Sunday, June 6

விசமிகளின் வில்லத்தனம்...தமிழிஷ் கவனிக்குமா...?

இவர் என் நண்பர் தேவா இவர் துபாயில் வேலை செய்கிறார் warrior பெயரில்  வலைதளம் வைத்திருக்கிறார், நல்ல சிந்தனைகளை எழுதி வருகிறார். நேற்று,
  சாதியே.....உன்னை வெறுக்கிறேன்....!என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவு எழுதினர், அந்த பதிவை தமிழ்ஷ் இணைத்தார் அந்த பதிவு முன்னணி இடுகையில் இருந்தது, ஆனால் அந்த பதிவு   தமிழ்ஷ் முன்னணி இடுகையில் இருந்து திடீர் என்று காணவில்லை.   


முன்னணி இடுகையில் குறைந்தபச்சம் 5 மணி நேரம் இருக்கும், அதிகபட்சம் 12 மணி நேரம் இருக்கும். ஆனால் இது 2 மணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. யார் செய்த சதியோ....






தேவாவின் வேண்டுகோள்;


அன்பான வாசகர்களே... நான் துபாயில் இருந்து பதிவிடுவது அனைவருக்குமே தெரியும். தாயகத்தை விட்டு பாலை மண்ணிற்கு பொருளீட்டும் பொருட்டு வந்த எமக்கு இந்த தமிழ் இணையங்களும், வலைப்பூக்களும் தான் ஆதரவு.

ஒரு சாதாரண பதிவரான நான் இன்று காலை பதிவிட்ட சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற கட்டுரை தமிழிசில் இருந்து தூக்கப்பட்டு விட்டது....காரணம் அறிய வேண்டி... தமிழிசை துலாவியபோது...அவர்கள் கொடுத்துள்ள காரணங்கள் அறிந்த நான் பின் வரும் கேள்வியோடு இருக்கிறேன்.....யாரவது

1) உங்களின் வலைப்பூ பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே உங்களின் இடுகைக்கு பல்வேறு திருட்டுத்தனமாக நிறைய ஐ.டிகள் மூலம் வாக்களித்தால் உங்களின் இடுகை தமிழிசை விட்டுத் தூக்கப்படும்.


என்னுடைய கேள்வி இது தான் என்னுடைய வாசகர்கள் 32 பேர் வாக்களித்தும் யாரோ விசமத்தனம் செய்ததற்காக இடுகையை தூக்கியது எந்த விதத்தில் நியாயம்?


இது என்னுடைய குரல் மட்டுமல்ல....இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பகவு இந்த கோரிக்கையை தமிழிசுக்கு வைக்கிறேன். இதற்கான தனிப்பட்ட மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.

இதனால் நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடையாமல் யாரோ சிலர் இந்த வலைத்தளத்தை கண்ட்ரோல் செய்யும் அபாயமும் இருப்பதால் இந்த இடுகையை அவசரமாக இடுகிறேன்....



அட இந்த பதிவும் தமிழ்ஷ் வரவில்லை. இப்படி செய்வதால் ஒருபதிவரின்எழுதும்ஆர்வம் குறைந்து விடும்... 





13 comments:

Unknown said...

நான் ஆமோதிக்கிறேன்....

priyamudanprabu said...

நான் ஆமோதிக்கிறேன்....

puduvaisiva said...

அந்த கருப்பு ஆடுகளுக்கு என் கண்டணங்கள்.

மதுரை சரவணன் said...

ithu oru mosadi polthaan therukirathu. viraivil tamilish nadavadikkai edukkum ena nambukiren. en varuththaththiyum unkaludan pakirnthu kolkiren.

தமிழ் மதுரம் said...

உங்கள் கருத்துடன் நானும் உடன் படுகிறேன் தோழா..

தொடர்ந்தும் எழுதுங்கள் என உங்கள் நண்பருக்கு உற்சாகப்படுத்துங்கள்.

geethappriyan said...

மிகவும் வருத்தம் நேர்கிறது நண்பா,வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை, சாதியை ஏசி போடப்படும் பதிவுகள் 300 நாட்கள் ஆனாலும் அழியாமல் இருக்கிறதே!

பருப்பு (a) Phantom Mohan said...

தமிளிஷ் ல bury ன்னு ஒன்னு இருக்கும், ஒட்டு போடாமல் bury குடுத்தால், முதல் பக்கத்தில் இருந்து உங்கள் பதிவு போய்விடும், அடுத்து யாரவது ஓட்டுப் போட்டால் மட்டுமே மீண்டும் முதல் பக்கம் வரும்.

பருப்பு (a) Phantom Mohan said...

If you don't like a post or you feel the post content was bad / rubbish, you can select very well select bury.

I think your enemy or ur opponent team may select bury. Check tamilish if somebody put bury for your post.

dheva said...

ஒரு பிரச்சினை என்றவுடன் துடி துடித்துப் போன என் தம்பி சவுந்தருக்கு என்னுடைய
முதற்கண் நமஸ்காரங்கள்.


இரவு சவுந்தரிடம் தம்பி இப்படி ஆகிவிட்டது என்றவுடன், இரவு முழுதும் உறக்கமற்றுப் போய் காலையில் அவன் இந்த பதிவிட்டதைப் பார்த்த போது கண்கள் கலங்கியதை நான் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல...ஆனால்...சவுந்தரின் அன்பு மிகப்பெரியது.

எனக்கான ஆதராவாய் பின்னூட்டமிட்டுள்ள அத்தனைபேரின் அன்பும் கூட அத்தகையதுதான்.... அனைவருக்கும் எனது நமஸ்காரங்கள்.

Jeyamaran said...

நாலு பேருக்கு நல்லதுனா எங்க சௌந்தர் முன்னாடி நிற்பார்.............

விஜய் said...

ஒரே ip address இருந்து வருகிறது அதலால் நிறுத்தி அல்லது தூக்கி விடப்பட்டது என்றால் , ஒரே system அல்லவா browsing சென்டர்களில் உபயோக்கிக்கப்ப்படுகிறது, ஒரே system இருந்து பல நண்பர்கள் அனுப்புவார்கள் , அதை எப்படி நீங்கள் தடுக்கலாம், பெரும் மென்பொருள் நிறுவனங்களில் கூட ஒரே ip address யை தான் 50 க்கும் மேற்பட்டோர் உபயோக்கிறார்கள், அவர்கள் வாக்களிக்கும் போதும் ஒரே ip address என்று தான் வரும்..அதற்காக அந்த வாக்களிப்பையும், பதிவையும் நீங்கள் நீக்கி விடுவீர்களா?....

இது முட்டாள் தனமான ஒரு கணிப்பு , தயவு செய்து இதை மாற்றிகொள்ளுங்கள்..
இந்த முட்டாள் தனத்தை மாற்றிக்கொண்டு இது போன்ற நல்ல பதிவுகள் வர ஊக்குவியுங்கள், அதைவிட்டுவிட்டு பதிவை நீக்கும் பொறுப்பற்ற செயல்களை செய்யாதீர்கள்....

செல்வா said...

வரவேற்கப் பட வேண்டிய பதிவு ..!!

Anonymous said...

முழுமையாக நடந்தது என்னவென்று தெரியவில்லை.ஆனால் ஒருவருடைய ஆதங்கத்தை தனது பதிவின் முலம் சொல்லி இருக்கும் செளந்தருக்கு நன்றி

 
;