இந்த தீபாவளிக்கு எந்த படத்திற்கு போகலாம் என்று இருப்பவர்களுக்காக இந்த பதிவு. ஏதோ என்னால் முடிந்த சமூகசேவை...
எந்திரன் படத்திற்கு எவ்வளவு எதிர் பார்ப்பு இருந்ததோ அதே அளவுக்கு எதிர் பார்ப்பு மக்களிடம் இருக்கிறது (யாருப்பா அது சிரிக்கிறது)...உண்மை தான் சிவா நடித்து வெளி வர இருக்கும் படம் "வ குவாட்டர் கட்டிங்"
"என்னது எனக்கு கட்டிங் தரிங்களா என்று எல்லாம் கேட்க்க கூடாது"..படத்தின் பெயர் "வ" என்றால் தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது "குவாட்டர்" என்ற பொருள்...எப்படியெல்லாம் அர்த்தம் சொல்றாங்க பாருங்க...!
ஒய் நாட் புரொடக்சன், கிளவுட் நைன் இணைந்து படத்தை தயாரித்து உள்ளார்கள். தமிழ்படத்தை அடுத்து சிவா நடித்து வெளிவர இருக்கும் படம் இது. ஆரியா நடித்த ஓரம்போ படத்தை தொடர்ந்து புஸ்கர்-காயத்ரி இயக்கும் 2-வது படம்...சிவாவிற்கு தமிழ்படம் வெற்றிக்கு பிறகு வருகிற படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது... எஸ்.பி.பி சரண், லேகா வாஷிங்டன் நடித்து இருக்கிறார்கள் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவுள்ளார்..
கதை என்ன என்றால் நம்ம சிவா வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சென்னை வருகிறார்..மறு நாள் வெளிநாட்டிற்கு போகிறார் போகும் முன் விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.பி.சரண்...சிவாவின் அக்காவை திருமணம் செய்துகொள்ள போகிறவர் தான் சரண்..சிவாவின் அனைத்து ஆசையும் தீர்த்து வைக்கிறார் சரண். இரவு 12 மணிக்கு மேல் குவாட்டர் குடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார் சிவா எப்படி குவாட்டர் குடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை...சென்னையில் இரவில் என்னவெல்லாம் நடக்கும் அதையெல்லாம் படத்தில் இடம் பெரும் என்று புஸ்கர்&காயத்ரி கூறுகிறார்கள்...
மக்கள் : இந்த படத்தில் என்ன தான் மெசேஜ் இருக்கு
இயக்குநர்: என்னடா எல்லாத்துக்கும் மெசேஜ் கேட்டு அலையுறீங்க...
இந்த படத்தின் பாடல்களே என்ன படம் என்று கேட்க்க வைத்தது "மைனா" எதார்த்தமான படங்களை தந்துகொண்டிருக்கும் பிரபுசாலமன் தான் (கொக்கி,லீ படங்களின்) இயக்குநர். சலோம் ஸ்டுடியோ தயாரிப்பில் கல்பாத்தி அகோரம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் இமான் இசை மிகவும் புது விதமாக இருக்கிறது அனைத்து பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.. மைனா படத்தின் நாயகனாக கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற விதார்த்தும், நாயகியாக சிந்து சமவெளி படத்தில் நடித்த அமலா பாலும் நடித்துள்ளனர்.
இதுவும் ஒரு காதல் கதை தான் மைனா என்ற மலைசாதி பெண்ணுக்கும், சுருளி என்ற டிரைவருக்கும் ஏற்படும் காதலும், காதலுக்காக எதையும் செய்யும் அவர்களின் துணிச்சலும்தான் படத்தின் மையம். பருத்தி வீரன் போல தான் இருக்கும் என்று தெரிகிறது...
இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு இரண்டு நாளாக தூக்கமே வரவில்லை என்று சொல்கிறார் மைனா படம் என்ன பேய் படமா..? தெரியலை...
எதார்த்தமான படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மைனா படம் பார்க்கலாம். நகைசுவையாக படம் பார்க்கணும் என்றால் வா குவாட்டர் கட்டிங் படம் பார்க்கலாம்...
| Tweet | |||||

























- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact