Tuesday, February 8

"போடாதீங்க போடாதீங்க"




பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, நமது அண்டை நாடான பாகிஸ்தானில் விற்பனை கிட்டதட்ட நான்கு மடங்கு அதிகமாவே விற்கின்றது. இந்த விலை உயர்வுக்கு காரணம் உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் இருப்பா அல்லது தனியார்களின் லாபத்திற்காகவா? முன்பு எல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தவேண்டும் என்றால் அமைச்சரவை கூடி முடிவெடுத்து தான் அறிவிப்பார்கள், விலை உயர்த்துவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லிக்கொண்டே இருப்பார்கள் பின்பு தான் விலை உயரும். இப்போழுதெல்லாம் அப்படியில்லை எந்த நேரம் விலை உயர்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை, ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு விலைக்கு பெட்ரோல் போட்டு விட்டு மறு பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்குள் விலை உயர்ந்து விடுகிறது.

அதையெல்லாம் இந்த அரசியல் வாதிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை ஆளும் கட்சியும் சரி, எதிர்கட்சியும் சரி இது வரை எந்த போராட்டமும் நடத்தவில்லை, ஆளும் கட்சி தான் எந்த போராட்டமும் செய்ய வில்லையென்றால் (அவர்கள் எப்படி செய்வார்கள்) எதிர்கட்சிகளும் எந்த போராட்டமும் செய்யவில்லை. நல்ல எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் குறைபாடுகளை சுட்டிகாட்டி திருத்தச் சொல்ல வேண்டும். தேவையான சமயத்தில் அமைதியாக இருக்க கூடாது.

தற்போக பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாமல் இருக்க வேண்டும் என செய்திகள் மின்னஞ்சல் வாயிலாகவும் இணையதளங்கள், எஸ்எம்எஸ் போன்றவை மூலமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த யோசனையும் நன்றாக தான் இருக்கிறது. இதை யார் ஆரம்பித்தார்கள் என எனக்கு தெரியாது ஆனால் இது நம் எதிர்ப்பை காண்பிக்க ஒரு சிறந்த வழி.  

பெட்ரோல் விலை உயர்கிறது என்று புலம்பிக்கொண்டு இருந்தால் மட்டும், போதாது நாம் எதையாவது செய்ய வேண்டும், ஒரு நாள் பெட்ரோல் போடாமல் இருந்தால் என்ன..? இவன் என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று கேட்டால்...ஒன்றும் செய்ய முடியாது. இந்த விலை உயர்வுக்கு மக்களாகிய நாம் எதிர்ப்பு தெரிவிக்க நமக்கு நல்ல ஒரு சந்தர்பம். 


நாடு முழுவதும் ஒரு முக்கியமான நாளில் இப்படி மக்கள் ஒரு அவசியமான செயலை புறக்கணிக்கும்போது இது நிச்சயம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும். இதன் மூலம் அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைக்க போகிறதோ இல்லையோ, ஆனால் அவர்கள் ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள முனைவார்கள். மண்புழு கூட தன்னை குத்தும்போது நெளியும், மனிதர்களான நாம் இத்தனை விலை உயர்வுக்கு எதிர்ப்பை காண்பிக்க வேண்டாமா..?


 பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் இருக்க வேண்டும் அதற்காக முன் நாளே சேர்த்து பெட்ரோல் போட கூடாது அப்படி செய்தால் அந்த போராட்டத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்...ஒரு நாளில் என்ன நடக்கும் என்று நினைத்தால், நினைத்து கொண்டே இருக்க வேண்டியது தான், எதையும் செய்து பார்த்தால் என்ன..? எது எதற்கோ அரசியல்வாதிகள் முழு அடைப்பு செய்யும் பொழுது நம் வீட்டிற்குள் முடங்கி இருக்க வில்லையா..? இது நமக்காக போராட்டம் இதை வெற்றிகரமாக செயல்படுதினால் தான் நம் எதிர்ப்பு அரசுக்கு முழுமையாக தெரியும்...."போடாதீங்க போடாதீங்க பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாதீங்க" 




47 comments:

Arun Prasath said...

ai vadai

Ramesh said...

கரெக்ட் நண்பா.. எல்லா மக்களும் வைராக்கியமாக இதை கடை பிடித்தால் நிச்சயம் பலன் ஓரளவுக்காவது இருக்கும்...

மாணவன் said...

// Arun Prasath கூறியது...
ai vadai//

மச்சி வடை வாங்குறதுல செல்வாவயே மிஞ்சிடுவபோல...:)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

இயன்ற வரை நண்பர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..

மாணவன் said...

//பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் இருக்க வேண்டும் அதற்காக முன் நாளே சேர்த்து பெட்ரோல் போட கூடாது அப்படி செய்தால் அந்த போராட்டத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்...ஒரு நாளில் என்ன நடக்கும் என்று நினைத்தால், நினைத்து கொண்டே இருக்க வேண்டியது தான், எதையும் செய்து பார்த்தால் என்ன..?///

சரியா சொல்லியிருக்கீங்க ஆனால் இத மக்கள் பின்பற்றினால் ஓரளவுக்காவது பலன் கிடைக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத மக்கள் பின்பற்றினால் ஓரளவுக்காவது பலன் கிடைக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா அவன் சைக்கிளுக்கு பெட்ரோல் போட மாட்டான்

Anonymous said...

yes i agri

இம்சைஅரசன் பாபு.. said...

பிப்ரவரி 14 பொம்பளை புள்ளைகள் பின்னாடி போகாதீங்க ன்னு சொன்ன ஒரு நியாயம் இருக்கு .......இது ரொம்ப ஓவர் .......நான் அன்னைக்கு தான் என் வண்டில புல் டான்க் பெட்ரோல் போடுவேன் ..........

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
பிப்ரவரி 14 பொம்பளை புள்ளைகள் பின்னாடி போகாதீங்க ன்னு சொன்ன ஒரு நியாயம் இருக்கு .......இது ரொம்ப ஓவர் .......நான் அன்னைக்கு தான் என் வண்டில புல் டான்க் பெட்ரோல் போடுவேன் ///

ஹி ஹி இருந்தாலும் கொஞ்சம் எதிர்ப்பாவது காட்டலாம்ல அண்ணா.... இப்படியே போய்ட்டு இருந்தா அப்புறம் சீக்கிரம் நூறு ரூபாய்க்கு விப்பாங்க பெட்ரோல....

எஸ்.கே said...

எதிர்ப்பை காண்பிப்போம்! இது நிச்சயம் அரசாங்கத்தை சிந்திக்க வைக்கும்!

சௌந்தர் said...

இம்சை அரசன் பாபு...இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு நம்மளால் ஆனா சிறிது எதிர்ப்பு தான்...இதில் தான் நம் எதிர்ப்பை காட்ட வேண்டும் முயன்ற அளவுக்கு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்....

செல்வா said...

// ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு விலைக்கு பெட்ரோல் போட்டு விட்டு மறு பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்குள் விலை உயர்ந்து விடுகிறது.
//

பாருயா , எப்படி எல்லாம் விலை ஏறுதுன்னு ?!!

Anonymous said...

நல்ல முடிவு தான்.
ஆனா காதலர் தினத்தன்னைக்கு பைக்ல ஊர் சுத்த ப்ளான் போட்ருந்தவங்க என்ன பண்ணுவாங்க பாவம் :(((

இம்சைஅரசன் பாபு.. said...

இதே இது நம்ம பன்னி,டெர்ரர் ,ரமேஷ் இப்படி எவனாவது சொன்ன எவனும் கேக்க மாட்டான் ....கமல் சொன்னதுனால இவ்வளவு பப்றேபலம் ஆகி இருக்கு ன்னு நினைக்கிறேன் .....

கமல் மூணு பொண்டாட்டி வச்சி இருக்கான .அப்போ நீங்களும் அதை மாதிரி செய்வீங்கள ......ஹி ..........ஹி ....சும்மா ஒரு டவுட் ..அவன் தன் உறுப்புகளை எல்லாம் தானம் செய்து இருக்கான் .....அதை இந்த சௌந்தர் செய்தான .........அத விட்டு போட்டு பெட்ரோல் போடாதே ன்னு சொல்ல கூடாது .............அவன் 5 கார் வைச்சி இருக்கான் அதை விக்க சொல்லான் ......அடுத்தவனுக்கு உபதேசம் பண்ண வந்துட்டாரு கமல் ....(கமல் ரசிகர்கள் எல்லாம் வாங்க வந்து செத்து செத்து விளையாடலாம் ......)
வலிய போய் சண்டை இழுப்போர் சங்கம் (இப்படி கமெண்ட்ஸ் போடா சொன்னதே சௌந்தர் தான் அதனால் இதற்க்கு பிறகு வரும் வில்லங்க பின்னூட்டத்திற்கு சௌந்தர் தான் பொறுப்பு )

செல்வா said...

//தற்போக பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாமல் இருக்க வேண்டும் என செய்திகள் மின்னஞ்சல் வாயிலாகவும் இணையதளங்கள், எஸ்எம்எஸ் போன்றவை மூலமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த யோசனையும் நன்றாக தான் இருக்கிறது. இதை யார் ஆரம்பித்தார்கள் என எனக்கு தெரியாது ஆனால் இது நம் எதிர்ப்பை காண்பிக்க ஒரு சிறந்த வழி. //

ஒரு நாள் தானே .. கண்டிப்பா பண்ணலாம் .. இது ஒரு நல்ல விசயம்தான் ..

சௌந்தர் said...

இந்திரா சொன்னது… 14
நல்ல முடிவு தான்.
ஆனா காதலர் தினத்தன்னைக்கு பைக்ல ஊர் சுத்த ப்ளான் போட்ருந்தவங்க என்ன பண்ணுவாங்க பாவம் :(((///

நீங்க ரொம்ப கவலை படுறதை பார்த்தால் உங்க பிளான் மிஸ் ஆகுது போல....இந்த ஒரு வருடம் தானே.....அடுத்தவருடம் ஜாலியா போகட்டும்

செல்வா said...

//நாடு முழுவதும் ஒரு முக்கியமான நாளில் இப்படி மக்கள் ஒரு அவசியமான செயலை புறக்கணிக்கும்போது//

பிப்ரவரி 14 முக்கியமான நாளா ? அப்படி என்ன ஸ்பெஷல்

வைகை said...

நல்ல முயற்சி..ஆனால் இதில் இன்னொரு பிரச்னையும் உள்ளது....மக்கள் ஆதரவோடு இது வெற்றிகரமாக நடந்தால் ஆட்சியாளர்கள் யோசிக்க வாய்ப்புள்ளது..மாறாக தோல்வியில் முடிந்தால்.....நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள் என்று நமது அமைச்சர்கள் சொல்லக்கூடும்!

கவி அழகன் said...

supper

Chitra said...

.....இந்த நல்ல எண்ணம், எல்லோருக்கும் வந்து பின்பற்றினால் நல்லதுதான்!

பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாமல் இருக்க வேண்டும்


Feb. 14th - Valentine's Day.... சிட்டில பிஸியா ஈவ்னிங் சுத்துவாங்களே.... வேற தேதி கிடைக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்னப்பா பிப்ரவரி-14, உங்களுக்கு வேற நாளே கிடைக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இத மக்கள் பின்பற்றினால் ஓரளவுக்காவது பலன் கிடைக்கும்////////

என்ன பலன் கிடைக்கும்....? அன்னிக்கு யாரும் வெளிய போகமாட்டாங்க, யாரும் ப்ரொபோஸ் பண்ண மாட்டாங்க, உனக்கு ஈசியாயிடும்னு பாக்குறியா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
இதே இது நம்ம பன்னி,டெர்ரர் ,ரமேஷ் இப்படி எவனாவது சொன்ன எவனும் கேக்க மாட்டான் ....கமல் சொன்னதுனால இவ்வளவு பப்றேபலம் ஆகி இருக்கு ன்னு நினைக்கிறேன் .....//////

அடி வாங்காம போகமாட்டாம் போல..... கமல் ரசிகர்கள்லாம் வாங்கப்பா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
செல்வா அவன் சைக்கிளுக்கு பெட்ரோல் போட மாட்டான்////////

அவனைவிடு, நீ அன்னிக்குப் பாத்து ரொம்ப தூரம் நடக்கனுமேன்னு மறந்துட்டு வாய்ல பெட்ரோலை ஊத்திக்கிடாதே.....!

சுசி said...

நல்ல விஷயம்.

MANO நாஞ்சில் மனோ said...

//தற்போக பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாமல் இருக்க வேண்டும் என செய்திகள் மின்னஞ்சல் வாயிலாகவும் இணையதளங்கள், எஸ்எம்எஸ் போன்றவை மூலமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த யோசனையும் நன்றாக தான் இருக்கிறது. இதை யார் ஆரம்பித்தார்கள் என எனக்கு தெரியாது ஆனால் இது நம் எதிர்ப்பை காண்பிக்க ஒரு சிறந்த வழி. //

கமல்ஹாசன் ஹி ஹி ஹி.....

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பாக நம் எதிர்ப்பை காட்டியே ஆக வேண்டும் சவுந்தர்....

தமிழ்மகன் said...

நல்ல யோசனை.
Feb 14 ஒருநாள் நான் பெட்ரோல் போடா மாட்டேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////.."போடாதீங்க போடாதீங்க பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாதீங்க" /////

அப்போ டீசல் போடலாம்...

சௌந்தர் said...

@@@MANO நாஞ்சில் மனோ ..சார் கமலுக்கு முன்பு யாரோ சொல்லியிருகிரர்கள் என்று நினைக்கிறன் அது தான் யார் என்று தெரியவில்லை என சொன்னேன்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///நாடு முழுவதும் ஒரு முக்கியமான நாளில் இப்படி மக்கள் ஒரு அவசியமான செயலை புறக்கணிக்கும்போது இது நிச்சயம் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும்///

...நல்ல ஐடியா தான்.. இப்போ புரியுது.. என்னது போடாதீங்க சொன்னிங்கன்னு... :-))

அருண் பிரசாத் said...

சரி... சரி... உனக்கு ஓட்டு போடலாம்ல!

ஆனந்தி.. said...

எனக்கும் இது பற்றி மெயில் வந்தது சௌந்தர்...

Pranavam Ravikumar said...

Yes Sir.. I agree with you completely.. lets fight together... Thanks for posting

FARHAN said...

பெட்ரோல் விலை கட்டுபடுத்த காதலர் தினம் நல்ல முடிவு
காதலர்களை பேட்டி எடுக்கும் டிவி சேனல்களில் காதலர்கள் இன்று எங்கே போவ போறிங்கன்னு கேட்டா எங்கயும் போறஇல்லை
பெட்ரோல் போடா போராட்டம் நடதுரோம்னு சொன்னா மக்கள் மத்தியில் ஒருவிளிபுணர்ச்சி வரலாம் நல்ல முடிவு

Jayadev Das said...

இதெல்லாம் வேலைக்கே ஆகாது, சார். ஒண்ணுமில்லை, ஒரு ரெண்டு நாள் எல்லா பெட்ரோல் பங்குகளையும் மூடி விடுங்க, அப்புறம் ஒரு லிட்டர் ஐநூறு ரூபாய்ன்னு சொல்லுங்க, நூத்து கணக்குல சனம் அடிச்சி பிடுச்சி வாங்கிகிட்டு போகும். நீ என்ன விலை ஏத்தினாலும் கவலைப் படாமல் வாங்க ஆளுங்க இருக்கும்போது இந்த மாதிரி போராட்டங்களால் ஒன்னும் ஆகப் போவதில்லை.

Sriakila said...

நல்லதொரு தூண்டுதல் செளந்தர்!

இதை அனைவரும் பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் நாட்டில் காதலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கும் நிலையில் காதலர்கள் இதை பின்பற்றுவார்களா என்பது சந்தேகம் தான். 'காதல்' அத்தனை விஷயங்களையும் பின்னுக்கு தள்ளிவிடுமே..

எது எப்படி இருந்தாலும் இந்த நல்ல விஷயத்துக்கு உறுதுணையாக இருப்பது நமது கடமை.

சக்தி கல்வி மையம் said...

போடாதீங்க போடாதீங்க பிப்ரவரி 14-ந்தேதி பெட்ரோல் போடாதீங்க..
கன்டிப்பா போடமாட்டேன்.. நன்றி..

என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Madhavan Srinivasagopalan said...

Ok.. I won't buy petrol on that day.

சி.பி.செந்தில்குமார் said...

நீலம் தான் சவுந்தருக்கு பிடிச்ச நிறம் போல.. ஹி ஹி

Unknown said...

ரசிகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

சௌந்தர் said...

ரொம்ப நன்றி பாரத்... பாரதி...

Admin said...

சொல்ல வேண்டியதை அழகாக சொல்லி இரக்கிங்க...


காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>மண்புழு கூட தன்னை குத்தும்போது நெளியும், மனிதர்களான நாம் இத்தனை விலை உயர்வுக்கு எதிர்ப்பை காண்பிக்க வேண்டாமா..?

உணர்ச்சியை தூண்டும் வரிகள்

Unknown said...

சரியா சொல்லியிருக்கீங்க

என் கட பக்கமா வந்துராதீங்க ஹி ஹி!!

இராஜராஜேஸ்வரி said...

மண்புழு கூட தன்னை குத்தும்போது நெளியும்,//
மனிதர்களும் முயற்சிக்கலாம்.

 
;