Monday, May 3

மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப் குற்றவாளி

மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப் குற்றவாளி என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பஹீம் அன்சாரி, சஹாபுதீன் அகமது ஆகியோர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, மும்பையில் பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில், வெளிநாட்டவர்கள் 25 பேர் உட்பட 166 பேர் பலியாயினர்; 304 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில், அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட்டைச் சேர்ந்தவன். தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்  இ  தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு, தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களின் வரைபடத்தை தயாரித்து கொடுத்தது உட்பட பல உதவிகளைச் செய்த இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன் அகமது என்ற இருவரும் கைதாகினர்.

இவர்கள் மூன்று பேருக்கும் எதிரான மும்பை தாக்குதல் வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி துவங்கிய வழக்கு விசாரணை, மற்ற பயங்கரவாத வழக்குகளை விட வேகமாக நடந்தது. இதில், 658 பேர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 271 வேலை நாட்களில் 3,192க்கும் மேற்பட்ட பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானி முன், சாட்சியம் அளித்தவர்களில் 30 பேர், கசாப் தான் தங்களை சுட்டான் என கூறினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் உஜ்வல் நிகாம், விசாரணையின் போது பறிமுதல் செய்யப்பட்ட 1,015 பொருட்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார். வழக்கிற்கு ஆதரவாக 1,691 ஆவணங்களையும் பதிவு செய்தார்.
பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், மிக வேகமாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை மார்ச் 31ம் தேதி முடிவுக்கு வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிபதி தகிலியானி, தீர்ப்பை வழங்கினார்.
மதியம் உணவு இடைவேளை கூட இல்லாமல் கோர்ட் நடந்தது. கோர்ட்டில் கசாப் உள்பட 3 பேரும் ஆஜராயினர். 3 பேருக்கும் தீர்ப்பு விவரம் கோர்‌ட்டில் வாசித்து காட்டப்பட்டது. கசாப்புக்குரிய தண்டனை விவரம் இன்னும் வெளியாகவில்லை.
உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தானில் கில் பயிற்சி பெற்ற பயங்கரவாதி கசாப் குற்றவாளி. மும்பை தாக்குதல் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அப்துல் கசாப் குற்றவாளி. கசாப்புக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பஹீம் அன்சாரி, சஹாபுதீன் அகமது ஆகியோர் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி கூறினார். தீர்ப்பை யொட்டி கோர்ட்டில் பலத்த  போடப்பட்டிருந்தது.









0 comments:

 
;