Monday, August 23

மணிமாறன்....

                                                                       
                                                                  





பொழுது விடிந்தது. சூரியன் அவனைத் தொட்டுப் பார்த்தது, மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கினான் மணிமாறன். குளித்து விட்டு..வந்தான். எப்போதும் கோவிலுக்கு சென்று விட்டு வேலைக்குச் செல்வது அவன் வழக்கம்..கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்தான்...

நண்பர்கள் வெளியே காத்திருந்தனர்....வெளியே வந்த மணிமாறன் இன்று நமக்கு எங்க வேலை என்று கேட்டான்..ஒரு ஆள் கையை வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்...கூட இருக்கும் இன்னொரு நண்பன் என்ன விசயம் அவன் கையை மட்டும் எடுக்க சொல்லி பணம் வந்து இருக்கு...மணிமாறன் டேய் கையா இருந்தா என்ன தலையா இருந்தா என்ன நமக்கு பணம் வந்தால் சரி.... அவர்கள் வேலையை முடித்து விட்டு வந்தார்கள்....


மாலை நேரம் செல் போன் மணி அடிக்க எதிர் முனையில் அவன் தம்பி அசோக் அண்ணா என்ன எப்போதும் நீயே போன் செய்து பேசுவாய் என்ன ஆச்சு உனக்கு...ஒன்றும் இல்லை அசோக் கொஞ்சம் வேலையா வெளியே போய்விட்டேன்..அப்படியே மறந்தது விட்டேன்....உனக்கு கல்லூரியில் எல்லாம் வசதியா இருக்கா விடுதியில் சாப்பாடு எல்லாம் நல்லாயிருக்கா ...இருக்கு அண்ணா நீ தான் எனக்கு எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கியே எனக்கு என்ன கவலை?


டாக்டருக்கு படிப்பது என்றால் பெரிய விசயம் என்று எல்லோரும் சொல்றாங்க நீ ரொம்ப நல்லா படிக்கணும் அது தான் என்னுடைய ஆசை...மணிமாறன் எப்போது பேசினாலும் இந்த வார்த்தை சொல்வது வழக்கம்..சரி அண்ணா தினமும் எனக்கு போன் செய் நல்லா சாப்பிட்டு தூங்கு நான் நாளைக்கு பேசுறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டான் அசோக்.

சில நாட்களுக்கு எந்த வேலையும் அவனுக்கு வரவில்லை....சிறிது நாள் கழித்து ஒரு கொலை செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல்வாதி மூலம் வேலை வருகிறது அவனுக்கு கொலை செய்வது ஒன்றும் புதியது இல்லை ஏற்கனவே கொலை செய்து இருக்கிறான்...கொலை செய்ய போகிறான் மணிமாறன் அவன் கத்தியை வைத்து அவனை குத்தி விட உடம்பில் இருந்து ரோஷத்துடன் ரத்தம் வெளியே வருகிறது ஏனோ அதை மணி மாறனால் பார்க்க முடிய வில்லை..அந்த இடத்தை விட்டு உடனே சென்று விட்டான்... 


நேரம் எட்டு மணியை காட்டியது அவன் தம்பியிடம் இருந்து போன் வரும் இன்னும் வரவில்லையே என்று புலம்பி கொண்டு இருந்தான்...மணிமாறன் போன் செய்தாலும் எந்த தகவலும் இல்லை மணி மட்டும் அடித்து கொண்டு இருந்தது...நேரம் பன்னிரெண்டை தொட்டது கைபேசி மணி ஒலித்தது கண் விழித்து பேசினான் அதிர்ச்சியான செய்தி கேட்டு ஆடி போனான்..அவன் தம்பிக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கேட்டு உடனே அங்கு சென்றான்...தலையில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டு இருந்தது..


மருத்துவர்கள் உடனே AB- இந்த வகை குருப் ரத்தம் தேவை படுகிறது என்று சொல்கிறார்கள் டாக்டர் எனக்கும் அந்த வகை ரத்தம் தான் என்று சொல்கிறான் உடனே ரத்தம் கொடுக்க செல்கிறான் ரத்த வங்கியில் நீங்க குடித்து இருக்கிங்களா என்று கேட்கிறார்கள் தயங்கி கொண்டே ஆமா என்று பதில் சொல்ல குடித்து இருந்தால் 24 மணி நேரத்திற்கு ரத்தம் எடுக்க கூடாது நீங்க வேறு யாராவது ரத்தம் கொடுங்கள் இல்லை என்றால் தனியார் ரத்த வங்கியிடம் வாங்கி வாருங்கள்

எந்த வங்கியில் கேட்டும் பலன் இல்லை இந்த வகை ரத்தம் கிடைப்பது மிகவும் சிரமம் எங்கும் ரத்தம் கிடைக்கவில்லை நேற்று தான் என் கண் முன்னால் ரத்தம் தண்ணிரை போல வீணாக ஓடியது என்று நினைத்து பார்த்தான் மணிமாறன், தான் செய்த பாவம் தன் தம்பியை பலி வாங்கி விடுமோ என்று பயந்தான், ரத்தத்தின், மதிப்பும் உயிரின் மதிப்பும் இப்போது நன்றாகவே தெரிந்து கொண்டான், ஏதோ ரத்த வங்கியில் இந்த வகை ரத்தம் இருப்பதாக தகவல் கிடைத்து சந்தோசம் அடைந்தான். ரத்தம் வரவழைக்கப்பட்டது....

ஒரு நல்ல முடிவை எடுத்தான் மணி மாறன் என் தம்பி என்றவுடன் என் மனம் பதறியது, உடல் நடுங்கியது எத்தனை பேருக்கு நான் கெடுதல் செய்து இருக்கிறேன் இனி நான் புதிய மனிதனாக வாழப்போகிறேன் என்ற முடிவுக்கு வருகிறான்..மறுநாள்...தன்னுடைய ரத்தம் தன் தம்பி போல வேறு யாருக்காவது உதவும் என்று ரத்தம் கொடுக்க சென்றான், ரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்த அவனுக்கு தன் உடம்பில் இருந்த கெட்ட ரத்தம் எல்லாம் போனது போல உணர்வு ...திடீர் என்று யாரோ ஒருவன் மணிமாறனை கத்தியால் குத்தி விடுகிறான் கிழ விழும் ரத்தத்தை பூமாதேவி ருசி பார்க்கிறாள் என்ன நினைத்ததோ பூமா தேவி அவன் ரத்தத்தின் ருசி பிடித்து விட்டது போல உடலையும் சேர்த்து ருசி பார்த்து விட்டது..

கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்..





27 comments:

Unknown said...

கதையின் நீதி ... சரியாக சொல்லப்பட்டு இருக்கிறது ...

Unknown said...

நான்தான் ஒன்னவதா ?


வாசித்தோம் மகிழத்தக்கது

Chitra said...

ரத்தத்தின், மதிப்பும் உயிரின் மதிப்பும் இப்போது நன்றாகவே தெரிந்து கொண்டான், ......

..... உயிரின் மதிப்பு தெரியாமல் எத்தனை பேர் வாழ்கிறார்கள் .....வீழ்கிறார்கள்..... மடிகிறார்கள்.....

Chitra said...

கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்..


.....well...... interesting thought!

அருண் பிரசாத் said...

நல்ல கதை + நீதி செளந்தர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரியான நீதி கதை. சூப்பர் சௌந்தர்

Anonymous said...

நல்ல நீதி செளந்தர் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல நீதி கதை.

Anonymous said...

"கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்.."

புது சிந்தனைக்கு நன்றி ..கதை நல்லா இருந்தது பகிர்வுக்கு நன்றி

என்னது நானு யாரா? said...

///கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்..///

அப்படி எல்லாம் சொல்லிட முடியாது சௌந்தர். அவன் செத்ததே, அவன் கடந்த காலத்தில செய்த கெட்ட காரியங்களால தான். நாம செய்கிற எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு.

ஒருத்தன் திடீர்ன்னு நல்லவனா மாறிவிட்டா இயற்கை நியதி சும்மா விட்டுவிடுமா என்ன?

என்னது நானு யாரா? said...

///கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்..///

அப்படி எல்லாம் சொல்லிட முடியாது சௌந்தர். அவன் செத்ததே, அவன் கடந்த காலத்தில செய்த கெட்ட காரியங்களால தான். நாம செய்கிற எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு.

ஒருத்தன் திடீர்ன்னு நல்லவனா மாறிவிட்டா இயற்கை நியதி சும்மா விட்டுவிடுமா என்ன?

ஜீவன்பென்னி said...

கதை நல்லாத்தான் இருக்கு. தனக்கு வந்தாத்தான் தெரியும் வலியும் வருத்தமும்.

dheva said...

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவான்.

இது வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் விசயம். ஊருக்கே வலித்த போது உணரமால் தான் தன் உறவினன் என்றால் வலித்ததில் மறைந்து இருப்பது சுய நலம். மிகைப்பட்ட பேர்கள் இப்படித்தான் தம்பி. தன் தட்டில் சாப்படு விழுந்தால் சரி...என் பசி தீர்ந்தால் சரி....

ஆமாம் ஒரு கருவை கையில் எடுத்துக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கும் உன் பரிமாண மாற்றத்தை கூர்ந்து கவனிக்காமலில்லை நான். ஆச்சர்யங்களை வெளிக்காட்டாமல் அடுத்த அடுத்த உன் படைப்புகளை எதிர் நோக்கி காத்திருக்க செய்து விட்ட நீ...... " படைப்பாளிதான்"

குடித்ததன் காரணமாக இரத்த்க் கொடுக்க முடியவில்லை.... - குடிப்பவர்கள் நிற்க வேண்டிய இடம்...கவனிக்க வேண்டிய வரிகள்.....!

நியூட்டனின் மூன்றாம் விதி....எல்லோருக்கும் பொருந்தும். உனக்கும் தம்பி... நல்ல கருத்துக்களை எழுத்தில் கொண்டுவர நினைத்திருக்கும் உன்னுடைய வயசு குறைவு என்றாலும்....எண்ணம் மிக உயர்வு....

இலக்குகள் உடைத்து ....காட்டாறு போல கரை புரண்டு வர வாழ்த்துக்கள்!

Jay said...

சௌந்தரின் 75 வது பதிவிற்கு தேவாவின் கருத்து மிகவும் பொருத்தமாய் இருக்கின்றது.

Jey said...

//கெட்டவனாக இருக்கும் வரை பூமி தேவிக்கு மேல் இடம் கிடைக்கும் நல்லவர்களா மாறிய பின்பு பூமி தேவி மடியில் இடம் கிடைக்கும்...//

கதையின் உட்கரு....சூப்பர்.

Jey said...

//
Your comment will be visible after approval.//

இந்த கருமத்தை எடுத்து தொலைப்பா..., மிஞ்சி போனா என்ன திட்டிரப் போராங்க..., பாவம் திட்டுனாதான்...திட்டிட்டு போகட்டுமே..., அவங்க சந்தோசம்தான் நம்ம சந்தோசம்...

அருண் said...

கதை அருமையாயிருக்கு,நீதி புதுசா இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்தினை உட்கொண்ட கதை. மேலும் படைத்திட வாழ்த்துக்கள்.

வெங்கட்.

Kousalya Raj said...

கதைகளை சும்மா பொழுது போக்கிற்காக என்று எழுதாமல், அதில் முகத்தில் அறையகூடிய கருவை வைத்து எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்லை.

சின்ன வயதில் பெரிய பக்குவம்...

பெருமையாக இருக்கிறது சௌந்தர்...வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை said...

நல்ல கதை, ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டும் இது போன்ற கதைகளை நிறைய எழுதுங்கள்.

Jeyamaran said...

இதுதான் உலகம் கெட்டவை காக்கும் நல்லவனை வீழ்த்தும் தீயவனாக இருந்தால் உயிருடன் இருக்கலாம் நலவனாக மாறினால் மரணம் இது புதிதல்ல

சீமான்கனி said...

நிறைய கேட்டு பார்த்த கதை என்றாலும் நீங்கள் கதை சொல்லிய விதம் அருமை....இறுதிவரிகள் மனதை கவர்கிறது...தொடர்ந்து இதுபோல நல்ல கதைகளை எதிர் பார்கிறேன்....வாழ்த்துகள் சௌந்தர்...

ஜெய்லானி said...

//இந்த கருமத்தை எடுத்து தொலைப்பா..., மிஞ்சி போனா என்ன திட்டிரப் போராங்க..., பாவம் திட்டுனாதான்...திட்டிட்டு போகட்டுமே..., அவங்க சந்தோசம்தான் நம்ம சந்தோசம்..//

இப்பதான்யா முதல் தடவையா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு நேர்மையா சொல்லிருக்க பாரு..

ஜெய்லானி said...

கதையின் கடைசி வரி யோசிக்க வைத்து விட்டது..

செல்வா said...

///ரத்த வங்கியில் நீங்க குடித்து இருக்கிங்களா என்று கேட்கிறார்கள் தயங்கி கொண்டே ஆமா என்று பதில் சொல்ல குடித்து இருந்தால் 24 மணி நேரத்திற்கு ரத்தம் எடுக்க கூடாது ///
அருமையான இடத்துல சொல்லிருக்கீங்க ..!!
//பூமா தேவி அவன் ரத்தத்தின் ருசி பிடித்து விட்டது போல உடலையும் சேர்த்து ருசி பார்த்து விட்டது..
//
முடிவு இப்படித்தான் இருக்கணும் .. பட்டைய கிளப்பிட்டீங்க ..
நான் ஒரு விசயத்த சொல்லுரக்கு ஒரு கிலோ மீட்டர் எழுதுவேன் ..
நீ டப்புன்னு சொல்லிட்ட.. சூப்பர்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கதை... நீதி ரெண்டும் நல்லா இருக்குங்க... எழுதினா விதமும் நல்லா இருக்கு

எஸ்.கே said...

அருமை எழுத்து நடை சிறப்பாக உள்ளது!

 
;