Monday, November 1

பட்டாசு வெடிப்போம்....!


பட்டாசு வெடிக்கணும் காசு கொடுங்க தாத்தா" என்று எங்க தாத்தா விடம் கேட்போம் அதற்கு எங்க தாத்தா காசை கரியாக்காதீங்கன்னு சொல்வார்...

காசை கரியாக்கும் தொழிலை நம்பி தான் சிவகாசி என்ற பெரிய ஊரே இருக்கிறது சிவகாசியை குட்டி ஜப்பான் என்று சொல்லும்அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால் பட்டாசு தொழிலே காரணம் 

இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில், 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாராகிறது. எவ்வளவு நாகரிகம் வந்தாலும், வளர்ந்தாலும் பெரியவர்களின் சந்தோஷம் என்பது குழந்தைகளை சார்ந்தே இருக்கிறது. குழந்தைகளின் சந்தோஷம் என்பது, பட்டாசை சார்ந்தே இருக்கிறது. தீபாவளிக்கு அவர்களின் முதல் தேவை பட்டாசுதான்; மற்றவை எல்லாம் பிறகுதான். தீபாவளி அன்று, மக்கள் வெடிக்கும் பட்டாசுகளை தயாரிக்க, சிவகாசியில் ஆண்டு முழுவதும் உழைக்கின்றனர்....

ஆனால் இப்போது எல்லாம் பட்டாசு வெடிப்பது வெகுவாக குறைந்து விட்டது. முன்பு எல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே ஒரு சில இடங்களில் வெடி சப்தம் கேட்டு கொண்டே இருக்கும். இப்போது எல்லாம் ஏதோ சாஸ்திரத்திற்கு இரண்டு வெடியை வெடித்து விட்டு டிவி முன் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர். நாம் வருட முழுவதும் பட்டாசு வெடிக்க போவது இல்லை, வருடத்தின் ஒரு நாள் மட்டுமாவது சந்தோசமாக கொண்டாடுவோமே..!

நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசுக்களையும் நம்பி தான் இரண்டு லட்சம் குடும்பங்கள் வாழ போகிறது. இரண்டு லட்சம் குடும்பங்கள் கவுரவமாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்படி ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்தாலும், பட்டாசு தேவையை சமாளிக்க முடியாமல்தான் திணறுகிறது சிவகாசி. காரணம், வடமாநிலங்களில் பட்டாசு மீது கொண்டுள்ள காதல்தான்...

நாம் சந்தோசமாக பட்டாசு வெடிக்க எத்தனை பேர் உயிரை இழந்தார்களோ தெரியாது. இருந்தும் ஏன் இவர்கள் இதே வேலையை செய்கிறார்கள் என்றால் வேறு வேலை கிடையாது பட்டாசு தீப்பெட்டி தவிர அடுத்து இவர்கள் செய்யும் வேலை பிரிண்டிங் வேலை மட்டும் தான்...

இவர்கள் பட்டாசு தொழில் நன்றாக போய் கொண்டு இருக்கும் பொழுது ஏன் இவர்கள் புதிய புதிய ரகங்கள் எல்லாம் உற்பத்தி செய்து கொண்டே வருகிறார்கள் பட்டாசு மீது இருக்கும் காதல் குறைந்து விட கூடாது என்பதற்காக தான். 

காசு கொடுத்து வாங்கும் பட்டாசு வெடித்த பிறகு கரியாகத்தான் போகிறது என்றாலும், அந்த கரிக்கு பின்னால் இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த தீபாவளிக்கு நீங்கள், உங்களது காசை கரியாக்கலாம்தானே...! எல்லாவற்றிக்கும் மேலாக நமது சந்தோசமும இருக்கிறது....! 

நாம எல்லாம் சின்ன வயதில் பட்டாசு வெடிக்கறதுக்கு எவ்வளவு சந்தோசம் படுவோம் ஆனா, இப்போது இருக்கிற அப்பா அம்மா எல்லாம் சின்ன வயதில் நன்றாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்து இருப்பாங்க இப்போது அவர்களே தன் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி தராமல் உனக்கு பட்டாசு வேண்டாம் மோதிரம் எடுத்து தரேன் எக்ஸ்ட்ரா டிரஸ் எடுத்து தரேன் சொல்றாங்க.இப்போது உள்ள அப்பாக்கள் எல்லோரும் பட்டாசு கொளுத்தினா காசு கரியாகிவிடும்னு சொல்லுராங்களே ஏன்...உங்களுக்கு ஒரு சட்டம் குழந்தைகளுக்கு ஒரு சட்டமா..?

வருமானவரியும் விற்பனை வரியும் அதிகம் செலுத்தும் நகரங்களில் சிவகாசியும் ஒன்று...!  


கே.ஆர்.பி செந்தில், தேவா, அருண், மங்குனி, பன்னிக்குட்டி ராமசாமி, இம்சை அரசன் பாபு, எல்லாரும் அவங்க அவங்க குழந்தைக்கு நல்ல Fancy வெடி எல்லாம் வாங்கி தரணும் குறைந்தது ஒரு 10,000 ரூபாய்க்கு வாங்கி தரணும் 

ரமேஷு , Terror ,கோமாளி எல்லோரும் நிறைய பட்டாசு வாங்கி வைத்து கொண்டு பொண்ணுங்க புது டிரஸ் போட்டு கிட்டு வரும் போது தலையில் வைத்து கொளுத்துறது, கையில் பிடித்து கொளுத்துறது இப்படி ஏதாவது சில்மிஷம் பண்ணா அது தான் கடைசி தீபாவளி....! ஒழுங்கா பத்திரமா பார்த்து பட்டாசை வெடிக்கணும்...! 


இருங்க இருங்க தேவா என்னமோ தேடுறார்...! (தேடல்) என்னனு கேட்கிறேன் 

இல்லை... போன வருசம் வாங்கிய பட்டாசை தேடுறேன்...!  



சந்தோசம் தான் வாழ்க்கை நல்லா சந்தோஷமாக தீபாவளி கொண்டாடுங்கள்....தீபாவளி நல்வாழ்த்துக்கள்...      
  

52 comments:

எல் கே said...

நல்லா சொன்னீங்க தம்பி. . உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.

/கே.ஆர்.பி செந்தில், தேவா, அருண், மங்குனி, பன்னிக்குட்டி ராமசாமி, இம்சை அரசன் பாபு, எல்லாரும் அவங்க அவங்க குழந்தைக்கு நல்ல Fancy வெடி எல்லாம் வாங்கி தரணும் குறைந்தது ஒரு 10,000 ரூபாய்க்கு வாங்கி தரணும்
//

அப்பாடி நான் தப்பிச்சேன்

மங்குனி அமைச்சர் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க சௌந்தர் , ஆனால் அந்த பட்டாசு நம் கைக்கு கிடைக்கும் போது இடைத்தரகர் செயலால் கிட்டத்தட்ட 300 , 400 சதவிகிதம் விலை அதிகமாகிவிடுகிறது , அது அதை தயாரிக்கும் உழைப்பாளிகளுக்கு போயி சேர்ந்தாலும் பரவாயில்லை , எல்லாம் இடைத்தரகர்களிடம் போய் சேருகிறது , அதில் கொஞ்சம் அரசு கவனம் செலுத்தினால் அந்த உழைப்பாளிகளுக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

அனைவருக்கும் முதல் தீபாவளி வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

சரியான சமயத்தில் ஒரு நல்ல பதிவு....


செளந்தர், இங்க மொரீசியஸ்ல சீனா பட்டாசுக்கள் தான் கிடைக்கும்.... அதை வாங்கி தரவா 10000 ரூபாய்க்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கே.ஆர்.பி செந்தில், தேவா, அருண், மங்குனி, பன்னிக்குட்டி ராமசாமி, இம்சை அரசன் பாபு, எல்லாரும் அவங்க அவங்க குழந்தைக்கு நல்ல Fancy வெடி எல்லாம் வாங்கி தரணும் குறைந்தது ஒரு 10,000 ரூபாய்க்கு வாங்கி தரணும்///

ஆஹா, ஏற்கனவே இருக்க விலைவாசில பண்டிகை கொண்டாடுறதே பெரிய விஷ்யமாப் போச்சு, இதுல 10000 ரூபாய்க்கு பட்டாசு வாங்குனா என்ன ஆகுறது?

Ramesh said...

அருமையான பதிவு செளந்தர்.. நாங்களும் நாலு வருசம் பட்டாசு கடை போட்டிருந்தோம்.. அந்த நியாபகம் வந்திடுச்சு.. வீட்டுக்கு பக்கத்துலயே கடை போட்டதால நான் பட்டாசு வெடிக்க முடியாது. ஆனா.. கடை முழுக்க பட்டாச பாக்கறதுக்கே சந்தோசமா இருக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், டீவியே கதின்னு கெடக்காம ப்ளாக்கு பக்கமாவும் கொஞ்ச்சம் வாங்க...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவா அண்ணன் அவர்களுக்கு தேடித் திரிந்த செம்மல் என்ற பட்டத்தை அளிக்கிறேன்....

கருடன் said...

@சௌந்தர்

//புது டிரஸ் போட்டு கிட்டு வரும் போது தலையில் வைத்து கொளுத்துறது//

அவங்க தலையில் நான் ஏன் பட்டாசு கொலுத்தனும்??

ஜீவன்பென்னி said...

//இருங்க இருங்க தேவா என்னமோ தேடுறார்...! (தேடல்) என்னனு கேட்கிறேன்

இல்லை... போன வருசம் வாங்கிய பட்டாசை தேடுறேன்...! //

:)

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@சௌந்தர்

//புது டிரஸ் போட்டு கிட்டு வரும் போது தலையில் வைத்து கொளுத்துறது//

அவங்க தலையில் நான் ஏன் பட்டாசு கொலுத்தனும்??///

@@@TERROR-PANDIYAN(VAS)
அவங்க தலயில் இல்லை உங்க தலயில் தான்....

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நான் எழுதனும்னு நினைச்ச பதிவை நீங்க எழுதீடீங்க ......நல்ல இருக்கு மக்கா .......

Anonymous said...

பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறைந்து போனதற்க்கு காரனம் டிவி மற்றும் நாம வளர்ந்துட்டோமுல்ல..டீஸண்டா இருக்கோம்..ஆனா குழந்தைகள் பட்டாச்சு வெடிச்சிகிட்டே தான் இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷு , Terror ,கோமாளி எல்லோரும் நிறைய பட்டாசு வாங்கி வைத்து கொண்டு பொண்ணுங்க புது டிரஸ் போட்டு கிட்டு வரும் போது தலையில் வைத்து கொளுத்துறது, கையில் பிடித்து கொளுத்துறது இப்படி ஏதாவது சில்மிஷம் பண்ணா அது தான் கடைசி தீபாவளி....! ஒழுங்கா பத்திரமா பார்த்து பட்டாசை வெடிக்கணும்...! //

நான் ரொம்ப டீசண்டு. இத டெரர் கிட்ட ஜொள்ளு

Anonymous said...

மிளகா பட்டாசு ஒண்ணு பத்த வெச்சு இம்சை வாயில போடுங்கப்பா

kavisiva said...

உண்மை சௌந்தர்! நாம் இந்த ஒரு நாள் வெடிக்கும் வெடிதான் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் கால்வயிறாவது நிறையச் செய்யும். இந்த இடைத்தரகர்களை கட்டுப் படுத்தினால் நடுத்தரக் குடும்பங்களும் மலிவாக பட்டாசு வெடித்து மகிழலாம்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள் விஜய் படம் டிவியில போடுரான்னு பார்த்து கண்ணை கெடுத்துக்காதீங்கப்பு

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி இப்ப காசு எல்லாம் பார்க்க கூடாது .சந்தோசம் தாங்க வாழ்க்கை .
எனக்கும் ,ரமேஷுக்கும் சிவகாசி ல நடக்கிறது தெரியும் ..அதனால் சாக்கு போக்கு சொல்லாமல் குழந்தைக்கு பட்டாசு வங்கி கொடுங்க .....
க்வாட்டர் மட்டும் அடுத்த நாள் இல்லேன்னா வெளிசந்தைல அதிக ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கிற ...பட்டாசு வாங்கி கொடுக்க எதோ காரணம் தேடுறீங்களா ?

இம்சைஅரசன் பாபு.. said...

ஏனப்பா சதீஷ் ஏன் மேல இந்த கோபம் .......

இம்சைஅரசன் பாபு.. said...

குழந்தைகள் எல்லாம் இந்த வருடம் பயப்படமா தீபாவளி கொண்டலாம் ஏன்னா இந்த வருடம் விஜய் படம் ரீலிஸ் இல்லை

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா டெர்ரர் சௌந்தர் சொல்லுறன்னு தலைல வச்சு கொளுத்திரத .....மூளை செதரிடும் (அது இருந்ததனே ).
வேனும்ன ரமேஷ் பாக்கெட் ல ஒரு அணு குண்டை கொளுத்தி போடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மக்கா டெர்ரர் சௌந்தர் சொல்லுறன்னு தலைல வச்சு கொளுத்திரத .....மூளை செதரிடும் (அது இருந்ததனே ).
வேனும்ன ரமேஷ் பாக்கெட் ல ஒரு அணு குண்டை கொளுத்தி போடலாம்
///

எதையம் தாங்கும் இரும்பிலே ஒரு இதயம் கொண்டவன் இந்த போலிசு

vr murugesan said...

Super

vinthaimanithan said...

பீடி சுத்துற தொழிலை நம்பியும் வட ஆற்காடு மாவட்டத்துல ஏகப்பட்ட குடும்பம் பொழச்சிட்டு இருக்குய்யா. அதையும்தான் கொஞ்சம் கவனிக்கிறது?!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா அண்ணா புதுசு புதுசாக கவிதை எழுதுறீங்க ......கதை எழுதறீங்க ......போங்க போய் ஒரு 10000 ரூபாய்க்கு பட்டாசு வங்கி கொடுங்க ...நமத்து போன பட்டாச தேடாதீங்க ..........அப்படி தான் தேடுவேன்னு சொன்னேங்கான நம்ம ரமேஷ் எதுக்கு இருக்கான் .........அவனை கொளுதிருவோம் .ஹி........ஹி ............

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள் சௌந்தர் :)

எஸ்.கே said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

//காசு கொடுத்து வாங்கும் பட்டாசு வெடித்த பிறகு கரியாகத்தான் போகிறது என்றாலும், அந்த கரிக்கு பின்னால் இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. // உண்மைதான் பல சமயம் தீபாவளி முடிந்த பின் தெருவில் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கும் பட்டாசு குப்பைகளை காணும்போது இவ்வளவெல்லாம் தேவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கு பின்னால் பலரின் வாழ்க்கையும் நம் சந்தோசமும் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது!

Prasanna said...

தீபாவளி களை வந்தாச்சு :) வாழ்த்துக்கள்!

இளங்கோ said...

Happy Diwali. :)

வெங்கட் நாகராஜ் said...

தேவையான இடுகை. பகிர்வுக்கு நன்றி. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

செல்வா said...

//வருமானவரியும் விற்பனை வரியும் அதிகம் செலுத்தும் நகரங்களில் சிவகாசியும் ஒன்று...!
//

இது எனக்குப் புதிய தகவல் ..!!

செல்வா said...

சத்தம் இல்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி என்ற சந்தேகம் யாருக்கேனும் இருந்தால் உடனடியாக கோமாளியைத் தொடர்பு கொள்ளவும் ..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவருக்கும் முதல் தீபாவளி வாழ்த்துக்கள்

செல்வா said...

//வெறும்பய சொன்னது…
அனைவருக்கும் முதல் தீபாவளி வாழ்த்துக்கள்

//

ஓ , இதுதான் முதல் தீபாவளியா ..? அப்படின்னா போன வருஷம் வந்தது டம்மி தீபாவளியா ..?

Unknown said...

இப்புடி மாட்டி விடலாமா தம்பி ...

ஜெயந்தி said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

dheva said...

தம்பி..........

தீபாவளிக்கு 10,000 ரூபாய்க்கு வெடி வாங்கி வெடிக்கணுமா...? ஏதோ சிவகாசில இருந்து யாரோ எழுதி கொடுத்து எழிதின மாதிரி இருக்கே.... (ச்ச்சும்ம்ம்மா....!!!!)

நலிவடைந்த தொழிற்கள் மேம்பட உற்பத்தி பெருக...நுகர்வோர்கள் தாரளமாக வாங்க வேண்டும். வெறுமனே சன் டி.வி பாத்துட்டு....கறிக்குழம்பும் பிரியாணியும், புதுப்படம் மட்டும் பாக்காம...

நல்லா வெடி வெடிச்சு கொண்டாடுங்க மக்கா....(தம்பி செளந்தர்.. சொல்லியாச்சுப்பா.....!!!!!)

Chitra said...

அட்டகாசமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!

Jeyamaran said...

nanbaa asathuringa advance diwali wished................

அன்பரசன் said...

//முன்பு எல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே ஒரு சில இடங்களில் வெடி சப்தம் கேட்டு கொண்டே இருக்கும். இப்போது எல்லாம் ஏதோ சாஸ்திரத்திற்கு இரண்டு வெடியை வெடித்து விட்டு டிவி முன் சேர்ந்து உட்கார்ந்து கொள்கின்றனர்.//

//நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசுக்களையும் நம்பி தான் இரண்டு லட்சம் குடும்பங்கள் வாழ போகிறது. //

நிதர்சனம்.

அன்பரசன் said...

//கே.ஆர்.பி செந்தில், தேவா, அருண், மங்குனி, பன்னிக்குட்டி ராமசாமி, இம்சை அரசன் பாபு, எல்லாரும் அவங்க அவங்க குழந்தைக்கு நல்ல Fancy வெடி எல்லாம் வாங்கி தரணும் குறைந்தது ஒரு 10,000 ரூபாய்க்கு வாங்கி தரணும்

ரமேஷு , Terror ,கோமாளி எல்லோரும் நிறைய பட்டாசு வாங்கி வைத்து கொண்டு பொண்ணுங்க புது டிரஸ் போட்டு கிட்டு வரும் போது தலையில் வைத்து கொளுத்துறது, கையில் பிடித்து கொளுத்துறது இப்படி ஏதாவது சில்மிஷம் பண்ணா அது தான் கடைசி தீபாவளி....! ஒழுங்கா பத்திரமா பார்த்து பட்டாசை வெடிக்கணும்...! //

ஒரு குடும்பஸ்தரா சரியா சொன்னீங்க.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///இருங்க இருங்க தேவா என்னமோ தேடுறார்...! (தேடல்) என்னனு கேட்கிறேன்


இல்லை... போன வருசம் வாங்கிய பட்டாசை தேடுறேன்...! ///

ஆமா அதைத் தேடி எடுத்து...ஒருத்தர் தலைல வைக்கப் போறாராம்...!! :-)))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு பதிவு ..!! தீபாவளி வாழ்த்துக்கள், சௌந்தர்..!! :-))

நிறைய பட்டாசு வாங்கி, தீபாவளி கொண்டாடலாம்...!!
போங்க போங்க.. மசமசன்னு நின்னுகிட்டு... போயி பட்டாசு வாங்கி, பட்டைய கிளப்புங்க.. !! :-))

சௌந்தர் said...

dheva சொன்னது…
தம்பி..........

தீபாவளிக்கு 10,000 ரூபாய்க்கு வெடி வாங்கி வெடிக்கணுமா...? ஏதோ சிவகாசில இருந்து யாரோ எழுதி கொடுத்து எழிதின மாதிரி இருக்கே.... (ச்ச்சும்ம்ம்மா....!!!!)/////


@@@dheva சொன்னது…
ஆமா ஆமா சிவகாசியில் இருந்து 10,000 ரூபாய்க்கு ஒரு gift box வந்தது அதான் இந்த பதிவு...!

Kousalya Raj said...

நல்ல பதிவு சௌந்தர்...! நாலு பேர் நல்லா இருக்கணும்னா காச கரி ஆக்கிறதுல தப்பே இல்லை...!! :))

erodethangadurai said...

ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

elamthenral said...

நல்ல பதிவு தம்பி... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

எம் அப்துல் காதர் said...

"சௌந்தர், தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

Thomas Ruban said...

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் நண்பரே.

Unknown said...

நல்ல பதிவுங்க.. பிலேட்டடு விஸ்சஸ்

என்னது நானு யாரா? said...

பதிவு பிழைப்பை பற்றி இருக்கிறது. காற்று மாசு அடைவதைப் பற்றி யாரும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லையே! காற்று மாசு நம் எல்லோருக்கும் எமனாக மாறிவருகிறது. அதனால பட்டாசைக் கொளுத்தி இன்னும் காற்று மாசுபடுவதை அதிகப்படுத்தாமல் நாம் எல்லோரும் சுற்றுப்புற சுகாதர விழிப்புணர்வோடு இருப்போமாக!

 
;