Monday, August 2

அட மெய்யாலுமே 944 பேர் வந்தாங்களா?


                                                            
                  அட மெய்யாலுமே 944 பேர் வந்தாங்க நல்ல பாருங்கள்....                                                           
ஒழுங்கா நல்ல கதை எழுதி வைத்து அம்மா வாங்க அய்யா வாங்க என கூவி கூவி அழைத்தாலும் யாரும் வரமாட்டார்கள் ஒருவரை கிண்டல் செய்தால் போதும், நம்ம எல்லோறோம் சென்று முதலில் நிற்போம்... 



தினமும் என் பதிவை எத்தனை பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று பார்ப்பது வழக்கம், அதை போல் சனி கிழமை பார்த்தேன் இன்ப அதிர்ச்சி, ஆமாம் என் பதிவை 944 பார்வையாளர்கள் ஒரே நாளில் பார்த்து உள்ளார்கள், 
                                               
         அட இது உங்களுக்கு தாங்க சண்டை போடாமல் எடுத்து கொள்ளுங்கள்                    


விஜய்யை  பற்றி கிண்டல் செய்து பதிவு போட்டால் இப்படி கூட்டம் குவியுது.. விஜய் படத்திற்கே  இத்தனை பேர் வருவார்களா... எனக்கு ஓரு சந்தேகம்... அதை விஜயிடம் போய் தீர்ப்போம் .... 




சரி இதை பற்றி விஜய்யிடம் சொல்லாம் என்று அவர் வீட்டுக்கு சென்றேன் .
அப்போது நானும் விஜயும் பேசிய விவரம் 


விஜய் பார்த்தேன்; என்னை பார்த்ததும் என்ன சாப்டிங்களா கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன். 

விஜய்; போகும் போது ஓட்டலில் சாப்பிட்டு போங்க என்று சொன்னார்..(அது எங்களுக்கு தெரியாதா)




உங்களை பற்றி பதிவு போட்டேன் 944 பேர் பார்த்து உள்ளனர். விஜய்க்கு  ஆச்சரியம், மறுபடி கேட்டார் உண்மைய தான் சொல்றிங்களா, ஆமா உண்மை தான்.(விஜய் மைன்ட் வாய்ஸ்.... உடனே கட்சி தொடங்கணும்) 




விஜய்: என் படத்தை கூட இத்தனை பேர் பார்க்க மாட்டார்கள் எப்படி நடந்தது 
ஒரே குழப்பமா இருகிறதே, அது சரி தலைப்பு என்ன வைத்தீர்கள் 



நான்: டாக்டர் விஜயின் சாகசகாட்சி! இது தான் தலைப்பு 



விஜய்;இல்லை இல்லை இது எனக்காக பார்த்தவர்கள் கிடையாது, அதானே பார்த்தேன் நமக்கு இவளவு கூட்டம் வராதே ...என்று மனதிற்குள் விஜய் நினைக்க.... சௌந்தர் நீங்க இளைய தளபதி டாக்கடர் விஜய் என்று வைத்து இருக்க வேண்டும் ஓரு பையனும் வந்து இருக்க மாட்டான்,




சௌந்தர்.....என்னைய பேட்டி எடுத்து கழகுகில் ஓரு பதிவு போடலாம் இல்லையா என்று கேட்க்க ....கழுகு வலை பக்கம் நல்ல இருப்பது உங்களக்கு புடிக்க வில்லையா... 


விஜய்.....டிவி போட்டு உங்களை காட்டினால் தான் குழந்தைகள் எல்லாம் சாப்பிடுகிறார்கள்... இது உங்களக்கு தெரியுமா..

 விஜய்:  எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் அதானால் இருக்கலாம் ....




நான்: அட இது அப்படி இல்லையாம் டிவிய போட்டு அங்க பூச்சாண்டி வாறான் என்று சொல்லி சாப்பிட வைக்கிறார்கள்.....இது தெரியமா எனக்கு குழந்தைகள் ரசிகர்கள் அதிகம் என்று சொல்லி காமெடி பண்ணாதீங்க விஜய்... 




உங்கள் அடுத்த படம் எப்படி இருக்கும் சொல்லுங்க விஜய்.....

விஜய்: எல்லாம் ஒரே மாதரி தான் இருக்கும்.....

உங்கள் நெஞ்சில் குடி இருக்கும் உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல போறிங்க.... 

விஜய்: ஒழுங்கா வாடகை தர சொல்லுங்க..... (அதான்பா நெஞ்சில் குடி இருக்கிறார்கள் இல்லையா)      



                            அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா.....





33 comments:

Kousalya Raj said...

விஜய் மேல என்ன சௌந்தர் இப்படி ஒரு கோபம்...? ரசித்தேன் :)))

எல் கே said...

hahah pavampa oruthan maatina ippadi kutthareenga pottu

அருண் பிரசாத் said...

விஜய் மேல கொலைவெறிதான் போல

சௌந்தர் said...

அட அவரை பற்றி பதிவு போட்டேன் அதை 944 பேர் பார்த்துஉள்ளனர் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கு சொன்னா யாரும் நம்பமாட்டேன் சொன்ன எப்படி....

ஜில்தண்ணி said...

//அட இது அப்படி இல்லையாம் டிவிய போட்டு அங்க பூச்சாண்டி வாறான் என்று சொல்லி சாப்பிட வைக்கிறார்கள் //

செம சிரிப்பு,சிரிச்சிகிட்டே இருக்கேன் போங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா உண்மை தான் யாரையாவது கிண்டல் செய்தால் தான் ஆள் சேர்க்கிறது.. அதுவும் விஜய் என்றால் இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு கூட வர்றாங்க...

இந்த விஜய் எத்தன பேர தான் சமாளிப்பான்.. அவனுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுங்களேன்...

வரதராஜலு .பூ said...

சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

Anonymous said...

vijaya thitturathula ungalukku enna appadi oru santhosham

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த விஜய் எத்தன பேர தான் சமாளிப்பான்.. அவனுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுங்களேன்... //

அதான கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நினைசீங்களா?

Anonymous said...

ஒரு உண்மை இப்போ தெரிஞ்சே ஆக வேண்டும் நீங்க விஜய் ரசிகனா அதோ எதிரியா ??விஜய் பேட்டி கலக்கல்

செல்வா said...

//விஜய் பார்த்தேன்; என்னை பார்த்ததும் என்ன சாப்டிங்களா கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன்.
///
நம்பிட்டேன் ..!!

//(விஜய் மைன்ட் வாய்ஸ்.... உடனே கட்சி தொடங்கணும்///
அது கூட கேக்குதா ...??
//சௌந்தர் நீங்க இளைய தளபதி டாக்கடர் விஜய் என்று வைத்து இருக்க வேண்டும் ஓரு பையனும் வந்து இருக்க மாட்டான்,///
இது ஓவர் நக்கல் ..!!

//
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா.....///
அந்த படம் அருமை ..!!

ஜீவன்பென்னி said...

சூப்பர் பதிவு.

விஜய் said...

//விஜய் பார்த்தேன்; என்னை பார்த்ததும் என்ன சாப்டிங்களா கேட்டார் நான் இல்லை என்று சொன்னேன்.

விஜய்: போகும் போது ஓட்டலில் சாப்பிட்டு போங்க என்று சொன்னார்..(அது எங்களுக்கு தெரியாதா)

//


நிஜமா அதிக சத்தம் போட்டு சிரிச்சுட்டேன் அலுவலகத்துல ...ஹ ஹ அஹ ஆஹா

Riyas said...

ஏலே சௌந்தர்.. விஜய்ய கலாய்க்கிறதே உமக்கு வேலையாப்போச்சு..ஹா..ஹா..

ஒரு நாளைக்கு எத்தன பேர் வர்றாங்கன்னு எப்பிடின்னா பார்க்கிறது கொஞ்சம் சொல்லுங்களே.

Unknown said...

JAI HO DOCTOR VIJAY JI!

Jeyamaran said...

*/விஜய்: என் படத்தை கூட இத்தனை பேர் பார்க்க மாட்டார்கள் எப்படி நடந்தது
ஒரே குழப்பமா இருகிறதே, அது சரி தலைப்பு என்ன வைத்தீர்கள் /*

இதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே ஆனால் விஜயின் வேலாயுதம் கண்டிப்பாக வெற்றி பெரும் காரணம் ஹன்சிகா

sakthi said...

ரசித்தேன் :)

சௌந்தர் said...

@@@@ Riyas ஒரு நாளைக்கு எத்தன பேர் வர்றாங்கன்னு எப்பிடின்னா பார்க்கிறது கொஞ்சம் சொல்லுங்களே//

@@@@ Riyas http://www.google.com/analytics/ இதை பாருங்கள்

dheva said...

பதிவ படிச்சு புட்டேன்..உலகம் தெரிஞ்சு கிட்டேன்...கண்மணி.. என் கண்மணி...
மொக்கை ஜெயிச்சுருச்சு....கருத்து விழுந்துடுச்சு கண்மணி என் கண்மணி....


மொக்கைகளை கண்டுபுட்ட...கூட்டமா கூடுற..கலிகாலமச்சுதடா கண்மணி...
பதிவுகள போடுறவன் படம் பாக்க வரமாட்டேன்கிறான் கண்மணி...

( நான் இல்ல விஜய்தான் தண்ணி அடிச்சுட்டு பாடுறாராம்....எல்லோரும் சொல்றாங்க...)

செளந்தர்...@ ஏண்டா இப்படி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Karthick Chidambaram said...

இப்பவாவுது புரிஞ்சுசுகுங்க விஜய் என்று சொன்னாலே ஒரு கூட்டம் வருது.
அவருக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. :):):)

Unknown said...

சூப்பர் பதிவு

சீமான்கனி said...

//பதிவ படிச்சு புட்டேன்..உலகம் தெரிஞ்சு கிட்டேன்...கண்மணி.. என் கண்மணி...
மொக்கை ஜெயிச்சுருச்சு....கருத்து விழுந்துடுச்சு கண்மணி என் கண்மணி....


மொக்கைகளை கண்டுபுட்ட...கூட்டமா கூடுற..கலிகாலமச்சுதடா கண்மணி...
பதிவுகள போடுறவன் படம் பாக்க வரமாட்டேன்கிறான் கண்மணி...

( நான் இல்ல விஜய்தான் தண்ணி அடிச்சுட்டு பாடுறாராம்....எல்லோரும் சொல்றாங்க...)//

சூப்பர்.......ஹ ஹ....

பனித்துளி சங்கர் said...

அடேயப்பா இவளவு பார்வையாளர்களா !

ஹேமா said...

சௌந்தர் நீங்க யார் ரசிகன் !

Chitra said...

வாவ்! சூப்பர் போங்க..... வாழ்த்துக்கள்!

Prathap Kumar S. said...

//விஜய்யை பற்றி கிண்டல் செய்து பதிவு போட்டால் இப்படி கூட்டம் குவியுது.. விஜய் படத்திற்கே இத்தனை பேர் வருவார்களா... எனக்கு ஓரு சந்தேகம்//


ஹஹஹஹ...ரொம்ப சிரிச்சுட்டேன்ப்பா.... கலக்கல்... ஆனாலும் அவரு திருந்துவாருன்னு நினைக்கிறே???? சான்சே இல்ல...

டாக்டரை டேமேஜ் பண்றதுதை முன்னாடி என்னோட கடமையா செஞ்சிட்டுருந்தேன்... என்வீட்டுலப்போய் விஜய்-னு சர்ச் பண்ணிப்பாரு...நிறைய கிடைக்கும்.

சௌந்தர் said...

@@@ஹேமா உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை நான் யார் ரசிகன் என்று.....

Anonymous said...

veru intresting sowndar, keep it up. ama sowndar yar rasigarnu sollave illaye

டிலீப் said...

nice sowndar.... bt overa ra kalaikirak paaaa

ஜெயந்தி said...

:)

Priya said...

சூப்பர்... ரசித்தேன்.சாக்லெட்டுக்கு நன்றி:)

வால்பையன் said...

நீங்க ஒரு பிரபல பதிவர் 944 எல்லாம் கம்மி!

Jey said...

விஜய் ரசிகன் செளந்தர், நல்லாருக்கீங்களா. உங்க தலிவரை நீங்களே டேமேஜ் பண்ணினா எப்படி...., கட்சி வேர ஆரம்பிக்கபோராராமா...பாத்து...

 
;