பாம்பென்றால் படையும் நடுங்கும்” அப்படின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதே பாம்பைப் பத்தி நமக்கு தெரியாத நெறைய விஷயங்கள் இருக்குங்க! உதாரணத்துக்கு,
“பாம்புக்கு காதே இல்ல, ஆனா நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்கள உணர்ற சக்தி அதுக்கு இருக்கு!”
“பாம்புகளுக்கு மூக்கே கிடையாது, ஆனா வாசனை நாற்றங்கள மிகச்சரியா உணர்ற திறன் இருக்கு!”
“உலகத்துலேயே மிகக் கொடிய “பயோவெப்பன்” என்ன தெரியுமா உங்களுக்கு, பாம்புகளோட
விஷப்பற்கள்தானாம்.
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.
இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில நச்சுப்பாம்புகள் இரத்தக் குழாய்களைத்தாக்கி அழிக்க வல்லன. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இவற்றின் தோல் செதில்களைக் கொண்டுள்ளது. நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகள் நச்சுத்தன்மை கொண்டவை. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. நச்சுத் தன்மையுடைய பாம்பின் தலையில் <> வடிவம் காணப்படும்.
நன்றி:wikipedia
Tweet | |||||
12 comments:
கொஞ்சம் பயமாத்தான் இருக்கு நண்பா.
awwwwwwwwww பயமாய் இருக்கு...பாம்பை பார்க்க
நல்ல தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு...
பயமாத்தான் இருக்கு
(Tamilish not working in my office so i will go to home and put the vote ok brother)
கடவுளே ! இதுக்குத்தான் வர சொன்னீங்களா? தெரிந்து இருந்தால் வந்திருக்க மாட்டேனே? இப்படியாங்க விருந்துக்கு அழைப்பது மாதிரி அழைத்து பயமுறுத்துவது..!! கொஞ்சம் கூட நல்லா இல்ல , ஆமா சொல்லிட்டேன்!!
மேலிருந்து கீழே நான்காவது படம், படு பயங்கரம். அந்த படம் பற்றிய சிறு விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்.
இந்தியாவில், அதுவும் தென்னிந்தியாவில் எடுத்த படமாக தெரிகிறது. நம்மூரில் "இம்மாந்தடி"பாம்பா? !!!!
@கக்கு - மாணிக்கம்: ஆமாம் அது ராஜா நாகம் நம்ம தென்இந்தியா தான். தமிழ் நாட்டிலும் ராஜா நாகம் இருக்கிறது
பா பா பம்பு - பாம்புக்கு கால் கிடையாது இல்லையா?
பதிவ விடுங்க அது எப்பவும் போல நல்லா இருக்கு, டெய்லி ஒரு பதிவு போடுறீங்களே அது எப்படி பாஸ்?????
படங்கள் பயங்கரமாய் இருக்கு...
that's good continue.
மேலிருந்து இரண்டாவதாக உள்ள படம் உண்மையான பாம்பினுடையதா?
Post a Comment