Friday, August 27

புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...


புகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்று விட்டு வெளியே வரும் உணவை நாம் மறு படி உண்பது இல்லை, அதை போல் தான் வெளியே வரும் புகையும் ஒரு கழிவு.


ஆனால் புகை பிடித்து வெளியே விடுவார் அதை மீண்டும் அவர் சுவாசிப்பார்...அவர் பக்கத்தில் இருப்பவரும் அதை சுவாசிக்க வேண்டும்  அவர்கள் வெளியே விடும் புகை மற்றவர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கும் கெடுதல் வீட்டில் குழந்தை இருக்கும் அப்படியே இவர்களும் புகை பிடிப்பார்கள்...நான் தான் புகை புடிக்கின்றேன் குழந்தைக்கு எதுவும் ஆகாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை சிறு வயதில் இருந்தே இந்த புகை உடலுக்கு சென்றால் எதிர் காலத்தில் மிக கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..

                                                                    
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள்

புகை பிடித்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இது முதன்மையாக மனம் மகிழ்விக்கும் போதைப் பயன்பாட்டினை நிர்வகிக்கும் வழிமுறையாக நடைமுறையிலுள்ளது. அப்போது எரிதலுக்குள்ளாகும் பொருள் போதைப் பொருளிலுள்ள நிகோடின் போன்ற சுறுசுறுப்பான பொருட்களை வெளியிடுகிறது. அவற்றை நுரையீரல் வழியாக உறிஞ்சப்பட்டு கிடைக்கச் செய்கிறது.

                                                                        
சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா?

புகை பிடிப்பதால் வரும் தீமைகள் 

*  அடிகடி உடற் சோர்வு ஏற்படும்


*  வேலையில் கவனமின்மை,புகை பிடிக்க அடி கடி வெளியே செல்வார்கள் 

*  ஆஸ்துமா பிரச்னை வரும் 

*  உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண் இருந்தால் பிறக்கும் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்கும் 



புத்தாண்டு முதல் அல்லது வரும் பிறந்த நாள் முதல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று சபதம் எடுப்போம் எல்லாம் மறு நாளே முடிந்து விடும் நம் மனதிற்கு நம்மே கட்டுபாடு வைத்து கொள்ள வேண்டும் 


                                                                    
புகை புடிப்பதை விடுவதற்கு சில வழி முறைகள் 

மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

*  சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம். 

*  குழந்தைகளுடன் விளையாடலாம். விளையாடினால் நேரம் செல்வதே தெரியாது

*  காலையில் யோகா,தியானம், மாலை வாக்கிங்,  

*  புகை பிடிப்பதால் நமக்கு மட்டும் பிரச்னையில்லை நம் குடும்பத்திற்கும் பிரச்னை என்று நினைக்க வேண்டும். 

நீ மறைந்த பிறகுதான் வைப்பார்கள் கொள்ளி ஏன் உயிருடன் இருக்கும் போதே தினமும் வைத்து கொள்கிறாய் கொள்ளி 





31 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ டெரர் நல்லா கேட்டுகோங்க ராசா.. இதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்குதான். நம்ம சௌந்தர் தம்பி சொன்ன மாதிரி நடக்கலைனா துபாய்க்கு ஆம்புலன்ஸ் வரும்...

அருண் பிரசாத் said...

நீங்க எவ்வளவு பயங்கரமான படத்தை போட்டாலும் புகை பிடிப்பவர்கள் அதைவிட மாட்டார்கள்

Anonymous said...

kattaiyam yielaroom padika vendiya blog soundar padatha parthavadu tirundu vargalani parkalam.

Unknown said...

நல்ல பதிவு..

vinthaimanithan said...

யோவ் இந்த மாதிரி படம் போட்டா நான்லாம் எப்டிய்யா சிகரெட்டு பிடிக்கிறது?

செல்வா said...

ஐயோ .. இந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க ..
இந்த புகைப் பழக்கம் மிக கொடூரமானது..
பீடி ஒரு கட்டு 8 ரூபாய் .. சிகரட் 4 ரூபாய்.
ஒரு நாளைக்கு 5 சிகரட் பிடிச்சா கூட 20 ரூபாய் ஆகுது.
ஒரு நாளைக்கு 20 ரூபாய்னா ஒரு வருசத்துக்கு 7300 .. எப்பா எவ்ளோ செலவு பண்ணுறாங்க .. இதால உடம்பும் கெடுது...

dheva said...

தம்பி.......இதைப் பார்த்து பயந்தாவது சிகரட்டை நிறுத்துவீர்களா? உன் மறைமுகமான ஆதங்கமும்....கேள்வியும்....புரட்டி போடுகிறது மனதை....


விழிப்புணர்ச்சியில் விடியுமா நளைய புதிய உலகம்....???????


வாழ்த்துக்கள் தம்பி...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் அவசியமான பதிவு நண்பா...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல இடுகை நண்பரே. “Cigarette: Fire at one end and Fool at the Other" என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது!

வெங்கட்.

ஜில்தண்ணி said...

ஏங்க இது கெட்ட பழக்கமாக இப்ப யாரும் பாக்கல

யூத்துகளுக்கு இது பேஷனாயிடுச்சி :) தம்மடிக்காத எங்கள பால்வாடி பசங்க என்று கிண்டல் வேறு

டேய் யூத்துங்களா

ஏண்டா சிகரெட்ட ஊதி ஊதி உங்களுக்கே நீங்க சங்கு ஊதிக்கிறீங்க

Riyas said...

அருமையானதும் தேவையானதுமான பதிவு நண்பா..
//புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.//

பட்டால்தான் தெரியும்..

பரதேசி said...

சேரி..படிச்சு படிச்சு டென்ஷன் ஆய்டுச்சு.ஒரு தம்ம போட்டு வரேன்.

என்னது நானு யாரா? said...

சும்மா வாயில சொன்னா பத்தாதுன்னு அதை படம் போட்டு காண்பிச்சிட்டீங்க. நன்றி! என்னுடைய பாதிப்பா இது? நீங்களும், உடல நலன் சம்பந்தபட்ட விஷயம் சொல்லி இருக்கீங்க!

இந்த படங்களை எல்லா சிகரெட் விக்கிற கடையிலேயும் பெரிசா மாட்டனும் சௌந்தர். ஜனங்க படங்களை பாத்து பயந்து திருந்தினாத்தான் உண்டு.

என்னது நானு யாரா? said...

பதிவுகளை லேபில் போட்டு வகைபடுத்தி வையுங்க அப்பு!

அப்பத்தானே அதை தேடி படிக்க முடியும். சரிதானே?

Jey said...

இருங்கப்பா ஒரு தம் போட்டுட்டு வரேன்...

சௌந்தர் said...

@@@ jey ஹலோ இருங்க உங்க வீட்டு அம்மணி கிட்ட சொல்றேன் அப்படியே இந்த பதிவு+போட்டோ இந்த கமெண்ட் காட்டுறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

படங்கள் பார்க்க கொஞ்ச பயமா இருந்தாலும்... சொல்ல வந்த விசியத்த உணர்தற மாதிரி இருக்கு... நல்ல பதிவு... இந்த விழிப்புணர்வு இன்னும் பரவணும்...

balajikannan said...

very good concept

Jeyamaran said...

நல்ல முயற்சி நண்பா தொடர வாழ்த்துகள் அப்படியே எனக்கு ஒரு 555 சிகரெட் பாக்கெட் பார்சல்

ஜெயந்தி said...

அவசியமான இடுகை.

ஹேமா said...

படமே பயமாயிருக்கு.எப்பிடிச் சொன்னாலும் கேக்கிற ஜென்மங்கள்தான் இதையெல்லாம் கேட்டுக்கும் சௌந்தர்.

Chitra said...

இதை பார்த்த பிறகும், யாராவது புகை பிடித்தார்கள் என்றால்....... (let them have what they deserve then....)

ஜெய்லானி said...

இந்த பதிவு எனக்கில்லை ஏன்னா எனக்கு சிகரட்டை கண்டாலே அசிங்கமா திட்ட ஆரம்பிசுடுவேன் ... !!!.

Unknown said...

நல்ல பதிவு..

Sriakila said...

எத்தனை தடவை எழுதினாலும், எவ்வளவு பயங்கரமாப் படம் போட்டாலும் திருந்துபவர்கள் தானாய்த் திருந்தினால் தான் உண்டு.

Prathap Kumar S. said...

அரசாங்கமே கம்முன்னு இருக்குது...நாம சொல்லி என்னாகப்போகுது...
வாய் நம நமங்குது.. இரு ஒரு காஜா பீடி இழுத்துட்டு வந்தடறேன்.....:)

Good citizen said...

அருமையிலும் அருமை சார்,,ஆனா ங்கொய்யால
அதற்கு பதிலாக காப்பிக் குடிக்க சொல்றீங்கள ஞயமா
காப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கே போய் பார்க்கவும்
http://news.softpedia.com/news/Top-14-Coffee-Effects-on-Your-Health-70537.shtml

தினேஷ்மாயா said...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது !!!

Vadamally said...

miga arumaiyana payanulla padhippu.

nandri

Unknown said...

nalla visayam than i will try to leave in smoking.......thanx

BaraniDharan said...

I m also try to leave this habit..Excelent article boss.. keep it up..I was shown this artticle into near by 5 colleagues in my office all r smokers..Including me..Now i got some aware from u..thnx...

 
;