Thursday, January 26

"இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை






பரிதி வழக்கம் போல அதிகாலையே எழுந்து குளித்து முடி திருத்தும் நிலையத்திற்கு புறப்பட்டு கொண்டிருந்தார்.

”என்னப்பா இது காயம்...?!” என கன்னத்தை பார்த்து கேட்டாள் அவர் மகள்.

”அது தெரியலைம்மா... ஏதோ பூச்சி கடிச்சு இருக்கும் போல.. அதான் வீங்கி இருக்கு.”

"என்னப்பா இப்படி சொல்றீங்க..?! பூச்சி கடிச்சது கூட தெரியாமலாதூங்குவீங்க...?? வலி அதிகமா இருக்காப்பா..??”


”வலி கொஞ்சம் அதிகமாதான்ம்மா இருக்கு. கொஞ்சம் சுண்ணாம்பு வச்சா சரியா போய்டும்.”

”ஐயோ... அதெல்லாம் வேணாம்ப்பா..ஹாஸ்பிட்டல் போங்கப்பா..நான் காலேஜ் போயிட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க” என சொல்லி புறப்பட்டாள்.

மகள் சொல்வதை கேட்காமல் பெட்டி கடையில் சுண்ணாம்பு வாங்கி வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார் பரிதி.


------------------------------------------------------

பரிதி பொறுப்பான குடும்ப தலைவர்.. மனைவி இறந்து பல வருடங்கள் ஆன போதும் தன் கடமைகளை சரியாக செய்து கொண்டிருப்பவர்... முடி திருத்தும் நிலையம் நடத்திவருகிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்தே தன் இரு மகள்களையும் படிக்க வைக்கிறார்.

பரிதி. வழியில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வாடிக்கை. இப்படி நல்ல பழக்கங்களை வைத்திருக்கும் பரிதிக்கு, ஒரு கெட்ட பழக்கமும் இருக்கின்றது.

கோவிலுக்கு சென்று விட்டு அடுத்து அவர் செல்வது மாவா பான் பராக் கடைக்கு. ஒரு நாளைக்கு தேவையான மாவா வாங்கி கொண்டு அங்கேயே சிறிது போட்டு கொண்டு கடைக்கு நகர்ந்தார். மாவா போடும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி விட்டு இப்போது விட முடியாமல் தவித்து வந்தார்.

கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்த பரிதி, வாடிக்கையாளர் வந்தவுடன் முடிதிருத்தும் பணியை செய்வதற்கு முன் மீண்டும் ஒரு முறை மாவாவை போட்டு கொண்டார்.  வாடிக்கையாளர் வந்தால் கூட பாக்கு போடுவதை நிறுத்த மாட்டார். மாவா போட்டு வேலை செய்தால் தான் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியுமென நினைத்து கொள்வார். 




வாடிக்கையாளர் சென்றவுடன். பரிதியுடைய நெருங்கிய நண்பர் கதிர் தினசரிநாளிதழ் வாங்கி கொண்டு வந்தார். செய்தித்தாளை பிரித்து இருவரும் படிக்கத் தொடங்கினர். மாவா பாக்கெட்டை எடுத்து தன் நண்பரிடம் கொடுத்தார் பரிதி.இருவரும் மாவாவை போட்டு கொண்டு செய்தித்தாளுடன் மாவாவையும் சேர்த்து அரைத்து கொண்டிருந்தனர். இப்படி பரிதி கடை தொடங்கியது முதல் நடந்து வருகிறது...மாவா மூலமே இருவரும் நெருங்கிய நண்பர்கள்.


வாடிக்கையாளர் வந்தவுடன் கதிர் “சரி பரிதி... நான் கிளம்புகிறேன் முடிந்தால் மாலை வருகிறேன். இல்லையேல் நாளை வருகிறேன்” என்று விடைபெற்று கொண்டார் கதிர்.

வாடிக்கையாளரை கவனித்த பரிதி வேலையை பார்த்து கொண்டிருந்த பொழுது பேச்சை தொடங்கிய வாடிக்கையாளர்...


”ஏன் பரிதி... நீ இந்த பாக்கு போடுறதை நிறுத்தவே மாட்டியா..?? முடிவெட்டும் போதாவது நிறுத்தவேண்டியது தானே?”

”அண்ணே...நானும் போடக்கூடாதுன்னுதான் நினைக்குறேன். ஆனா... முடிய மாட்டுதுண்ணே...காலைல கடைக்கு வரும்போது நேரா மாவா கடைக்குதானே கால் போகுது.. நான் முடி வெட்ட பழகும் போது இந்த பழக்கத்தையும் சேர்த்து கத்துகிட்டேண்ணே....”

”அட என்னப்பா நீ... இது சாதாரண விஷயம்ப்பா... பாக்கு போடணும்ன்னு நினைக்கும் போது சூவிங்கம் போட்டுக்கோப்பா... தன்னாலே மறந்திடுவே... சாதாரணமான ஆட்களுக்கே கேன்சர் எல்லாம் வருது. நீ வேற இந்த பாக்க போட்டு மெல்லுற.. பொம்பள பசங்க எல்லாம் வைச்சு இருக்க....பார்த்து நடந்துக்கோ..”


”அண்ணே... இந்த சூவிங்கம் போடுறதையெல்லாம் எப்போவோ செய்து பார்த்துட்டேண்ணே... இருந்தாலும் நான் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து
பார்க்கிறேன்.”

ஐம்பது ரூபாயை கொடுத்து வாடிக்கையாளர் விடைபெற்று கொண்டார்...

------------------------------------------------------

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அருகிள் வந்த மூத்தமகள்..
“என்னப்பா இன்னைக்கும் பாக்கு போட்டீங்களா?”

”ஏன்ப்பா இப்படி பாக்கு போடுறீங்க..?! எத்தனை தடவை சொன்னாலும் கேக்க
மாட்டீங்களா..??”

எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார் பரிதி...

”சரி வாங்க சாப்பிடலாம்.. பாக்கு போட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பா..”

சாப்பிடும்போது கேட்டாள், ”என்னப்பா ஹாஸ்பிட்டல் போனீங்களா...??”

”இல்லம்மா... கொஞ்சம் சுண்ணாம்பு வச்சேன். வலி கொஞ்சம் பரவாயில்லை.
தூங்கி எழுந்தா சரியா போய்டும் ”

இரவு உணவை முடித்து படுக்க சென்றார்.

காலை வெகு நேரமாகியும் எழவில்லை. சோர்வில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார்.

------------------------------------------------------------------------------

கதிர் செய்தித்தாளை வாங்கிக் கொண்டு கடைக்குச்சென்றார். கடை இன்னும் திறக்கப்படாமலே இருந்தது.பரிதியின் வருகைக்கு காத்திருந்து...அங்கேயேபேப்பர் படித்து கொண்டிருந்தார் கதிர். தன் வேலைக்கு நேரம் ஆவதால் செய்தித்தாளை கடையின் ஷட்டரில் மாட்டி வைத்து விட்டு சென்று விட்டார்.

மறுநாளும் கடை பூட்டி இருப்பதை பார்த்த நண்பர் பரிதியின் வீட்டுக்கே சென்றார். அங்கே பரிதி காய்ச்சலில் படுத்துகொண்டிருந்தார்.

”என்ன பரிதி... உடம்பு சரி இல்லையா...?! ”

”ஆமாண்டா... காய்ச்சல் அதிகமா இருந்துச்சு... நேத்து நைட்தான் கிளினிக்
போயிட்டு வந்தேன். ”

”என்னடா சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கு...?!”

”இப்போ காய்ச்சல் இல்லை. கன்னத்துல புண் இருக்கு. அதனாலதான்வந்திருக்கும்.எதுக்கும் ஒரு வாரம் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு டாக்டர். இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளை கடை
திறந்திடுவேன்டா.... ”

”சரிடா... எனக்கும் வேலைக்கு நேரமாச்சு. நானும் கிளம்புறேன். நாளைக்கு கடைக்கு வரேன். ”

-----------------------------------------------------------------------------

ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறுவதும், மீண்டும் வருவதுமாய் இருந்ததால்
மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்தார் பரிதி.

வழக்கம் போல காலையில் கதிர் பேப்பர் கொண்டு வர..” என்னடா இன்னுமா உனக்கு காயம் ஆறல.. இதுல பாக்கு வேறயா” என்று மாவாவை பிடிங்கி கொண்டார்.

”டேய்... கொஞ்சம் மாவா கொடுடா... நீ மட்டும் போடுறே..?”

”டேய்...ஒழுங்கா பேப்பர் படி.. ”  என பேப்பரை பிரித்த பொழுது... ஒரு துண்டு நோட்டீஸ் ஒன்று விழுந்தது..எதாவது விளம்பரமாய் இருக்குமென தூக்கிப்போட பார்த்தார் பரிதி.

”என்னடா அது என வாங்கி படித்த கதிர்.....

அதை பரிதியிடம் காண்பித்தார்..பார்த்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்...புற்றுநோய் கண்டறிய இலவச சோதனை என புற்று நோயின் அறிகுறிகள் தொடர்பான படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தது..  பரிதியின் கன்னத்தில்இருந்த காயங்கள் போலவே நோட்டீஸில் இருந்தது.

”என்னடா எனக்கு இருக்கற காயம் மாதிரியே இந்த நோட்டிஸ்ல இருக்கு. எனக்கு கேன்சரா இருக்குமோ..??”

”அதெல்லாம் இருக்காதுடா...ஆனா நமக்கும் நாற்பது வயசுக்கு மேல ஆகுது, நாற்பது வயசுக்கு மேல இருக்குறவங்க புற்றுநோய் இருக்கான்னுபரிசோதனை பண்ணிக்கணும்ன்னு சொல்றாங்க... வா... நாம போய் சும்மா பார்த்துட்டு வருவோம்.

------------------------------------------------------------------------

மறுநாள் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என பார்க்க சென்றனர்... பரிதியை ஒரு டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். டாக்டர் மற்ற டாக்டரை அழைத்து காண்பித்தார்..

”பாக்கு போடுவீங்களா..?? ”

”ஆமா டாக்டர்..”

”எத்தனை வருசமா போடுறீங்க..??”

”இருபதுவருசமா போடுறேன் டாக்டர்..”

”வலி அதிகமா இருக்கா..?”

”ஆமாங்க... வலி அதிகமா இருக்கு.. ”

”பரிதி உங்களுக்கு புற்று நோய்க்கான அறிகுறி தெரியுது. நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... உங்க காயத்தை சோதனை செய்யணும்..நல்ல வேளையா இப்பயேவந்தீங்க... புற்றுநோய் முத்திப்போய் இருந்தா ஒண்ணுமே செய்திருக்க முடியாது...  கண்டிப்பா நாளைக்கு ஹாஸ்பிட்டல் வாங்க... புற்றுநோயை மேலும் பரவாம தடுத்திடலாம்.உங்க வீட்டுல யாராவது நாற்பது வயதிற்கு மேல இருந்தா வந்து பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்க பரிதி..”

”சரிங்க டாக்டர்” என தளர்ந்த குரலில் கூறி வெளியேறினார் பரிதி..

கதிரும் பரிதியும் பேசிக்கொண்டே சென்றனர்...

”இனிமே நாம பாக்கே போடக்கூடாது பரிதி.. ” என்றார் கதிர்.

”ஆமாண்டா...நல்ல வேளை உனக்கு ஒன்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க..  உனக்கு
ஒண்னும் ஆகலேன்னு இனி நீ பாக்கு போட ஆரம்பிச்சிராத..”

”நீ வேற பரிதி... நான் இனி போட மாட்டேன்டா.. யாராவது போடுறதை
பார்த்தாலும் தடுக்கப்போறேன்டா.. ”

”நல்லா சொன்னடா.. ஆனா எனக்கு இந்த நோய் தீவிரமாகிறதுக்குள்ள என் மகள்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை எப்படி அமைச்சு தரப்போறேன்னு கவலையா
இருக்கு.”

”கவலைப்படாதே அதான் ஆரம்பத்திலேயே வந்துட்டோம்ல சரியாகிடும்..”

“இனிமே நீயும் நல்லா உடம்பை கவனிச்சிக்கோ கதிர்” லேசாக கண்கள் கலங்கின பரிதிக்கு…

“நிச்சயமாடா.. என் மனைவிக்குக் கூட நாற்பது வயசு ஆகுது...அவளையும் நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் சோதனை செய்யப்போறேன்டா சரி...வா பரிதி... டீ குடிச்சிட்டு போகலாம்.. ”

”சரிடா. ”

பரிதி பெட்டி கடைக்கு சென்று... ”இரண்டு சூவிங்கம் கொடுங்க” என்றார். 







36 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

மிக சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்.

இது போன்ற ஒரு கதையை எழுதியதுக்காக உன்னை மிக பாராட்டுகிறேன். விழிப்புணர்வு கதை எழுதவேண்டும் என்று முன்வந்து எழுதிய உனது எண்ணத்திற்கு ஒரு சல்யூட் !

இன்னும் புற்றுநோய் பற்றி மக்கள் சரியான புரிதல் இல்லாமலேயே இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருத்துவ பரிசோதனைகள் மிக அவசியம்.

நோய் முற்றியபின் மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் சென்ற கதையின் கதாபாத்திரங்கள் மூலமாக ஒரு படிப்பினை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

dheva said...

40 வயதுக்கு மேல கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் மற்றும் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

ஒரு காயம் ஏற்பட்டால் அதற்கு சுண்ணாம்பு வைப்பது, வேறு இலைகளை அரைத்துப் போடுவது என்று ஒரு வித அறியாமையிலேயே மக்கள் இருக்கிறர்கள்.

புகையிலையை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயம் எப்போதும் இருக்கிறது.

ஒரு கருவை மையமாக வைத்து கதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான் தம்பி...! சரளாமா எழுதியிருப்பதற்கு பாரட்டுக்கள்பா!

நேசம் + யுடான்ஸ் நடத்தும் சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி!

நாய் நக்ஸ் said...

வாழ்த்துக்கள்...சௌந்தர்...

MANO நாஞ்சில் மனோ said...

சௌந்தர் ஹாட்ஸ் ஆஃப் யூ தம்பி, வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுக்கு....!!!

Unknown said...

வாழ்த்துக்கள் சௌந்தர் விழிப்புணர்வு கதைக்கு... நோய்க்கு மருத்துவமனையைத் தான் நாடவேண்டுமே அன்றி, நாமாய் ஒரு வைத்தியம் செய்தல் கூடாது என்பதை உணர்த்தும் கதை...
நேசம் + யுடான்ஸ் நடத்தும் சிறுகதைப் போட்டி அனைவருக்குமான ஒரு விழிப்புணர்வு களமாய் இருக்கும் என்பதில் எந்த வித ஜயமுமில்லை ....

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் விழிப்புணர்வு பதிவு... வாழ்த்துகள்...

ஜீவன்பென்னி said...

vetri pera vazthukkal thambi....

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - கதை அருமை - விழிப்புணர்வுக் கதை - நேசம் - போட்டியில் வெற்றிபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

இது ஒரு அருமையான விழிப்புணர்வுக் கதை என்று எல்லாரும் பாராட்டிவிட்டதால் அதை திரும்ப சொல்ல எனக்கு மனம் வரவில்லை. போட்டியில் வெற்றி பெறவும் எல்லோரும் வாழ்த்தி இருக்கிறார்கள். அதனால் உனக்கு பிடித்த ஒரு வாழ்த்தை 50 வார்த்தைகள் மிகாமல் “XXXXXXXXXXX" அடைப்பு குறிக்குள் இருக்கும் X மாற்றி நிறப்பி கொள்ளவும்.. :)

அன்பு அண்ணன்
டெரர் கும்மி டீம்
துபாய் கிளை

Menaga Sathia said...

நல்ல விழிப்புணர்வு கதை...வாழ்த்துக்கள்!!

Madhavan Srinivasagopalan said...

நல்ல கதை...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்...வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல விழிப்புணர்வு கதை...நல்லா இருக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

சின்னதாக ஆரம்பிக்கும் பழக்கம் சிறிது நாட்களுக்குப் பின் வழக்கமாகி விடும். பிறகு நாம் விட நினைத்தாலும் அது நம்மை விடாது. பிறகு இந்த மாதிரி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். புகையிலை மட்டும் அல்ல. எல்லா (புகை, குடி, etc.,) கெட்ட பழக்கமும் தான். நல்ல விழிப்புணர்வு கதை. வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

Chitra said...

நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்று நோய் எந்த வயதிலும் வரலாம். நாற்பது வயது என்று வரம்பு கிடையாது. வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கதைக்காக பாராட்டுக்கள்!

Asiya Omar said...

நல்ல கதை .வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சௌந்தர். நல்லதொரு விஷயத்தை மிக நளினமாகக் கையாண்டு கதையின் கருத்தை பதிவு செய்திருக்கீங்க.

சௌந்தர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி சார் வருகைக்கும் கருத்திற்கும்...

சௌந்தர் said...

Kousalya கூறியது...
மிக சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்.

இது போன்ற ஒரு கதையை எழுதியதுக்காக உன்னை மிக பாராட்டுகிறேன். விழிப்புணர்வு கதை எழுதவேண்டும் என்று முன்வந்து எழுதிய உனது எண்ணத்திற்கு ஒரு சல்யூட் !

இன்னும் புற்றுநோய் பற்றி மக்கள் சரியான புரிதல் இல்லாமலேயே இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருத்துவ பரிசோதனைகள் மிக அவசியம்.

நோய் முற்றியபின் மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரம்ப கட்டத்தில் சென்ற கதையின் கதாபாத்திரங்கள் மூலமாக ஒரு படிப்பினை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.///


பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.. அட டா சல்யூட் எல்லாம் வேறையா... கதையின் கரு மிகவும் பிடித்து போனதால் உடனே எழுதி விட்டேன் அக்கா... வருகைக்கு மிக்க நன்றி... :)

சௌந்தர் said...

dheva கூறியது...
40 வயதுக்கு மேல கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் மற்றும் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.///

ஆம் அண்ணா 40 வயதிற்கு மேல் சோதனை செய்வது மிகவும் நல்லது குறிப்பாக பெண்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள்..

ஒரு காயம் ஏற்பட்டால் அதற்கு சுண்ணாம்பு வைப்பது, வேறு இலைகளை அரைத்துப் போடுவது என்று ஒரு வித அறியாமையிலேயே மக்கள் இருக்கிறர்கள்.//

ஆம் இப்பொழுதும் ஏதாவது பூச்சு கடி என்றால் சுண்ணாம்பு வைப்பது தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை தான்

புகையிலையை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயம் எப்போதும் இருக்கிறது.///

எந்த கெட்ட பழக்கம் இல்லதவருக்கே புற்றுநோய் வரும் பொழுது குட்கா புகை போன்றவை போடும் பொழுது அதிகம் வந்துவிடுகிறது..

ஒரு கருவை மையமாக வைத்து கதை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான் தம்பி...! சரளாமா எழுதியிருப்பதற்கு பாரட்டுக்கள்பா!///

கொஞ்சம் சிரமம் தான் அண்ணா அனால் எனக்கு இது போல் எழுதவே பிடிக்கிறது..

நேசம் + யுடான்ஸ் நடத்தும் சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி!////


வெற்றி பெற வாழ்த்தியதற்கு நன்றி :)))

சௌந்தர் said...

NAAI-NAKKS கூறியது...
வாழ்த்துக்கள்...சௌந்தர்...//

மிக்க நன்றி வாழ்த்திற்கும் வருகைக்கும்..

MANO நாஞ்சில் மனோ கூறியது...
சௌந்தர் ஹாட்ஸ் ஆஃப் யூ தம்பி, வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுக்கு....!!!///

thank you thanks you anna :))

சௌந்தர் said...

ரேவா கூறியது...
வாழ்த்துக்கள் சௌந்தர் விழிப்புணர்வு கதைக்கு... நோய்க்கு மருத்துவமனையைத் தான் நாடவேண்டுமே அன்றி, நாமாய் ஒரு வைத்தியம் செய்தல் கூடாது என்பதை உணர்த்தும் கதை...
நேசம் + யுடான்ஸ் நடத்தும் சிறுகதைப் போட்டி அனைவருக்குமான ஒரு விழிப்புணர்வு களமாய் இருக்கும் என்பதில் எந்த வித ஜயமுமில்லை ///

ரொம்ப ரொம்ப நன்றி.. கருத்திற்கும் வருகைக்கும்...

சௌந்தர் said...

வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு... வாழ்த்துகள்...///

மிக்க நன்றி சார்... வருகைக்கும் கருத்திற்கும்...

ஜீவன்பென்னி கூறியது...
vetri pera vazthukkal thambi....///
rompa thanks na...

cheena (சீனா) கூறியது...
அன்பின் சௌந்தர் - கதை அருமை - விழிப்புணர்வுக் கதை - நேசம் - போட்டியில் வெற்றிபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா///

மிக்க நன்றி அய்யா...

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்

இது ஒரு அருமையான விழிப்புணர்வுக் கதை என்று எல்லாரும் பாராட்டிவிட்டதால் அதை திரும்ப சொல்ல எனக்கு மனம் வரவில்லை. போட்டியில் வெற்றி பெறவும் எல்லோரும் வாழ்த்தி இருக்கிறார்கள். அதனால் உனக்கு பிடித்த ஒரு வாழ்த்தை 50 வார்த்தைகள் மிகாமல் “XXXXXXXXXXX" அடைப்பு குறிக்குள் இருக்கும் X மாற்றி நிறப்பி கொள்ளவும்.. :)

அன்பு அண்ணன்
டெரர் கும்மி டீம்
துபாய் கிளை///


அந்த அடைப்புகுறிக்குள் உங்க பேர் மட்டும் போதுமே... இருந்தாலும் உங்க ஆசைக்காக டெரர் தம்பி சௌந்தர்... போதுமா.. அண்ணா..??

:)))

ரொம்ப நன்றி அண்ணா உங்க வருகைக்கு... எப்போதும் போல உங்கள் பின்னூட்டும் அருமை..

சௌந்தர் said...

S.Menaga கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை...வாழ்த்துக்கள்!!//

மிக்க நன்றி அக்கா...


Madhavan Srinivasagopalan கூறியது...
நல்ல கதை...

வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி சார்...

ரெவெரி கூறியது...
சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்...வாழ்த்துக்கள்...///

நன்றி நண்பா வருகைக்கும் கருத்திற்கும்...

சௌந்தர் said...

அப்பாவி தங்கமணி கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை...நல்லா இருக்கு///

அட வாங்க வாங்க மிக்க நன்றி :))

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சின்னதாக ஆரம்பிக்கும் பழக்கம் சிறிது நாட்களுக்குப் பின் வழக்கமாகி விடும். பிறகு நாம் விட நினைத்தாலும் அது நம்மை விடாது. பிறகு இந்த மாதிரி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். புகையிலை மட்டும் அல்ல. எல்லா (புகை, குடி, etc.,) கெட்ட பழக்கமும் தான். நல்ல விழிப்புணர்வு கதை. வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !///

மிக சரியாக சொன்னீங்க நண்பா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

சௌந்தர் said...

Chitra கூறியது...
நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்று நோய் எந்த வயதிலும் வரலாம். நாற்பது வயது என்று வரம்பு கிடையாது. வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கதைக்காக பாராட்டுக்கள்!///

சரி தான் எந்த வயதிலும் வரலாம்.. அனால் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சோதனை செய்து கொண்டால் நலம் அல்லவா...??

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அக்கா... :))

சௌந்தர் said...

Asiya Omar கூறியது...
நல்ல கதை .வாழ்த்துக்கள்.///

rompa thanks :))

FOOD NELLAI கூறியது...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சௌந்தர். நல்லதொரு விஷயத்தை மிக நளினமாகக் கையாண்டு கதையின் கருத்தை பதிவு செய்திருக்கீங்க.///

வாங்க ணா வாங்க :)) உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது... :)) எனக்கு இருப்பதை விட உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமா இருப்பதை எண்ணி :))

மிக்க நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும்... :)

Praveenkumar said...

விழிப்புணர்வுடன் கூடிய கதைக்களம் அமைத்திருக்க மக்கா.... கதையா இருந்தாலும் யதார்த்தமான பேச்சு வழக்குல நல்ல கருத்துகளை பதிவு செய்திருக்க... வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா!!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

School of Energy Sciences, MKU said...

இந்த கதையை படித்து ஒரு ஆள் மாறினாலும் கூட தம்பிக்குக் கிடைத்த வெற்றி தான். பரிசு பெற வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

My best wishes!:-)

Jaleela Kamal said...

புற்றுநோயிக்கான அருமையான் விழிப்புணர்வு கதை வெற்றி பெற வாழ்த்துகக்ள்.

Unknown said...

மாவா !!! இந்த கருமத்த நானும் போட்டு தொலைச்சிருக்கேன் ..,காலைல எழுந்ததும் பல்லு விலக்குரனோ இல்லியோ ..,மாவா கடைக்கி போய் அந்த கருமத்த வாங்கி வாயில போட்டா தான் ஒரு நிம்மதி கிடைக்கும் .மிக மிக மோசமான பழக்கம் அது .ஒரு நாள் வணிகர் தினம் கடை இல்லை ..,மனசு அளபரக்குது ..,ஒரு ஆட்டோவ புடிச்சு புளியந்தோப் ல கடைல வாங்கி போட்டதும் தான் திருப்தி வந்தது .அன்னிக்கி முழு நாளும் யோசிச்சேன் ..,நான் மாவாக்கு அடிமையாயிடேன்னு தெரிஞ்சுது .வெக்கமா இருந்துச்சி அன்னிக்கி விட்டேன் அந்த கருமத்த !!இன்னிய வரை தொடல .

குறிப்பு : கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்த விடலாம் நினைக்கிறவங்க நிச்சையமா விட முடியாது .ஒரே நாள் விடனும் நினைச்சா விட்டுடலாம் .அதுக்கு ஆன்ம பலம் மட்டும் வேணும் .அவ்ளோ தான் .

ஷர்புதீன் said...

goyyale, HAPPY BIRTHDAY, BIRTHDAY WISHES

 
;