விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாரகனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை வந்து சிகிச்சை பெற வசதியாக அவரது விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்க மறுத்து குடியுறுமை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பி கடிதம் எழுதினால், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பார்வதி அம்மாளின் விண்ணப்பத்தின் மீது மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதனிடையே பார்வதி அம்மாளுக்கு மலேசிய அரசு வழங்கிய விசா வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வரும் 16ஆம் தேதிக்குள் சென்னை வர அவருக்கு அனுமதி கிடைக்காவிட்டால், அவருடைய விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
Tweet | |||||
1 comments:
Good Start
Post a Comment