கடந்த இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அமளி, அவை ஒத்தி வைப்பு, நடந்துகொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன.
பாராளுமன்ற கூட்டுக்குழு, பாராளுமன்ற கூட்டுக்குழு என்று சொல்கிறார்கள், கூட்டு குழு என்றால் என்ன..? கூட்டு குழு அமைத்தால் என்ன ஊழல் செய்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க முடியுமா அல்லது இதற்க்கு முன்பு கண்டு பிடித்து இருக்கிறார்களா..?
கூட்டுக்குழு அமைக்கப்படும் முறை
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக செயல்படவேண்டும். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு சபைகளின் ஒப்புதலுடனோ அல்லது இருசபைகளின் தலைவர்கள் கலந்து பேசியோ பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்கலாம். குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு எத்தனை பேர் உறுப்பினர்களாக நியமிக்கவேண்டும் என்ற வரையறை எதுவும் இல்லை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பொதுவாக பாராளுமன்ற கூட்டுக்குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு இடம் பெறுவார்கள் உதாரணமாக, ஒரு கூட்டு குழுவில் 15 எம்.பி.க்கள் இடம் பெறுகிறார்கள் என்று வைத்துகொண்டால், அவர்களின் 10 பேர் மேல் சபையையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இந்த குழு, தனது பணியை முடித்து அறிக்கை தாக்கல் செய்தபின், மேல் நடவடிக்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிபிடத்தக்கது
கூட்டுக்குழு செயல்படுவது எப்படி..?
பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட அந்த பிரச்னை பற்றி விசாரணையை தொடங்கி விடும். முதலில் விசாரணை நடத்தப்படும் இரண்டாவதாக, வருங்காலத்தில் இது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த விசாரணையின் போது சம்பத்தப்பட்ட துறையில் நிபுரணத்துவம் பெற்றவர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் இந்த பிரச்னையில் ஆர்வம் காட்டுகிறவர்களின் கருத்துக்கள், மற்றும் ஆலோசனைகளை குழு பெற்றுக் கொள்ளலாம். தொழில்நுட்ப பிரச்னைகளில் உரிய ஆலோசகர்களையும் நியமித்துக் கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் யோசனைகளை கேட்டு பெற்றுக் கொள்ளாலாம். கூட்டுகுழுவின் விசாரணை நடைமுறைகள் ரகசியமாக நடைபெற்று வந்தாலும், விசாரணையின் நிலவரம் குறித்து குழுவின் தலைவர் அவ்வப்போது பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கலாம்.
இது வரை அமைக்கப்பட்ட குழுக்களால் பயன் கிடைத்ததா..?
கடந்த 25 ஆண்டுகளில் 4 விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழுக்கள் அமைக்கப்பட்டன . ஆனால் இதில் ஒரு விவகாரத்தில் கூட குறிபிடத்தக்க பயன் கிடைக்க வில்லை என்ற கருத்து உள்ளது.
முதலில் கடந்த 1987-ம் ஆண்டு 'போபர்ஸ் பீரங்கி ஊழல்' விவகாரத்தில் எதிர்கட்சிகள் எழுப்பிய ஊழல் புகார் குறித்து குழு அமைக்கபட்டது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஸ்வீ டனின் "போபர்ஸ்" ஆயுதநிறுவனம் கொடுத்த லஞ்சப் பணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது இந்த குழுவில் காங்கிரஸ் எம்.பிக்களே அதிகமாக இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சி உறுப்பினர்கள் விசாரணையை புறக்கணித்து விட்டனர். இதனால் அந்த குழுவின் அறிக்கை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இரண்டவதாக 1992-ம் ஆண்டில் ஹர்சத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பணத்தை தவறாக பயன்படுத்தி பங்கு சந்தையில் முதலீடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப்பின் குழுவின் அறிக்கை தாக்கல் செய்தபின் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக தனி நீதி மன்றம் அமைப்பதற்கு 5 ஆண்டு காலம் பிடித்து குறிபிடத்தக்கது. அத்துடன் அந்த குழுவின் பல பரிந்துரைகள் அமல் படுத்தப்படவே இல்லை.
3 வதாக அவ்வளவாக பிரபலம் இல்லாத கேதான் பரேக்கின் பங்கு ஊழல் புகார் குறித்து அமைக்கப்பட்ட குழுவாகும். கேதான்பரேக்கிற்கு வங்கிகள் மற்றும் "கார்பரேட்" நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து இந்த குழு விசாரணைநடத்தியது. விசாரணைக்கு
4 வதாக 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு, குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தாக புகார் குறித்து விசாரித்தது. 2004-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த குழுவின் அறிக்கையில் அந்த குழுவின் அறிக்கையில் குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்து இருந்த புகார் நிருபிக்கப்பட்டதுடன், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரிந்துரைகளும் இடம் பெற்று இருந்தன.
இந்த வரிசையில் ஸ்பெக்ட்ரம் இடம் பெறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஆளும்கட்சி தயங்குவதற்கு காரணம், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் தான் கூட்டுக்குழு வின் தலைவராக இருக்க வேண்டும் என்பதே...
இதுவரை நடந்து ஊழலில் பெரிய ஊழல் போபர்ஸ்" ஆயுதஊழல் தான் அதற்கே இது வரை விடை கிடைக்கவில்லை ஸ்பெக்ட்ரம்
Tweet | |||||