Friday, May 28

வாக்களிக்க வாருங்கள்...


என்னுடைய முந்தய பதிவு உழவனின் எதிர்காலம் கேள்விக்குறியா?  யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் வந்துள்ளது நன்றி ;  யூத் ஃபுல் விகடன் 


வலைபதிவு நண்பர்கள் சேர்ந்து திரைதுறை கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக,  வலைப்பூ குழு ஒன்று விருது வழங்க உள்ளது. சென்றவருடம் SSHATHIESH in பார்வை  வலைத்தளத்தில் வாக்களிப்பு நடைபெற்றது.அதே போல் இந்த வருடம் ஒரு குழுவாக சேர்ந்து நடைபெற இருக்கிறது. 

இதில் நீங்கள் உங்கள் வாக்களிப்பும், கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.  இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ள பதிவர் கான்கொன், எரியாத சுவடுகள் பவன், என் உளறல்கள் வந்தியத்தேவன் மாமா, ஐந்தறைப்பெட்டி சுபாங்கன், நா எழுதும் கெளவ்பாய் மது அண்ணா ஆகியோரின் ஒத்துழைப்புடனும் இன்னும் சில பதிவுலக நண்பர்களுடனும் இணைந்து இந்த முயற்சியை ஆரம்பிக்கின்றோம். வழக்கமாக நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நீங்கள் நிச்சயம் இந்த முயற்சிக்கும் கை கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இங்கே எங்கள் குழுவில் சேராது வெளியில் இருந்து ஆதரவு தர சில பதிவர்கள் தயாராக இருக்கும் நிலையில் ஒரு சில திரட்டிகளும் இதற்கு நல்ல வரவேற்ப்பு  காட்டியுள்ளன. எனவே திரட்டிகளின் பங்கும் இங்கே மிகப்பெரிய பங்காக இருக்கும் என நம்புகின்றோம். எனவே அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவிப்பதோடு சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோரிடமும் இதற்கு ஆதரவு கேட்கின்றோம். 

பதிவுலகம் இன்று மிகப்பெரிய சக்தியாக மாறி உள்ளது. பல நிறுவனங்கள்,அமைப்புக்கள் திரை உலகிற்கு விருது வழங்கி வரும் நிலையில் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பதிவுலகில் வரும் காலத்தில் பிரமாண்ட விழாக்களுடன் இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 


அனால் இந்த விழாவுக்கு அனைவரும் கட்டாயம் வரவேண்டும் என்று நாங்கள் யாரையும் மிரட்டமாட்டோம்.நீங்களும்  இந்த குழுவில் எங்களுடன் தாராளமாக கை கோர்க்கலாம். இடம் காலம் மறந்து பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம். சாதிப்போம். இது ஒரு புதிய முயற்சி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
இன்னும் சில நாட்களில் உங்கள் அபிமான திரை கலைஞ்ர்களுக்கு வாக்களிக்க தயாரக இருங்கள்... 9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

பதிவர்கள் என்ற ஒரு குடையின் கீழ ஒன்றாவோம்

SShathiesh-சதீஷ். said...

இந்தியாவில் இருந்து பதிவெழுதும் நண்பராகிய உங்கள் ஆதரவு கிடைத்ததும் எனக்கு சந்தோசம். நன்றி

Jeyamaran, Madurai, Tamilnadu said...

கலக்குறே சௌந்தர்

ஜிஎஸ்ஆர் said...

சினிமா துறையினருக்கு விருது கொடுப்பதை விட சமுதாயத்தில் எத்தனையோ நல்ல மனிதர்கள் தங்கள் பெயரை கூட வெளிப்படுத்தாமல் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் அது போன்ற நபர்களை கண்டு அவர்களை சிறப்பிக்கலாமே இது என் சொந்த கருத்து மட்டுமே, இருப்பினும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ஜெயந்தி said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

soundar said...

gsr@ கவலை படாதிங்க gsr அவர்களுக்கும் விருது கொடுக்கலாம்... நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்


@ஜெயந்தி; நன்றி ஜெயந்தி

SShathiesh-சதீஷ். said...

உண்மை தான் ஜிஎஸ்ஆர ஆனால் அவர்களுக்கு நாம் விருது கொடுப்பதை விட அவர்களை வெளியுலகுக்கு கொண்டுவருவதே மிகப்பெரிய விடயம். தங்கள் நல்ல மனதுக்கு நன்றி. விரைவில் இது நடந்தாலும் நடக்கலாம்.

Anonymous said...

naama natula yiethaniyo problem iruku idhu thevai illainu thonudu. adhumattum illama yiethanaiyo kalai iruku cinemavuku mattum yien ivalavu mukiyathuvam ??????....... Kalli kaalam da samy

SShathiesh-சதீஷ். said...

வணக்கம் நவீ, உங்கள் ஆதங்கம் எதற்கு என்று தெரியவில்லை. வாழ்க்கையில் எல்லாம் இருக்கு. எனவே சினிமா என்று நீங்கள் இதை எண்ணுவது ஏனோ? இப்படியான எண்ணம் உங்களுக்கு ஏனோ? இப்படி சொல்லும் நீங்கள் இதே போல நீங்கள் நினைக்கும் கலைக்கு கொடுங்கள் நாங்கள் ஆதரவு தருகின்றோம். இப்படியே நாட்டுப் பிரச்னையை பார்த்தல் ஒன்றும் செய்ய முடியாது. சாப்பிடாமல் படம் பார்க்காமலா நீங்கள் இருக்கிரிங்க.

 
;