Monday, May 31

பாடாய் படுத்தும் சீரியல்




இந்த சீரியல் ரொம்ப பாடாய் படுத்துகிறது... காலை 10.30 தொடங்கி இரவு 10.30 வரைக்கும் இந்த சீரியல் பெயர்கள், பாருங்கள் காலை 10.30.மகள் ,11.00 மெட்டிஒலி, 11.30 கஸ்தூரி, 12.00 உறவுகள் 12.30 அனுபல்லவி,1.00 வசந்தம்,1.30 இளவரசி, 2.00 அத்திப்பூக்கள் ,2.30 ஒரு மொக்க படம் போடுவார்கள் அதை யாரும்பார்க்க  கூடாது என்பதற்காக ,மொக்க படம் போடுகிறார்கள்,  நல்ல படம் பார்த்தால்  மக்கள் தூங்க மாட்டார்கள் அதனால் தான் மொக்க படம் போட்டு தூங்க வைத்தால்  தான் மாலை 6.00 மணிக்கு சீரியல் பார்க்க முடியும் அதனால் தான் இப்படி மொக்க படம் போடுகிறாக்கள்.








ஒரு வழியா  படம் முடிஞ்சி உடனே சீரியல், 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி,  7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம்,  8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே,  10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது...

இப்படி மக்கள் ஏன் சீரியல்  பைத்தியம் ஆக இருக்காங்க தெரியவில்லை, ஒரு சிலர் காலை 10.30 டிவி முன் உட்கார்ந்தால் மதியம் 2.30  மணி வரை அவர்கள் டிவியை விட்டு அப்படி இப்படி என்று நகரமாட்டார்கள் எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு இருக்காங்க அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மற்ற கூடாது என்பார்கள் ஏன் என்றால் ஒரு நிமிடம் தவறாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக .

இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30  நிமிடங்களில்  நேரத்தில் எத்தனை நிமிடங்கள்  நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம் போடுகிறாகள். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அதற்கு  நம்ம பேரரசு படமே பரவாயில்லை அப்படி இருக்கும். நாடகம் முடிந்தாலும் மியூசிக் வந்து கொண்டு இருக்கும்...

நாடகத்தில் அனைத்து கிரிமினல் வேலையும் நடக்கும். கல்யாணத்தை நிறுத்துவது, கருவை கலைப்பது,பிறந்த குழந்தையை கடத்துவது,மயக்கம் கொடுத்து பெண்ணை கற்பழிப்பது, அடுத்தவரின் புருஷனை அடைவேன் என்று சபதம் எடுப்பது. இரண்டு பெண் ஒரு ஆணுக்கு சண்டை போடுவது, கொலை செய்வது, பல வகை கொலைகள் இருக்கிறது, சூனியம் வைப்பது, இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது, நீங்கள் கேட்கலாம் இது எல்லாம் சினிமாவில் வரவில்லையா என்று அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். சினிமா  என்பது கொலையை நாம்  போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் நாடகம் பார்த்து  கொண்டு இருந்தார்கள் . நாடகம் பார்க்கிற சுவாரசியம் அடுப்பில் பால் இருப்பதை மறந்து விட்டார் அவ்வளவுதான் பால் பொங்கி கேஸ் அடுப்பு அணைந்து கேஸ் லிக் ஆகிகொண்டு இருந்தது  அப்போது கூட அவருக்கு தெரியவில்லை பக்கத்து வீட்டிலிருந்து வந்து என்ன உங்க வீட்டில் கேஸ் வாடை  வருகிறது என்று கேட்ட உடன் சென்று பார்த்தார்கள், பால் வைத்ததை மறந்தது அப்போது தான் நினைவுக்கு வந்தது பிறகு கேஸ் அனைத்து வந்தனர் யாரும் பார்கவில்லை என்றால் அவளுதான் அவர்கள் கதி....

அட இப்படி பெண்கள் தான் நாடகம் பார்கிறார்கள்  என்றால் இந்த ஆண்களும் பார்கிறார்கள்.எங்க மாமா ஒருவர் காலை எங்காவது வெளியே செல்வர், அந்த வேலை முடியாமலே அவசரம் அவசரம் ஆக விட்டுக்கு நாடகம் பார்க்கவேண்டும் என்று வந்து விடுவர்  8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவர். வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார் யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவர், சாலை தாண்டும்  போது வண்டி வருவதை பார்க்க மாட்டார்.அப்படி என்ன நாடகம் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை.

பெண்கள் சீரியல் பார்ப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. ஏதும் கற்றுக்கொள்ளும் விஷயமும் இருக்காது.அனைத்து சீரியல்களிலும் இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லைமை சீரியல் இருக்கவே இருக்காது. கோலங்கள் சீரியல் விட்டா ஒரு ஜென்மம் போட்டு இருப்பாங்க அதையும் நம்ம மக்கள்  பார்ப்பார்கள் கோலங்கள் சீரியலில் இந்த அபிசேக் நான்கு  கல்யாணம் பண்ணுவாரு.

ஒரு ஆணுக்கு  ரெண்டு பெண்கள் சண்டை போடுவது,அனைத்து சீரியல்களிலும் வரும்  என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள். இவர்களை யார் தான் திருத்துவர்களோ...




18 comments:

SShathiesh-சதீஷ். said...

என்னது சீரியலா? தம்பி வீட்டில அம்மா அக்கா பொண்டாட்டி சாப்பாடு போடணும். உங்க இந்தப்பதிவை பார்த்தால் நாலு நாளைக்கு நீங்கள் பட்டினி தான்.

Jay said...

///இப்படி பல மொள்ளமாரி தனம் இங்கு தான் நடக்கிறது


i like this line.

Jeyamaran said...

நல்ல சொன்னிக எதாவது பெண் பதிவாளர் இதை பார்த்தல் கம்மேண்ட்ஸ்ல கடிசிடுவாங்க பார்த்துகோங்க..............

dheva said...

டி.வி சீரியல்...பத்தி பேசினா நைட்டு வீட்டுல சாப்பாடு கிடைக்காது தம்பி! ஹா ஹா ஹா!

Kousalya Raj said...

//நல்ல சொன்னிக எதாவது பெண் பதிவாளர் இதை பார்த்தல் கம்மேண்ட்ஸ்ல கடிசிடுவாங்க பார்த்துகோங்க..............//

பெண் பதிவர்களுக்கு இணையத்துக்காக செலவளிக்கவே நேரம் போதவில்லை, இதில் டிவி சீரியல் அப்படினா என்ன ?

Jay said...

Kousalya,
Thats a joke. Dont take it serious.

Anonymous said...

naan madham ouru murai taan vitikku poovan naan poogum podu friday night aduku muna yiepoo vituku poonano adavadu munduna madham friday appo yiena seen odinado naan next month poogum podum adadhan odum. annalum adha ukarundu parka ouru kutama yienga vitula iruku

YIENNA KODUM SARAVANA IDHU?????

Jeyamaran said...

@ Kousalya */பெண் பதிவர்களுக்கு இணையத்துக்காக செலவளிக்கவே நேரம் போதவில்லை, இதில் டிவி சீரியல் அப்படினா என்ன ?/*

தெய்வமே தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிகோங்க

Bala said...

It is part of Politics, They do not allow people to think and must adit to some one,

For gents : Drinks
For ladies : TV

"உழவன்" "Uzhavan" said...

ஒரு சீரியல் விடாம பார்க்குறீங்க போல :-)

ரமி said...

Lighta ஆணாதிக்கம் வாசம் வீசுது

:)

ரமி said...

ச்சும்மா சொன்னேன். பயப்படாதீங்க.

ஜெயந்தி said...

அந்த சீரியல்கள பாத்தா இருக்கற புத்தியும் மழுங்கிரும்.

அமைதி அப்பா said...

//எங்கள் வீட்டிலும் சீரியல் பார்பதற்கு இருக்காங்க அவர்கள் விளம்பரம் வரும் போது சேனல் மற்ற கூடாது என்பார்கள்//

எங்கள் வீட்டிலும்தான்.
நல்ல அலசல்.
நன்றி.

சௌந்தர் said...

நன்றி ;சதீஷ்

நன்றி ;தேவ அண்ணா

நன்றி Kousalya

நன்றி Jeyamaran

நன்றி உழவன். நான் சீரியல் பார்க்கமாட்டேன்

நன்றி ரமி

நன்றி ஜெயந்தி உண்மைய சொன்னிங்க

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அமைதி அப்பா

விஜய் said...

இதை பத்தி என்னைக்காவது நான் திட்டணும்னு நினைச்சேன் ,நீங்க பண்ணிடீங்க சௌந்தர்...நன்றி வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

இன்னும் கூட திட்டலாம் திட்டுங்க விஜய்...

நன்றி உங்கள் வருகைக்கு

ஸாதிகா said...

நல்ல இடுகை சவுந்தர். நான் கூட நகைச்சுவையாக இது பற்றி ஒரு இடுகை எழுதி இருக்கின்றேன்.http://shadiqah.blogspot.com/2010/02/blog-post_06.html

 
;