம்-கொலை பற்றிய அருமையான சிந்தனை

அருமை,வாழ்த்துக்கள்

ஜீவன்பென்னி said...

கன நேரக் கோபத்தின் விளைவு நம்மை எங்கு கொண்டு சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. கதை நல்லாயிருக்கு.

எல் கே said...

unmaithan thambi

Anonymous said...

"இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள். "



சரியா சொன்னிங்க சௌந்தர்.கோபம் கட்டுபெடுதினாலே நிறயை பிரச்சனிகளை தவிர்க்கலாம் இல்லையா..நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி

புவனேஸ்வரி ராமநாதன் said...

உண்மை.

Unknown said...

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று பெரியவர்கள் சும்மா சொல்லி வைக்கவில்லை..
டிஸ்கி : உண்மை

Chitra said...

டிஸ்கி: இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள்.

......Anger as an emotion .... Anger for profession...... என்னங்க ஏதோ, பசிக்கு ரெண்டு வடை சாப்பிட்டேன் என்பது போல உயிருடன் விளையாடுறாங்க .....

அருண் பிரசாத் said...

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

செல்வா said...

ரொம்ப நல்லா இருக்குங்க ..! நிச்சயம் கோபத்த அடக்கலேன்னா இதுபோன்ற துன்பங்கள் வருவது உண்மை ..
///டிஸ்கி: இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள்.///
இதுவும் உண்மை தான்.. ரொம்ப நல்லா எழுதுறீங்க ..!! வாழ்த்துக்கள் ..!!

Kousalya Raj said...

unmai. good post.

valththukal.

Kousalya Raj said...

கோபத்தில கண் மண் தெரியாது என்று சொல்வது சரியாக தான் இருக்கிறது.

School of Energy Sciences, MKU said...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. கோபத்திலும் சந்தோஷத்திலும் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் விபரீதமாகவே இருக்கும். அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்

dheva said...

கோபம்...ஒரு உணர்வு....! வெளிப்படுத்தாமல் இருக்கவே முடியாது....வெளிப்பட்டே ஆக வேண்டும்...ஆனால் அது அழிவை நோக்கி செல்லவதாய் இருக்க கூடது.....

சிலரின் கோபம் அழிக்கிறது....! சிலரின் கோபம் உருவாக்குகிறது....சிலரின் கோபம் படைக்கிறது...ஆனால் வெகு சிலரின் கோபம் மட்டுமே ஜெயிக்கிறது....!

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கோபப்பட்டார்.....தன்னுடைய வீடே ஆராய்ச்சியில் சாம்பலாய் போனது கண்டு....அந்த கோபம் எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுத்தது...

கார்ல் மார்க்ஸ் ஒரு கோபம் கொண்டார்....அது ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... கோபம் ஒரு விசயத்தை உடைக்கும் அல்லது பிரிக்கும் அல்லது எதிர்மறையான விளைவுகளை கொடுத்து மனிதர்களை இழக்கும்.....என்றால்....


கொஞ்சம் யோசிக்கலாம்...இல்லை இல்லை பலமாகவே யோசிக்கலாம்..கோபம் தேவையா என்று....?

Anonymous said...

கோபம் மனிதன் அதை அடக்குவதில் காட்டிலும் ஆள தெரிந்து இருக்க வேண்டும்.கோபத்திற்கான சூழ்நிலை பொறுத்து அதை அடக்க வேண்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பதிவு. கோபமோ துக்கமோ ரெண்டு நிமிஷம் தள்ளி போடுன்னு காதலன்ல எஸ்.பி.பி சொல்லுவாரு. அதுதான் சரியானதும் கூட.

Jeyamaran said...

*/இங்கு சிறையில் இருப்பவர்கள் 90 சதவிகிதம் பேர் கோபத்தில் கொலை செய்கிறார்களே தவிர யாரும் தெரிந்து செய்வது இல்லை, தெரியாமல் கொலை செய்தவர்கள், வெளியே வந்து திருந்தி வாழ்வார்கள், ஆனால் கொலை செய்வதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள் ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்து மீண்டும் கொலை செய்வார்கள். /*

நல்ல உண்மையான வார்த்தைகள்

ஹேமா said...

கொஞ்சம் நிறுத்தி யோசிக்க வைக்கிற பதிவு சௌந்தர்.ஒரு கணம் சூழ்நிலையை யோசித்து நிதானப்பட்டிருந்தால் வாழ்வு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்.நிறையப் பேர் மனதில் பதிந்திருக்கும் பதிவு.அருமை.

சீமான்கனி said...

//நீதி மன்றம் செல்லும் போது அவனுடைய உள் மனம் பேசிக்கொண்டு செல்கிறது, எப்போதும் கோபம் படாத நான் ஓரு ஐந்து நிமிடம் கோபத்தால் என் குடும்பமும், என் தம்பி குடும்பமும் இப்போது நடு தெருவில் நிற்கிறது.//

கதையின் நீதி அருமை சௌந்தர்...வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

உண்மை.

கோபத்திற்கான சூழ்நிலை பொறுத்து அதை அடக்க வேண்டும்..

விஜய் said...

கலக்குறீங்க சௌந்தர்

ஒரு உணர்வை பற்றிய தெளிவான அலசல் நிறைந்த கதை, அருமை, கோபமும் ஒரு அழகான உணர்வு தான், அதை பயன்படுத்தும் விதம் ஒவ்வொரு மனிதனின் பக்குவத்தை பொறுத்தே அமைகிறது, இந்த பக்குவம், தெளிவான சிந்தனை, வெளிப்புற சுற்று சூழலிருந்து கற்றுக்கொள்ளும் திறமை, தன் அனுபவங்களை சரியான முறையில் மனதால் ஏற்றுக்கொண்ட முறை, இவைகளை பொறுத்து அமைகிறது..அழகான கதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள் ..

அருமை சௌந்தர்

Riyas said...

மிக அருமையா சொல்லிரிக்கிஙக சௌந்தர்.. கோபம் மிக மோசமான விளைவுகளளை ஏற்படுத்தும்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

கோவத்துல எடுக்கிற எந்த முடிவும் சரியா இருக்கறதில்ல..
அப்படி முடிவால.. தனக்கு மட்டும் இல்லாம.. சுத்தி இருக்கறவங்களுக்கும் சேர்த்து,
பிரச்னை தருவாங்க..
அருமையா சொல்லி இருக்கீங்க.. :-))

என்னது நானு யாரா? said...

கோபம் கொடியது சௌந்தர்! சரியாக சொல்லியிருக்கீங்க! வேதாத்திரி மகரிஷி சொன்னது, சினம் தவிர்த்தலே உத்தமமான குணம். நாம் சினம் கொள்ளும் போது நம் உடம்பிலிருந்து ஜீவகாந்த சக்தி வெகு சீக்கிரம் விரையம் ஆகிறது. ஆதீதமான கோபம் கொண்டால், இதயம் ஸ்தம்பித்து மரணம் கூட நேர்ந்த நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.

எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க! ஒரு நல்ல சிந்தனாவாதியின் எழுத்தை இத்தனை நாள் மிஸ்பண்ணிட்டேனே!

எஸ்.கே said...

சூப்பரா எழுதியிருக்கீங்க!

 
;