இப்போதைய பதிவுலக பேச்சு இது தான், தமிழ்மணத்தில் பதிவர்களை வரிசைப்படுத்துதல். எந்த பதிவர்களை பார்த்தாலும் இது தான் முதல் கேள்வி : தமிழ்மணத்தில் எத்தனையாவது ரேங்க்? . நான் நேற்று ஒரு பதிவரை சந்தித்தேன் அவர் என்னை கேட்ட கேள்விகள்
"சௌந்தர் தமிழ்மணத்தில் நான் 5ஆம் இடம் நீ எந்த இடம்..?"
"நான் 20 இடங்களில் வரவில்லை."
"என்னப்பா எத்தனை நாட்களாய் பதிவு எழுதுகிறாய், இப்படி வரவில்லை என்று சொல்கிறாயே..?"
"20 இடங்களில் வரவேண்டும் என்றால் தினமும் பதிவு போடவேண்டும். தெரியுமா.?"
"நாங்களே சும்மா டைம் பாஸ்க்கு வந்து ஏதோ எழுதிட்டு போறோம் முடிந்தால் பதிவு எழுதுவோம் இல்லை எங்கயாவது கும்மி அடிச்சிட்டு போய்டுவோம். தமிழ்மனதில் top 20 யில் வரவேண்டும் என்பதற்காக எழுதவில்லை" என்றேன். உடனே அவர் "சும்மா சொல்லாதே நீ வரவில்லை. அதனால் இந்த பழம் புளிக்கும் என சொல்கிறாய்" என்றார்....சரி அதை விடு என்று வேறு பேச்சை எடுத்தார். மீண்டும் தமிழ்மணம் எங்கள் பேச்சுக்குள் நுழைந்தது. "இந்த வருடத்தில் தமிழ்மணம் 100 பதிவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்கள் தெரியுமா...?" என்றார் நானும் தெரியும் பார்த்தேன் என்றேன் நான் 10வது இடம் என்றார். நான் 79 வது இடம் என்றேன்...ஓஹ அப்படியா பரவாயில்லை...
"தமிழ்மணம் traffic rank என்று ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்...அதுவும் நன்றாக இருக்கிறது சௌந்தர் நீ எத்தனையாவது இடம்...?" என்றார்
"அதை நான் இன்னும் பார்க்க வில்லையே" என்றேன்.
"சரி சௌந்தர் ஏன் இப்படி தமிழ்மணம் விருது, வரிசை படுத்துதல் எல்லாம் செய்கிறார்கள்." என்று கேட்டார் அவர்.
"அதையெல்லாம் பின்பு சொல்கிறேன் நீங்கள் ஏன் தினம் ஒரு பதிவு ரெண்டு பதிவு என்று போடுறீங்க" என்றேன்/ அதற்கு அவர் "நான் தமிழ்மணத்தில் வர வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதுகிறேன்." என்றார்.
"தினம் பதிவு எழுதுவதற்கு என்ன செய்றீங்க" என்றேன்.
"நிறைய வாரமலர் படிப்பேன் நிறைய படம் பார்ப்பேன்"
"பதிவு எங்கே எழுதுவீங்க"
"ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு சென்றதும் கம்ப்யூட்டர் ஆன் பண்ணுவேன் நாளை என்ன பதிவு போட வேண்டும் என்று எழுதி வைத்து விடுவேன் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு முன்று பதிவு எழுதி வைத்து கொள்வேன் அதை பதிவிடுவேன்."
"ஞாயிற்று கிழமை எல்லாம் வெளியே போக மாட்டிர்களா..? குடும்பத்தை அன்று ஒரு நாளாவது அழைத்து கொண்டு போனால் தானே அவர்களுக்கு சந்தோசம்."
"ஆமாம் சௌந்தர் இப்போது எல்லாம் வெளிய போக முடியலை என் மனைவியும் என்னை திட்டி கொண்டே இருகிறா என்னால் இந்த பதிவுலக போதையில் இருந்து வெளிய வரமுடியவில்லை" என்றார்.
அப்போது தான் எஸ்கே வந்தார் அவரை பார்த்து இதோ எஸ்கே வந்து விட்டான் அவனை கேட்போம் இதனால் மன அழுத்தம் ஏற்படுமா என்று...
எஸ்கே இந்த ரேங்க் பட்டியல் ஹிட்ஸ் என்று எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதால் ஏதாவது மன அழுத்தம் ஏற்படுமா?
இணையம், கணிப்பொறி இதெல்லாம் முதலில் வேலைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் இவையே பொழுதுபோக்குகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலைப்பூக்களில் எழுதுபவர்களில் பெரும்பாலோனர் ஒரு relief, diversion-காகதான் எழுதுகிறார்கள். அஃப்கோர்ஸ் எல்லோருக்குமே தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்டு ஆனால் அது அதிகமானால் பிரச்சினைதான். மன அழுத்தம் மிக அதிகமாகிறது. தாங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து மனரீதியான பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
1. எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தித்து கொண்டிருப்பதால் மற்ற செயல்களில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. செய்யும் செயல்களிலும் முழுமையான பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும்.
2. வேலை, குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பழகும் நேரம் குறைகிறது. இதனால் அவர்களுடன் மனக்கசப்பும் ஏற்படலாம்.
3. மேலும் கோபம், மன அழுத்தம், fantasy(எந்நேரமும் கற்பனை உலகில் சஞ்சரித்தல்), கவலை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
4. இதைத் தவிர தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகின்றது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதால் முதுகு/இடுப்பு வலி போன்ற பிரச்சினையும், உடல் உழைப்பு குறைவதால்(அதாவது உடற்பயிற்சி இல்லாததால்) உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
ஒரு மாணவன் பள்ளியில் ரேங்க் எடுக்கச் சொல்லி அவனை கட்டாயப்படுத்தினால் எந்த அளவு பிரச்சினைக்குள்ளாவானோ அதைப் போலவே/அதைவிட அதிகமாகவே இங்கே தங்களைத்தானே பிரச்சினையில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
மன அமைதிக்காகவும் சந்தோசத்திற்காகவும் கணிப்பொறியை பயன்படுத்த ஆரம்பித்து அதுவே பெரிய பிரச்சினையாகி விடுகிறது.
எஸ்கே விற்கு இது எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்டார் அவர். எஸ்கே மனோதத்துவம் தான் படித்து இருக்கிறார் அதனால் இவருக்கு அதை பற்றி நன்றாக தெரியும்..
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!
எல்லாம் சரி யார் அந்த பதிவர் என்றா கேட்க்குறீங்களா அட வேற யாரும் இல்லை நம்ம மங்குனி அமைச்சர் தான்
மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு, இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி...
Tweet | |||||
89 comments:
vadai
Pinnutame pathivarkalai munnetrum
nalla post sounder..
// வேலை, குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பழகும் நேரம் குறைகிறது. இதனால் அவர்களுடன் மனக்கசப்பும் ஏற்படலாம்.//
100% correct.
//பின்னூட்டமே பதிவர்களை முன்னேற்றும்//
மிகச்சரியான கூற்று!
/// தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதால் முதுகு/இடுப்பு வலி போன்ற பிரச்சினையும்///
பயமா இருக்கு...கொஞ்ச நாள் பதிவுலகம் விட்டு தள்ளி இருக்கணும்னு தோணுது இதை படிச்ச பிறகு...??!!
/"நான் 20 இடங்களில் வரவில்லை." /
அட பாவமே , சரி நான் எத்தனாவது இடம்னு பார்த்து சொல்லிடு .!
மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு, இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி..///
கடைசில மங்குனி தலைய சிக்க வெச்சிட்டியே மச்சி :) ஹா ஹா ஹா
// எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தித்து கொண்டிருப்பதால் மற்ற செயல்களில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. செய்யும் செயல்களிலும் முழுமையான பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும். //
இதுக்கு எதாவது மாத்திரை கிடைக்கும்களா ..?
//இதுக்கு எதாவது மாத்திரை கிடைக்கும்களா ..?//
இருக்கு 32 bit pentium chloride இந்த மாத்திரை ஓரளவு பலனளிக்கும்!
சௌந்தர் சூப்பர் போஸ்ட். ரேன்க் வச்சு நாக்கு கூட வழிக்க முடியாது. யார் போன் பண்ணினாலும் உன் ரேன்க் என்னனு கேக்குராணுக. அத வச்சு என்ன பண்றது. நானெல்லாம் என்னோட திருப்திக்காகவும் படிக்கிரவங்களுக்ககவும் மட்டுமே எழுதுறேன். ஹிட்ஸ் க்காக எழுத ஆரமிச்சா தினமும் போஸ்ட் போடணும். சரக்கில்லாம மொக்கையா(இப்பவும் அதான பண்றேன்னு கேக்க கூடாது) எழுதினா இப்ப இருக்குற பாலோவர்ஸ் காணாம போயிடுவாங்க.
// என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்! ///
பாருயா, அப்படின்னா என்ன மாதிரி எட்டு எழுதில பதிவு எழுதினா அதுக்கு நீ ஏன் அடிக்க வர்ற ..?
//மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு, இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி...//
பாவி மங்கு ஏமாத்திட்டியே. பழிக்கு பழியா? அவ்
//சரக்கில்லாம மொக்கையா(இப்பவும் அதான பண்றேன்னு கேக்க கூடாது) எழுதினா இப்ப இருக்குற பாலோவர்ஸ் காணாம போயிடுவாங்க.
//
அப்படின்னா நான் மொக்கை தான் எழுதுறேன் ..!! சரக்கில்லாம எழுதுறதுனா ..?
// என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்! //////
Boost, complan, Horlicks இதெல்லாம் ஊக்கம் அழிக்காதா? டிவி ல ஏமாத்துரானுகளா?
hitsmania
rank disorder
vote depression
Tamilmanam phobia
//இருக்கு 32 bit pentium chloride இந்த மாத்திரை ஓரளவு பலனளிக்கும்//
சாப்பாட்டுக்கு முன்னாடியா , சாப்பாட்டுக்குப் பின்னாடியா .?
//கோமாளி செல்வா கூறியது...
//சரக்கில்லாம மொக்கையா(இப்பவும் அதான பண்றேன்னு கேக்க கூடாது) எழுதினா இப்ப இருக்குற பாலோவர்ஸ் காணாம போயிடுவாங்க.
//
அப்படின்னா நான் மொக்கை தான் எழுதுறேன் ..!! சரக்கில்லாம எழுதுறதுனா ..?//
குவாட்டர் காலியானதும் எழுதுறது
karthikkumar சொன்னது… 7
மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு, இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி..///
கடைசில மங்குனி தலைய சிக்க வெச்சிட்டியே மச்சி :) ஹா ஹா ஹா///
வேற யாராவது சொன்ன அடிக்க வருவாங்க மங்குனி தான் நம்ம பிரென்ட் அவரை தான் சொல்ல முடியும்
//Boost, complan, Horlicks இதெல்லாம் ஊக்கம் அழிக்காதா? டிவி ல ஏமாத்துரானுகளா?//
எல்லாவற்றையும் விட குளுக்கோசே உண்மையான ஊக்கத்தை அளிக்கும் என நம்புகிறேன்!
//கோமாளி செல்வா சொன்னது… 16
//இருக்கு 32 bit pentium chloride இந்த மாத்திரை ஓரளவு பலனளிக்கும்//
சாப்பாட்டுக்கு முன்னாடியா , சாப்பாட்டுக்குப் பின்னாடியா .?
/
சாப்பாட்டுக்கு அப்புறம் எலி மருந்தோட சேர்த்து சாப்பிடனும்
மச்சி இதுக்கு ஓட்டுப் போடணுமா , போடக்கூடாதா ..?
//கோமாளி செல்வா கூறியது...
//இருக்கு 32 bit pentium chloride இந்த மாத்திரை ஓரளவு பலனளிக்கும்//
சாப்பாட்டுக்கு முன்னாடியா , சாப்பாட்டுக்குப் பின்னாடியா .?//
சாப்பாடு வாய்ல வச்சு முழுங்கறுத்துக்கு முன்னால இந்த மாத்திரை போட்டு முழுங்கிடனும்!
//சாப்பாட்டுக்கு அப்புறம் எலி மருந்தோட சேர்த்து சாப்பிடனும்
//
எலி சாப்பிடனுமா ..? இல்ல நாம சாப்பிடனுமா ..?
நல்ல விசயங்கள...
எனக்கு இந்த பிரச்சினை இல்லை..பதிவு எழுதுவது மட்டும்தான் என் வேலை..இதுவரை தமிழ்மணத்தில் வோட் 3 யை தாண்டியதில்லை..நிம்மதியாக பதிவு எழுதுவேன்)))
25
//மன அமைதிக்காகவும் சந்தோசத்திற்காகவும் கணிப்பொறியை பயன்படுத்த ஆரம்பித்து அதுவே பெரிய பிரச்சினையாகி விடுகிறது.//
பதிவுலகம் மட்டும் தான் வாழ்க்கை என்பது இல்லை என்று புரிந்து கொண்டாலே போதும், எந்த பிரச்சனையும் வராது.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
25//
vadai mania!
//வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் //
உண்மையான கருத்து தான். ஆனால் உண்மையான பின்னூட்டம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றே பலருக்குத் தெரிவதில்லையே சௌந்தர். தங்கள் பதிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே வருகைப் பதிவேடு செய்வது போல சிலர் வருகின்றனர்.
எழுதும் பதிவுகளை அவர்கள் முழுதாகப் படித்தாலே அது பெரிய விஷயம் தான்.
கோமாளி செல்வா சொன்னது… 21
மச்சி இதுக்கு ஓட்டுப் போடணுமா , போடக்கூடாதா ..?////
நீ ஒட்டு போட வேண்டாம் இந்த பதிவை இன்டலியில் இணைக்க முடியாது
//இந்திரா கூறியது...
//வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் //
உண்மையான கருத்து தான். ஆனால் உண்மையான பின்னூட்டம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றே பலருக்குத் தெரிவதில்லையே சௌந்தர். தங்கள் பதிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே வருகைப் பதிவேடு செய்வது போல சிலர் வருகின்றனர்.
எழுதும் பதிவுகளை அவர்கள் முழுதாகப் படித்தாலே அது பெரிய விஷயம் தான்.//
நீங்கள் சொல்வது மிகச்சரி! பதிவை படிக்காமலேயே ஏதோ கடமைக்கு பின்னூட்டம் போடுபவர்களும் இருக்கிறார்கள்.
ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க சௌந்தர் .இந்த வார தமிழ் மனதுள டாப் 10 வரணும் நீங்க பொலம்பிட்டு இருந்தீங்களே ..இந்த வாரம் வந்து விடுவீர்கள் மக்கா
//ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க சௌந்தர் .இந்த வார தமிழ் மனதுள டாப் 10 வரணும் நீங்க பொலம்பிட்டு இருந்தீங்களே ..இந்த வாரம் வந்து விடுவீர்கள் மக்கா
//
ஹி ஹி ஹி .. இது நல்ல கேள்வி ..!
இந்திரா சொன்னது… 28
//வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் //
உண்மையான கருத்து தான். ஆனால் உண்மையான பின்னூட்டம் என்பதற்கு என்ன அர்த்தம் என்றே பலருக்குத் தெரிவதில்லையே சௌந்தர். தங்கள் பதிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே வருகைப் பதிவேடு செய்வது போல சிலர் வருகின்றனர்.
எழுதும் பதிவுகளை அவர்கள் முழுதாகப் படித்தாலே அது பெரிய விஷயம் தான்.////
ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க
//
ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க//
அட பாவி கமெண்ட்ஸ் போடற எல்லோருமே இப்படியா ...அப்போ கௌசல்யா சகோ ,இந்திரா ,எஸ் கே ,ரமேஷ் ,செல்வா எல்லோரும் இப்படி தான் போடுறாங்களோ
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 31
ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க சௌந்தர் .இந்த வார தமிழ் மனதுள டாப் 10 வரணும் நீங்க பொலம்பிட்டு இருந்தீங்களே ..இந்த வாரம் வந்து விடுவீர்கள் மக்கா////
டாப் 20 வந்தா என்ன தருவாங்க மக்கா
//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//
ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க//
அட பாவி கமெண்ட்ஸ் போடற எல்லோருமே இப்படியா ...அப்போ கௌசல்யா சகோ ,இந்திரா ,எஸ் கே ,ரமேஷ் ,செல்வா எல்லோரும் இப்படி தான் போடுறாங்களோ//
எல்லோரும் அப்படி இல்லை. ஆனால் சிலர் பதிவை படிக்காமலேயே ஏதோ அருமை, சூப்பர் இப்படி கமெண்ட்லாம் போடத்தான் செய்யுறாங்க!
//ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க
//
அப்படின்னா நான் இந்தப் பதிவுக்கு என்ன கமென்ட் போடணும் ..?
//டாப் 20 வந்தா என்ன தருவாங்க மக்கா//
ரெண்டு வீடு ...அதுக்குள்ள ரெண்டு பிகுர் ...என்ஜாய்
//கோமாளி செல்வா கூறியது...
//ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க
//
அப்படின்னா நான் இந்தப் பதிவுக்கு என்ன கமென்ட் போடணும் ..?//
காத்திருந்து ஒரு வடை கமெண்ட்!:-))
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 34
//
ஆமா நீங்கள் சொல்வது சரி தான் படித்து விட்டு சும்மா வருகை பதிவேடு போல தான் கமெண்ட் போடுறாங்க//
அட பாவி கமெண்ட்ஸ் போடற எல்லோருமே இப்படியா ...அப்போ கௌசல்யா சகோ ,இந்திரா ,எஸ் கே ,ரமேஷ் ,செல்வா எல்லோரும் இப்படி தான் போடுறாங்களோ////
அது இல்லை மக்கா அருமை...ம் :) போடுறாங்க இல்லையா அவங்களை சொல்றேன்
எனக்கு இந்த பிரச்சினையே கிடையாது சவுந்தர்!
பை தி வே, நான் தமிழ்மணம் ஹிட்ஸ்ல 101ல இருக்கேன், தெரியுமோ?
தமிழ்மணம் "ஹிட்ஸ்" கணக்கில் கொள்ளாமல் சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்.
Good Post...
//மன அமைதிக்காகவும் சந்தோசத்திற்காகவும் கணிப்பொறியை பயன்படுத்த ஆரம்பித்து அதுவே பெரிய பிரச்சினையாகி விடுகிறது.//
ரொம்ப சரி.. அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சுதானே..
காலத்துக்கு தகுந்த பதிவு
//என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//
தெளிவான பார்வையுடன் நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளக்கியுள்ளீர்கள்
உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு தகவல்களை எதிர்பார்க்கிறேன்........
//இதைத் தவிர தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மேலும் நம் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படுகின்றது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதால் முதுகு/இடுப்பு வலி போன்ற பிரச்சினையும், உடல் உழைப்பு குறைவதால்(அதாவது உடற்பயிற்சி இல்லாததால்) உடல் பருமன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது.//
முற்றிலும் உண்மையான கருத்து தற்பொழுது இணையமும் வலையுலகமும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் உயிர்கொல்லி நோயாக மாறி வருகிறது நாம்தான் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்
தமிழ்மணம் -- ராங்கு
இதுக்கெல்லாம் எழுதுற ஆசாமி நானில்லை..
வேணாப் பாருங்க.. ராங்கு லிஸ்டுல நா இல்லவே இல்லை..
நா சொன்ன மோதே ரெண்டு வரிகளும் சரிதானா..?
தேவையான பதிவு சௌந்தர்... தரமான பதிவுகள் இருப்பின் இந்த விசயங்கள் தலை தூக்காது...
//எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தித்து கொண்டிருப்பதால் மற்ற செயல்களில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. செய்யும் செயல்களிலும் முழுமையான பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும்.//
சரியான நேரத்துக்கு சரியான முறையில் தகவல்களை பதிவு செஞ்சீருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்கள்.......
அதிக ஹிட்ஸ்களும் ஓட்டுகளும் ரேங்குகளும்தான் ஒரு தரமான பதிவை நிர்ணயிக்க முடியுமா???
நேரம் கிடைக்கும்போது முடிந்தால் இந்த தலைப்பில் ஒரு பதிவை எழுதுங்கள் வேண்டுகோளுடன்....
மாணவன்
தம்பி........
இது எல்லாம் யாருக்குத் தெரியுது..........! பட்டு திருந்தும் நிலைதான் இருக்கிறது....! படட்டும் திருந்தட்டும்..!
மங்குனி அமைச்சர் பதிவுகள் ரசிக்க வைப்பவை நல்ல நகைச்சுவை நிறைந்து இருப்பதால் எத்தனை பதிவுகள் போட்டாலும் போர் அடிப்பதில்லை எனவே அவர் தினசரி மூன்று பதிவுகள் போட்டாலும் படிக்க ஆள் இருக்காங்க...மங்குனி புத்திசாலி அவர் இணையத்துக்கு அடிமை ஆகிட்டார் இது கெட்ட பழக்கம் என்றால் பதிவு போடுபவர்கள் எல்லோரும் அதன் அடிமைகளே...சரக்கு இருக்குறவன் கொட்டுறான்...நம்ம ஏன் சங்கடபடனும் நண்பா....
இந்த ஹிட்சுகளும் தர வரிசையும் பதிவர்களின் நோக்கங்களை சிதைப்பது என்னவோ உண்மைதான்....ஆனால் அதைவிட கொடுமை அவர்களின் குடும்பங்கள் இதனால் சிதைபடுவது.. இதை யாராலும் உணரவைக்க முடியாது..அவர்களாய் உணரும்வரை! அதையும் மீறி நாம் சொன்னால் பொறாமையால் சொல்கிறோம் என்பார்கள்..எனவே முடிந்தவரை நாம் சரியாக இருப்போம்..இது மட்டுமே நம்மால் முடியும்!
தமிழ்மணம் அதிக ஹிட்ஸ் தன் தளத்துக்கு கிடைக்க வேண்டி செய்யும் தந்திரம் இது....நண்பர்கள் மேல் நாம் பரிதாபபட்டு பலன் இல்லை ...தமிழ்மணம் முகப்பில் விளம்பரம் அனுமதித்தபோதே இது போன்ற ஏடாகூடங்கள் நடக்கும் என நினைத்தேன்....என்ன செய்வது திரட்டிகளும் ஹிட்ஸ் ஆசையில் பயணிப்பதன் விளைவே இந்த மாற்றங்கள்
எனக்கு தெரிந்தவரை ஆன்லைனில் 24 மணி நேரம் இருப்பதுதான் உண்மையில் குடும்பம்,தன் சுகம்,மன நிலை போன்றவற்றை சிதைக்கும் தினசரி இரண்டு அல்லது மூன்று மணி நேரம் திட்டமிட்டு செலவழித்தால் யார் வேண்டுமானாலும் தினசரி பதிவுகள் போட முடியும்...
super hit post.congrats for the 1st step to come under tamilmanam top 20
சத்தியமான வார்த்தைகள் உங்கள் பதிவில்.
பகிர்வுக்கு நன்றி.
உண்மைல நான் பார்ப்பது என்னுடைய பதிவுக்கு நண்பர்கள் இடும் பின்னூட்டம் மட்டுமே அதுமட்டுமன்றி நான் எப்போதும் இந்த ஓட்டை பற்றி கவலைப்பட்டதில்லை.
ஆனா பாருங்க இந்த மனசு எனும் கழுதை என்னை மாற்றாது என்று நம்புகிறேன்.
wow
kalakkal
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 55
தமிழ்மணம் அதிக ஹிட்ஸ் தன் தளத்துக்கு கிடைக்க வேண்டி செய்யும் தந்திரம் இது....நண்பர்கள் மேல் நாம் பரிதாபபட்டு பலன் இல்லை ...தமிழ்மணம் முகப்பில் விளம்பரம் அனுமதித்தபோதே இது போன்ற ஏடாகூடங்கள் நடக்கும் என நினைத்தேன்....என்ன செய்வது திரட்டிகளும் ஹிட்ஸ் ஆசையில் பயணிப்பதன் விளைவே இந்த மாற்றங்கள்//////
ஒரு நாளைக்கு நான்கு பதிவு போடுங்க யார் வேணாம்னு சொன்னா. மத்தவங்க படிப்பதற்கு போடுங்க. ஹிட்ஸ் க்காக போடாதீங்க...
மாணவன் சொன்னது… 51
அதிக ஹிட்ஸ்களும் ஓட்டுகளும் ரேங்குகளும்தான் ஒரு தரமான பதிவை நிர்ணயிக்க முடியுமா???
நேரம் கிடைக்கும்போது முடிந்தால் இந்த தலைப்பில் ஒரு பதிவை எழுதுங்கள் வேண்டுகோளுடன்....////
கண்டிப்பா எழுதுறேன் மாணவன்
super hit post.congrats for the 1st step to come under tamilmanam top 20//
ஓ அதுக்குத்தானா நான் நிஜமாவே சீரியசா நினைச்சிட்டேன்..தமிழ்மணம் இந்த வாரம் நீங்க வந்துடுவிங்க பாஸ் ஹிஹி
நாம நினைக்கிற அளவுக்கு இல்லைனாலும் ஒரு அளவுக்காவது தரம் இருந்தா போதும்..ஏன்னா வாரம் ஒரு தடவை பதிவு போடுறவங்க ஹிட் அடிச்சிடராங்களா என்ன?இல்ல அவங்க பதிவு உலக மக்களை திருத்தி விடுகிறதா..பதிவு எழுதுவது பெரும்பாலும் தன் மனதில் உள்ளதை பகிர்ந்துக்கதான்..லோகோ வை தன் பீளாகில் வைக்க ஆசைபடும் ஒவ்வொரு பதிவரும் தமிழ்மணத்தில் தன் ரேங்கை உயர்த்திகொள்ளவே விரும்புவர்....இப்பதானே இந்த போட்டி ஆரம்பிச்சிருக்கு....இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த வெறியோடயே பதிவு எழுதுறாங்கன்னுதான் பார்ப்போமே...அதுக்குள்ள அவங்களுக்கு ப்ஐத்தியம் முத்திடாதுன்னு நினைக்கிறேன்
நான் தரமான பதிவு மட்டுமே எழுதுவேன் என்பவர்கள் பதிவு எவ்வளவு தரமானதுன்னு ஏதாவது தர நிர்ணய கமிட்டி இருக்கா என்ன அந்த பதிவர்களே நினைத்துக்கொள்கிறார்கள்...அதனால் வேடிக்கை பார்ப்போம்...இல்லைனா நாமும் களத்துல குதிப்போம்..இல்லைனா இந்த பழம் புளிக்கும்னு துண்டை உதறி தோள்ல போட்டுகிட்டு நம்ம ரூட்ல போய்கிட்டே இருக்கணும் மச்சி
சி.பி. செந்தில் குமார்...@ டாப் 20ல வர்றது என் நோக்கம் இல்லை.........!
அப்போ நீங்க எல்லாம் அதுக்குத்தான் போஸ்ட் போடுறீங்களா?
நான் கூட நீங்க எல்லாம் நல்ல தரமான போஸ்ட் போட்டு மேல வருவீங்கனு நினைச்சேன்!
ஐயையோ இதில இவ்வளவு பிரச்சனை இருக்கா... இப்போ மாதம் 5 டு 8 பதிவு தான் எழுதுறேன்.. அதையும் குறைக்கிறேன்...
//ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க சௌந்தர் .இந்த வார தமிழ் மனதுள டாப் 10 வரணும் நீங்க பொலம்பிட்டு இருந்தீங்களே ..இந்த வாரம் வந்து விடுவீர்கள் மக்கா
//
ஹி ஹி ஹி .. இது நல்ல கேள்வி ..//
இது கேள்வியா? # டவுட்டு...
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 62
super hit post.congrats for the 1st step to come under tamilmanam top 20//
ஓ அதுக்குத்தானா நான் நிஜமாவே சீரியசா நினைச்சிட்டேன்..தமிழ்மணம் இந்த வாரம் நீங்க வந்துடுவிங்க பாஸ் ஹிஹி//
கலாய்ச்சிட்டாராமா!! ஹிஹி
@சௌந்தர்
எல்லாரும் அடிச்சிகிட்டு செத்த அப்புறம் ஆவிகளா வந்து பதிவு எழுதுங்க. அன்பா இருக்க பழகுங்கள். ஆணவத்தால் ஆடாதிர்கள். உங்கள் ஆத்மா அமைதியடையட்டும்.
இந்த வார பிரபல பதிவர் அடுத்த மாதம் பிச்சைகார பதிவர். இந்த வாரம் ஆடு அருப்பவர் அடுத்த வாரம் ஆடு. இது தான் உலக நீதி. கவிதை எழுதறவன் எல்லாம் கம்பனா? ஹிட்ஸ் வாங்குரவங்க எல்லாம் பதிவுலக ஹிட்லரா? இல்லை. எல்லாம் மாயை. எல்லாம் கண்ணன் செயல்... :)
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 70
இந்த வார பிரபல பதிவர் அடுத்த மாதம் பிச்சைகார பதிவர். இந்த வாரம் ஆடு அருப்பவர் அடுத்த வாரம் ஆடு. இது தான் உலக நீதி. கவிதை எழுதறவன் எல்லாம் கம்பனா? ஹிட்ஸ் வாங்குரவங்க எல்லாம் பதிவுலக ஹிட்லரா? இல்லை. எல்லாம் மாயை. எல்லாம் கண்ணன் செயல்... :)////
இது தான் நீதி...!
@சதீஷ்
இங்க ஒரு பிரபதிபதிவர் சுத்திகிட்டு இருக்காரு. அவரு ஹிட்ஸ்க்காக மட்டும் தன் எழுதறாரு. அவரை என்னைக்காவது ஒரு நாள் அவர் ப்ளாக்ளே வச்சி கேள்வி கேக்கரேன் பாருங்க. நான் சொல்றது சி.பி.செந்தில் கிடையாது. அவரு எல்லாம் சும்மா. நான் சொல்றவரு சி.பி.செந்தில்க்கு எல்லாம் தாத்தா.. :)
நல்லப் பதிவு செளந்தர்!
இதைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதலாம்னு நெனைச்சேன். ஆரம்பத்தில் எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது.
அது ஆர்வக்கோளாறா இல்லைன்னா நம்மாலும் எழுத முடியுதேங்கிற நம்பிக்கையா தெரியல.
ஆனால் நம்மையும் அறியாமல், யாராவது தொந்தரவு செய்தால் நமக்குக் கோபம் வருகிறது. குழந்தையிடம் கூட கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால் நான் எழுத ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே உணர ஆரம்பித்து விட்டேன். என் குழந்தையை விட மற்ற விஷயம் எனக்குப் பெரிதாகப்படவில்லை.
இதை அவரவர்களாக உணர்ந்து கொண்டால்தான் உண்டு.
இது போன்ற சுதாரிப்புகள் கண்டிப்பாகப் பதிவுலகத்திற்குத் தேவை.
சௌந்தரும் அதிக நேரம் கணினி யில் செலவழிக்காமல் இருந்தால் நல்லது.
மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்தலாம்.
நீங்க ரொம்ப நல்லவர் போல தெரியுது!
நான் கூட நீங்க எல்லாம் நல்ல தரமான போஸ்ட் போட்டு மேல வருவீங்கனு நினைச்சேன்!//
சில பேர் ஓட்டு கமெண்ட் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்..ஏன் நீங்கலே கூட கமெண்ட் போட்டு விட்டு ஓட்டு போடாதவர்களை கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் அது எதற்கு கமெண்ட் வந்தா என்ன ஓட்டு வந்தா என்ன இருக்க வேண்டியதுதானே ....சிபி தமிழ்மணம் ஹிட்ஸ் க்கு எழுதுகிறார் என்றால் மற்றவர்கள் எதற்கு எழுதுகிறார்கள் என்று தெரியாதா என்ன?
நீங்க ரொம்ப நல்லவர் போல தெரியுது!//
சூப்பர் பஞ்ச்..தல...சவுந்தர் உங்கள் பதிவு தரமான பதிவுகளுக்கு கார்டியன் தொனியில் இருக்கிறது.தரமான பதிவு பிளாக் லிஸ்ட் எதிர்பார்க்கிறேன்.நெட்ல பதிவு எழுதறவனுங்க மட்டுமா ரொம்ப நேரம் நெட்ல சுத்திகினு இருக்காங்க
haa
இப்போது எல்லோருக்கும் தேவையான பதிவு,
(ஹா ஹா கடைசியில் உருண்டது மங்குனி அமைச்சர் மண்டையா)
http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html
நட்பு வட்ட விருது கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுஙக்ள்
//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 77
நான் கூட நீங்க எல்லாம் நல்ல தரமான போஸ்ட் போட்டு மேல வருவீங்கனு நினைச்சேன்!//
சில பேர் ஓட்டு கமெண்ட் மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்..ஏன் நீங்கலே கூட கமெண்ட் போட்டு விட்டு ஓட்டு போடாதவர்களை கேள்வி கேட்டு இருக்கிறீர்கள் அது எதற்கு கமெண்ட் வந்தா என்ன ஓட்டு வந்தா என்ன இருக்க வேண்டியதுதானே ....சிபி தமிழ்மணம் ஹிட்ஸ் க்கு எழுதுகிறார் என்றால் மற்றவர்கள் எதற்கு எழுதுகிறார்கள் என்று தெரியாதா என்ன?
///
சதீஷ் உங்கள் கருத்துக்கு மன்னிக்கணும். நாங்கள் என்ன சொல்ல வரோம்னு புரியாமலே பேசிக்கிட்டு இருக்கீங்க. ஓட்டு கமென்ட் இல்லைனா பதிவு எழுதுறது வேஸ்ட்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா அதுக்காக மட்டுமே பதிவு எழுத கூடாது. போஸ்ட் போடுறது மத்தவங்க படிக்கிரதுக்ககதான். ஆனா அதை விட்டுட்டு ஹிட்ஸ் க்காக மட்டும் பதிவு எழுதுறது தப்புன்னுதான் சொல்றோம்.
சௌந்தர்..மெட்சூர்டான பதிவு...பின்னூட்டங்களில் அலசி இருந்த கருத்துகளும் அருமை...உன் பதிவின் கருத்துக்கள் ஹிட்ஸ் வெறியர்கள் மிகவும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்...
கருத்துக்கள் அருமை சௌந்தர். .
ம்ம்...சௌந்தர் ஒண்ணுமே புரியல !
Good thoughtful post Soundar... innum ivlo paithiyam pidikkala blogla... pidikkathunnum nenaikkiren... as you said most of us write blogs for a diversion...well said... nice post
ரொம்ப நல்ல போஸ்ட்,பாராட்டுக்கள்.தேவையான பகிர்வு.அத்தனையும் உண்மை.நான் கொஞ்சம் பதிவுலகம் பற்றி பேச ஆரம்பித்தால் எங்க வீட்டு மக்கள் புடைத்து எடுத்துவிடுவார்கள்.வீட்டில் உள்ள ஆட்களை கவனித்து கொண்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டிய நேரத்தில் உட்கார்வதால் நிறைய உடல்நலப்பிரச்சனை தான்,இனி அதிகம் உட்கார்வதை தவிர்க்க வேண்டும் தான்.
///மதியம் சாப்பாட்டை எங்கள் வீட்டில் முடித்து கொண்டு///
ஆமா பெரிய்ய சாப்பாடு போட்டாராம் சாப்பாடு என்னமோ பிரியாணி போட்டது மாதிரி ,,,,,,,,
/// இரவு சாப்பாட்டிற்கு எஸ்கே வீட்டிற்கு கிளம்பி சென்றார் மங்குனி...///
எஸ்கே சார் நீங்களாவது நல்ல பரோட்டா பாயன்னு, சிக்கன்னு ரெடிபன்னிவையுங்க சார்
ஹலோ எச்சூச்மி இந்த ஒட்டு , ஹிட்ச்ன்னு சொல்லி இருக்கிங்களே ....... வோட்டு , ஹிட்ஸ் அப்படின்னா என்ன சார் ???
நிதர்சனத்தை நச்சுன்னு வச்சி இருக்கே...
அப்புறம் ஏன் ராசா? தமிழ்மணத்துல ஒட்டு எகிருரதுக்கு ரொம்ப டகால்டி வேலை எல்லாம் செஞ்ச?
ஹிட்ஸ் எகிருரதுக்கும் அந்த வேலை செய்ய வேண்டியது தானே?
அட கடவுளே!
Post a Comment