Monday, April 18

கே. ஆர். பி. செந்திலின் பணம் விமர்சனம்...







புத்தகங்கள் பல வந்தாலும் அவைகளை நாம் வாங்கி படித்து கொண்டு தான் இருக்கிறோம்...ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது...அதே போல் தான் இந்த பணம் புத்தகமும். ஏன் இதற்கு பணம் என்று தலைப்பு வைத்தார், வேறு ஏதாவது தலைப்பு வைத்திருக்க கூடாதா என நான் யோசித்து பார்த்தேன்...பணத்திற்காக தானே வெளிநாட்டிற்கு செல்கிறோம்...பணம் என்பதை விட சரியான தலைப்பு வேறில்லை என உணர்ந்தேன்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம் ஆனால் வெளிநாடு பற்றிய புத்தகங்களை அதிகம் படித்திருக்க மாட்டோம்..வெளிநாட்டிற்கு சென்ற அனுபவங்களை பற்றிய புத்தகங்கள் அதிகம்இதுவரை வந்ததில்லை...கே.ஆர்.பி செந்திலின் 18 வருட வெளிநாட்டு வாழ்க்கையின் அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்... வெளிநாட்டில் பல போராட்டங்கள் பல வேதனைகள் தான் கிடைத்திருக்கிறது. ஒரு சில வெற்றிகள் மட்டுமே...அவை எங்கோ ஒரு ஓரத்தில். இந்த புத்தகத்தில் வருபவை பல தன் நண்பர்களுக்கு உண்மையாக நடந்தவை...என்கிறார்...எனவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களில் வரும் நான் நானல்ல என்கிறார்.


நம் இளைஞர்களின் கனவு வெளிநாடு செல்வது தான், எப்படியாவது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டால் பணம் சாம்பாதித்து விடலாம்,  என நினைத்து கொண்டு இருக்கிறோம் வெளிநாட்டிற்கு சென்றால் தான் தெரியும், இந்த வேலைக்கு நமது நாட்டிலே இருந்து இருக்கலாம் என நினைப்போம். 

இந்த புத்தகத்தில் அதிகம் சிங்கபூர் பற்றி தான் இருக்கிறது ஒரு காலத்தில் தென் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் சிங்கப்பூர் சென்றார்கள், அப்படி சென்றவர்களில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்று பல துன்பங்களை அடைந்து இருக்கிறார்கள், அல்லது இங்கே பல ஏஜென்ட்களால் ஏமாற்றுப் பட்டு உள்ளார்கள், ஆண்கள் என்றால் அடிமையாக வைத்து கொள்வது பெண்கள் என்றால் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற செயலே அங்கு அதிகம்...எந்த முறையிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் சட்டவிரோதமாக குடியேற வேண்டும் பிரம்படி தண்டனை, சிறை அனுபவம் என்று பல சித்திரவதைகள். வெளிநாட்டிற்கு சென்றால் இவ்வளவு துன்பங்கள்..கிடைக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம் அவ்வளவு துன்பங்கள் வரலாம்.

வெளிநாட்டிற்கு செல்ல மூன்று நான்கு லட்சம் செலவு செய்து போகிறோம், அந்த பணத்தை வைத்து இங்கே ஒரு தொழில் தொடங்கலாம் அல்லவா..?? வெளிநாட்டிற்கு செல்கிறோம் என்றால் உடனே வட்டிக்கு பணம் கிடைக்கிறதாம்...நீங்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சுற்றுலா சென்று விட்டு உடனே திரும்பி வந்து விடுங்கள்...அது சிறந்தது...அங்கு சென்று அந்நாட்டு சட்ட திட்டங்கள் நமக்கு ஒன்றுமே தெரியாது...சிறையில் இருந்தாலும் நம் சொந்தங்களை கூட பார்க்க முடியாது. வெளிநாட்டில் துன்பம் மட்டுமே இல்லை பலர் அங்கே தொழில் தொடங்கி இப்பொழுது நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவை சிலருக்கு மட்டுமே நடந்துள்ளது.

ஒருவர் வெளிநாட்டிற்கு   செல்லும் பொழுது விமானத்தில் இந்த புத்தத்தை படித்துக் கொண்டு சென்றால், அவர் அடுத்த விமானத்திலே தன் ஊருக்கு கிளம்பி விடுவார், அப்படியொரு அனுபவத்தை இந்த புத்தகம் தந்துவிடும்..

பணம் சரியான தலைப்பு...மிக்க நேர்த்தியான அட்டைப்படம்..ஒவ்வொரு அத்தியாத்தில் வரும் பழமொழிகள் நன்று...சிங்கபூர் மலேசியா.மொரிசியஸ் என பல நாடுகளுக்கு நேரில் சென்று வந்தது போல் ஒரு உணர்வு..இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன்..வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு வித பயம் வரும்.     

இந்த புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன் பக்கத்து வீட்டில் ஒருவரை படிக்கக் சொன்னேன் அவர் படித்து முடித்து விட்டு சொன்னார் ...வெளிநாடு என்றால் இவ்வளவு நடக்குமா..?? வெளிநாட்டிற்கு போக வேண்டும் என இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பாடம். என்றார்..சிங்கப்பூர்க்கு சென்று வந்தது போல இருக்கிறது என்றார்.


பணம் புத்தகம் பல பிரதிகள் வெளியிட்டு சாதனைபடைக்க கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்..இது...!!!     

   இந்நூலை வாங்க : இங்கே  
     
        விலை : ரூ.90

22 comments:

Chitra said...

Good review, Soundhar. :-)

Sivakumar said...

வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான விமர்சனம் மக்கா, ஊர் போனால் வாங்கி படிக்கணும்...

MANO நாஞ்சில் மனோ said...

// ! சிவகுமார் ! கூறியது...
வாங்கி வைத்திருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும்.///

சீக்கிரமா படிங்கய்யா, படிச்சுட்டு நீங்களும் ஒரு விமர்சனம் எழுதுங்க...

கவி அழகன் said...

விமர்சனத்தை பார்க்கும் போதே படிக்கணும் போல தோணுது

நிரூபன் said...

புத்தகத்தைப் படிக்க வேண்டும் எனும் ஆவலினைத் தங்களின் விமர்சனம் தருகிறது சகோதரா. பணம்... தலைப்பிற்கேற்ற வகையில் வெளிநாட்டு வாழ்க்கையினையும், இக் கரை மாட்டிற்கு அக்கரை பச்சை எனும் உணர்வினையும் ஊட்டி நிற்கும் என்பதனை அழகாக விமர்சித்திருக்கிறீர்கள் சகோ.

தமிழகம் வரும் வேளையில் நிச்சயமாய் வாங்க வேண்டும் எனும் புத்தகம் வரிசையில் இதுவும் ஒன்று. நன்றிகள் சகோ!

செல்வா said...

செந்தில் அண்ணனோட வெளிநாடு பற்றின தோடர அவரோட வலைப்பதிவுல படிச்சிருக்கேன். அது பத்திதான் அதிகம் இருக்கும்னு நினைக்கிறேன். அந்தத் தொடர் எனக்கு ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா புத்தகம் வாங்கிப் படிக்கிறேன்.

உன்னோட விமர்சனம் எப்படின்னு புத்தகம் படிச்சிட்டுத்தான் சொல்லணும். ஆனா எழுதிய விதம் நல்லா இருக்கு. ஒரு தேர்ந்த விமர்சகர் எழுதினமாதிரி இருக்கு :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம் சௌந்தர், நானும் புத்தகம் வாங்க வேண்டும்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு விமர்சனம்...! :)

Unknown said...

மிக்க நன்றி தம்பி. தேர்ந்த விமர்சனத்துக்கு எனது வந்தனங்கள்...

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல விமர்சனம் சௌந்தர், நானும் புத்தகம் வாங்க வேண்டும்!

செந்தில் அண்ணனுக்கு வாழ்த்துகள் ..!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் விமர்சனம் புத்தகம் படிக்க ஆவலைத்தூண்டுகிறது....

வாழ்த்துக்கள்..

Asiya Omar said...

விமர்சனப் பார்வை நல்லாயிருக்கு சௌந்தர்,நானும் முன்பு கேஆர்பி ப்ளக்கிலேயே வாசித்திருக்கிறேன்..

dheva said...

அழகான புரிதலோடு கூடிய விமர்சனம். ஏற்கனவே செந்தில் வலைப்பூல படிச்சு இருக்கேன்......இருந்தாலும் மொத்தமா படிக்கிற த்ரில் இஸ் சம்திங் டிஃப்ரண்ட்தான்....!

எனிவே சீக்கிரமே....பணம் நாடு கடந்து வந்து விடும்...கண்டிப்பாய் வாசித்து விடுவேன்!

//ஒருவர் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது விமானத்தில் இந்த புத்தத்தை படித்துக் கொண்டு சென்றால், அவர் அடுத்த விமானத்திலே தன் ஊருக்கு கிளம்பி விடுவார், அப்படியொரு அனுபவத்தை இந்த புத்தகம் தந்துவிடும்..//

அதேதான்........நேர்த்தியா சொல்லீட்ட தம்பி...! செந்திலுக்கும் எனது வாழ்த்துக்கள்!

Anonymous said...

சிறப்பான விமர்சனம் சௌந்தர்!

Jaleela Kamal said...

அருமையான விமர்சன,
வாழ்த்துக்கள்

Unknown said...

தங்கள் விமர்சனத்திற்கு ழ பதிப்பகம் சார்பாக நன்றி ;)

Unknown said...

ரைட்டு

CS. Mohan Kumar said...

அழகான விமர்சனம், நன்றி

செந்திலுக்கு வாழ்த்துகள் . இந்த வித்யாசமான , அவசியமான கான்செப்ட் பிடித்தமைக்காக !

a said...

புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விமர்சனம் சௌந்தர், நானும் புத்தகம் வாங்க வேண்டும்!

செந்தில் அண்ணனுக்கு வாழ்த்துகள் ..!!!

ஷர்புதீன் said...

விரைவில் படிக்க வேண்டும்.

 
;