Wednesday, June 23

முதியோர் இல்லத்தில் அம்மா






இது சமீபத்தில் நான் படித்து ரசித்த கதை இதை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்

கதை:பட்டுக்கோட்டை :ராஜேஷ்  


காலண்டர் தேதி ஐந்தைக் காட்டியது இன்றைக்கு அம்மாவின் ஆபரேஷன் செலவிற்காக அல்ல. அம்மா தங்குவதற்கு இடமளித்து மூன்று வேளையும் உணவுளித்து, மருத்துவக் கவனிப்பையும் பார்த்து கொள்ளும் முதியோர் இல்லத்திற்கு 1500 ரூபாய் கட்ட வேண்டும்


நினைத்துப் பார்க்கும் போது சங்கடமாகத்தான் இருந்தது.ராஜனுக்கு அவருக்கும் ஐம்பத்தெட்டு வயதாகிவிட்டது. அவரது ஒரே மகன் பெங்களுரில் என்ஜினியராக இருக்கிறான். அவனுக்கும் திருமணமாகி மனைவியுடன் அங்கு இருக்கிறான் மனைவிக்கும் அவரது அம்மாவிற்கும் ஒத்துபோகாத சூழ்நிலையில், அடிகடி மோதல். இதனால் அம்மாவிற்கு சரியான கவனிப்பு தன் மனைவியிடம் கிடைக்காததால் வேறு வழியின்றி சூழ்நிலையின் கைதியாகி அந்த முடிவுக்கு வந்தார் ராஜன்.

பணத்தைக் கட்டிவிட்டால், வேளை தவறாமல் உணவளித்து நன்றாகக் கவனித்து கொள்வார்கள். அங்கு அம்மா சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக கவுரவமாக இருக்க முடியும். வருடம் மூன்று ஓடிவிட்டது. அம்மாவிற்கு இப்போது எழுப்பத்தெட்டு வயதாகிவிட்டது இந்த மாதிரியான காலகட்டத்தில், கூட வைத்திருந்து கவனித்து பாக்க வேண்டும்.ஆனால் முடியாத சூழ்நிலை.

பத்து தினங்களுக்கு முன்பு அந்த முதியோர் இல்லத்திலிருந்து ராஜனுக்கு போன் வந்தது வயிற்றுப் போக்கு அதிகமாகி அம்மா மிகவும் மோசமாக இருக்கிறார்கள். உடனே வந்து பாருங்கள் என்று. ஆனால் அவர் போகவில்லை. அதற்குபின் அந்த இல்லதிலிருந்து போன் ஏதும் வரவில்லை. இவரும் பேசவில்லை இன்று பணம் கட்டக் கிளபினார் ராஜன் இறங்கி உள்ளே சென்றார்.அமைதியான சூழ்நிலையில் அமைந்திருந்தது அந்த இல்லம்.உள்ளே சிறிய கோவில் ஒன்று இருந்தது பூங்கா அமைக்கப்பட்டு ஆங்காங்கே சிமென்ட் பெஞ்சுகள் இருந்தன.

நிர்வாகியின் அறைக்குள் சென்றார் ராஜன் வணக்கம் ஸார் என்றார் ராஜன் குனிந்து எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்து ஸார்....உட்காருங்க என்றார் நிர்வாகி சேரில் அமர்ந்தபடியே. அம்மா எப்படியிருக்காங்க ஸார்? கேட்டார். ராஜனையே சற்றுநேரம் மவுனமாகப் பார்த்த நிர்வாகி உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே.. உடனே வாங்கன்னு போன் பண்ணியும் நீங்க  வரவே இல்லையே... 

முதியோர் இல்லத்தில் அம்மா. அடுத்த பதிவில் தொடரும்......





11 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

தொடரும்னு சொல்லிட்டீங்களே நண்பா..

Jeyamaran said...

என்னதான் ஆச்சு நண்பரே

விஜய் said...

என்ன ஆச்சு அடுத்த பதிவிற்காக காத்து இருக்குறேன்...

Thomas Ruban said...

// அடுத்த பதிவில் தொடரும்......//

அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்து இருக்குறேன்..

நன்றி.

Riyas said...

நல்ல பதிவு நண்பரே..

ஷர்புதீன் said...

why u posting this small story as 2 article??

Unknown said...

நல்ல பதிவு

நிலாமதி said...

தொடரும் என்று போட்டு விட்டீர்கள் அவலாய் இருக்கிறோம் வாசிக்க...........விரைவில் தொடருங்கள். ..

சீமான்கனி said...

நல்லது சௌந்தர் அவசரமாய் தொடரவும்...

தமிழ் மதுரம் said...

உலகின் யதார்த்த நிலையினைத் தொகுத்தளித்துள்ளீர்கள். முடிவி என்ன?

ஜெயந்தி said...

முதியோர் இல்லத்தில் விட எப்படித்தான் மனசு வருகிறதோ.

 
;