Tuesday, November 9

நூறாவது பதிவு...!



நூறு என்றாலே தனி சிறப்பு தான் அதுவும் முதல் 100 என்றால் மிகவும் சிறப்பு எப்படியோ 100 வது பதிவு வந்து விட்டது...மே மாதம் 3ம் தேதி வலைப்பதிவை தொடங்கி இன்று தான் என்னுடைய 100 வது பதிவு எழுதியிருக்கேன்...முன்னதாக சிலருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்...என் பதிவுகளை படித்து வாக்குகள் மற்றும்  பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் 40,498 பார்வையாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ....


முதல் பதிவு எழுதியதற்கும் இந்த பதிவு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுமே இல்லை...! முதலில் இந்த பதிவுலகத்தை பற்றி எதுவும் தெரியாது. இதை தான் எழுத வேண்டும் என்று நினைத்து வரவில்லை ஏதோ விளையாட்டாக தொடங்கியது தான் இந்த வலைப்பக்கம்...என் முதல் பதிவை 20 பேர் படித்தார்கள்.  என்றதும் என் பதிவையும் 20 பேர் படித்து இருக்கார்களே,  என்று ஒரு சந்தோசம்...மேலும் சில பதிவுகளை எழுத தூண்டியது. பிறகு புகைப்படங்களை என் பதிவாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்...  எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்... 

என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன். எனக்கு நகைச்சுவை, சினிமா, அரசியல், எல்லாம் கொஞ்சம் நல்லாவே எழுதுவேன் என்று நினைக்கிறன். எனக்கு இலக்கியம் எல்லாம் தெரியாதுங்க... எனக்கு என்ன எழுத வருமோ அதை மட்டுமே எழுதி வருகிறேன் தொடர்ந்து நன்றாக எழுத முயற்சி செய்து வருகிறேன்.... எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.

இந்த பதிவுலகத்தை பற்றி எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களுக்கும் தெரிவிக்கிறேன் புதிய பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்...! 

முதல் நீங்கள் புதிய பதிவர் என்றால் அனைவரின் வலை பக்கத்திற்கும் சென்றும் பின்னூட்டம் இட வேண்டும். அனைவருக்கும் ஓட்டு போடவேண்டும் 

*  அனைவரின்  வலைபக்கத்திலும் உறுபினர்களாக (follow) சேரவேண்டும், 

*  உங்கள் எல்லா நண்பர்களுக்கும் உங்கள் வலைபக்கத்தின் லிங்க்கை கொடுத்து படிங்க... படிங்க...என்று சொல்லவேண்டும் 

*  விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...

*  மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்.. இப்படி எல்லாம் செய்தால் நீங்கள் விரைவில் அனைவருக்கும் தெரிந்த பதிவர் ஆகிவிடுவிர்கள்....   


என் பதிவில் எனக்கு பிடித்த பதிவுகள் சில....
1 *  இதுதானா புனிதம்? காசியின் உண்மைமுகம் பற்றி எழுதியது...  

2 *  உழவனின் எதிர் காலம் கேள்விக்குறியா? இந்த பதிவு விவசாயிகளை பற்றி எழுதியது  மீண்டும் விவசாயிகளை பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன். இந்த பதிவு தான்  யூத் ஃபுல் விகடனில் வந்தது 

3*  பாடாய் படுத்தும் சீரியல் சீரியலை பற்றி நான் எழுதிய பதிவு இந்த பதிவும் எனக்கும் பிடிக்கும்

4 *   பொறுமை கடலினும் பெரிது .... விபத்து பற்றி எழுதியது....

5 *  பதிவர்கள் முன்னேற்ற கழகம்.. நகைச்சுவையாக எழுதியது இந்த பதிவில் தான் 216 பின்னூட்டங்கள் வந்தது...!

6  *  தட்டான் பூச்சி..... என்னுடைய முதல் கதை இது....  

7 * பெண்களின் புதிய கலாச்சாரம்... முதலில்  அதிகம் பார்வையாளர்கள் வந்தபதிவு இந்த பதிவு தான் 

8  * எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்...  முதலில் நான் எழுதிய சினிமா விமர்சனம் சினிமாவிமர்சனம் எழுதினால் ஆயிரம் பார்வையாளர்கள் மேல் வருகிறார்கள்...!  


9 * புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... இந்த பதிவை பார்த்த அனைவரும் இதில் இருக்கும் புகைபடங்களை பார்க்கவே முடியவில்லை என்று சொன்னார்கள்....

 10 * தீபாவளி...   பற்றி எழுதிய கதை இந்த கதையை ஒரு அரை மணி நேரத்தில் எழுதி விட்டேன்....

இது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை...! (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்) இப்போது ஓரே பதிவில் பத்து மீள் பதிவு போட்டு விட்டேன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்னை பின் தொடரும் 146 பேருக்கும் நன்றி... தெரிவித்து கொள்கிறேன் அனைத்து திரட்டிகளுக்கும் நன்றி...  

பமுக என்று ஒரு கட்சி தொடங்கி இருந்தேன் அதனுடைய தேர்தல் அறிக்கை தயார் ஆகிகொண்டு இருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்....உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்... 

                                          

78 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

கருடன் said...

வாழ்த்துகள் சௌந்தர்.. :)

Kousalya Raj said...

வாழ்த்துக்கள் சௌந்தர்.... மீள் பதிவு போடாமல் நூறை தொட்டதுக்கு....!!

Kousalya Raj said...

//விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...//

எல்லாம் சரிதான்,ஆனா இவங்க பிரபலம் ஆனாங்கலானு தெரியுமா....?? :)))

Kousalya Raj said...

//இது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை...! (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்)//

o.k

//இப்போது ஓரே பதிவில் பத்து மீள் பதிவு போட்டு விட்டேன்//

இப்ப கை தட்டறதை நிறுத்திடலாமா சௌந்தர்....?!

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா :)

கணேஷ் said...

வாழ்த்துக்கள்...நிறையா எழுதுங்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் .

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Wowwwwwwww.. Great Soundar...

Congrats for your 100th post..!! :-))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///இது வரை நான் ஒரு மீள்பதிவு கூட போட்டது இல்லை...! (எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்கள்)///

ஒகே.. கை தட்டியாச்சு.... சரி ரைட்ட்டு ....!!
அடுத்து என்ன பண்ணனும் சார்....!! அதையும் சொல்லிட்டா நல்ல இருக்கும்..!! :-)))
வாழ்த்துக்கள் சௌந்தர்..!!

mkr said...

VAAZTHTHUKAl

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள்.....தொடரட்டும்

வெங்கட் said...

Congrtats

இம்சைஅரசன் பாபு.. said...

வாழ்த்துக்கள் சௌந்தர் ............1000 பதிவு போட வாழ்த்துக்கள் மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா டெர்ரர் நீ 100 வது போஸ்ட் எப்போ போடுவ .........அதை பார்க்க நான் உயிரோட இருப்பேனே?

Unknown said...

வாழ்த்துக்கள் செளந்தர்..

nis said...

வாழ்த்துக்கள் நண்பர் செளந்தர்
உங்களின் பதிவு பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்

elamthenral said...

வாழ்த்துக்கள் செளந்தர். இதுபோல நிறைய எழுதனும்.. 100, 200 ஆக உயரனும் தம்பி.. வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... ////

எச்சூஸ் மி, அந்த நல்லவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்றிங்களா ப்ளீஸ்?

ராமலக்ஷ்மி said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்!!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
////ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்... ////

எச்சூஸ் மி, அந்த நல்லவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்றிங்களா ப்ளீஸ்?////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
அது ராணுவ ரகசியம் வெளியே சொல்ல கூடாது....

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துகள் சௌந்தர்.. :)
100200 ஆக உயரனும் தம்பி.. வாழ்த்துக்கள்.

நா கூட 'நகம் கடிக்க வைக்கும் நயன்டீஸ்ல' இருக்கேன்.. சீக்கிரம் 100 தான்..

School of Energy Sciences, MKU said...

வாழ்த்துக்கள் தம்பி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////...என் முதல் பதிவை 20 பேர் படித்தார்கள். என்றதும் என் பதிவையும் 20 பேர் படித்து இருக்கார்களே, என்று ஒரு சந்தோசம்...மேலும் சில பதிவுகளை எழுத தூண்டியது.///

அந்த 20 பேரும் இப்ப என் கையில கெடச்சாங்ய...... தொலச்சிபுடுவேன் தொலச்சி! படுவா எப்பிடி கெளப்பிவிட்ருக்காங்கய?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///

எனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க? நான் canon s3 IS

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உங்கள் எல்லா நண்பர்களுக்கும் உங்கள் வலைபக்கத்தின் லிங்க்கை கொடுத்து படிங்க... படிங்க...என்று சொல்லவேண்டும்///

ஆஹா... சும்மா கெடந்த சங்க.......

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///

எனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க? நான் canon s3 IS////

கேமரா எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது... துபாய் போகும் போது ஒருத்தர் வாங்கிட்டு போனார் அவரை ஆளையே காணோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் சொன்னது…
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
///எனக்கு புகைப்படங்கள் போடுவது என்றால் மிகவும் பிடிக்கும்...///

எனக்கும், நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க? நான் canon s3 IS////

கேமரா எப்படி இருக்கும் என்று கூட எனக்கு தெரியாது... துபாய் போகும் போது ஒருத்தர் வாங்கிட்டு போனார் அவரை ஆளையே காணோம்... ///

வெளங்கிரும்.....!

Ramesh said...

வாழ்த்துக்கள் செளந்தர பாண்டியன்... டாப் டென்லாம் போட்டு அசத்திட்டீங்களே.. சீக்கிரம் டாப் 100 போடுங்களேன் (அதாவது சீக்கிரம் 1000 ரீச் ஆயிடுங்க).. வாழ்த்துக்கள்...

பெசொவி said...

I can understand the difficulties faced in achieving 100 posts.

Congrats!

Keep it up!!

dheva said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி.

இன்னும் நிறைய எழுதி மென்மேலும் வளர என் பிரார்த்தனைகளும் .....அன்பும் வாழ்த்துக்களும்....!

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளையும் மீண்டும் வாசிக்கிறேன்...!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

செல்வா said...

நூறுக்கு வாழ்த்துக்கள்..!!
அப்படியே எனக்கு முறுக்கு வாங்கி கொடு ..!!
ஓ , சாரி .. அப்படியே ஒரு flow ல வந்திடுச்சு..!!

செல்வா said...

//அந்த 20 பேரும் இப்ப என் கையில கெடச்சாங்ய...... தொலச்சிபுடுவேன் தொலச்சி! படுவா எப்பிடி கெளப்பிவிட்ருக்காங்கய?
/

அதானே , நல்லவேளை நான் படிக்கல..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நூறுக்கு வாழ்த்துக்கள்..!!
அப்படியே எனக்கு முறுக்கு வாங்கி கொடு ..!!
ஓ , சாரி .. அப்படியே ஒரு flow ல வந்திடுச்சு..!! //

உனக்கு வாயை ஊசியால தைக்கணும் ..........அடிகடி முறுக்கு கேக்குற நீ ...........ஊசி எடுத்துட்டு வரேன் இரு

செல்வா said...

//உனக்கு வாயை ஊசியால தைக்கணும் ..........அடிகடி முறுக்கு கேக்குற நீ ...........ஊசி எடுத்துட்டு வரேன் இரு
//

ஐயோ அது ஒரு flow ல வந்திடுச்சு .. ஹி ஹி ஹி ..

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் சவுந்தர் நூறு பதிவை தொட்டதற்கு

ஜீவன்பென்னி said...

vaazthukkal thambi.

இளங்கோ said...

Congrats.. :)

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

வாழ்த்துக்கள்! மென்மேலும் எழுத்துப்பணி சிறப்பாக வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் 1000 மாவது மபதிவை தொட

sakthi said...

வாழ்த்துக்கள் செளந்தர்!!!

Unknown said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார், 1000 மாவது பதிவுக்கு வெயிட்டிங்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துகள் சௌந்தர்.. :) நூறு பதிவு போட்டாச்சு. இன்னும் இந்த டெரர் பய சகவாசம் தேவையா? சற்றே சிந்தியுங்கள்.

Anonymous said...

என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன்//அதுதான் சரி

Anonymous said...

மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்//
வரே வா

S Maharajan said...

வாழ்த்துக்கள்

விஷாலி said...

வாழ்த்துக்கள் மற்றும் எதிர்காலத்தில் 1000 பதிவுகளை அடைய வாழ்த்துக்கள்.

நன்றி

aavee said...

வாழ்த்துகள் சௌந்தர்!! தொடர்ந்து எழுதுங்கள்!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஏதோ விளையாட்டாக தொடங்கியது>>>

ஆமா,எப்பவும் விளையாட்டு தான் வினை ஆகும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஆனால் எதாவது எழுதினால் தான் எழுதும்திறன் வளரும் என்று சில நல்லவர்கள் சொன்னதால் எழுதவும் தொடங்கினேன்...>>>


அப்போ டைப் பண்ணலையா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>விரைவில் பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பதிவு அல்லது கண்டனம் பதிவு போடவேண்டும்...>>>

100 பதிவுகள் போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>மற்ற வலைபக்கதிற்கு சென்று பின்னூட்டதில் சண்டை போடவேண்டும்..>>>


யோவ் வாய்யா நான் சண்டைக்கு ரெடி

சி.பி.செந்தில்குமார் said...

>>>தீபாவளி... பற்றி எழுதிய கதை இந்த கதையை ஒரு அரை மணி நேரத்தில் எழுதி விட்டேன்...>>>

ஆனா நாங்க அரை நிமிஷத்துல படிச்சுட்டோமே

சி.பி.செந்தில்குமார் said...

இதுவரை போட்ட பின்னூட்டமெல்லாம் சும்மா காமெடிக்கு

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

வாழ்த்துகள் சௌந்தர்.. ji...

சுசி said...

//என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே எழுதி வருகிறேன்//

:))))))))

வாழ்த்துகள் சௌந்தர்.

Chitra said...

Congratulations!!!! Super!!!

Keep going for 1000 and more!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் பாஸ் மென்மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்!

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள் தல :)

போட்டு தாக்குங்க :))))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

100க்கு..ஹி..ஹி.. அப்புறம்.. கடை தொறக்கும் நேரமாச்சி.. ஹி..ஹி.. 100.. ஹி..ஹி..

ஊருகாய கையோட கொண்டுவந்தாச்சு.. 100.. ஹி...ஹி.. சீக்கிரம்.. ஹி..ஹி.. வாழ்க..

ஹி..ஹி

கடை...


ஹி..ஹி

100..


மங்குனி..ஹி..ஹி

கடை.. ஹி..ஹி..

அப்பு.. சீக்கிரம் போலாம் வா..

Jeyamaran said...

நண்பா முதல 100 க்கு வாழ்த்துகள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்


அப்பறம் */பமுக என்று ஒரு கட்சி தொடங்கி இருந்தேன் அதனுடைய தேர்தல் அறிக்கை தயார் ஆகிகொண்டு இருக்கிறது என்று தெரிவித்து கொள்கிறேன்....உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்... /* நாங்கள் வெளிநடப்பு செய்வோம் ஜாக்கிரத

Gayathri said...

வாழ்த்துக்கள் சௌந்தர் கலக்குங்க சீக்ரம் இருநூறு நானுருன்னு ஆயிரம் பதிவு கண்ட சௌந்தர் நு பதிவு போட வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

//உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையை 200 ரூபாய் கொடுத்து புதுப்பித்து கொள்ளவும்... //

இது வேறயா?

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் தம்பி

சிவராம்குமார் said...

ஒரு நூறு பல நூறாக பெருக வாழ்த்துக்கள்

ஹேமா said...

வாழ்த்துகள் சௌந்தர்.

Philosophy Prabhakaran said...

வெகு சீக்கிரமே செஞ்சுரி அடித்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

எல் கே said...

வாழ்த்துக்கள் சௌந்தர்

அமைதி அப்பா said...

வாழ்த்துக்கள் சார்.

ஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துச் சொல்ல நான் ரெடி-தூரம் அதிகமில்லை!

Unknown said...

வாழ்த்துக்கள் தம்பி....

kavisiva said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சௌந்தர்! விரைவில் ஐநூறு பதிவு ஆயிரம் பதிவு என உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்!

Prasanna said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் :)

Anonymous said...

வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள்

 
;