Monday, May 17

டான்ஸ் மாஸ்டராக கலக்கிய புரூஸ்லீ!

23 வயதான அந்த இளைஞனுக்கு இரண்டு ஆசைகள் மட்டும் மனதில் உருப்போட்டுக்
கொண்டிருந்தன. ஒன்று சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும். மற்றொன்று,
குங்பூ கலையை பிரபலப் படுத்த வேண்டும். இரண்டுமே சாத்தியமானது அடுத்த
ஏழு வருடத்தில்!
உடலை உறுதியாக்க உடற்பயிற்சி, உள்ளத்தை மேம்படுத்த தத்துவம் சார்ந்த படிப்பு என
தன்னை உடலாலும், மனதாலும் மேம்படுத்திக் கொன்ட புரூஸ்லீயின் வேகம்... காற்றை
விட விரைவானது! ஆம் ஒருவர் உள்ளங்கையை திறந்து மூடுவதற்குள் அந்த இடத்தை
அடித்து விடுவர் புரூஸ்லீ!

விட்டில் யாருக்கும் அடங்காமல், ஹாங்காங் தெருக்களில் உள்ளூர் தாதாவாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்த புரூஸ்லீ, ஒரு அரசியல்வாதியின் மகனை அடித்து துவைக்க, தந்தையால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவில் இரவில்  வேலை, பகலில் சினிமாவுக்காக தேடுதல் என்று விடாமுயற்சியும், துணிவும் அவரை உச்சத்தில் கொண்டு சென்றன.

புரூஸ்லீ கராத்தே,குங்பூ என அனனத்து சண்டைக் கலைகளும் தெரியும்.அது மட்டும்ன்றி நடனம் ஆடுவதிலும் சிறந்தவர் என்பது பலருக்கு தெரியாது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், யாரோடு சண்டைக்கு நின்றாலும், எதிராளி எப்படி, எந்த சண்டை முறை
என்றாலும் பார்க்கும் வழக்கமே இல்லை. முதல் அடியாக நொடிப்பொழுதில் அடித்து
எதிராளியை சாய்த்து விடும் துணிவும், உறுதியும் உடையவர் புரூஸ்லீ.

உலகளவில் உள்ள அனைத்து சண்டைக்கலை சாம்பியன்களையும் தம்மால் வெல்லமுடியும் என்று தன்னம்பிக்கையுடன் பேசிய புரூஸ்லீக்கு, தினமும் உடற்பயிற்சிசெய்யாவிட்டால் தூக்கம் வராது! இவரை உலக தாதா என்றுதான் ஹாலிவுட்டில்,அழைப்பார்கள்.

தம்மிடம் கராத்தே கற்றுக் கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணையே மணந்துகொண்டார்.     புரூஸ்லீயின் வாழ்கை முறையும் ஒரு சினிமா ஆக்க்ஷன் நாயகனுக்குரியதிரைக்கதை அமைப்பில் அமைப்பில் அமைந்தது. அன்னால் ஒரே ஒரு வருத்தம்...

இந்த நாயகன் 33 வயதிலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது தான் சோகமான முடிவு!
                          இது நான் அண்மையில் படித்த செய்தி









0 comments:

 
;