Saturday, May 22

மங்களூர் வந்த விமானம் விபத்து! 158 பேர் பலி!

மங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கிய
சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.

துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் இன்று காலை 6.30 மணியளவில்  விபத்தில் சிக்கியது.


மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் 6 மற்றும் 158 விமானப் பயணிகள் உள்பட 166 இருந்தனர்.

விமான விபத்தில் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

மங்களூர் விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங், ரூ.2 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.






கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த விபத்தால் பெரும் அதிர்ச்சியும் கவலையும் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக கூறினார்.



1 comments:

Unknown said...

கண்ணீர் அஞ்சலி ..

 
;