Monday, May 24

சென்னை பழசு சென்னை புதுசு

 சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம்  மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில த.தொ பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன.


இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. 




சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25% மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி,  மார்வாரி, வங்காளி, பஞ்சாபி , ஆகியவை பயனில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேச படுகிறது.
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.


இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத இந்த மொழி  சிலரால் கொச்சை மொழியாக கருதப்படுகிறது.
                                  
                             பழைய எழும்பூர் 






                          புதிய எழும்பூர் ரயில் நிலையம்       






                   பழைய  சென்ரல் ரயில் நிலையம்




                   புதிய சென்ரல் ரயில் நிலையம் 




                  பழைய சென்னை உயர்நீதி மன்றம்




               புதிய சென்னை உயர்நீதி மன்றம் 




                       பழைய மெரினா  கடற்கரை 




                         புதிய மெரினா கடற்கரை 




                               பழைய மவுண்ட் ரோடு




                                புதிய மவுண்ட் ரோடு




                               பழைய parrys corner






                               புதிய parrys corner










9 comments:

dheva said...

நல்ல தேவையான ஒரு செய்திகளுடன் கூடைய ஒரு பதிவு செளந்தர்! வாழ்த்துக்கள்....! வாக்களிக்க முடியவில்லை தமிழிஸ் சைட்டில் ஏதோ பிரச்சினை..! தளம் சரியானவுடன் வாக்களிக்கிறேன்!

Anonymous said...

nalla iruku soundar inda kaachigal annaithum video ah madurasapattina paduthula vara poguthu.

சௌந்தர் said...

நன்றி dheva அண்ணா. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

நல்ல செய்திகளுடன் சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்..

க.பாலாசி said...

நல்ல தகவல்களை தொகுத்திருக்கிறீர்கள் நண்பரே... படங்களுடன்....

ஸ்ரீராம். said...

இந்தப் படங்கள் எல்லார் கலக்ஷனிலும் இருக்கும்..

insight said...

ஒயிலாகப் பேசப்படுகிறது.

//

அழகான வார்த்தை பிரயோகம் . ஸ்டைல் என்பதற்கு நேரடியான தமிழ் வார்த்தை அற்ப்புதம் போங்க

Anonymous said...

படங்கள் நன்றாக இருக்கின்றன பழைய புதிய என்று குறிப்பிடுவதிலும் விட திகதி இட்டு குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் அல்லது அண்ணளவாகவாவது ஆண்டைக்குறிப்பிடலாம்
வாழ்த்துக்களும் நன்றிகளும்

cheena (சீனா) said...

அன்பின் சவுந்தர்

பழைய சென்னை புதிய சென்னை - படங்கள் அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 
;