எமர்ஜென்ஸியில் நடந்த சிறு தொகுப்பு மட்டுமே நான் சொல்கிறேன். இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம்..ஆனால் 1976 ஆண்டே சில நடவடிக்கை எடுத்து உள்ளார் சஞ்சய் ...அதை படித்தால் உங்களுக்கு சிறு நகைப்பு தான் வரும் சும்மா சுற்றி திரியும் வாலிபர்களை பிடித்து குடும்பக்கட்டுப்பாடு செய்தால் வல்லரசு ஆகிவிடுமா, அல்லது குடிசைகளை அழித்தால் வல்லரசு ஆகிவிடுமா...
எமர்ஜென்ஸி பிரளயத்தில் சஞ்சய் காந்தியின் பங்களிப்பு மிக அதிகம் மிசா சட்டத்தைப் பக்க பலமாக வைத்துக்கொண்டு இந்திராவின் அரசியல் எதிரிகளின் முதுகெலும்பை ஒடித்த அவருடைய கைகளில் இப்போது ஐந்து அம்சத்திட்டம் இருந்தது...
1 ஒவ்வொருவரும் ஒரு முதியவருக்கும் கல்வி கற்பித்து முதியோர் கல்வியை வளர்ப்போம்.
2 வரதட்சணையை முற்றிலுமாக ஒழிப்போம்
3 சாதி அமைப்பைத் தகர்ப்போம்
4 குடிசை ஒழிப்பு மற்றும் மரம் நடுதலுக்கு முன்னுரிமை கொடுத்து சுற்றுச்சூழலை அழகு படுத்துவோம்
5 குடும்பக் கட்டுப்பாட்டில் புரட்சியை அமல் படுத்துவோம்..
இந்த ஐந்து அம்சங்களையும் மனதில் நிறுத்திக்கொண்டு டெல்லி வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் சகிதம் டெல்லியைச் சுற்றி பார்க்கச் சென்றார் சஞ்சய். பழைய டெல்லியில் இருக்கும் துர்க்மான் கேட்டுக்கு அருகில் வந்த போது சஞ்சயின் முகம் சட்டென்று சுணங்கியது.
என்ன என்று பதறிப்போய் விசாரித்தார் ஜக்மோகன். சில நொடிகள் அங்கிருந்த குடிசைப் பகுதிகளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சற்றே நிதானித்து விட்டு அவரே பேசினார்.
என்ன செய்வீர்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது துர்க்மான் கேட்டில் இருந்து பார்த்தால் வெறும் ஜீம்மா மசூதி மாத்திரம்தான் தெரிய வேண்டும். அவ்வளவுதான்..புறப்பட்டு விட்டார் சஞ்சய்.
ஏப்ரல் 13. 1976 டெல்லி வளர்ச்சிக்குழுமத்துக்குச் சொந்தமான புல்டோசர்கள் துர்க்மான் கேட் பகுதியை ஆக்ரமித்தன. சில மணித்துளிகள் அங்கிருந்த குடிசைகள் அனைத்தும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. வெகுண்டெழுந்த குடிசைவாசிகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன. ரத்தமும் சதையுமாக யமுனை நதிக்கரையில் ஒதுக்கப்பட்ட மாற்று இடங்களுக்கு சென்று மூச்சுவிடத் தொடங்கினர் குடிசை வாசிகள்.
நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் குடிசை அகற்றும் பணி மின்னல் வேகத்தில் நடக்கத் தொடங்கியது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களுடைய குடிசைகளின் மீது புல்டோசர்கள் உருளத் தொடங்கலாம் என்பதால் பயமும் மிரட்சியுமாகவே தங்கள் பொழுதுகளை கழித்தனர். குடிசை ஒழிப்புத் திட்டத்தை கோணல் சிந்தனையில் பார்த்த சஞ்சயின் அத்து மீறல்கள் எமர்ஜென்ஸியின் போது எல்லை மீறின ஆனால் அதை பற்றி எவரும் கவலைப்படவில்லை இந்திர உள்பட.
சஞ்சய் அடுத்த குறி குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கும் வல்லரசு நாடாக மாற முடியாமல் போவதற்கும் இந்த பாழாய்ப்போன மக்கள் தொகைதான் காரணம் என்பது சஞ்சயின் கணிப்பு மக்கள் தொகையைத் தடுத்து நிறுத்த முடிந்தால்? விபரீதம் இங்கே தொடங்கியது குடும்பக்கட்டுப்பாட்டு முறை நாடு முழுக்க அமல்படுத்தப் பட்டது ..
அப்பாவி ஆண்கள் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு வலுகட்டாயமாக வாசக்டமி என்ற குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாமாக விரும்பி அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஊக்கத்தொகை, பரிசுப்பொருகள் எல்லாம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதிக அளவில் ஆண்கள் வராததால் வலுக்கட்டாயமாகத் துக்கிவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முக்கிய நகரங்கள் அனைத்திலும் அறுவை சிகிச்சை மையங்கள் அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டன. குடிசைப் பகுதிகளை நோக்கி நடமாடும் அறுவை சிகிச்சை மையங்கள் சென்றன. சிகிச்சைக்கு ஆட்களை அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப் பட்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையும் தன் பங்குக்கு பிச்சைக்காரர்கள், அநாதைகள் மற்றும்ஏழை எளியவர்களைப் பிடித்து வந்து அறுவை சிகிச்சை செய்து அனுப்பினர்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்களுக்கு நூற்றியிருபது ரூபாய் பணம், ஒரு டின் சமையல் எண்ணெய், ஒரு ரேடியோ அல்லது கடிகாரம் இலவசமாக வழங்கப்பட்டன ஒரு நாளுக்கு வெறும் முந்நூற்றி சொச்ச அறுவை சிகிச்சைகள் நடந்த டெல்லியில் திடீரென ஆறாயிரம் பேர் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
ஆட்டோக்காரர்களைக் குறிவைத்து மிரட்டினர் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
லெஸ் டாக் வொர்க் மோர் என்பது தான் சஞ்சய் நெருக்கடி நிலையின்போது அருளிய வாசகம்.
புது டெல்லி கன்னாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் காபி ஹவுஸில் நிறைய பேர் அறிவுசார் விசயங்கள் பற்றி தீவிர விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்போது அரசியலும் அலசப்படும் இந்த மாதிரியனான கூட்டங்களில் எமர்ஜென்ஸிக்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்ககூடும் என்பதால் கூட்டம் சேர்ந்து பேசுவதற்குத் தடை போட நினைத்தார் சஞ்சய்.
ஜக்மோகனைப் பார்த்தார். அப்படியே ஆகட்டும் என்பதுபோலத் தலையசைத்தார் ஜக்மோகன். அடுத்த சில நாள்களில் காபி ஹவுஸ் தரை மட்டமாக்கப்பட்டது.
இப்படி நித்தம் ஒரு அத்துமீறல்களால் எமர்ஜென்சி காலம் இந்திய மக்களின் தூக்கங்களை கெடுத்துக்கொண்டிருந்தது ...
Tweet | |||||
29 comments:
இதிலுள்ள ஒவ்வொரு விசயமும் மிகவும் ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் உள்ளது... வெள்ளை சட்டைக்குள் இப்படி ஒரு கருப்புநரி இருந்ததா...
hmm puthiya thagavel enakku
முதல் மூன்று திட்டங்கள் எந்த அளவில் இருந்தன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இவை எல்லாம் இன்று இருக்கும் பலருக்கும் தெரியாத விசயங்கள்தான். அரசியலை வைத்து எந்த எல்லைக்கும் போக முடியும் என்பதற்கு அந்த எமெர்ஜென்சி காலம் ஒரு உதாரணம். கொடுமை.
நைஸ் போஸ்ட் நண்பா..
இத பத்தி இதுக்கு முன்னால படிச்சதே இல்ல..
நன்றி..
நைஸ் போஸ்ட் நண்பா..
இத பத்தி இதுக்கு முன்னால படிச்சதே இல்ல..
நன்றி..
குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. தமாசு!!! தமாசு!!!
அட ஏம்ப்பா இப்ப அதையெல்லாம் ஞாவகப் படித்திட்டு? இப்போ தான் எமர்ஜென்சிய விட நெலம ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே! எங்க நீரு போயி பப்ளிக்ல கவர்மெண்ட்ட பத்தி பேசிப்பாருமே! அம்மாவா இருந்தாலுஞ்சரி, அய்யாவா இருந்தாலுஞ்சரி! அப்புறமா நாங்க மனு குடுத்துத் தான் உம்மை பாக்கணும்
/// வெகுண்டெழுந்த குடிசைவாசிகள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தன.///
இவ்ளோ கொடுமையா பண்ணினாங்க ...?
அதுசரி அப்டியே மாருதி கம்பெனி ஊழல் பத்தியும் கொஞ்சம் எளுதுறது?! காந்திதேசம் வாழுமில்ல!
வாழ்க அரசியல் வாரிசுகள்......
//ஆட்டோக்காரர்களைக் குறிவைத்து மிரட்டினர் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை சான்றிதழ் வைத்துதிருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
///
அட பாவமே ..!!
ஆமா இதெல்லாம் எங்க புடிக்கிறே ..?. உண்மையிலேயே எனக்கு இது புதிய தகவல் தான் ..!!
லூசு -ப் பய புள்ள ...
புதிய தகவ்ல் செளந்தர், சுவாரசிய்மாவும் இருக்கு
இப்படியெல்லாம் நடந்திருக்கா? ரொம்ப கொடுமைதான்...
புது விஷயம்..பகிர்வுக்கு நன்றி !
சஞ்சய் காந்தி மரணமடைந்த போது சம்பவ இடத்துக்குப் போன இந்திரா காந்தி என்ன செய்தார் தெரியுமா?
மொத்தத்தில் காங்கிரஸ் குடும்பங்களே இப்படிதான்
அட பார்ர்ரா என்னமா யோசிக்கிறாங்கே...
பெயருக்கு பின்னால் காந்தியை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய நல்ல காரியமா இவை :)
எமர்ஜென்கி பீரியடில் இப்படியெல்லாம் நடந்திருக்கு என்பது கூட தெரியாம இருக்கேன் :)
நன்றி நண்பா
இவரை பற்றி நானும் படித்திருக்கிறேன் நண்பரே . மிகவும் வியக்கவும் , வினா எழுப்பவும் செய்தது அந்த தருணத்தில் இவரின் செயல்பாடுகள் . இன்னும் அங்கு வசித்த பலருக்கும் இந்த புல்டோசர்கள் பயம் சிறிதேனும் இருக்கத்தான் செய்யும் . பகிர்வுக்கு நன்றி !
புதிய தகவல்கள். நன்றி சௌந்தர்.
நல்ல பதிவு நண்பா..
வாரிசுன்னா சும்மாவா..அவிங்களுக்கு இருக்குற பவரே தனிதாம்பா...நம்மூர்ல இன்னி தேதிக்கு நடக்கலைய்யா...,
(செளந்தர் நீங்க படிச்ச லிங்க் அல்லது புத்தகத்தின் பெயர் சொல்ரீங்களா...படிக்க வசதியாருக்கும்.)
@@@jay புத்தகம் பெயர் எமர்ஜென்சி minimax புத்தகம். அவர்கள் வலைத்தளம் https://www.nhm.in/shop/R.Muthukumar.html?sort=
இந்த விஷயத்தை பத்தி நான் கேள்வி பெட்டிரிக்கேன்..இது போல் நிறையை அநியாயங்கள் நடந்திருக்கு இன்னும் நடந்திட்டு தான் இருக்கு ..கௌண்டமணி பாஷையில் சொன்னா "அரசியலில் இதெல்லாம் சஹஜம் பா "...ஹி ஹி
////// சஞ்சய் அடுத்த குறி குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கும் வல்லரசு நாடாக மாற முடியாமல் போவதற்கும் இந்த பாழாய்ப்போன மக்கள் தொகைதான் காரணம் என்பது சஞ்சயின் கணிப்பு ////////
அந்த கணிப்புல தார பூச ! இதே மக்கள் தொகை இன்று அபரித மனித வளம் என்று மாற்றப்பட்டுள்ளது
அருமையான பதிவு சௌந்தர்..
நல்லா அலசி இருக்கீங்க பதிவுக்கு தேவையான நிறையா விசயத்த...வணங்குகிறேன் சௌந்தர்...
உங்க தைரியம் அருமை, நிறையா அரசியல் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க..
வாழ்த்துக்கள் இன்னும் நிறையா எதிர் பார்க்கிறோம் உங்க கிட்ட
Good post...nalla analyze panni eludhi irukeenga...vaalthukkal
அரசியலில் இது எல்லாம் சகஜம் ..அரசியல்வாதிகளைப்பற்றி தைரியமான பகிர்வு ,வாழ்த்துக்கள்.
நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டேன்....
Post a Comment