இந்தியாவின் முதுகு எலும்பாய் இருப்பது விவசாயம் தான் ஆனால் நம் நாட்டில் விவசாய பொருளுக்கு உரியவிலை மட்டும் கிடைப்பது இல்லை,அவர்கள் பொருளை நேரடியாக விற்பனை செய்வது கிடையாது,தரகர்கள் மூலமாக தான் விற்பனை செய்கிறாக்கள்.தரகர்கள் உரிய விலை கொடுப்பது இல்லை, தரகர்கள் குறைந்த விலைக்கு கேட்கின்றனர் பொருளை வைத்து இருந்தால் கெட்டுபோய்விடும், வேறு வழி இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர் இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.
இது என்ன தங்கமா வெள்ளியா நாளைக்கு விற்பனை செய்து கொள்ளலாம், என்று நினைப்பதற்க்கு காய்கறிகள் கனிகள் இரண்டு நாள் விட்டால் கெட்டுபோய்விடும். இதனால் இவர்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர் இதனால் நஷ்டம் ஏற்படுகிறது இப்படி விலை கிடைக்காத காரணத்தால், விவசாயி தன் நிலத்தை ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்று விடுகிறார்கள். இவர்கள் நிலத்தை விற்பனைக்கு தராவிட்டால், அவர்களை மிரட்டுவது அவர்கள் நிலத்தை அபகரிப்பது இப்படி செய்கின்றனர் இதுவும் விவசாயி நிலம் கட்டிடம் ஆவதற்கு ஒரு காரணம்.
அரசியல்வாதிகள் விவாசய நிலத்தை அபகரிக்கும் அரசியல் வாதிகள் உதாரணமாக சிலபேரை சொல்லுகிறேன்
ஜனாதிபதி பிரதிபாபாட்டீலின் கணவர்,ஏழைவிவசாயி ஒருவரிடம் இருந்து நிலத்தை அபகரித்தார், அந்த விவசாயிக்கு தெரியாமலே நிலத்தின் பெரும் பகுதியை தன் பெயருக்கு மாற்றிகொண்டார்.பிரதிபாபாட்டீல் கணவரான, தேவிசிங்ஷெகாவத். பிறகு அந்த விவசாயி வழக்கு தொடர்ந்து நிலத்தை திருப்பிவாங்கினர்.
ஜனாதிபதியின் கணவரே நிலத்தை அபகரிக்கும் பொழுது நம்ம ஊரு கவுன்சிலர் நிலத்தை அபகரிப்பது ரெம்பா சாதாரண விஷயம்.
எப்பவும் நாம் (இந்தியா) தான் அரிசி ஏற்றுமதி செய்வோம் ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு,முதல் முறையாக இந்தியா அரிசி இறக்குமதி செய்து உள்ளது. இந்த நிலைமை இப்படியே போனால் இந்தியாவில் இன்னும் 10 வருடத்தில் விவசாயம் என்றால் என்ன என்று கேட்கும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு (இந்தியா) என்னதான் தெரியும் அமெரிக்காவில் போய் பிச்சைதான் எடுப்பார்கள்.
அமெரிக்கக்காரன் என்ன சொல்லுவான், இந்தியாவில் இரண்டு வேலை சாப்பாடு சாப்பிட்டவன் இன்று மூன்று வேலை சாப்பிடுகின்றான் அதனால் தான் பஞ்சம் வந்து விட்டது என்று சொல்லுவான். அப்படி பஞ்சம் வந்தால் என்ன செய்வது? நாம் ஒருத்தனை ஒருத்தன் அடித்து சாப்பிடும் நிலைமை வந்தாலும் வரலாம்.
என்னுடைய இந்த பதிவு உழவனின் எதிர்காலம் கேள்விக்குறியா? யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் வந்துள்ளது நன்றி ; யூத் ஃபுல் விகடன் Tweet | |||||
12 comments:
நல்ல பதிவு ..
தம்பி.... மிக அருமையான பயனுள்ள பதிவு! விவசாயிகள் வயித்துல அடிக்காம இருந்தா நம்ம நாடு எப்பவே முன்னேறி இருக்காதா என்ன?
வாழ்த்துக்கள் சவுந்தர்!
நல்ல கேட்டிங்க இந்த பொழப்ப தான் எங்க ஊருல அழகிரின்னு பெரிய கை பண்ணுது அவர விட்டுடிங்க
neenga sonadu suma trailer innanum main picture neriya iruku anna onnu inda arasiyal vadika mannara anniyam iruka adhu unamaga aiyogiyathanam.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் நன்றாக தொடங்கியிருக்கிறீர்கள் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கலாம். முடிந்தவரை இது போன்ற சமுதாய பிரதிபலிப்பு பற்றி எழுதுங்களேன்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
நலல பதிவு .. நானும் "மழை தருமோ இந்த மேகம்" என்ற தலைப்பில் விவசாயிகளைப்பற்றி பதிவிற்றிருக்கிறேன்.. முடிந்தால் பாருங்கள்
riyasdreams.blogspot.com
பிரதிபாபாட்டீல் ஒழிக
payanulla pathivu... vazhthukkal soundhar...!!
நீங்க எப்பவுமே கலக்குறீங்க அண்ணா ...! சும்மா அதிருற மாதிரி எழுதுங்க ... வர்ட்டா ...
தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...
@@@யோவ் ரொம்ப நன்றிங்க
அன்பின் சௌந்தர் - சமுதாயச் சிந்தனை - எழுதுக - தொடர்ந்து எழுதுக - பிரச்னையை மட்டும் கூறாமல் தீர்வினையும் எழுதுக. விவசாய நிலங்கள் எல்லாம் அடுக்கு மாடி கட்டடங்களாக மாறுகின்றன. விவசாயி எண்ண முடியாத அளவுக்குப் பணம் பெறுகிறார். ஏற்றுமதி போய் தற்பொழுது இறக்குமதி செய்கிறோம். அரசு ஒரு கொள்கையாக எடுத்து, விளைநிலங்களை விவசாயம் தவிர வேறு எதற்கும் பயப்படுத்தக் கூடாதென சட்டம் போட வேண்டும். விவசாயத்தினை ஊக்குவிக்க வேண்டும். விவசாயி துயரப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தள்ளுபடி செய்யும் கடன்கள் எல்லாம் பெரிய முதலாளிகள் தான் அனுபவிக்கிறார்கள். அரசு விவசாயில்லு - குறு விவசாயிக்கு மட்டும் தள்ளுபடி செய்யலாம். அதனை உறுதிப் படுத்துக்கொள்ள வேண்டும். நல்ல சிந்தனை சௌந்தர் - நட்புடன் சீனா
Post a Comment