கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. மகாலட்சுமி தனியாக கோவில் கொண்டுள்ளது இங்கு தான். இந்த அம்மனை 24 மனை தெலுங்கு செட்டியார்கள், குரும்ப கவுண்டர் ஆகிய இரு சமூகத்தினரும் குலதெய்வமாக வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் கோவிலில் ஆடி 18ல் துவங்கி இரண்டு நாட்கள் நடக்கும் ஆடிப்பெருக்கு விழாவில், பக்தர்கள் 18 நாள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவர்கள்.
தலையில் தேங்காய் உடைத்ததில் 96 பேருக்கு மண்டை உடைந்தது. 26 பேருக்கு கோவிலில் அமைத்த மருத்துவ முகாமில், தையலிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுக்கு பெயர் தான் கபால மோட்சம் சொல்லுவாங்க...
ஆலயங்களில் உயிர் பலி கொடுப்பது எவ்வளவு மூட நம்பிக்கையோ அது போல் காட்டுமிராண்டித்தனம் என்பது உண்மை. இந்த நவ நாகரீக உலகத்தில் இன்னமும் நாம் இப்படி நடந்துக்கொள்வது ஏற்புடையகாது. நமது புராணமும் இதை வரவேற்கவில்லை. ஆகவே இந்துக்களாகிய நாம் இந்து ஆலயங்களில் இனிமேல் பலி கொடுப்பதை நிறுந்த வேண்டும்.
சூரிய கிரகண மூட நம்பிக்கை;
சூரியனை பாம்பு விழுங்குவதாக ,நமது புராணங்களில் சொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்பதும் மூட நம்பிக்கைதான். சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைநமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது.
சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம்
தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது.
கழுதைக்கு கல்யாணம்…மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?
முடிந்தால் புலிக்கும் புலிக்கும் கல்யாணம் செய்து வையுங்கள்
இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
மூட நம்பிக்கை பதிவு தொடரும்....
Tweet | |||||
10 comments:
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள் நண்பா.. பாராட்டுக்கள் ..
முட்டாள்தனமான இந்த நம்பிக்கைகள் பைத்தியக்காரர்களால் உருவாக்கப் பட்டது..
மூட நம்பிக்கைகளை ஒழிக்கறது ரொம்பக் கஷ்டம்தான்.
//முடிந்தால் புலிக்கும் புலிக்கும் கல்யாணம் செய்து வையுங்கள்
நல்ல வரிகள்....
2012 ல உலகம் அழியுதுன்னு சொன்னாங்களே அதவிடைய இது பெருசு அடுத்த பதிவுல அத எதிர்பார்கிறேன்
family planning pannika inga yievanukum yievanukum thiriyam illa jay na
நிச்சயம் தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
நல்ல வரிகள்..
தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
நல்ல பகிர்வு ,மூட நம்பிக்கைகளை ஒழிக்கறது ரொம்ப சுலபம்.......
மிக நல்ல பதிவு.
தொடருங்கள்....!
நன்றி.
Post a Comment