எங்க வீட்டுக்கு ஓரு பொண்ணு வந்து வாசலில் நின்று பசி எடுக்கிறது என்று குரல் கொடுத்தது... பாவம் புள்ளதாச்சி பொண்ணு என்று சாப்பாடு போட்டு வைத்தோம் சாப்பிட்டு விட்டு அந்த பொண்ணு சென்று விட்டது, அதே போல் மறு நாள் வந்து சாப்பாடு வேண்டும் என்று குரல் கொடுக்க அட என்ன இது ஓரு நாள் சாப்பாடு போட்டால் மறுபடி வந்து நிற்கிறது இந்த பொண்ணு....என்ன செய்வது... நாங்க ரொம்ப நல்லவர்கள் என்று அந்த பொண்ணுக்கு தெரிந்து விட்டது போல....
இந்த தடவை சாப்பிட்ட உடன் செல்லவில்லை ஓரு குட்டி தூக்கம் போட்டு விட்டு சென்றது.....மறு படி வந்தது சாப்பாடு போட்டு வைத்தால் அதை பார்க்காமல் எங்க வீட்டு பரனை மீது ஏறி T.V பாக்ஸ் உள்ளே எதையோ தேடியது... புள்ள தாச்சி பொண்ணு இப்படி மேல ஏறி போகிறதே என்று பயந்தோம்..சிறிது நேரம் பார்த்து விட்டு நாங்களும் அப்படியே விட்டு விட்டோம் அந்த பொண்ணுக்கு T.V பாக்ஸ்குள் மூன்று குழந்தை பிறந்து விட்டது..
மறு நாள் நாங்க அந்த T.V.பாக்ஸ்சை கிழ எடுத்து திறந்து பார்த்தோம், அழகான மூன்று பூனை குட்டி இருந்தது என்ன பூனை குட்டியா என்று கேட்பது எனக்கு புரிகிறது.. நான் இவளவு நேரம் பூனை பற்றி தான் சொல்லிகொண்டு இருந்தேன்..ஆமாங்க எங்க வீட்டில்நடந்த கதை.....
நாங்க அந்த பூனை குட்டியை எடுத்து பார்த்தோம் குட்டி பூனை கிச் கிச் சப்தம் போட அம்மா பூனை எங்கு இருந்தோ வந்து அதுவும் குரல் கொடுத்தது அம்மா இங்கு தான் இருக்கிறேன் அழுவாதிங்க.. என்பது போல... அம்மா பூனை வந்தவுடன் எங்களை கடித்து விடுமோ என்ற பயம். ஆனால் அது எங்களை ஒன்றும் செய்யவில்லை..
பூனை குட்டிக்கு என்று கிழ தரையில் ஓரு தனி இடம் ஒதுக்கி அதற்கு என்று துணியை விரித்து வைத்து மூன்று குட்டிகளை படுக்க வைத்தோம்...அம்மா பூனை எங்கயாவது வெளியே போய்விட்டு வரும் போது குரல் கொடுத்து கொண்டே வரும்... உடனே தூங்கி கொண்டு இருக்கும் பூனை குட்டிகள் எழுந்து குரல் கொடுக்கும்...
எப்போது பார்த்தாலும் அதன் அம்மாவிடம் பால் குடித்து கொண்டே இருக்கும்... நாங்களும் அதற்கு பால் வைத்தோம் பூனை குட்டிக்கு குடிக்க தெரியவில்லை நாங்கள் கற்று கொடுத்தோம்...நடக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது...அம்மா பூனை வந்து வாசலில் நின்று கொண்டு குரல் கொடுத்து கூப்பிடும்.. பூனை குட்டிகள் பால் குடிப்பதற்கு ஓடும்
அப்படியே குட்டிகளை கொஞ்ச கொஞ்சமா வெளியே அழைத்து போகும்.... வீட்டில் மூன்று பூனை குட்டிகளும் எங்களுடன் விளையாட்டும்...ஓரு நாள் அம்மா பூனை வந்து மூன்று குட்டிகளை கூப்பிட்டு சென்றது... அதில் ஓரு குட்டி பூனையை நாய் கடித்து இறந்து விட்டது. மற்ற இரண்டு பூனைகள் பயந்து வீட்டிற்கு ஓடி வந்து விட்டது.. எங்க ஓரு பூனை காணவில்லை என்று தேடி பார்த்தோம் அப்போது தான் எங்களுக்கு நாய் கடித்து இறந்தது என்று தெரியும்
அம்மா பூனை எங்கு இருந்தோ ஓரு மீனை திருடி கொண்டு வந்து அதன் குட்டிகளுக்கு சாப்பிட கொடுத்து அதை வேடிக்கை பார்த்தது கொண்டு இருக்கும்
தன் குட்டிகளுக்கு என்ன என்ன கற்று தர வேண்டுமோ அதை எல்லாம் தன் குட்டிகளுக்கு கற்று கொடுத்து விட்டு குறிப்பிட்ட வயது (சில மாதங்கள்) வந்தவுடன் அதை தன் பாதுகாபில் இருந்து தள்ளி வைக்கும் அந்த பூனை குட்டிகள் பக்கத்தில் சென்றால் முதலில் எச்சரிக்கை தரும் மீண்டும் மீண்டும் பக்கத்தில் சென்றால் அதை அடித்து விரட்டும் இனி எல்லா விஷயங்களும் நீயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அது விரட்டுகிறது....
மனிதர்களும் நமது குழந்தைகளை ஓரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் இனி எல்லாம் நீயே பார்த்து கொள்ள வேண்டும், என்று சொல்லவேண்டும் குழந்தை வளர்ப்பு முறை மாற வேண்டும், படித்தால் தான் வாழமுடியும் என்ற எண்ணத்தில் குழந்தைகளை வளர்க்க கூடாது, மற்ற விசயத்தையும் கற்று தர வேண்டும், வெளி நாட்டில் நீச்சல் முதல் அனைத்து விளையாட்டுகளை கற்று தருகிறார்கள், நமது நாட்டில் விளையாட்டில் இருந்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும் சுலபமாக வேலை கிடைக்கும் என்று தான் நாம் விளையாட்டில் சேர்கிறோம், இது போன்ற எண்ணத்தில் தாம் நாம் இருக்கிறோம்...மாற்றம் வரவேண்டும்.....
Tweet | |||||
33 comments:
அவசியாமான பதிவு தம்பி....அருமையான உதாரணம்! தனித்து நிற்க சொல்லிக் கொடுப்பது தான் நல்ல பிள்ளை வளர்ப்பு... அற்புதமா சொல்லியிருக்க....
ஆமாம்..இவ்ளோ ஆழமா மேட்டர் எல்லாம் எழுதுற நீ...ஏன் இப்படியே தொடரக்கூடாது....?
உணர்வுகள் உயிர்ப்புடன் இருக்கிறது சௌந்தர்..... எளிய நடையில் பெரிய விஷயம்.......
பகிர்வுக்கு நன்றி .
கடைசியாக சொன்னது மாறினால் நமது நாட்டிலும் நிறைய விளையாட்டு வீரர்கள் வருவார்கள்
அமெரிக்காவில் இப்படித்தான் என்று சொன்னால், எத்தனை பேர் ஒத்துக்கொள்வார்கள்? வெஸ்டேர்ன் வழிமுறை, நமக்கு ஒத்து வராது என்பார்கள். practical reasons தான்..... ம்ம்ம்ம்.....
நல்ல பதிவு, சௌந்தர்ஜி!
இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு ..
சொன்ன விதம் அருமை..
பகிர்வுக்கு நன்றி ...
தம்பி மிக அருமையான பதிவு ... பாராட்டுக்கள் ...
///மறு நாள் நாங்க அந்த T.V.பாக்ஸ்சை கிழ எடுத்து திறந்து பார்த்தோம், அழகான மூன்று பூனை குட்டி இருந்தது என்ன பூனை குட்டியா என்று கேட்பது எனக்கு புரிகிறது.. நான் இவளவு நேரம் பூனை பற்றி தான் சொல்லிகொண்டு இருந்தேன்..////
அட பாவி ...!!
ஆழமான அவசியமான கருத்துக்கு பூனையை வைத்து உதாரணம்...
பூனையின் வருணனைக்கு ஒரு பெண்...
இருவேறு நிலை நம்பிக்கைக்கு, உங்களுக்கும் பூனைக்குமான உறவு....
நல்ல சிந்தனை.
ரொம்ப நல்லா இருக்கு சௌந்தர்.
தொடர்ந்து இது போல எழுதுங்க நண்பா!
பதிவு நல்லாயிருக்கு. சொல்லவந்தத தெளிவா சொல்லியிருக்க. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
// நமது நாட்டில் விளையாட்டில் இருந்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும் சுலபமாக வேலை கிடைக்கும் என்று தான் நாம் விளையாட்டில் சேர்கிறோம், இது போன்ற எண்ணத்தில் தாம் நாம் இருக்கிறோம்...மாற்றம் வரவேண்டும்.....
///
அருமை சௌந்தர் .. நிச்சயம் மாற்றம் வர வேண்டும் ..!!
///
dheva சொன்னது…
ஆமாம்..இவ்ளோ ஆழமா மேட்டர் எல்லாம் எழுதுற நீ...ஏன் இப்படியே தொடரக்கூடாது....? ///
அண்ணா என்ன இருந்தாலும் சௌந்தர் எங்க ஆளு ..!! அடிக்கடி மொக்க போடுப்பா..!!
ம்...சரிதான் ..
நல்ல கருத்து. சொன்ன விதமும் அருமை.
மியாவ்....
நல்ல கதை, கருத்து அதைவிட அருமை.
கலக்கறீங்க செளந்தர்
நல்லா சொல்லியிருக்கீங்க.
மனிதர்களும் நமது குழந்தைகளை ஓரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் இனி எல்லாம் நீயே பார்த்து கொள்ள வேண்டும், என்று சொல்லவேண்டும் குழந்தை வளர்ப்பு முறை மாற வேண்டும், படித்தால் தான் வாழமுடியும் என்ற எண்ணத்தில் குழந்தைகளை வளர்க்க கூடாது, மற்ற விசயத்தையும் கற்று தர வேண்டும், வெளி நாட்டில் நீச்சல் முதல் அனைத்து விளையாட்டுகளை கற்று தருகிறார்கள், நமது நாட்டில் விளையாட்டில் இருந்தால் கல்லூரியில் இடம் கிடைக்கும் சுலபமாக வேலை கிடைக்கும் என்று தான் நாம் விளையாட்டில் சேர்கிறோம், இது போன்ற எண்ணத்தில் தாம் நாம் இருக்கிறோம்...மாற்றம் வரவேண்டும்...."
. சௌந்தர் மிகவும் அருமையானா பதிவு ..நீங்க சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்தது பகிர்வுக்கு நன்றி
அருமையான அலசல் சௌந்தர்.நான் இங்கு பார்த்திருக்கிறேன்.சின்ன விஷயம்தான்.சாதாரணமாக ஒரு அம்மா 4-5 வயதுக் குழந்தையோடு தெருவில் நடந்துகொண்டிருப்பார்.வெள்ளைகார அம்மா கையைப் பிடிக்காமல் சின்ன இடைவெளியில் குழந்தை நடந்துகொண்டிருக்கும்.எங்கள் அம்மாக்கள் கை இறுக்கிப் பிடித்தபடிதான்.காரணம் பயம்,பாசம்.அதோடு தெருவில் நடக்கும் ஒழுங்குமுறைகளைச் சொல்லிக் கொடுப்பதுமில்லை.
//வெஸ்டேர்ன் வழிமுறை, நமக்கு ஒத்து வராது என்பார்கள்.///
thevayaanavatrai mattum eduthuk kondal thappilai. thevayillathavatrai kanduk kollak koodathu
நல்லா சொல்லியிருக்கீங்க!
பூனையை வைத்து இப்படியொரு பதிவா
அருமையிலும் அருமை நண்பா :)
குழந்தையை எங்கும் தனித்து நிற்கும் அளவுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
சூப்பரப்பு.
நல்ல பதிவுங்க! பூனையை வைத்து நல்லா சொல்லியிருக்கீங்க!
கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வாக்கும் ரொம்ப நாள் நீடிக்காது என்று ஒரு பழமொழி உண்டு.
ஆனாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை தன் கடைசி காலம் மட்டும் தாங்க நினைக்கிறோம் . தவறு செய்து விடுவாங்களோ என்றே பயத்தில் எப்போதும் பாதுகாத்துக் கொண்டே இருக்க முயல்கிறோம்.
நல்ல பதிவு
மீண்டும் மீண்டும் பக்கத்தில் சென்றால் அதை அடித்து விரட்டும் இனி எல்லா விஷயங்களும் நீயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அது விரட்டுகிறது.."//
மனிதர்கள் ஒன்று இதை ஓவராகச் செய்வார்கள்... அல்லது செய்யவே மாட்டார்கள்.
ஒ........பூனையா ர தான் அந்த பொண்ணா ? நல்லஉருவகக் கதை பாடம் சொல்லி தந்தது...அருமை
நல்ல பகிர்வு ,உங்கள் எழுத்து இப்போது மெருகுற்று இருக்கிறது...வளர வாழ்த்துக்கள் .............
ஆம் சௌந்தர் ஒரு ஆரோக்கியமான தலைமுறைக்கு இந்த மாற்றம் அவசியமான ஒன்று நல்ல இடுக்கைக்கு நன்றி சௌந்தர் வாழ்த்துகள்..
அடேங்கப்பா , சௌந்தர் அஹ இது ...கலக்கிடீங்க போங்க..அருமையான கருத்த சொல்ற கதைங்க ....
வாழ்த்துக்கள் சௌந்தர்
நல்ல பதிவு.அதுவுன் எளிமையாக இருக்கிறது கருத்து சொல்லும் விதம்.
ஆழமான சிந்தனை. அருமையா எழுதி இருக்கீங்க. நம்ம நாடு மாறும்.
எங்க வீட்டிலும் இதே போல் ஒரு சம்பவம் உண்டு.
Nanba,
One of the best thinking!
Congrats .Keep it up.
All the BEST.
Post a Comment