Friday, September 24

என் பயணம்....





நாங்கள் வருடா வருடம் சிவராத்திரிக்கு எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்வோம்.  காரில் தான் பயணம்.  செய்வோம் சென்னையில் இருந்து 600 கிமீ தொலைவில் வத்தலகுண்டு என்ற ஊரை தாண்டி தேவதான பட்டி என்ற கிராமத்தில் அந்த கோவில் உள்ளது. எங்களுக்கு விவரம் தெரிந்து அந்த கோவிலுக்கு அப்போது தான் சென்றோம்.  வத்தலகுண்டு வரைக்கும் தான் வழி தெரியும், அதற்கு பிறகு தேவதான பட்டிக்கு போக வழி தெரியாது, யாரையாவது கேட்டுத் தான்   போக வேண்டும். எங்கு கோவில் இருக்கு என்று தெரியாது. 
  

சென்னையில் (மணலி புது நகர்) இருந்து கிளம்பினோம். சென்னை எல்லையை தாண்டுவதற்கு மூன்று மணி நேரம் ஆனது எங்க அண்ணன் தான் கார் ஓட்டுவார், தேசிய நெடுஞ்சாலை வந்தவுடன் எங்களுக்கு பயம் வந்து விடும். எங்க அண்ணனுக்கு அடிகடி தேசியநெடுஞ்சாலையில் பயணம்  செய்வதால் பயம் இல்லை, 

அங்கு விபத்து நடந்து நொறுங்கிய வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும், அதைப் பார்க்கும் பொழுது பயம் மேலும் அதிகரிக்கும், நம்ம வண்டிக்கும் விபத்து நடந்தால் நாளை இப்படி தான் நிறுத்தி வைப்பார்களோ என்று மனதிற்குள் தோன்றும்.  வண்டி ஓட்டும் எங்க அண்ணனை டேய் ஒழுங்கா வண்டி ஓட்டுடா பொறுமையா ஓட்டுடா என்று கிண்டலுக்கு சொல்வேன். (கிண்டல் எல்லாம் இல்லை உள்ள இருக்கும் பயம்) நன்றாக தான் வண்டி போய்கொண்டு இருந்தது 

ஒரு இடத்தில் டீ குடிக்க வண்டியை நிறுத்த சொன்னோம். ஸ்கார்பியோ (scorpio)  காரை அப்படியே ஒயிலாக நிறுத்துகிறேன் சொல்லி, பாதி வெட்டி வைத்து இருந்த மரத்தில் டயர் அடி வாங்கியது, ஆனா ஒன்றும் ஆகவில்லை அங்கேயே கொஞ்சம் நேரம் இருந்தோம் டீ குடிக்க வண்டியை நிறுத்தி விட்டு டீ குடிக்காமலே கிளம்பினோம், எங்க அண்ணனை சொன்னோம், ஒழுங்கா ஊருக்கு கொண்டு போய் சேர்த்துவிடு, டீ குடிக்கனும் சொன்னது குத்தமா என்று கேட்டோம்,  இவன் நமக்கு பால் வாங்கி தர ஏற்பாடு செய்றான் எல்லாம் கொஞ்சம் உசாரா இருங்க நான் சொன்னேன்.


திருச்சியை நோக்கி வண்டி சென்று கொண்டு இருந்தது, போகும் வழியில் ஒரு கார் எங்களைமுந்தி செல்லப் பார்த்தது நாங்க அந்த காரை விட வேகமா சென்றோம் அந்த காரை முன்னே செல்ல விடமால் தடுத்தோம், அந்த காரும் எங்களையே தொடர்ந்து வேகமாக வந்தது, இப்படி ஒரு கிலோ மீட்டர் வரை அந்த கார் எங்களை பின் தொடர்ந்தது, சரி அந்த காருக்கு வழி 
விடுவோம் என்று முடிவுக்கு வந்து வழி விட்டால் அவர்கள் காரை நிறுத்தி உங்கள் கார் டயர் "பஞ்சர்" என்று சொல்லிவிட்டு போனார்கள், காரில் இருந்த நாங்கள் அனைவரும் சொன்னோம் நீ 
நல்லவன் டா... நீ நல்லவன் டா... யாறோ ஒருவர் அவர் நாங்கள் அவரை முந்தி செல்ல பார்த்தாலும் நாங்கள் எப்படி போனால் என்ன என்று இருக்காமல் எங்களுக்கு உதவி செய்தார் மனித நேயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது 

அது தேசிய நெடுஞ்சாலை அங்கு டயர் மாற்ற முடியாது அப்படியே பொறுமைய வண்டியை ஓட்டிக் கொண்டு திருச்சி சென்று "பஞ்சர்" சரி செய்தோம். டீ குடிக்கும் இடத்தில் டயர் அடி வாங்கியது தான் "பஞ்சர்க்கு காரணம், பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை இருந்தது அப்படியே சரி செய்து விட்டு நல்ல ஓட்டல் இருக்கும் இடமா பார்த்து நிறுத்தி அந்த வேலையை முடித்து விட்டு போவோம் என்று பார்த்தால், கோவிலுக்கு போகும் போது non veg சாப்பிட கூடாதாம் என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டார்கள், அடுத்த வருடம் அந்த rules எல்லாம் உடைத்து விட்டோம், non veg சாப்பிட்டு தான் போனோம்.  


எப்படியோ வத்தலகுண்டு வந்து சேர்ந்தோம் அப்போ மணி 3.30AM  அங்கயே ரூம் எடுத்து தங்கி விட்டு காலையில் தேவதானபட்டிக்கு போகலாம் என்று சொன்னோம். கோவில் இடம் இருக்கும் அங்கே போய் படுக்கலாம் என்று எங்க அம்மா சொன்னார்கள், நாங்களும் சரி ஊருக்கு உள்ளே போகலாம் என்று கிளம்பினோம். தேவதானபட்டிக்கு எந்த வழியில் போகணும் என்று கிலோ மீட்டர் போர்டை பார்த்தால் அதில் சினிமா போஸ்டர் ஒட்டி வைத்து இருந்தார்கள் அதை கிழித்து விட்டு எந்த வழி என்று பார்த்து தேவதானபட்டிக்கு சென்றோம். அங்கே பார்த்தால் வஜ்ரா வண்டி நின்றுக் கொண்டு இருந்தது. எங்களுக்கு ஒரே குழப்பம், அங்கு சில போலீஸ்காரர்கள் நின்றுக் கொண்டு இருந்தனர். அவர்களை கேட்டால் இங்கு ஒரு பிரச்னை நடந்து இருக்கு, நீங்க பார்த்து போங்க எனச் சொன்னார்கள், பிரச்னை என்று சொன்னார்களே தவிர என்ன பிரச்னை என்று சொல்ல வில்லை 


அந்த ஊரில் "ஜாதி கலவரம்" நடந்து இருக்கு தடுக்க வந்த மூன்று போலீஸ்காரர்களை வெட்டி விட்டார்கள் அந்த கிராம மக்கள், அடடா நாங்க வந்த நேரம் பார்த்தா ஜாதி கலவரம் வர வேண்டும் என்று நினைத்து கொண்டோம். அப்படியே கோவிலுக்கு சென்றால் அங்கு யாரும் இல்லை. மறுபடி வத்தலகுண்டு வந்து ஒரு அறை எடுத்து தங்கி விட்டு காலை மீண்டும் தேவதான பட்டி வந்தோம், நாங்கள் 20 வருடத்திற்கு முன்பு எப்படி பார்த்தோமா அப்படி தான் இப்போதும் இருந்தது 

சிவராத்திரி இரவு கோவில் அருகில் முருகன் மலை உள்ளது மலை மேல சிவன் கோவில் உள்ளது அங்கு பூஜை நடக்கும், எங்க அண்ணன், எல்லாம் மலை ஏறி சாமி கும்பிட சென்று இருந்தனர், மறு நாளை காலையில் மலையிலிருந்து இறங்கி வந்தவர்களை அழைத்து வரலாம் என்று காரை எடுத்தால் கார் ப்ரேக் பிடிக்க வில்லை. என்ன செய்வது அன்று இரவு சென்னை திரும்ப வேண்டும், அந்த சின்ன கிராமத்தில் scorpio காருக்கு ஏற்ற மெக்கானிக் யாரும் இல்லை.   ப்ரேக் இல்லாமல் handbrake மட்டும் வேலை செய்தது.

அன்று இரவு சென்னை திரும்ப வேண்டுமே, என்ன செய்வது என்று யோசித்து ஊரில் இருக்கும் எங்க அண்ணன்கள் எல்லாம் லாரி ஓட்டுபவர்கள் அவர்கள் யரோ தெரிந்த மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து என்ன காரணம் ஏன் ப்ரேக் புடிக்க வில்லை என்று கண்டறிந்தனர். ஒரு வீலில் மட்டும் ப்ரேக்சூ தேய்ந்து விட்டதாகவும், இந்த ப்ரேக்சூ இங்கு கிடைக்காது, திண்டுக்கல் போய் தான் வாங்கணும் அங்கேயும் அந்த பொருள் கிடைக்க ரெண்டு நாள் ஆகும் என்று கூறினார், 

என்ன செய்வது நாளை சென்னையில் இருக்கணும் என்று யோசித்து நான்கு வீலில் ஒரு வீலில் தான் ப்ரேக்சூ தேய்ந்து இருந்தது, அந்த ஒரு வீலில் இருந்து அந்த ப்ரேக்சூவை கழட்டி வைத்து விட்டு காரை ஓட்டலாம் ஆனா அது ரொம்ப ஆபத்து, வேகமாக போகும் போது ப்ரேக் புடித்தால் செயல் இழந்து விடும் என்று மெக்கானிக் கூறினார். அதனால் இரவு பயணத்தை ரத்து செய்து விட்டு பகலில் பொறுமையாக சென்னை வரலாம் என்று முடிவு எடுத்தோம், ப்ரேக் பிடித்தாலும் வண்டி உடனே நிற்காது எந்த நேரத்திலும் ப்ரேக் செயல் இழுக்கும் என்று தெரியாது. அதனால் பயந்து, பயந்து வண்டியை ஓட்டி வந்தோம். எதிரில் வரும் லாரியை பார்த்தல் எமன் வருவது போல் இருக்கும், சென்னை வரும் வரை பயந்து பயந்து வந்தோம் நல்ல வேலையாக ஒன்றும் நடக்க வில்லை நல்லபடியாக வந்து சேர்ந்தோம்.   


டிஸ்கி :நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி


 

77 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப திகிலாத்தான் எழுதியிருக்கீங்க.

இம்சைஅரசன் பாபு.. said...

மித வேகம் மிக நன்று

வெங்கட் நாகராஜ் said...

திகிலான பயண அனுபவம்... ”மித வேகம்.... மிக நன்று” - ரிப்பீட்ட்ட்ட்ட்ட்.....


வெங்கட்.

என்னது நானு யாரா? said...

திகில் ஸ்டோரி சொல்லி இருக்கீங்க! சரி! டயர் பஞ்சர் ஆனா எப்படி வண்டி போச்சுன்னும் சொல்லுங்களேன்? குழப்பமா இல்ல இருக்கு!

சௌந்தர் said...

@@@@என்னது நானு யாரா?

அது ஒன்னும் இல்லை டயரில் கொஞ்சம் காற்று இருந்தது 5 நிமிடத்தில் திருச்சி வந்து விட்டது அங்க சரி செய்து விட்டோம்

இம்சைஅரசன் பாபு.. said...

நாங்க இதுக்கு தன கார் எடுக்கிறதே கிடையாது
இருக்கவே இருக்கு நம்ம கட்ட வண்டி போகிடே இருக்கும் அப்ப அப்ப புல்லு இருக்கிற எடம பார்த்து மாட்டஅவுத்து விட்ட போதும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவதானப்பட்டி நமக்கு தெரிஞ்ச ஊர்தான். அது இப்ப எந்த ஊர் பக்கத்துல இருக்கு?

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//அடுத்த வருடம் அந்த rules எல்லாம் உடைத்து விட்டோம், non veg சாப்பிட்டு தான் போனோம்.///

வெரி குட்.. அப்படித்தான் இருக்கோணும்... நல்ல வேளை, சாப்ட்டு போட்டு, சாமிக்கு ஒரு பார்சல் வாங்கிட்டு போகாம விட்டீகளே..... :D :D

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//டிஸ்கி :நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி ///

ஹ்ம்ம். கரெக்ட்.. அடுத்த முறை எல்லாம் வெளியூர் போகும் போது, சூதானமா பாத்து போயிட்டு வாங்க..ஓகேயா..!!

பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி... :)

அருண் பிரசாத் said...

தம்பி, விஜய் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது…
தம்பி, விஜய் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு///

@@@அருண்
அவ்வளவு மொக்கையா வா இருக்கு பதிவு

அருண் பிரசாத் said...

//அவ்வளவு மொக்கையா வா இருக்கு பதிவு //

இல்லைப்பா, அவ்ர் தான் இந்த மாதிரி வீரசாகசம்லாம் பண்ணுவார்.

இம்சைஅரசன் பாபு.. said...

//இல்லைப்பா, அவ்ர் தான் இந்த மாதிரி வீரசாகசம்லாம் பண்ணுவார். //
அதுவும் கரெக்ட் தான் நீங்க கையால டயர் அ புடிச்சிருக்கலாம் இல்லையா சௌந்தர் ...............

சௌந்தர் said...

@@@இம்சைஅரசன் பாபு..

அப்போ குருவி படம் வரலை வந்து இருந்தா அதை போல செய்து இருப்போம்

அருண் பிரசாத் said...

குருவி படம் வந்துதோ இல்லையோ விஜய் காலாகாலமா இப்படி தான் காமெடி பண்ணுறார்... கில்லி பார்க்கலையா, பத்ரி பார்கலையா, ஆதி பார்கலையா?

நான் எதையும் பார்க்கலை....

dheva said...

எங்கலே.....அந்த.....துண்டு.....எங்கலே...அந்த சொம்பு.....

இவன் பாட்டுக்கு சொல்லாமாக் கொள்ளாமா பதிவ போட்டு கொல்லுதேன்....எல்லோரையும்...

எலே மக்கா.... இப்ப நாஞ்சொல்றேன்லே தீர்ப்பு.....இதுக்கு முன்னால அருமை தொடருங்கன்னு போட்டவங்கே எல்லாம் எம்முன்னானலே வந்து நின்னுங்கலே......

ஏலேய்.. இம்சை... ஏய்...டெரரு.. எடுறா அந்த அரிவாளை....

dheva said...

புவனேஷ்வரி...@ ஏனுங்கக்கா....இதுல எந்த இடத்துலங்கக்கா உங்களுக்கு ரொம்ப திகிலா இருந்துச்சு....ஏனுங்க.. .காமெடி பண்றீங்கோ.....?

dheva said...

இம்சை.. @ மித வேகம் மிக நன்றா.... இத செளந்தர்கிட்ட பதிவ எழுதறதுக்கு முன்னால சொல்லியிருக்கணும்.....

dheva said...

//ஹ்ம்ம். கரெக்ட்.. அடுத்த முறை எல்லாம் வெளியூர் போகும் போது, சூதானமா பாத்து போயிட்டு வாங்க..ஓகேயா..!!

பயண அனுபவ பகிர்வுக்கு நன்றி... :)
//

ஆனந்தி....@ பயண அனுபவத்திற்கு நன்றியா.....ஹா...ஹா...ஹா...! நல்ல நகைச்சுவையன கமெண்ட்டுங்கோ....!

dheva said...

//டிஸ்கி :நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி
//

யாரு சொன்னா வீடு வந்தா நிம்மதின்னு..........(ஓ.. சாரி தம்பி... கல்யாணத்துக்கப்புறம்....அப்படியே உல்டாவ எழுதிக்க....ஹா..ஹா..ஹா...)

Anonymous said...

இந்த பயணம் சூப்பரான பயணம்

Anonymous said...

வருசம் ஒரு தடவை குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வாங்க..அப்பதான் வழி மறக்காது

இம்சைஅரசன் பாபு.. said...

//யாரு சொன்னா வீடு வந்தா நிம்மதின்னு..........(ஓ.. சாரி தம்பி... கல்யாணத்துக்கப்புறம்....அப்படியே உல்டாவ எழுதிக்க....ஹா..ஹா..ஹா...) //

வீட்டில் சத்தம் போடாம அடிவாங்கும் தேவா அவர்கள் மேலும் அடி வாங்க வாழ்த்துக்கள்

Anonymous said...

கார் படம் சூப்பரா இருக்கு...கொயில் படமும் போட்ருக்கலாம் பதிவு இன்னும் இழுத்திருக்கலாம்

Anonymous said...

நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி//
அண்ணன் ரொம்ப பயந்த சுபாவம்..ஹிஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்பதான் வழி மறக்காது //

நீங்க வழி மறக்காது வந்து கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி (சௌந்தர் உங்களுக்கு பதில் நான் நன்றி கூறிவிட்டேன் )

Anonymous said...

நாங்களும் சரி ஊருக்கு உள்ளே போகலாம் என்று கிளம்பினோம். தேவதானபட்டிக்கு எந்த வழியில் போகணும் என்று கிலோ மீட்டர் போர்டை பார்த்தால் அதில் சினிமா போஸ்டர் ஒட்டி வைத்து இருந்தார்கள்//
எல்லா ஊர்லியும் இப்படிதாண்ணே அக்கிரமம் பண்றானுக பயபுள்ளைங்க...

Anonymous said...

எப்படியோ வத்தலகுண்டு வந்து சேர்ந்தோம் //
நல்லவேளை மறுபொஅடி எதுவும் வெடிக்கலை-;))

dheva said...

சதிஷ்...@ வருஷ வருசம் கோவிலுக்கு போய்ட்டு வாங்க.....

ஆமாம் கண்டிப்பா... கோவிலுக்கு மட்டும்.. கோவிலுக்கு மட்டும்...!

Anonymous said...

அந்த ஊரில் "ஜாதி கலவரம்" நடந்து இருக்கு தடுக்க வந்த மூன்று போலீஸ்காரர்களை வெட்டி விட்டார்கள் அந்த கிராம மக்கள்,//
கிடா வெட்டியாச்சு..பொங்கல் எப்பவாம்...என்னண்ணே எவ்ளோ பெரிய விசயத்தை ஆடு வெட்டுன மாதிரி சொல்றீங்க..பயபுள்ளைக மோசமான ஊரால்ல இருக்கு..அண்ணன் திரும்பி வந்ததே பெருசு பொல..இல்லைனா அடுத்த பதிவுக்கு கமெண்ட் போட முடியாம போயிருக்கும் பொல...

Anonymous said...

நீங்க வழி மறக்காது வந்து கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி //
நம்ம சொன்ன ரூட்ல நாம கரெக்டா பொகணும் இல்ல பாபு...

Anonymous said...

ஆமாம் கண்டிப்பா... கோவிலுக்கு மட்டும்.. கோவிலுக்கு மட்டும்..//
அண்ணன் பயந்தவரு வேற எங்கியும் போக மாட்டாரு

ஜீவன்பென்னி said...

ஐயோ கலக்கல் பதிவு..........

ஐயோ செம த்ரில்லிங்........

இனிமே கார்ல போறதுன்னாலே எனக்கு பயம்தான் தம்பி........

dheva said...

அந்த ஒரு நாளாவது நான்வெஜ் சாப்பிடாம இருக்க முடியாத..ஏம்பா இப்படி லெக் பீசுக்கு போய்...

சூப்பரா ஒண்னை கொளுத்தி போடவா....

சட்டபடி நான்வெஜ் சாப்பிட்டதாலதான் சாமி இவ்ளோ சோதனை கொடுத்து இருக்கு....அடுத்த தடவை விரதத்தோடு போய் பாருங்க.. எல்லாம் சூப்பரா இருக்கும் (ஏதோ என்னால முடிஞ்சது...)

Anonymous said...

வீட்டில் சத்தம் போடாம அடிவாங்கும் தேவா அவர்கள் மேலும் அடி வாங்க வாழ்த்துக்கள் //
முதுகுல தலையணை கட்டிப்பீங்களா தேவா..அதைப்பத்தி ஒரு பதிவு போடுங்களேன்...?

Anonymous said...

அடுத்த தடவை விரதத்தோடு போய் பாருங்க.. எல்லாம் சூப்பரா இருக்கும் (ஏதோ என்னால முடிஞ்சது...)//
சூப்பரானா எப்படி..சாமி இவர் கூட உட்கார்ந்து பொங்கல் சாப்பிடுமா...ஹிஹி

dheva said...

ஜீவன் பென்னி..@ ஏய் இங்க வா....இப்படி ஏத்தி விட்டு...அவன என்ன பண்ணலாம்னு உத்தேசம்....?

Anonymous said...

இனிமே கார்ல போறதுன்னாலே எனக்கு பயம்தான் தம்பி........ //
இவர் பதிவு படிச்சதாலயா ஜீவன் அண்ணே

dheva said...

சதிஷ்..@ அப்பாடா.. எப்படான்னு காத்திட்டு இருந்தீங்களாக்கும்....


கண்டிப்பா போடலம்.. சதிஷ்... ஆனா இதை வச்சி வேற யாரும் ஒரு போஸ்ட் போட்டுறாம இருந்தா சரி...!

சௌந்தர் said...

சௌந்தர் சொன்னது…
dheva சொன்னது…
அந்த ஒரு நாளாவது நான்வெஜ் சாப்பிடாம இருக்க முடியாத..ஏம்பா இப்படி லெக் பீசுக்கு போய்...

சூப்பரா ஒண்னை கொளுத்தி போடவா....

சட்டபடி நான்வெஜ் சாப்பிட்டதாலதான் சாமி இவ்ளோ சோதனை கொடுத்து இருக்கு....அடுத்த தடவை விரதத்தோடு போய் பாருங்க.. எல்லாம் சூப்பரா இருக்கும் (ஏதோ என்னால முடிஞ்சது...)/////

@@@தேவா
அந்த வருடம் நாங்க நான்வெஜ் சாப்பிடவில்லை அதான் இவ்வளவு கஷ்டம் அதுக்கு அடுத்த வருடம் நான்வெஜ் சாப்பிட்டு போனோம் எந்த கஷ்டம் இல்லை

dheva said...

சரி....ஓ.கே..தகவலுக்கு நன்றிப்பா...

நான் வெஜ் சாப்பிட்ட வெற்றிக்கர பயணம்னு போஸ்ட் போடுவியோ?

dheva said...

//இனிமே கார்ல போறதுன்னாலே எனக்கு பயம்தான் தம்பி........ //

சதிஷ்...@ நாளைக்கு காலைல நான் ஆபிஸ் போகனுமே.. என்ன பண்ணுவேன்.. .? என்ன பண்ணுவேன்.....?

dheva said...

எப்டியோ...

எல்லோரையும் சந்திக்க வைக்க செளந்தர் பண்ற இந்த ஏற்பாடு....எனக்கு புல்லரிக்குது...தம்பி....!

ஜீவன்பென்னி said...

//dheva சொன்னது…

ஜீவன் பென்னி..@ ஏய் இங்க வா....இப்படி ஏத்தி விட்டு...அவன என்ன பண்ணலாம்னு உத்தேசம்....?/

ஒரு பதிவு எழுதுறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தெரியும் ஆனா உங்களுக்குத்தெரியாது ஒன்னுமே இல்லத ஒன்ன ஒரு பதிவா எழுதுறதுக்கு ஒரு திறமை வேணும்.

Jeyamaran said...

*/எதிரில் வரும் லாரியை பார்த்தல் எமன் வருவது போல் இருக்கும், சென்னை வரும் வரை பயந்து பயந்து வந்தோம்/*

லாரிய மட்டும் இல்ல sari யா பார்த்தாலும் இதே பீலிங்க்ஸ் தான் நண்பா

Anonymous said...

சதிஷ்...@ நாளைக்கு காலைல நான் ஆபிஸ் போகனுமே.. என்ன பண்ணுவேன்.. .? என்ன பண்ணுவேன்//
ஆஃபிஸ் போயி மறுபடி அண்ணன் தளத்துக்கு வந்துடுவீங்களா

ஜீவன்பென்னி said...

//ஒரு பதிவு எழுதுறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தெரியும் ஆனா உங்களுக்குத்தெரியாது ஒன்னுமே இல்லத ஒன்ன ஒரு பதிவா எழுதுறதுக்கு ஒரு திறமை வேணும்//

சின்ன கரெக்சன்... ஒரு விசயத்த இவ்வளவு சூப்பரா செம ஸ்பீட்டா.............. ஐயோ சான்ஸே இல்ல.

இம்சைஅரசன் பாபு.. said...

@சதீஷ்
தேவா அண்ணா ப்ளாக் பொய் பாருங்க
அவர் சும்மா நான் ,சௌந்தர் கூபிடோம்ன்னு வந்து கமெண்ட்ஸ் போடுறாரு .அவரோட ப்ளாக் போய் பாருங்க
அவரோட தமிழ் எழுத்துகளை பாருங்க.அவரோட கவிதைகள பாருங்க.

dheva said...

//என்னது நானு யாரா? சொன்னது…
திகில் ஸ்டோரி சொல்லி இருக்கீங்க! சரி! டயர் பஞ்சர் ஆனா எப்படி வண்டி போச்சுன்னும் சொல்லுங்களேன்? குழப்பமா இல்ல இருக்கு! //


ஏதோ ஒரு பாயிண்ட் புடிச்சு போடாலம்னு பங்காளி ட்ரை பண்ணி கஷ்டபட்டு இந்த கமெண்ட் போட்டு இருக்காரு... வெல்டன் பங்காளி...!

ஜீவன்பென்னி said...

//என்னது நானு யாரா? சொன்னது…
திகில் ஸ்டோரி சொல்லி இருக்கீங்க! சரி! டயர் பஞ்சர் ஆனா எப்படி வண்டி போச்சுன்னும் சொல்லுங்களேன்? குழப்பமா இல்ல இருக்கு! //

சவுந்தர் இந்த டவுட்ட நீ கிளியர் பண்ணியே ஆகனும்..

dheva said...

இம்சை..@ தம்பி... கண் கலங்கிடுச்சுப்பா..(ல...ல ...ல..லா........ப்ளிஸ். எஸ்.ஏ. ராஜ் குமார் ஒரு சாங்க் ப்ளீஸ்)

ஜீவன்பென்னி said...

//என்னது நானு யாரா? சொன்னது…
திகில் ஸ்டோரி சொல்லி இருக்கீங்க! சரி! டயர் பஞ்சர் ஆனா எப்படி வண்டி போச்சுன்னும் சொல்லுங்களேன்? குழப்பமா இல்ல இருக்கு! //

என்ன ஒரு ஆழமான வாசிப்பு.....

இம்சைஅரசன் பாபு.. said...

//தம்பி... கண் கலங்கிடுச்சுப்பா..(ல...ல ...ல..லா........ப்ளிஸ். எஸ்.ஏ. ராஜ் குமார் ஒரு சாங்க் ப்ளீஸ்)//

அண்ணா இதுக்கு எல்லாம் போய் கண் கலங்ககூடாது ..........
நாம எல்லாம் ஒரே ரத்தம் தேவா அண்ணா.......... .இதுக்கு போய் கண்கலங்கிட்டு?(

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

@தேவா
///ஆனந்தி....@ பயண அனுபவத்திற்கு நன்றியா.....ஹா...ஹா...ஹா...! நல்ல நகைச்சுவையன கமெண்ட்டுங்கோ....! ////

ஹலோ...எச்சூச்மி... இது யாரு ப்ளாக்.. எனக்கு மைல்ட்-ஆ ஒரு டவுட்ட்டு...அதான் கேட்டேன்.

யாரும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...!!

கவி அழகன் said...

சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்

துளசி கோபால் said...

வத்தலகுண்டு நம்ம ஊர்தாங்க. தேவதானப்பட்டியில் அம்மன் கோவிலில் ஒரு சமயம் வேப்பமரத்துலே பால் ஒழுகுதுன்னு வண்டிகட்டிக்கிட்டுப் போய் பார்த்துவந்தோமுங்க.

திகிலாத்தான் இருக்கு உங்க பயணம்.

நல்லபடியா ஊர் திரும்புனது சந்தோசமுங்க.

kavisiva said...

கார் பயணம் என்றாலே கொஞ்சம் திக் திக் தான்

Karthick Chidambaram said...

//நாம் எங்கு பயணம் செய்தாலும் வீடு வந்து சேரும் வரை நம் உயிர் போய் உயிர் வந்து விடும், வீடு வந்து சேர்ந்தால் தான் நிம்மதி//

திகிலாத்தான் இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போல்லாம் அந்த ஊர்ல சாதிகலவரம் வருவதில்லையே!

பரமசிவன் கோவிலுக்கா போனீங்க?

Chitra said...

பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததற்கு, அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்.

சுசி said...

டிஸ்கி என் அனுபவமும் கூட.

எல் கே said...

காரில் செல்வது என்றாலே எல்லாவற்றையும் ஒன்றுக்கு இருமுறை சரி பார்த்துவிட்டு செல்லவேண்டும்...

எல் கே said...

எனகென்னவோ இது நான் வெஜ் சாப்ட்டுட்டு போனப்ப நடந்த அனுபவம்னு தோணுது...

தேவா நீங்க என்ன நினைக்கறீங்க ???

எல் கே said...

//(ஓ.. சாரி தம்பி... கல்யாணத்துக்கப்புறம்....அப்படியே உல்டாவ எழுதிக்க....ஹா..ஹா..ஹா...) ///

இதை அண்ணி படிச்சாங்களா பாஸ்?? இல்ல ஒரு மெயில் அனுப்பவா

எல் கே said...

//சுப்பர் பின்னி பெடல் எடுதிடின்கள்///

ஆமாங்க, பின்னி பிரேக்கே போய்டுச்சு

எல் கே said...

//இது யாரு ப்ளாக்.. எனக்கு மைல்ட்-ஆ ஒரு டவுட்ட்டு...அதான் கேட்டேன்.

யாரும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...!!///

ப்ளாக் ஒனேர்தான் மறுமொழி போடணுமா என்ன ??

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தோழா,தேவதானப்பட்டிக்கு அருகில் உள்ள மஞ்சளார் அணையில் தான் எனது இளமைக்காலத்தின் முதல் 14 ஆண்டுகள் .நீங்க எப்ப போனீங்க. இப்பவும் ஜாதி கலவரமா ? .இன்னும் அப்படித்தான் உள்ளனரா ? நினைக்கையில் கவலையாக இருக்கு . நீங்க குறிப்பிடும் கோவில் எது என எனக்கு பிடிபடவில்லை .காமாட்சியம்மன் கோயிலைத்தான் குறிப்பிடுகின்றீர்களா என தெரியவில்லை . சிவன் கோயில் அனுபவங்கள் பல .அங்கு போய் பேனா தொலைத்து கண்டுபிடித்த சம்பவம் இன்னும் மறக்கமுடியாத ஒன்று .

மிக்க மகிழ்ச்சி .

பகிர்வுக்கு நன்றி .

சௌந்தர் said...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
இப்போல்லாம் அந்த ஊர்ல சாதிகலவரம் வருவதில்லையே!

பரமசிவன் கோவிலுக்கா போனீங்க?////

@@@ப்ரியமுடன் வசந்த்
வீரம்மாள் கோவில்லுக்கு போனோம் ஆமா இப்போ ஜாதி கலவரம் இல்லை, அந்த கலவரம் நடந்து மூன்று வருடம் ஆகுது

சௌந்தர் said...

@@@நண்டு @நொரண்டு -ஈரோடு

ஜாதி கலவரம் நடந்து மூன்று வருடம் ஆகிறது

இப்போ அங்கு ஜாதி கலவரம் இல்லை,

எங்கள் குல தெய்வம் வீரம்மாள் கோவிலுக்கு சென்று விட்டு காமாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்வோம்

நாங்கள் வருடம் தோறும் சென்று கொண்டு தான் இருக்கிறோம்

செல்வா said...

இப்பூடிஎல்லாமா நடக்குது.. ??!!
எப்படியோ வீடு வந்து சேர்ந்தாச்சு ..!!

School of Energy Sciences, MKU said...

அடுத்த தபா போசொல்லோ, மட்டன் துண்ணாம போ! இல்லாங்காட்டி இப்டிதான் ஆவும். இன்னா புர்தா?

Unknown said...

பயண அனுபவம் படித்தேன் ...

ஸ்ரீராம். said...

உண்மைதான்.நாம் ஒழுங்காக ஓட்டினாலும் முன்னே பின்னே செல்பவர்கள் ஒழுங்காக ஒட்ட வேண்டுமே..!

ஹேமா said...

சௌந்தர்...எங்காவது தூரப்பயணங்கள் புறப்படும்போது உங்கள் பதிவு ஞாபகம் வரும்.அனுபவம் த்ரில் !

thiyaa said...

உண்மைதான் நண்பா இங்கு
வாகனம் ஓட்டுவதே ஒரு
வித்தைதான். (கஷ்டம்)
உங்களின் திரில் பயண அனுபவம்
ஒரு நல்ல ஆசானிடம் பாடம் கற்றதுபோல உள்ளது.

ஸாதிகா said...

அனுபவத்தை தாங்கள் பகிர்ந்த விதம் திகில் கதை படிப்பது போல் உணர்வு எழுந்த்தௌ

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயணத்தை பகிர்ந்த விதம் அருமை நண்பா....

 
;