Tuesday, September 28

அழகு மயில்......

மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், நம் நாட்டு தேசிய பறவை மயில்.

மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம்.

அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும் ஆனால் மயில்கள் மிக சாந்தமானவை... தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!



































குறிப்பு:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்


45 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

Enakku than muthal vadai

ஜீவன்பென்னி said...

அருமையான புகைப்படங்கள் தம்பி...........

இம்சைஅரசன் பாபு.. said...

//கம்ப்யூட்டர் ஆனா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்//

கேள்வியே நல்ல இருக்கு .மேல உள்ள மயில்கள் போல?.

அருண் பிரசாத் said...

மயில் ஆடுவது அழுகுதான், ஆனால் அது பாடி கேட்டு இருகிறீர்களா???


திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்திலும் மயிலம் முருகர் கோவிலிலும் மயில்களை காணலாம்

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள்//

மிருகங்களில் எல்லாம் ஆண் அழகு தான்(சேவல் ,சிங்கம் ,யானை இப்படி நிறைய சொல்லலாம் )...
மனிதனில் தான் ஆண்டவன் மாற்றி படைத்தது விட்டான்

kavisiva said...

அழகு மயில்கள்! அது தோகை விரித்தால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு அழகு. ஆனால் கூவ ஆரம்பித்தால் மட்டும் கேட்க முடியாது :(

மங்குனி அமைச்சர் said...

நம் நாட்டு தேசிய பறவை மயில்.////

ஆபடியா ??? பாரு ஒரு பயலும் சொல்லல

மங்குனி அமைச்சர் said...

அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. ///

மயிலுக்கு பாம்பு எதிரி அல்ல , பாம்பு மயிலின் உணவு

இம்சைஅரசன் பாபு.. said...

//நம் நாட்டு தேசிய பறவை மயில்.////

ஆபடியா ??? பாரு ஒரு பயலும் சொல்லல //

ஸ்கூல் பக்கம் போன தானே தெரியும்

Anonymous said...

, நம் நாட்டு தேசிய பறவை மயில்//
இத சொல்லத்தான் கூப்பிட்டியாப்பா..நாங்க எல்லாம் நண்பனுக்காக கடல் மேலயே ஓடி வந்திருக்கம்...தெரியுமா

Anonymous said...

ஏம்பா நீ கையில் தூக்கி வெச்சிருக்கிற குயந்தைக்கு காட்டுற படத்தை நமீதா படம் பார்க்கிற எங்களுக்கு காட்டுறியே நியாயமா...மக்களே நீங்களே நியாயத்தை சொல்லுங்க...

Anonymous said...

கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்//
பொண்ணுதான் என் கம்யூட்டருக்கு பேரு அனுஷ்கா..அப்பதான் மேட்டர் டைப் பண்ண வருதுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

@sahtesh kumar

சதீஷ் ,சௌந்தர் எதவது பதிவு போட்ட விஷயம் இருக்கும்
கீழ உள்ள கேள்வியை பார்த்தீங்களா ?
அத பார்க்காம சும்மா சவுண்ட் விட கூடாது

இம்சைஅரசன் பாபு.. said...

@sahtesh kumar
எனது குஷ்காவா அது சாப்பிட கூடியது சதீஷ்

செல்வா said...

//மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.//

எங்க ஊர்ப்பக்கம் வந்து இதைய சொல்லிடாத ..!
எல்லோரும் செம கோவத்துல இருக்கோம் ..
நாங்க தோட்டத்துல எது விதைசாலும் வந்து புடுங்கித் தின்னுடுது ..
எங்க ஊர்ல சுமார் 80 மயில்களுக்கு மேல இருக்கும் .. இதுங்களோட அட்டகாசம் தாங்க முடியல ..

செல்வா said...

//:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்/

எத்தனையோ கேள்விக்கு விடை சொல்லுறோம் , இதுக்கு சொல்ல மாட்டோமா ..?

செல்வா said...

////:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்/

கம்ப்யூட்டர் ஒரு ஆண். எப்படி என்றால் அதுல harddisc இருக்குள்ள .. ஆண்கள் தான் கடினமானவர்கள் அப்படின்னு எல்லோரும் சொல்லுறாங்க .. ஆனா இப்படி சாதாரணமான மொக்க விளக்கம் கொடுக்கரக்கு நான் ஒண்ணும் கோமாளி இல்லை .. அதனால உண்மையான காரணத சொல்லுறேன் .. கொஞ்சம் ஆணி இருக்கு .. முடிச்சிட்டு வந்து சொல்லுறேன் ..

புவனேஸ்வரி ராமநாதன் said...

புகைப்படங்கள் அருமை.

கவி அழகன் said...

மயிலே மயிலே இறகு போடு எண்டால் போடுமா

ஆனந்தி.. said...

photos r superb soundar.

அஹமது இர்ஷாத் said...

nice photos..

jothi said...

nice infirmation

Anonymous said...

//தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!//
மயில்களுக்கு மமதை இல்லை என்று கண்டு சொன்ன எங்கள் சௌந்தர் வாழ்க வாழ்க!
அது எப்புடி பாஸ் கண்டுபிடிச்சீங்க ;)
படங்கள் அருமை நண்பா!

செல்வா said...

//மயில்களுக்கு மமதை இல்லை என்று கண்டு சொன்ன எங்கள் சௌந்தர் வாழ்க வாழ்க!
அது எப்புடி பாஸ் கண்டுபிடிச்சீங்க ;)//

இதெல்லாம் அவருக்கு சப்ப மேட்டர்ங்க.......

செல்வா said...

///:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்//

கம்ப்யூட்டர் நிச்சயம் ஆண் தான் .. அதற்கான வலுவான ஆதாரங்கள் :

" எனக்கு இவ்ளோ பிரண்ட்ஸ் இருக்காங்க , ஆனா ஒருத்தர் கூட இப்படி சொன்னது இல்லை .. அடுத்த தடவ நான் எங்க வெளிய போறதா இருந்தாலும் பர்ஸ்ட் உன்னதான் கூப்பிடுவேன் .."

" எப்ப கூப்பிடுவ ..? "

" எப்பவா , நல்லா கேட்ட போ ..? என்ன மாதிரி உனக்கு என்ன காலேஜா , கிளாசா ..? எப்பயும் வெட்டியாத்தானே இருப்ப ..! கூப்பிட்ட உடனே வந்துரு ..? "

" சீக்கிரமா முடிடி , "

" டேய் என்னடா அவசரம் , வெட்டியாத்தானே இருக்க .? "

" ட்ரிங் ட்ரிங் .. நான் ஒருத்தனே எத்தன வேலையைத்தான் செய்யுறது ..? வெட்டியாத்தானே இருக்கீங்க . அந்த போன எடுங்களேன் .. "

" ஹலோ , .."

"சார் நாங்க ICICI பேங்க்ல இருந்து போன் பண்ணுறோம் ..! "

" ஹே , அப்பாவுக்கு போன் ..! "

"சந்தோஷ் , சந்தோஷ் நான்தான் .. "

"நீயா, என்ன ..? "

"நான் ஷாப்பிங் போறேன் உன்னையும் கூட்டிட்டு போலாம்னு தான் கால் பண்ணினேன் .. "

மேற்கண்ட வலுவான ஆதாரங்கள் கம்ப்யூட்டர் ஒரு ஆண் என்பதை நிரூபிக்கின்றது .. மேலும் ஏதேனும் ஆதாரங்கள் தேவை என்றால் தெரியப்படுத்துங்கள் ...

Menaga Sathia said...

nice photos!!

நிலாமதி said...

அழகான் படங்கள். பதிவுக்கு நன்றி

ஜெயந்தி said...

படங்கள் அருமை. மயில் பற்றிய தகவல்களும்.

சிவராம்குமார் said...

அருமையான படங்கள்!

கருடன் said...

// அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும்.//

ஏமாத்தி? கைல இருந்து குச்சி மிட்டாய் பிடுங்கி திண்னுடுமா??

என்னது நானு யாரா? said...

கம்ப்யூட்டர் ஒரு ஆண் தான் சௌந்தர். சுவிட்ச் ஆண் பண்றோம் இல்ல.

விடை கரைக்டா? பதிவும் படங்களும் சூப்பரு!

பதிவு போட எப்படி எல்லாம் ஐடியா வருதுப்பா பங்காளிகளுக்கு. ஒருத்தர் ஜூனுன் தமிழைப் பத்தி சொல்றாரு. ஒருத்தரு தலைக்கீழா நின்னு படிக்க சொல்றாரு. இப்போ நீங்க மயிலைப் பத்தி சொல்றீங்க. என்ன சொல்றதுன்னே புரியல

Prathap Kumar S. said...

//ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது//

சூப்பரப்பு.... கரீட்டா சொன்ன..

படங்கள் அருமை... ஆமா இப்ப யாரு உங்கிட்ட மயிலைபத்தி கட்டுரை எழுதச்சொன்னது.
அடுத்தது தென்னை மரம் பத்தி கட்டு எழுது...

Gayathri said...

எல்லா படங்களும் மிக மிக அருமை...நல்ல பகிர்வு..

இம்சைஅரசன் பாபு.. said...

யாராவது அறிவு பூர்வமான் கேள்விக்கு பதில் சொல்லுறீங்கள
எல்லோரும் படம் மட்டும் பார்ப்பார்கள் என்று தோனுகிறது
செல்வகுமார்,என்னது நானு யாரா? இவர்களை தவிர இவங்க தான் கொஞ்சம் சிந்துசிருக்காங்க

ஜீவன்பென்னி said...

//அடுத்தது தென்னை மரம் பத்தி கட்டு எழுது..//

தென்னை மரமும் அதன் பயன்களும்............இதுதான் பதிவின் தலைப்பு.

செல்வா said...

//செல்வகுமார்,என்னது நானு யாரா? இவர்களை தவிர இவங்க தான் கொஞ்சம் சிந்துசிருக்காங்க
//

பார்ரா நம்மல கூட புகழ்றாங்க.!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்... அழகான படங்கள்..

"தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ....!!"

இங்க மழை பெய்ஞ்சிட்டு இருக்கு...
தேங்க்ஸ்... :-)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

புகைப்படங்கள் அருமை.

jothi said...

சான்சே இல்ல, போட்டோக்கள் மிக அருமை,.

கணேஷ் said...

படங்கள் அருமை...

கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் ///

வாரமலர் படியுங்கள் அதில் அந்துமணி சொல்லி இருக்கிறார்...இதற்கு விடை...

ஸாதிகா said...

மயிலைபற்றி அழகிய படங்களுடன் அருமையான பகிர்தலுக்கு நன்றி.

Sriakila said...

ஹையோ! அத்தனை மயில்களும் அவ்வளவு சூப்பர்!

எங்கிருந்து புடிச்சீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மயிலுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்தது யாரு

A - பொற்பு தேவா
B - லாரன்ஸ்
C - அதுவா கத்துகிச்சு..

Kousalya Raj said...

அழகான படங்கள்.... ரசிகன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல ரசனையான போஸ்ட்....

KEEP IT UP..... SOUNDAR

:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow....lovely pictures...thanks for sharing

 
;