Thursday, August 26

இளைஞர்களின் புதிய இயக்கம்..


                                                      
இனி ஒரு..இனி ஒரு விதி செய்வோம் விதியினை மாற்றும் விதி செய்வோம்


இளைஞர்கள் சேர்ந்து தொடங்கி இருக்கும் மாயா இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 15. 2009 அன்று தோற்றுவிக்கப்பட்டது இளைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது 

அதற்காக ஒரு வலைபதிவு தொடங்கி இருக்கிறார்கள் எப்படி நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள்... இந்தியாவையே உயர்த்திக் காட்டுகிறேன்," என்று விவேகானந்தர் கேட்டாரோ அதை போல மாயா இந்தியா இளைஞர்களை கேட்கிறது..


நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கிறது அதில் இதுவும் ஒன்று என்று நினைத்து விடாதீர்கள் ஒரு சின்ன தீ பொறி இருந்தால் அதை வைத்து பெரிய தீ பந்தம் உருவாக்கி விடலாம்...  இளஞர்கள் அதரவு இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் வாருங்கள் மாயா இந்தியாவிற்கு 

இந்தியாவை முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்

நீங்கள் எங்கே இருந்தாலும் சரி.எந்த நாட்டில் இருந்தாலும் சரி,எந்த ஊரில் இருந்தாலும் சரி. நீங்கள் அங்கு இருந்தபடியே உங்கள் சேவையை நம் நாட்டிற்கு அர்ப்பணிக்கலாம், உங்கள் தொண்டை நம் இயக்கத்திற்கு செய்யலாம். உங்களின் நாட்டிற்காக சேவை செய்யும் நல்ல உள்ளம் மட்டுமே இப்போது தேவை என்று கேட்கிறது மாயா இந்தியா


மாயா இந்தியா குறிக்கோள்கள் 

*  இந்தியாவை கயவர்களின் கையில் இருந்து எடுத்து நம் இந்திய மக்களுக்கே பரிசளிப்பது.

*  அனைத்து தரப்பு மக்களையும் உண்மையான சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வது

*  தேவைப்படுவோருக்கு தேடிச் சென்று உதவுதல்.

*  கண் எதிரே நடக்கும் அநீதிகளையும் காதால் கேட்கும் அநீதிகளையும் நேரில் சென்று நியாயம் பெற்றுத் தருவது.  

*  அனைவரும் சாக்கடை என்று சொல்லும் அரசியலில் துணிந்து இறங்கி சுத்தம் செய்வது 

*  அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச சட்ட உதவி பெற்றுத் தருவது 

*  அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்வது

*  எல்லாவற்றுக்கும் முதல் செயலாக நம் இந்தியாவை முன்னேற்ற துடிக்கும் அனைத்து இளைஞர்களையும் ஒன்றினைப்பது 


மேலும் இந்த இயக்கத்தில் எப்படி இணைவது இயக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த வலைதளத்தை பார்க்கவும்..மாயா இந்தியா







21 comments:

அருண் பிரசாத் said...

நல்லது. பார்கிறேன் செளந்தர்

Kousalya Raj said...

நல்ல யோசனைகள்...வாழ்த்துக்கள்

புவனேஸ்வரி ராமநாதன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

செல்வா said...

இதோ பார்வையிடுகிறேன்..!
எனக்கு இது புதிய தகவல் ..
//அனைவரும் சாக்கடை என்று சொல்லும் அரசியலில் துணிந்து இறங்கி சுத்தம் செய்வது
//
அரசியல் நிச்சயம் சாக்கடை அல்ல. ஒரு சிலரால் அது அப்படி அழைக்கப்படுகிறது..

Mohamed Faaique said...

நல்ல யோசனைகள்...வாழ்த்துக்கள்

111 said...

என்னலே...நாட்ட நட்டுக்க நிப்பாட்ட கெளம்பிட்டீகளா...,

”சின்னப் பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு” ஊர்ப்பக்கம் சொல்லுவாகலே... பாத்து...

என்னது நானு யாரா? said...

நல்ல தகவல் சௌந்தர். அந்த வலைபதிவு பக்கம் போய் பார்க்கிறேன். "ஊர் கூடி இழுத்தா தானே தேர் நகறும்"

பகிர்வுக்கு நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பகிர்வுக்கு நன்றி! நானும் படிக்கிறேன்

தினேஷ்மாயா said...

ரொம்ப சரியா சொன்னீங்க..
ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது. இரு கைகள் இணைந்தால் மட்டுமே ஓசை வரும். பல கைகள் இனைந்தால் உலகையே நம் கைகளில் கொண்டு வரலாம் என்பதை நாம் உண்மையாக்கி காட்டுவோம். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி சௌந்தர்..

Jay said...

இதெல்லாம் தேவையில்லாத வேலை.
தனி மனிதன் திருந்தினாலே போதுமானது.
தனி மனிதன் என்பது அரசியல் வாதியையும் சேர்த்து தான். மற்றபடி இந்த இயக்கமெல்லாம் வீண் தான்.

sakthi said...

நல்ல பகிர்வு

krishna said...

I want to do something for the people and the nation.I am very inspiring

ஜிஎஸ்ஆர் said...

நல்ல சிந்தனை நாங்களும் இனைகிறோம் ஆனால் என்ன இந்த இனைய உலகில் எதுவும் எப்படி சாத்தியமோ அதேவகையில் பாதுகாப்பில்லா தன்மையும் இருக்கிறது , மாயா இந்தியாவை பற்றி கூடுதல் விபரம் தேவை தம்பி

கருடன் said...

நல்ல பகிர்வு.... நன்றி!

Jeyamaran said...

நல்ல முயற்சி நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்..........

elamthenral said...

மிக்க நன்றி தம்பி சௌந்தர்... இதுப் போல் பல பேரின் ஆதரவுக்கு மிக்க நன்றி... ஒன்று சேர்வோம் இந்தியாவை உயற்றிக்காட்டுவோம்... வாருங்கள் நண்பர்களே!!!!....

vinthaimanithan said...

ம்ம்ம்ம்....

கவி அழகன் said...

நல்ல தகவல் சௌந்தர்

சீமான்கனி said...

சிறப்பான பகிர்வு நன்றி சௌந்தர்....

Chitra said...

நீங்க சேர்ந்தாச்சா, சௌந்தார்ஜி? :-)

ஜில்தண்ணி said...

ம்ம்ம்ம் இப்படியும் இயக்கமா போய் பார்க்கிறேன்

 
;