ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை திரும்பப் பெறவும் முடியாது. இன்னும் கூட விலை உயரும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி விட்டார். இவர் மக்களுக்கு சலுகை தரமால் வேறு யாருக்கு சலுகை தர போகிறார்? அரசு இருப்பதே மக்களுக்கு சலுகை தருவதற்கு தான், முதலாளிக்கு சலுகைதர அல்ல.
ஆமாம்டா உங்களுக்கு எல்லாம் சும்மா வருகிறது, சும்மா கார் அதுக்கு போடும் டீசல் சும்மா, விமானத்தில் பறப்பதற்கு சும்மா, ரயில் பயணம் சும்மா, இது எல்லாம் யார் பணம் எங்கள் வரி பணம் எங்கள் வரி பணத்திலே கும்மிஅடித்து விட்டு கடைசில எங்களுக்கே ஆப்பா......?
பிரதமர் பேட்டி: நாங்கள் கோடி கோடியா வாங்க வேண்டியதை வாங்கி விட்டோம், இனி மக்கள் இருந்தால் என்ன செத்தால் எங்களுக்கு என்ன 110 கோடி மக்களில் 50 கோடி பேர் செத்தாலும் கவலையில்லை, காசு வாங்கி கொண்டு வோட்டு போட இன்னும் 60 கோடி பேர் இருக்கிறார்கள்.
காசு வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் இப்படி தான் நடக்கும். போன ஆட்சியிலே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். அப்போதே ஒரு அமைச்சர் சொன்னார் , அவர் பெயர் மணிசங்கர் அய்யர். புடவை, சினிமாவுக்கு, எல்லாம் பணம் செலவு செய்யும் நீங்கள், இதற்கும் செலவு செய்யுங்கள் என்று சொன்னார். அப்போது அவர் தான் பெட்ரோலியத் துறை அமைச்சர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, காங்கிரஸ்கு வோட்டு போட்டவர்களும், ஒரு காரணம் ஏன் என்றால் நீங்கள் தானே வோட்டு போட்டு ஆட்சி அமையுங்கள் என்று அனுப்பி வைத்தது நீங்கள் தானே. காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டா இதுதான் கதி, இவனுங்க ஆட்சியில்தான் போபர்ஸ், போபால்-விஷவாயு என பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது, இனிமேலும் மக்கள் காங்கிரஸ்க்கு ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால்,இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
இதனால் விலை வாசி உயர்வு. விவசாயிகள் தான் முதலில் ஏற்றுவார்கள் ஆவர்கள் என்ன செய்வார்கள் மின்சாரமும் கிடையாது (டீசல் பயன்படுத்துகிறார்கள்) பிறகு லாரிகாரன் விலை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் புரோக்கர்கள் விலையை ஏற்றுவார்கள், அந்த பொருளை வாங்கும் சில்லறை வியாபாரிகள் விலையை ஏற்றுவார்கள், இப்படி இது ஏறி கொண்டு போகும்.....
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த மறு நாளே, ஓட்டல்களில் விலை உயர்ந்து விட்டது, இந்த விலைவாசி உயர்வால் கவலை படாதவர்கள் இரண்டுபேர், ஒருவர் பிச்சகாரன், இன்னொருவர், கோடிஸ்வரன், இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை எங்களை போல் நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்க படுகிறோம். வாடகை கொடுத்தே எங்கள் ஆயுள்முடிந்து விடுகிறது.
அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.
Tweet | |||||
24 comments:
இதுல இன்னொரு விசயமும் இருக்கு போன ஆட்சியில சிவப்பு சட்டைக்காரங்க ஆதரவு இருந்த வரைக்கும் அவங்க விலைய ஏத்த விடல, அதுக்கு பிறகு முக்கியமான பக்கபலமா இருந்து திமுக. அவங்க எதிர்க்கவேயில்ல. இப்பவும் அவங்க எதிர்க்கல. இதுல திமுகவ மட்டும் சொல்லல ஆதரவு கட்சிங்க எல்லாமே இப்படித்தான் இருக்கு. சுயநலம் அதிகமாகிட்டா பொதுநலம் இல்லாமத்தான் போய்விடும். இத எதிர்த்து கடுமையான ஒரு அறிக்கையாவது வந்துச்சா, வராது அத செய்யவும் மாட்டாங்க.
இந்த இந்தமாதிரு களவானி பசங்களுகெலாம் என்ன பஞ்சாயத் பண்ண கூபடதீங்க....
அதனால தான் நான் சைக்கிள் வங்கலமுனு இருக்க.......
எனி கமெண்ட்ஸ் or நல்ல சைக்கிள் இருந்த சொலுங்க
இங்கயுமா இப்படி நடக்குது எல்லாம் ஒன்றுதான்...
யாருசும் நல்ல சைக்கிள் எதுன்னு இருந்தா சொலுங்க ப்ளீஸ்
கலக்கிடீங்க சௌந்தர், ரொம்ப அருமை,.நறுக்கு நறுக்குன்னு நாக்க பிடிங்கிகிட்டு சாகுற மாதிரி கேட்டு இருக்கீங்க , இதை எல்லாம் படிசானுங்கனாவது அறிவு வரும், எங்க , கட்டபஞ்சாயத்து பண்ணவும், மாநாடு நடத்தவுமே சரி இருக்கு நேரம், அப்புறம் எப்படி நடுத்தர மக்களை பத்தி நினைக்க, படிக்க நேரம் இருக்கும்?..
மிக அருமையான பதிவு தோழா...
Nanbare,
Naatil ulla ovvuru kudimaganudaya kelvi ithu ana ithukaaga yaarum periya alvula porattam pannaliye atha nenakumbothuthan varuthama irukku
//அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.//
:)
நல்ல கோபம், ஆனால் இங்கு யாருக்கும் உரைக்காது ..
//இந்த விலைவாசி உயர்வால் கவலை படாதவர்கள் இரண்டுபேர், ஒருவர் பிச்சகாரன், இன்னொருவர், கோடிஸ்வரன்,//
இது சூப்பர்(ன) உண்மை.
//ஒரேயடியாக மக்களுக்கு சலுகை தர முடியாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. அதை திரும்பப் பெறவும் முடியாது. இன்னும் கூட விலை உயரும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி விட்டார்//
இவர்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு யாரும் அசைக்கக்கூட முடியாது என்ற திமிரில் பேசுகிறார்கள்.
பதிவில் குறிபிடாத இன்னொரு முக்கிய விசயம்னு
பெட்ரோல் கம்பெனிகள் தன்னிச்சையாக பெட்ரோல் விலையை எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளலாம் என்கிற சலுகை.
பகிர்வுக்கு நன்றி நண்பா...
ஆமாம்டா உங்களுக்கு எல்லாம் சும்மா வருகிறது, சும்மா கார் அதுக்கு போடும் டீசல் சும்மா, விமானத்தில் பறப்பதற்கு சும்மா, ரயில் பயணம் சும்மா, இது எல்லாம் யார் பணம் எங்கள் வரி பணம் எங்கள் வரி பணத்திலே கும்மிஅடித்து விட்டு கடைசில எங்களுக்கே ஆப்பா......?//
வாக்குகளை வாங்குவதற்காகத் தான் மக்கள். மக்களின் உரிமைகளை மதிக்கும் நோக்கில் அரசியல் வாதிகள் எங்கே இருக்கிறார்கள்?
பூனைக்கு விளையாட்டு.. சுண்டெலிக்கு?
அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.//
அடுத்த கட்டத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
*/பிரதமர் பேட்டி: நாங்கள் கோடி கோடியா வாங்க வேண்டியதை வாங்கி விட்டோம், இனி மக்கள் இருந்தால் என்ன செத்தால் எங்களுக்கு என்ன 110 கோடி மக்களில் 50 கோடி பேர் செத்தாலும் கவலையில்லை, காசு வாங்கி கொண்டு வோட்டு போட இன்னும் 60 கோடி பேர் இருக்கிறார்கள்./*
அவர்களின் உண்மையான எண்ணம் நன்றி பகிவிற்க்கு நன்றி
நல்ல கோபம், ஆனால் இங்கு யாருக்கும் உரைக்காது ..
என்ன பாஸ் இப்படி சொல்லீட்டீங்க?
இப்ப ராஜ பட்ஷேக்கு எவ்வளவோ கோடி அள்ளிக்கொடுத்தாங்களே..அதை எப்படி சார் சரி பண்ணுவது?
அதனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி..விலை உயர்வுக்கு , உங்க ஆதரவை கொடுங்க சார்..
பாவம்..நமக்காக நாட்டைவிட்டு இங்கு வந்து சேவை செய்யும் காங்கிரஸ்காரனுக்கு..குத்துங்க சார்..குத்துங்க...
சரியாய் சொனீர்கள் சௌந்தர்...சாமானியர்களுக்குதான் பாதிப்பு அவர்களுக்கென்ன???...பகிர்வுக்கு நன்றி....
சௌந்தர்...50 ஆவது பதிவு முடிச்சு பேய்க்கதை சொல்லிட்டு இப்பிடிக் கோவப்படலாமோ !
யார் கேட்டு யார் பதில் சொல்லப்போறாங்க.
//அன்றாடங்காய்ச்சிகளும், மாத வருவாயை நம்பி வாழும் மக்களும், தாங்க முடியாத அல்லலுக்கு ஆட்பட்டு உள்ளனர். சமையல் எரி வாயு விலையைக் கூட்டியதால், குடும்பச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் துன்பப்படுகிறோம்.//
யாருக்குப்பா தெரியுது.... நாட்டில் இருக்ககூடிய சாதாரண மனிதர்களின் பிரச்சினைகள் அரசுக்கு தெரிவதே இல்லை...அது மா நில அரசாகட்டும் இல்லை மத்திய அரசு ஆகட்டும்...! மக்களோடு சம்பந்தப்பட்டதுதான் அரசு.. ! நல்ல அரசு எங்களுடைய அரசு என்று இவர்கள் மார்தட்டும் அதே.. நேரத்தில்..மக்கள் பிச்சைக்காரர்கள் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்....!
விழிப்புணர்வூட்டும்..அருமையான செவுட்டில் அறைந்தது போன்று ஒரு பதிவு இட்டதற்கு நன்றி தம்பி...!
ஆம.. இப்போ எல்லாம் எழுதுற ஸ்டைல் சுப்பரா மாறி..பட்டய கிளப்புற தம்பி...! வாழ்த்துக்கள்!
nacchunu iruku, eluthil maatram iruku vaalthukkal
நன்றி ஜீவன்பென்னி நீங்கள் சொல்வது உண்மைதான்.
நன்றி ஹாய்......... உங்கள் வருகைக்கு.
@@ஆமாம் Feros இங்கும் இப்படி தான் நடக்குது.
@@விஜய் நன்றி நண்பா.
ஜெயந்தி எதுக்கு அக்கா சிரிக்கிரீங்க.
உங்கள் வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில் அண்ணா.
Thomas Ruban நன்றி நண்பா.
நன்றி தமிழ் மதுரம்.
Jeyamaran நன்றி நண்பா.
நன்றி ஷர்புதீன்.
வருகைக்கு நன்றி பட்டாபட்டி..
நன்றி seemangani
நன்றி ஹேமா.
நன்றி தேவா அண்ணா.
நன்றி lk அண்ணா.
தங்கமகன் விருது கொடுத்த ஜெய்லானி நன்றி நன்றி....
///இந்த விலைவாசி உயர்வால் கவலை படாதவர்கள் இரண்டுபேர், ஒருவர் பிச்சகாரன், இன்னொருவர், கோடிஸ்வரன், இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை எங்களை போல் நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்க படுகிறோம். வாடகை கொடுத்தே எங்கள் ஆயுள்முடிந்து விடுகிறது.///
சரியாக சொன்னீர்கள் ...!!!
நாங்க ஏற்கனவே விஜய் படம் நெறையா பாத்துருக்கோம் தல ! அப்பறம் .., சூப்பர் ஸ்டார் ஜே. கே. ரித்தீஷின் "நாயகன்" படத்தையும் நாலைந்து முறை பார்த்துவிட்டோம்!! ப .ரா .பழனிசாமி எல்லாம் பத்து காட்சி போட்டாலும் பயப்படாம பாப்போம்..!! அனுப்பி வைங்க...!! சி..டி ...!!! கைப்புள்ள இன்னும் ஏண்டா தூங்கிட்டு இருக்க...??? முழிச்சு பார்ரா புது பட சி.டிவந்துருக்கு......
அன்பின் சௌந்தர் - பெட்ரோல் விலை ஏறுவது அரசின் எல்லையைத் தாண்டி விட்டது. அரசு ஒன்றும் செய்ய இயலாது. நாம் தான் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம். என்ன செய்வது. நல்லதொரு முடிவு வருமென எதிர்பார்ப்போம். நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
அன்பின் சௌந்தர் - பெட்ரோல் விலை ஏறுவது அரசின் எல்லையைத் தாண்டி விட்டது. அரசு ஒன்றும் செய்ய இயலாது. நாம் தான் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம். என்ன செய்வது. நல்லதொரு முடிவு வருமென எதிர்பார்ப்போம். நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா
Post a Comment