Saturday, January 22

உன் கரம் பற்றி...




உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் உன்
எதிர் காலமே நான்தான் என்று..!



அடி முட்டாள் பெண்ணே..
உன் கைகள் சிவக்க
மருதாணி தேவையில்லையடி..!
நீ வெட்கப்பட்டு கைகளால்
முகம் மூடினால் போதும்...!



நானோ ஒற்றை வழி பாதையில்.
நானும் வருகிறேன் என கைகோர்கிறாய் நீ..
தயக்கத்தோடு கை கோர்க்க....
இறுக பற்றி கொண்டு...
செல்கிறாய் நீ...



உன் முகம் பார்த்து சிலையானேன்...
உன் விழியில் என்னை பார்க்க...
உயிர் பெற்றேன் மீண்டும்...!
கவர்ந்தேனா என்ற வார்த்தையை
நீ கேட்க.. வார்த்தைகள் எல்லாம்
இழந்து போக மெளனத்தில்
பரவ விடுகிறேன் என் காதலை!



எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது...!





60 comments:

karthikkumar said...

அட அட அட என்னமா எழுதுற மச்சி....

karthikkumar said...

எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது..///
இது சூப்பர்.... :)

Anonymous said...

ம்ம்ம்ம்
(நான் ஏதும் comment சொல்லல )

escape

சௌந்தர் said...

கார்த்திக் தேங்க்ஸ் மச்சி....!

சௌந்தர் said...

கல்பனா கூறியது...
ம்ம்ம்ம்
(நான் ஏதும் comment சொல்லல )/////

ஏன் ஏன் ஏன்....

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு அப்போ இந்த வண்டி எங்கயோ மாட்டிகிட்டு இருக்கு ........ நடக்கட்டும் .....நடக்கட்டும்

dheva said...

காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு.. அதை உணரும் பொது கவிதையாக வெளிப்பட்டு ஆச்சர்யப்படுத்துகிறது... உன் கவிதைகளைப் போலா..!

அசாத்தியமான வளர்ச்சியை உன்னிடம் பார்க்கிறேன்..........Go ahead............thambi.!

Cheer up..........!!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா நல்லாயிருக்க் இதானே... எந்த பிரச்சனியும் இல் அதானே.. என்னாச்சுப்பா. இப்பெல்லாம் நீ சரியா தூங்குறதே இல்லையாமே.. அம்மா சொன்னாங்க.. நல்லாயிருக்கே தானே..

dheva said...

சரி தம்பி ஒரு ஒரு டவுட்..............

எப்டி....எப்டி ? இப்டி இப்டி எல்லாம் எழுதுற?...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

குவாட்டர் பாட்டில்...

உன் கரம் பற்றி இருந்தஉன்னிடம் ..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் என் இன்றைய
எதிர்காலமே உன்னிடம் தானென்று..

சக்தி கல்வி மையம் said...

காதல் மணம் கமழும் கவிதை!
கலக்கல் தலைவரே....
நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....
உங்களுக்காக வெயிட்டிங்....

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் சொன்னது… 6
ரைட்டு அப்போ இந்த வண்டி எங்கயோ மாட்டிகிட்டு இருக்கு ........ நடக்கட்டும் .....நடக்கட்டும்///

நடத்திடுவோம்....

Unknown said...

காதல் வந்துருச்சு ....

சௌந்தர் said...

dheva சொன்னது… 7
காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு.. அதை உணரும் பொது கவிதையாக வெளிப்பட்டு ஆச்சர்யப்படுத்துகிறது... உன் கவிதைகளைப் போலா..!

அசாத்தியமான வளர்ச்சியை உன்னிடம் பார்க்கிறேன்..........Go ahead............thambi.!

Cheer up..........!!!!!!////

ரொம்ப நன்றி அண்ணா..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு வெட்க வெட்கமா இருக்கு

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 10
குவாட்டர் பாட்டில்...

உன் கரம் பற்றி இருந்தஉன்னிடம் ..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் என் இன்றைய
எதிர்காலமே உன்னிடம் தானென்று..////

நண்பா உன் காதல் எது மேல நல்லா தெரியுது

சௌந்தர் said...

@@@sakthistudycentre-கருன். வந்து பார்த்துட்டேன் ரொம்ப நல்லா இருக்கு

சௌந்தர் said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 13
காதல் வந்துருச்சு ....////

அது எல்லாம் இல்லைங்க அண்ணா

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 15
எனக்கு வெட்க வெட்கமா இருக்கு///

உங்களுக்கு அது கூட வருமா...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சௌந்தர் சொன்னது… 19

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 15
எனக்கு வெட்க வெட்கமா இருக்கு///

உங்களுக்கு அது கூட வருமா...?
///

கூடவும் வரும் சில சமயம் கம்மியாவும் வரும்..

சௌந்தர் said...

dheva சொன்னது… 9
சரி தம்பி ஒரு ஒரு டவுட்..............

எப்டி....எப்டி ? இப்டி இப்டி எல்லாம் எழுதுற?...........///

அது தன்னாலே வருது அண்ணா...உங்க அளவுக்கு எல்லாம் வராது ...!

செல்வா said...

நீ கலக்குடா உண்மைலேயே ரொம்ப நல்லா இருக்கு !!
சீக்கிரமே பெரிய கவிஞரா வரப் போற .

சக்தி கல்வி மையம் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே ....
என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா...

நான் ஓட்டு போட்டுட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

அப்படியே.. இதையும்...
http://sakthistudycentre.blogspot.com/2011/01/2.html

செல்வா said...

//உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்..../

மச்சி உனக்கு ஜோசியம் எல்லாம் தெரியுமா ?

செல்வா said...

//உன் முகம் பார்த்து சிலையானேன்...
உன் விழியில் என்னை பார்க்க...
உயிர் பெற்றேன் மீண்டும்...!//

சிலை ஆகிட்டியா ? அடடா பாவம் மச்சி நீ

சௌந்தர் said...

கோமாளி செல்வா கூறியது...
//உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்..../

மச்சி உனக்கு ஜோசியம் எல்லாம் தெரியுமா..?///

ஏன் உனக்கு ஜோசியம் பார்க்கணுமா...?

செல்வா said...

///எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது...!
///

எப்படி மச்சி இப்படியெல்லாம் ரோசிக்கிற ?

மாணவன் said...

இங்கயும் காதலா??? ஓகே ரைட்டு நடக்கட்டும் நடக்கட்டும்......

நல்லாருக்குண்ணே வாழ்த்துக்கள்.......

பரதேசித் தமிழன் said...

காதல்வயப்பட்டவரின் காதல் வரிகள்.... நன்று!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரே கவிதை மயமா இருக்கே? எனி ஹெல்ப்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எப்போதும் உன் நினைவுகள்////

வேற என்னத்தச் சொல்ல?

இம்சைஅரசன் பாபு.. said...

///கல்பனா சொன்னது… 3
ம்ம்ம்ம்
(நான் ஏதும் comment சொல்லல )

escape//

Repeatuuuuuuuuuu

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க....

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

எஸ்.கே said...

பஸ்கள் இணைந்து
பதிவாக மாறும்போது
என்ன பதிலிடுவதென தெரியவில்லையே.....!!!!!!!!!!

எஸ்.கே said...

பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?

Sriakila said...

எல்லாத்தையும் பஸ்லயே படிச்சுட்டேன். ஆனாலும் இதில ஒண்ணா சேர்த்து படிக்கிறது ரொம்ப நல்லாருக்கு.

காதல் ஃபீவர் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுவுவுவுன்னு ஏறிருச்சு உன் தலையில‌. இனி ஒண்ணும் பண்ண முடியாது. உனக்கு உடனே பத்திரிக்கை அடிக்கலைன்னா உன் ஃபீவர் பதிவுலகத்தும் ரொம்ப வேகமா பரவிரும்...ஜாக்கிரதை!

நண்பர்களே! சீக்கிரம் செளந்தருக்கு நெட்டையோ, குட்டையோ பாத்து தள்ளிவிடற வேலையப் பாருங்க. பாவம்! பதிவுலகம் தப்பிச்சுப் போகட்டும்.

இம்சைஅரசன் பாபு.. said...

//சரி தம்பி ஒரு ஒரு டவுட்..............

எப்டி....எப்டி ? இப்டி இப்டி எல்லாம் எழுதுற?...........///
//

இப்படியே எல்லோரும் சேர்ந்து உசுபேத்தி விட்டு ........அவனை புதை குழில தள்ளி விட்டுராதீங்க ......அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் ........

ஆனந்தி.. said...

ஓகே...ஓகே..:))மனசுக்குள் பட்டாம்பூச்சி:) பறக்க ஆரம்பிசிருச்சுனு confirmed :))) வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி...:)))

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 33
///கல்பனா சொன்னது… 3
ம்ம்ம்ம்
(நான் ஏதும் comment சொல்லல )

escape//

Repeatuuuuuuuuuu////

ஒரு கமெண்ட் அதை கூட சொந்தமா போட தெரியலை......

இம்சைஅரசன் பாபு.. said...

//escape//

Repeatuuuuuuuuuu////

ஒரு கமெண்ட் அதை கூட சொந்தமா போட தெரியலை....//

காதல் பண்ணினா கண்ணும் நொள்ளையா போகும் போல ...நான் ரெண்டு கமெண்ட்ஸ் போட்டு இருக்கேன் ...இவன் ஒண்ணுன்னு சொல்லுறான்

dheva said...

//இப்படியே எல்லோரும் சேர்ந்து உசுபேத்தி விட்டு ........அவனை புதை குழில தள்ளி விட்டுராதீங்க ......அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் ....///

பாபு...@ அப்டியா...? காதல்ன்ற உணர்வுதான் இருக்கு காதலி இல்லை....ரிலாக்ஸ் தம்பி.........!

கவிநா... said...

//எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது...!//

கலக்கல்.......
அருமைக் கவிதை சகோ...

இம்சைஅரசன் பாபு.. said...

////இப்படியே எல்லோரும் சேர்ந்து உசுபேத்தி விட்டு ........அவனை புதை குழில தள்ளி விட்டுராதீங்க ......அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் ....///

பாபு...@ அப்டியா...? காதல்ன்ற உணர்வுதான் இருக்கு காதலி இல்லை....ரிலாக்ஸ் தம்பி.........!//

அப்போ ஒரு தலை காதலா......ஐயோ பரிதாபம் ஏர்வாடி தான் ....

சி.பி.செந்தில்குமார் said...

GOOD RHYME. ALREDY READ A LITTLE BIT IN BUZZ POSTED BY U.. KEEP IT UP

ஆமினா said...

என்னமா யோசிக்கிறாங்க

செம கலக்கல் கவிதை

Unknown said...

really superb.

//குவாட்டர் பாட்டில்...

உன் கரம் பற்றி இருந்தஉன்னிடம் ..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் என் இன்றைய
எதிர்காலமே உன்னிடம் தானென்று..//
ஆகா ,காதலை பாட்டில் உள்ள போட்டு அடைக்கைப் பார்க்கிறான்களே;-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு.. அதை உணரும் பொது கவிதையாக வெளிப்பட்டு ஆச்சர்யப்படுத்துகிறது... உங்க கவிதையைப் போல....///

அதே.. அதே....!! :-)))

செம செம.. கவித கவித..
பிரமாதம்...........

கலக்குறேள்.. சௌந்தர்... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நீங்க இப்பத்தான் இப்பிடியா...?? இல்ல சின்ன புள்ளையில இருந்தே இப்படியா?? :-))

திருமூர்த்தி. சி said...

நல்ல கவிதை பாராட்டுகள்

Kousalya Raj said...

உணர்வுகளின் சங்கமம்...!

நல்லா இருக்கு சௌந்தர்...தொடர்ந்து நிறைய எழுது...வாழ்த்துக்கள்.

ஹேமா said...

காதலை நினைத்துவிட்டாலே வார்த்தைகள் வளைந்து கொடுக்கிறது அழகாக !

Porkodi (பொற்கொடி) said...

என்னது வண்டி மாட்டிக்கிட்டி இருக்கா?! அப்ப ப்ரொஃபைல்ல இருக்க குட்டி குழந்தை உங்களுது இல்லையா? :) கவிதை நல்லாருக்கு, அதை விட அந்த சீரியல் பத்தின பதிவு சூப்பர்..!

அருண் பிரசாத் said...

//உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் உன்
எதிர் காலமே நான்தான் என்று..!//

அப்போ கைவசம் ஒரு தொழில் இருக்குனு சொல்லு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹலோ... buzz அ ஒட்டின போஸ்டரை இங்க போடலாமேன்னு ஐடியா குடுத்ததே நான் தான்... சோ எனக்கு consulting பீஸ் வந்துடனும் சொல்லிட்டேன்... (ஹா அஹ ஹா) '

எனக்கு ரெம்ப பிடிச்சது இதான்:-
உன் கரம் பற்றி இருந்த என்னிடம்..
என் எதிர்காலம் சொல் என்றாய்....
எப்படி சொல்வேன் உன்
எதிர் காலமே நான்தான் என்று..!

ரேவா said...

எப்போதும் உன் நினைவுகள்
ஏதேதோ உணர்வுகளில்
வெள்ளை காகிதத்தில்
என் பேனா வார்த்தைகளை விடுத்து
காதலை அல்லவா உமிழ்கிறது...!

சூப்பர்.... :)

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். தேர்ந்தெடுத்த படம் அருமை. எதிர்காலம், மருதாணி, ஒற்றை வழிப் பாதை, மவுனம், சொற்களுக்குப் பதில் காதல் - அத்தனை கற்பனைகளும் நன்று. இயல்பான கவிதை. கொடுத்து வைத்தவ்ர் உன் காதலி. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் சௌந்தர் - கவிதை அருமை - வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். தேர்ந்தெடுத்த படம் அருமை. எதிர்காலம், மருதாணி, ஒற்றை வழிப் பாதை, மவுனம், சொற்களுக்குப் பதில் காதல் - அத்தனை கற்பனைகளும் நன்று. இயல்பான கவிதை. கொடுத்து வைத்தவ்ர் உன் காதலி. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

சௌந்தர் said...

@@@cheena (சீனா) வருகைக்கு நன்றி அய்யா..காதலி எல்லாம் இல்லை...தோழி மட்டும் தான்...!!!

 
;